|
வேர் முடிச்சு நுாற்புழு(மெலாய்டோகைன் கிரேமினிகோலா)
தாக்குதல் அறிகுறிகள்: |
|
|
|
- வேர்களின் மேல் தனிச்சிறப்பு கொண்ட கொக்கி போன்ற முடிச்சுகள் காணப்படும்.
- புதிதாக வெளிவந்த இலைகள் வடிவம் சிதைந்து இலை ஓரங்கள் சுருங்கிக் காணப்படும்.
- பசுமை சோகை மற்றும் பயிர்குட்டையாகுதல்.
- தீவிரமாகத் தாக்கப்பட்ட பயிர்களில் முன்னரே பூத்தல் ஏற்பட்டு விரைவாக முதிர்ச்சியடைந்துவிடும்.
- துார்களின் எண்ணிக்கை குறைந்து காணப்படும்.
- கதிர்களின் அளவு குறைந்து தானியங்களின் எண்ணிக்கையும் குறைந்து காணப்படும்.
|
|
வேர்களில் முடிச்சுகள் |
மேலே செல்க |
|
நுாற்புழுவை கண்டறியப்படுதல்: |
|
|
|
முதிர்நிலை பெண் இன நுாற்புழுக்கள் பேரிக்காய் வடிவத்திலிருந்து வட்ட வடிவமாக நீண்ட கழுத்துடனும் பொதுவாக வேர்த் திசுக்களில் பதிந்து காணப்படும். அதன் உறிஞ்சிகுழல் 9-18µmநீளம் கொண்டு சிறிய, முதன்மையான மேற்புற வளைவுகொண்ட அடிக்குமிழுடன் காணப்படும்.
தொற்றும் இரண்டாம் நிலை இளநிலை நுாற்புழுக்கள் குட்டையாகவும் (0.3-0.5 மி.மீ) வலுக்குறைந்த தலை அமைப்பையும் கொண்டது. வால்நுனி நீளமாக மெலிந்து நீளமான நிறமற்ற பகுதியில் நுண்புள்ளியுடன் மெல்லியதாகக் காணப்படும். |
வேர் முடிச்சு நூற்புழு |
|
வேர் முடிச்சு நூற்புழு |
மேலே செல்க |
மேலாண்மை முறைகள்: |
|
- தொடர்ச்சியான நீர்த்தேக்கம், வெள்ளப்பாசனம் செய்யப்பட்ட மண்ணில் நெற்பயிர் நாற்றுக்களை வளர்த்தல் மற்றும் பயிர் சுழற்சி ஆகியவை உழவியல் கட்டுப்பாட்டு முறைகள்.
- 50-100µm தடிமன் பாலீதின் தாள்கள் பரப்பி, 3 வாரங்களுக்கு மண் வெப்பமூட்டம் மேற்கொள்ள வேண்டும். பின்பு வயலைத் தயாரித்தல் வேண்டும்.
- பாதுகாப்பற்ற தரிசு நில காலம் மற்றும் மண் மூடி பயிர்களான எள், தட்டைப்பயறு, ஆகியவற்றை பயிரிடுவதன் மூலம் நுாற்புழுக்களைக் குறைக்க முடிகிறது.
- செண்டுப்பூ (டேஜிடஸ் சிற்றினம்) உடன் பயிர் சுழற்சி மேற்கொள்வதால், வேர்முடிச்சு நுாற் புழுக்களின் உயிர்த் தொகையைக் குறைக்க முடிகிறது. ஏனெனில் செண்டுப்பூ நுாற்புழுக் கொல்லித் திறன் பெற்று விளங்குவதால் நுாற்புழுக்களை அழிக்கிறது.
- நுாற்புழு எதிர்ப்புத்திறன் கொண்ட இரகங்களான ஐஆர் வகைகளை வளர்த்தல். நுாற்புழுக் கொல்லிகளைப் பயன்படுத்தி மண்ணை நனைத்தல், நாற்றுக்களின் வேர்கள் மற்றும் விதைகளை ஊற வைத்தல் ஆகியவை நுாற்புழுத் தொகைக் கட்டுப்படுத்துகிறது.
- விதைகளை ஈபிஎன் (EPN) மற்றும் கார்போஃபூரான் உடன் விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
ஊடுருவும் தன்மைபெற்ற ஆக்ஸமைல் (அ) ஃபென்சல்ஃபோதியான், போரேட், கர்போஃபூரான் மற்றும் டீபீசிபி (DBCP) ஆகியவற்றில் நாற்றின் வேர்களை ஊற வைத்து பின் நடவு செய்தல் வேண்டும்.
- பயிர் நடவு செய்வதற்கு முன் மண்ணில் “டீலோன்” ஐ உட்செலுத்த வேண்டும்.
|
|
ஐ.ஆர்.32 போன்ற எதிர்ப்பு இரகங்களை பயிரிடவும் |
|
டீலோன் மண் புகையூட்டி |
மேலே செல்க |
|