முதல் பக்கம் தொடர்புக்கு  

நத்தைகள் (பொமேசியா கெனேலிக்குலேட்டா)

தாக்குதல் அறிகுறிகள்:  
  • வயலில் நாற்றுக்கள் காணப்படாமல் விடுபட்டிருக்கும்
  • கத்திரிக்கப்பட்ட இலைகள் வயலில் மிதக்கும்.
  • வெட்டுப்பட்ட தண்டுகள் காணப்படும்
  • குறைந்த பயிர் எண்ணிக்கை
  • அடர்த்தியற்ற அல்லது சீரற்ற பயிர் நிலைநிறுத்தம்

    தாக்கும் விதம்:

    • நத்தைகள் பயிர்த் திசுக்களில் ஒட்டிக் கொண்டு அவற்றின் அரம் போன்ற உறுப்பு அல்லது கொம்பு போன்ற நாக்கு மூலம் தண்டுகளை வெட்டுகின்றது.
    • நேரடி விதைப்பு நெல்லில் நத்தைகள் அதிகப் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.
    • வறட்சிப் பருவத்தில், நத்தைகள் நெல் வயலில் செயலிழந்து காணப்படும்.
1-missing hills in transplanted paddy
வயலில் நாற்றுகள் காணப்படாமல் விடுபட்டிருக்கும்
presence of snails in field
வயலில் நத்தைகள் காணப்படும்

மேலே செல்க

  பூச்சியைக் கண்டறியப்படுதல்
golden Applesnail
  • நத்தைகள் சேறு போன்ற பழுப்பு நிற மேலோடு உடையது. கருப்பான சிறிய நாட்டு நத்தைகளை விட இதன் மேலோடுகள் மெல்லிய வெளிறிய நிறமாக இருக்கும். மேலும் இதன் சதைப்பற்று தண்டுகுழம்பு போன்ற வெள்ளை நிறம் முதல் பொன் இளஞ்சிவப்பு அல்லது அரஞ்சு மஞ்சள் நிறமாக இருக்கும். ஆண் இன நத்தைகளில் உள்ள குவிந்த உரு ஒட்டு முடி வெளிப்புறம் வளைந்து அல்லது மேலோட்டை விட்டு வெளிவந்தும் காணப்படும். ஆனால் பெண் இனத்தில் ஒட்டு முடி மேலோட்டிற்கு உள் வளைந்திருக்கும்.
  • இளம் நத்தைகள் அல்லது புதிதாகப் பொரித்த நத்தைக் குஞ்சுகள் மென்மையான மேலோடுகளைக் கொண்டிருக்கும். இளம் நத்தைகள் < 1.5 - 1.6 செ.மீ அளவுடையது. நடுத்தர அளவுள்ள நத்தைகள் 2-3 செ.மீ அளவு மேலோடு உயரம் கொண்டிருக்கும்.
  • இதன் முட்டைகள் பிரகாசமான இளஞ்சிவப்பு நிறம் அல்லது இளஞ்சிவப்பு நிறமாகக் காணப்படும். நாள் ஆகும்போது (முதிர்ச்சி நிலை) முட்டை பொரிக்கும் தருணத்தில் அதன் நிறம் மங்கி, வெளிறிய இளஞ்சிவப்பு நிறமாக மாறிவிடும்.
    நத்தைகளின் வளர்ச்சியை மேம்படுத்தும் காரணிகள்:
  • நஞ்சை நிலம் மற்றும் புன் செய் நில வாழிடங்கள்.
  • பாசனக் கால்வாய்கள் மற்றும் ஆறுகள்.
  • மாற்று பயிர்கள் இருத்தல்.
  • இளம் நாற்றுக்கள் இருத்தல்.
  • நெல் வயலில் தொடர்ச்சியான நீர்த்தேக்கம்.
  • செவுல் மற்றும் நுரையீரல் ஆகிய இரு சுவாச உறுப்புகளும் இருத்தல்.
  • அனைத்து சுற்றுப்புற நிலைமையிலும் வாழும் தன்மை கொண்டது.
நத்தை
snail egg
நத்தை முட்டை
மேலே செல்க

மேலாண்மை முறைகள்:
இயந்திர் முறைகள் :
  • கைசேகரிப்பு மற்றும் நசுக்குதல், மூங்கில் அல்லது மற்ற மரக் கொம்பு ஆகியவற்றைப் பயன்படுத்தி நடவு செய்வதற்கு முன்னரும் பின்னரும் முட்டைத் திரளை சேகரிக்க வேண்டும்.
  • நீர் நுழைவாயிலில் 5 மி.மீ அளவு வலைக்கண் (சல்லடை) கொண்ட வலையை நிறுவுதல். இந்த வலை நெல் வயலுக்குள் நத்தைகள் நுழைவதைக் குறைக்க உதவுகிறது. மேலும் கையினால் அதனை சேகரிக்கவும் முடிகிறது.
  • இயந்திர செயல்பாட்டின் மூலம் நத்தைகள் இறப்பு விகிதத்தை அதிகரிக்கலாம்.
  • முட்டைத் திரள்களை நசுக்குவதற்கு கை இயக்கிக் கருவியைப் பயன்படுத்த வேண்டும். இரண்டு நத்தை முட்டை தட்டுப் பெட்டிகளிடையே முட்டைத் திரள்களை வைத்து நசுக்குவதனால் நத்தை எண்ணிக்கையை குறைக்க முடிகிறது.
hand pick and crush the snail egg
நத்தை முட்டைகளை கையால் சேகரித்து அழிக்கவும்
collect and kill by mechanical action
நத்தைகளை சேகரித்து அழிக்கவும்

உழவியல் முறைகள்:
  • முதிர்ச்சி பெற்ற நாற்றுக்களை நடவு செய்தல், அதிக அடர்த்தியான நடவு அல்லது நீர்வழிக்கு மேலே உள்ள பார்களில் நடவு செய்தல் ஆகியவற்றை மேற்கொள்வதால் நத்தைகளைக் கட்டுப்படுத்த முடிகிறது.
  • வயலை நன்கு சமப்படுத்துதல் அல்லது சேற்றுஉழவு அல்லது சுழல்உழவு மேற்கொண்டு, நடவு வயலை தயாரித்தல்.
  • பருவம் இல்லாத காலங்களில், உழவு (நிலப் பண்படுத்தல்) செய்து நத்தைகளை நசுக்குதல் மேற்கொள்ளலாம்.
  • நத்தைகளை சூரிய ஒளிக்கு வெளிப்படுத்துதல்.
  • வயலில் நீரை வடித்தலும் அறிவுறுத்தப்படுகிறது.
  • புன்செய் நிலப் பயிர்கள் மற்றும் தரிசு நிலமாக விடுவதுமாக பயிர்சுழற்சி செய்வதும் சிறந்ததாகக் கருதப்படுகிறது.
  • எளிமையான வடிகாலுக்கும், நத்தைகளை எளிதில் சேகரிக்கவும், வரப்புகள் மற்றும் நெல்வயலுக்கு உள்ளேயும் கால்வாய் வழி அமைத்தல் வேண்டும்.
  • நத்தைகளை ஈர்க்கும் பொருள்களான செய்தித் தாளைப் பயன்படுத்துதல்.
  • சிறந்த நில சமம்படுத்துதலின் மூலம் முதல் இரு வாரங்களுக்கு சிறந்த நீர் மேலாண்மையைப் பெறலாம்.
off season tillage to crush snails
கோடை உழவு செய்து நத்தைகளை அழிக்கவும்
Draining the field
வயலில் நீரை வடித்துவிடவும்

இரசாயன முறைகள்:

நத்தைக் கொல்லிகளான (சிப்பி இனக் கொல்லிகள்) மெட்டால்டிஹைட் அளிப்பது பரிந்துரைக்கப்படுகிறது.





Molluscicide-metaldehyde
நீரில் கரையும் நத்தைக்கொல்லி

உயிரியல் முறைகள்:
  • பொதுவாக நன்னீர் வாழ் மீன் வகை, ஜப்பான் குருசியன், ஹெரான் மற்றும் இறைச்சி உண்ணும் பாலுாட்டி வகைகள் ஆகியவற்றை உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகளாகப் பயன்படுத்தி நத்தைகளைக் கட்டுப்படுத்தலாம்.
  • மின்மினிப் பூச்சியின் இளம் உயிர்களைப் பயன்படுத்துவதும் சிறந்ததாகக் கருதப்படுகிறது. இவை நத்தையின் இயற்கை எதிரியாகும்.
  • நெல்வயலில் வாத்து மந்தைகளை வளர்ப்பதும், மீன்களை விட்டு வளர்ப்பதும் உயிரியல் கட்டுப்பாட்டு முறையாகும்.
  • பறவைகள் நத்தையின் முட்டைகள் மற்றும் இளம் குஞ்சுகளை உட்கொள்ளும். எலிகள் மற்றும் பாம்புகளும் அதனை உண்ணக் கூடியதாகும்.
snake Eating-snail
நத்தையை தின்னும் பாம்புகள்

மேலே செல்க