|
எலிகள்
தாக்குதல் அறிகுறிகள்: |
|
|
|
தாக்குதலின் அறிகுறிகள் :
- துண்டுகளாய் வெட்டப்பட்ட இளம் நாற்றுக்கள்.
- சீரற்ற ,முறையற்ற துண்டுகளாய் வெட்டப்பட்டிருக்கும் துார்தண்டுகள்.
- பருவத்தின் ஆரம்ப நாட்களில் வயலில் குழிகள் ஆங்காங்கே காணப்படும்.
வளர்ச்சியடைந்த மொட்டுக்கள் (அரும்புகள்) அல்லது முதிர்ச்சியடைந்த நெல்மணிகள் கடித்துத் தின்று, மெல்லப்பட்டு காணப்படும்.
- துார்கள் அடிப்பகுதியில் 45 கோணத்தில் வெட்டப்பட்டிருக்கும். வெட்டப்பட்ட துார்கள் பத்தைகளாகவும் காணப்படும்.
- பயிர் முதிர்ச்சி நிலையில், கதிர்கள் வெட்டப்பட்டு,கத்திரிக்கப்பட்டு பொந்துக்குள் சேமிக்கப்பட்டிருக்கும்
தாக்கும் விதம்:
- எலிகள் நாற்றங்காலுக்குள் நுழைந்து விதைகளை கொறித்துத் தின்றுவிடும்.
- நடவு செய்த பிறகு, நாற்றுக்கள் வெட்டப்பட்டு (தின்று) , துண்டுகளாய் காணப்படும்.
- தூர்கள் வெட்டப்பட்டுக் காணப்படும் மற்றும் முதிர்ச்சி நிலையில், கதிர்கள் கத்திரிக்கப்பட்டு, பொந்துகளில் சேமிக்கப்பட்டிருக்கும்.
|
|
கதிர்கள் வெட்டப்பட்டு பொந்துக்குள் வைக்கப்பட்டிருக்கும் |
|
வயலில் பொந்துகள் (அ) குழிகள் காணப்படும் |
|
மேலே செல்க |
|
கண்டறியப்படுதல்: |
|
|
|
- பெருச்சாளி/வங்கு எலி/ வயல் எலி (எலி வகை)
- புல் எலி-மில்லார்டியா மெல்டேடா
- பாலைவன எலி-- டடீரா குவீரி, டடீரா இன்டிகா
- இந்திய வயல் சுண்டெலி- மஸ் பூடுகா
- எலி (ரேட்டஸ் ரூஃபசன்ஸ், ரேட்டஸ் மெல்டேடா)
நெற்பயிர் வயலிலுள்ள எலிகள் கருப்பு நிறத்திலிருந்து பழுப்பு நிறமாக இருக்கும். இந்த எலிகள் மென்செதில்களுடன், மெல்லிய குறுமென்மயிருள்ள வால்களுடனும், தனித்தன்மையுடைய கொத்து போன்ற வெட்டுப்பல்லுடனும் காணப்படும். நெல்வயல் எலி, “ரேட்டஸ் அர்ஜென்டிவென்டெர்” முதன்மை எலி இன வகையாகும். இந்த எலியில் உள்ள கட்டான சிகப்பு நிற முடி அதன் காதுகளின் அடிப்பகுதியில் அமைந்திருக்கும். மேலும் பின்பகுதி மென் மயிருடன் ஆரஞ்சு-பழுப்பு நிறத்தில் கருப்பு நிற வண்ணக்கீற்றுகளுடனும், வெள்ளி போன்ற வெண்நிற அடிப்பகுதியுடனும், தோன்றுவதுதான் இதனை வேறுபடுத்த உதவுகிறது.
பூச்சி வளர்ச்சியை அதிகப்படுத்தும் கூறுகள்:
- தாழ்வான நிலங்களில், குளிர் மற்றும் வறட்சிப் பருவங்களிலும் கடைபிடிக்கப்படும் நெல் சாகுபடி முறைகள்.
- உணவு, நீர் மற்றும் இருப்பிடம் கிடைக்கும் தன்மை.
- இனப்பெருக்க இடங்கள் இருத்தல்.
- பெரிய வாய்க்கால்கள் மற்றும் கிராமப்புறத்திலுள்ள தோட்டங்கள்.
|
கருப்பு எலி |
|
நெல் வயல் எலி |
|
மேலே செல்க |
மேலாண்மை முறைகள்: |
|
- எலி வேட்டையாடுதல், எலி துரத்துதல், தோண்டுதல் மற்றும் வெளியேற்றுதல் ஆகியவை நல்ல கட்டுப்பாடுகள் ஆகும்.
- குறுகலான வரப்பு அமைத்தல் ( 45 × 30 செ.மீ)
- பருவமில்லாக் காலங்களில் எலிப் பொந்துகளைத் தோண்டி அதனைக் கொல்லுதல், நடவு செய்து 3-4 வாரங்களுக்குப் பிறகு நச்சுஉணவுப் பொறியாக ஜின்க் பாஸ்பேட் அல்லது புரோமோடையலோன் வைக்க வேண்டும். தஞ்சாவூர் அல்லது மூங்கில் பொறிகள் (100 எண்ணிக்கைகள்/எக்டர்) தொடர்ச்சியாக வைத்து எலிகளை பிடிக்க வேண்டும்.
- எலிகளால் உருவாக்கப்பட்ட பொந்துகளைக் கண்டுபிடித்து, அதில் 2 மாத்திரைகள் ஒவ்வொன்றும் 0.5 அல்லது 0.6 கிராம் அலுமினியம் பாஸ்பைடை ஒரு பொந்துக்குள் முடிந்த வரை ஆழமாகப் போட்டு எலி நுழையும் வழியை சேற்று உருண்டையால் அடைத்துவிட வேண்டும்.
- நச்சுப் பொறியாக 1 பகுதி “ஜின்க் பாஸ்பைடு அல்லது புரோமோடையலோன் 0.25 கீ/கீ @ 0.005 சதவிகிதத்துடன் 49 பகுதிகள்(1:49) பொரிக்கப்பட்டசோளம்/அரிசி/ காய்ந்த மீன்/ கலந்து வைக்க வேண்டும். 1 பகுதி புரோமோடிடையலோன் + 49 பகுதிகள் நச்சுப் பொறிகளுடன் கலந்து வயலுக்குள் வைத்து விட வேண்டும்.
- வார்ஃபரின் 0.5 சதவிகிதம் உள்ள 1 பகுதியை 19 பகுதிகளான பொரிக்கப்பட்ட சோளம்/அரிசி/காய்ந்த மீன் (கருவாடு) ஆகியவற்றுடன் கலந்து வயலில் வைக்க வேண்டும்.
- ஆந்தை உட்காருவதற்கான 40-50 கம்பங்கள்(அ)குச்சிகள் /எக்டர் அமைத்தல்.
- காட்டுப்பூனைகள், பாம்புகள் மற்றும் பறவைகள் ஆகியவை நெற்பயிர் வயல் எலிகளை வேட்டையாடும் உயிரினங்கள் ஆகும்.
|
|
நஞ்சு இரை தின்ற எலி |
|
அம்பு பொறி |
|
மேலே செல்க |
|