முதல் பக்கம் தொடர்புக்கு  

வெண் இலைநுனி நுாற்புழு - (அபெலென்க்காய்டஸ் பெசீயீ)

தாக்குதல் அறிகுறிகள்:  
  • இந்த நுாற்புழு தமிழ்நாடு முழுவதும் அதிகளவில் பரவியுள்ளது.
  • நெற்பயிர் இலை நுனிகளை தாக்கி, இலைகளின் மேல்பகுதியில் 3-5 செ.மீ வரை வெள்ளை நிறமாக மாறி பின் காய்ந்து விடுகிறது. இதுவே “வெண்நுனி” எனப்படுகிறது.
  • வளர்ச்சியடையும் இலைகளின் நுனிகளில் முறுக்கு ஏற்பட்டு சுருண்டு காணப்படும்.
  • நோய் தாக்கிய பயிர்கள் வளர்ச்சி குன்றியும், (குட்டையாக) வீரியம் இழந்தும் காணப்படும். மேலும் சிறிய கதிர்களையே உருவாக்கும்.
  • நோய் தாக்கப்பட்ட கதிர்களில் மலட்டுத் தன்மை ஏற்பட்டு, வடிவம் சிதைந்த உமிச் செதில்கள் மற்றும் சிறிய சிதைந்த அரிசிகளுடன் காணப்படும். தீவிரதாக்குதலின் போது நோய் தாக்கப்பட்ட நெல்மணிகள் பதராக,சப்பையாக மாறிவிடுகின்றன.
  • நுாற்புழு தாக்கப்பட்ட விதைகளை விதைத்தால், முதிர்ச்சியற்ற தன்மையில் இருக்கும் நுாற்புழுக்கள் செயல் ஊக்கம் பெற்று மெல்லிய ஈரப்படலம் மூலமாக பயிரின் மேல்பகுதியை நோக்கிச் சென்று இலை (தழை) பகுதிகளில் புற ஒட்டுண்ணிகளாக இருந்து இலை முழுவதையும் தின்றுவிடும்.
Twisted and crinkled leaf tips
இலை நுனிகள் வெண்மையாகி காய்ந்துவிடும்
Whitening and necrosis of leaf tips- white tip
இலை நுனிகள் வெண்மையாகி, காய்ந்துவிடும்

மேலே செல்க

  கண்டறியப்படுதல்:
Aphelenchoides besseyi
  • அப்லங்காய்டஸ் பெசீயீ- நுாற்புழு என்பது நெற்பயிரின் வெண் நுனி நோயின் முக்கிய நோய்க்காரணியாகும்.
  • இவை நெற்பயிரின் இலைகள் மற்றும் இளந்திசுக்களின் உட்புற மற்றும் வெளிப்புற ஒட்டுண்ணியாக விரும்பி வாழ்கின்றன.
  • நுாற்புழு விதை வழி பரவக்கூடியது ஆகும். மேலும் சேமித்து வைக்கப்பட்ட நெல்மணிகளில், பல வருடங்களாக நீரின்றி உறக்க நிலையில் இவை வாழ்கின்றன. ஆனால் வயல்களில் குறைந்த நாட்களே வாழ்கின்றன.
  • பொதுவாக புணர்வு முறை இனப்பெருக்கம் உடையது. மேலும் இதன்வாழ்க்கைச் சுழற்சி 23 செ அளவில் 8 நாட்கள் எடுத்துக்கொள்ளும்.
  • பெரிய நடுத்தொண்டை (நடுகுமிழ்) மற்றும் ஈசோஃபேஜியல் சுரப்பிகள் பின்புறமாக ஒன்றோடு ஒன்று இணைந்திருப்பதை வைத்து இதனை தனிப்படுத்தலாம்.
  • இவை மெல்லிய உடலுடன், 0.44 -0.84 மிமீ நீளமும் 14-22 மைக்ரோ மீட்டர் அகலமும் கொண்டது. பெண் இன வகையில், கழிவு நீக்க நுண்துளை பொதுவாக நரம்பு வளையத்திற்கு முன் முனையில் அமைந்திருக்கும்.
  • ஆண் இனப்பெருக்க அமைப்புகளில் விந்துப்பை மற்றும் நுண்முள் ஆகியவை இருக்காது.
அப்லங்காய்டஸ் பெசீயீ
white tip nematode
வெண் நுனி நூற்புழு
மேலே செல்க

மேலாண்மை முறைகள்:  
  • நுாற்புழு  எதிர்ப்புத்திறன் கொண்ட இரகங்களான டிபிஎஸ் 1, டிபிஎஸ் 2, ஆகிய இரகங்களை பயிரிட வேண்டும்.
  • விதைகளை விதைக்கும் முன்பு, அதிலுள்ள நுாற்புழுவின் தன்மையை அழிக்க விதை விதைப்பதற்கு 2-3 நாட்களுக்கு முன்பு  இரவு முழுவதும் விதைகளை நன்கு ஊற வைத்து வெயிலில் ஒரு நாளுக்கு 6 மணி நேரம் என்ற கணக்கில் 2 நாட்கள் 12 மணி நேரம் நன்கு உலர விட வேண்டும்.
  • விதைகளைத் தாக்கும் இந்நுாற்புழுக்களை அழிப்பதற்கு, விதைகளை 52-53° செ வெப்ப அளவு உள்ள வெந்நீரில் 15 நிமிடங்கள் நன்கு ஊறவைத்தல் வேண்டும். நாற்று நடவு செய்வதற்கு 7 நாட்களுக்கு முன்னர், நாற்றங்காலில் “கார்போஃபியூரான் 3 ஜி” @ 30 கிலோ(அ)1.0 கிலோ செயற்கூறு (எ.ஐ)/எக்டர் அளவில் அளிக்க வேண்டும்.
  • நடவு செய்து 45 நாட்களில் ‘கார்டாஃபைடிரோக்ளோரைடு’ 4 ஜி @ 25 கிலோ (அ)1.0 கிலோசெயற்கூறு (எ.ஐ)/எக்டர் அளித்தல் வேண்டும்.
  • “அப்லங்காய்டஸ் பெசீயீ” தாக்குதலைக் கட்டுப்படுத்துவதற்கு, நுாற்புழுவற்ற விதைகளையும், நுாற்புழு தாக்குதலற்ற நாற்றுக்களையும் பயன்படுத்த வேண்டும்.
  • பயிர் அறுவடைக்குப் பின் வயலில் எஞ்சியிருக்கும் நுாற்புழுப் பிறப்பிடமான தாக்கப்பட்ட விதைகள், களைகள், பயிர்த்துார்கள் ஆகியவற்றை வயலிலிருந்து அகற்றி அழித்து விட வேண்டும்.
  • “பெனோமைல்” அல்லது “தியாபென்டஜோல்” ஆகியவற்றுடன் விதைநேர்த்தி மேற்கொள்வது நுாற்புழுக்களைக் கட்டுப்படுத்துவதற்கு சிறந்ததாகக் கருதப்படுகிறது.
  • நுாற்புழு தாக்கப்பட்ட பயிர்களின் மேல் “பாரத்தியான்” (0.25 சதவிகிதம்) மற்றும் டிரைக்லோரோபாஸ் (0.03 சதவிகிதம்) ஆகியவற்றை மூன்று முறைகன் தெளிப்பது சிறப்பாகக் கருதப்படுகிறது.
Chemical seed treatment with benomyl
பினோமைல் கொண்டு விதை நேர்த்தி செய்க
Apply Carbofuran
கார்போப்யூரான் இடவும்
மேலே செல்க