|
பச்சைத் தத்துப்பூச்சி
தாக்குதலின் அறிகுறிகள் : |
- இலைகள் நுனி முதல் அடிப்பகுதி வரை முழுவதும் மஞ்சள் நிறமாக மாறுதல்.
- பயிரின் வீரியம் குறைந்து வளர்ச்சி குன்றி குட்டையாகக் காணப்படும்.
- பயிர் வாடுதல் அல்லது முற்றிலுமாக காய்தல். பயிரை முழுவதுமாக தாக்கி அதன் சாற்றை உறிஞ்சுதல்.
- இலையுறைகள் அல்லது நடுநரம்புகளுக்குள் வெள்ளையான அல்லது வெளிறிய மஞ்சள் நிறமான முட்டைகள் இருக்கும்.
- பயிரின் மேல்பகுதியில் வெளுத்த பச்சை நிற முதிர்ப்பூச்சிகள் இருக்கும்
தாக்குதலின் தன்மை :
- இளம் உயிரிகள் மற்றும் முதிர் பூச்சிகள் இரண்டும், இலை மற்றும் இலையுறைகளிலிருந்து செடியின் சாறை உறிஞ்சுகிறது.
- மிதமான தாக்குதல், பயிரின் வீரியத் தன்மையைக் குறைத்து இனப்பெருக்கத் துார்களின் எண்ணிக்கைகளையும் குறைக்கிறது. பூச்சி உட்கொண்ட இடம் மற்றும் முட்டையிடப்பட்ட ஓட்டைகளின் மூலம், பயிர்கள் முன்னரே பூசணம் மற்றும் நுண்ணியிரிகளின் தாக்குதலுக்கு உள்ளாகிறது. உணவு உட்கொள்ளும் காலம் குறைவாக இருக்கும்போது “துங்ரோ” நச்சுயிரி பரவுகின்றது.
|
|
|
|
|
இலைகள் ஆரஞ்சு மஞ்சள் நிறமாக மாறும் |
பயிர்கள் வளர்ச்சி குன்றி, வீரியம் குறைந்து காணப்படும் |
|
|
பச்சை தத்துப்பூச்சி பயிரின் சாற்றை உறிஞ்சும் |
பச்சை தத்துப்பூச்சி பயிரின் சாற்றை உறிஞ்சும் |
|
மேலே செல்க |
மேலாண்மை : |
|
உழவியல் முறைகள்:
- பச்சைத் தத்துப் பூச்சியை சிறப்பான முறையில் கட்டுப்படுத்துவதற்கு, பச்சைத் தத்துப்பூச்சி மற்றும் துங்ரோ நச்சுயிரி ஆகியவற்றை எதிர்க்கும் திறன் கொண்ட இரகங்களான ஐஆர் 50, ஐஆர் 54, ஐஆர் 64, சிஆர் 1009, பிஒய் 3, கோ 46, மற்றும்வெள்ளைப்பொன்னி ஆகிய இரகங்களைப் பயிரிடுதல்.
- நாற்றங்கால் அடியுரமாக வேப்பம்புண்ணாக்கு @ (12.5 கிலோ/20 சென்ட்) அளிக்க வேண்டும்.
- முதிர்ச்சியடைந்த நாற்றுக்களை நடவு செய்வதன் மூலம் இலைத் தத்துப்பூச்சிகளால் பரப்பப்படும் நச்சுயிரிகளின் தாக்கத்தைக் குறைக்க முடிகிறது.
- தழைச்சத்து உரத்தை தேவையான அளவு மட்டும் அளித்தல் வேண்டும். இதனால் தத்துப்பூச்சியின் தொகை மற்றும் தத்துப்பூச்சி சேதத்திலிருந்து பயிர் உயிர்ப்பெருதலைத் தடுப்பது ஆகியவற்றில் தழைச்சத்து பங்களிப்பைத் தடுப்பதற்காக அவற்றை குறைந்த அளவு மட்டுமே அளிக்க வேண்டும்.
- வயலிலும், வரப்புகளிலும் சிறப்பான களைக் கட்டுப்பாட்டு முறை மேற்கொள்வதால் தத்துப்பூச்சிகளின் ஓம்புயிரிகளை அழிக்க முடிகிறது. மேலும் பயிரின் வீரியத்தன்மையை வளரச் செய்கிறது.
- வறட்சிப் பருவத்தில் நெற்பயிரில்லா மற்ற பயிர்களுடன் பயிர் சுழற்சி மேற்கொள்ள வேண்டும். இதனால் நோய்களை ஏற்படுத்தும் மாறுபட்ட ஓம்புயிரிகளைக் குறைக்க முடிகிறது.
- மேட்டுப்பாங்கான நெல்லை சோயாமொச்சையுடன் ஊடுபயிர் செய்வதன் மூலம், நெற்பயிரில் இலைத்தத்துப்பூச்சிகளின் தாக்குதலைக் குறைக்க முடிகிறது.
|
|
|
|
|
நாற்றங்காலில் வேப்பங்கட்டியை இடவும் |
சிஆர் 1009 போன்ற எதிர்ப்பு இரகங்களை பயிரிடவும் |
|
|
வெள்ளை பொன்னி எதிர்ப்பு இரகத்தை பயன்படுத்தவும் |
வயலிலும், வரப்பிலும் களைகளை கட்டுபடுத்தவும் |
|
இரசாயன முறைகள்:
- பொருளாதார சேத நிலை அளவு:
60/25 வலை வீச்சுகள் (அ) 5/குத்து தழைப்பருவத்தில் (அ) பூத்தல் பருவத்தில் 10/குத்து (அ) துங்ரோ உட்பரவல் இடங்களில் 2/குத்து
- வயலில் துங்ரோ மற்றும் பச்சைத் தத்துப்பூச்சிகள் இருப்பைக் கண்காணிக்க வேண்டும். நடவு செய்யப்பட்ட வயலின் குறுக்கில் பக்கவாட்டில் நடக்கும்போது 20 குத்துக்களைச் சரிபார்க்க வேண்டும்.
- நடவு செய்து 15 மற்றும் 30 நாட்களில் இருமுறை கீழ்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக்கொல்லியைத் தெளிக்க வேண்டும் :
ஃபெனிட்ரோத்தியான் 50 இசி (அ) பாஸ்போமிடான் 40 எஸ்எல் 50 மிலி (அ) ஃபென்தியான் 100 இசி 40 மிலி (அ) குயினால்பாஸ் 25 இசி 80 மிலி (அ) பாசலோன் 35 இசி 120 மிலி (அ) என்டோசல்பான் 35 இசி 80 மிலி (அ) மோனோக்ரோட்டோபாஸ் 36 எஸ்எல் 40 மிலி பூச்சி
- நாற்றங்காலில் 2.5 செ.மீ நீர் இருக்குமாறு பராமரிக்க வேண்டும். பின் கீழ்வரும் ஏதேனும் ஒன்றை 20 சென்ட் நிலத்தில் வீசித் துாவிவிட வேண்டும். கார்போஃபூரான் 3 ஜி 3.5 கிலோ (அ) போரேட் 10 ஜி 1.0 கிலோ (அ) குயினால்பாஸ் 5 ஜி 2.0 கிலோ
|
|
|
|
|
கார்போஃபூரான தெளிக்கவும் |
பாஸ்போமிடான தெளிக்கவும் |
|
|
பாசலோன தெளிக்கவும் |
பூச்சிக்கொல்லி தெளிக்கவும |
|
உயிரியல் முறைகள்:
- முக்கிய முட்டை ஒட்டுண்ணிகள் பின்வருமாறு :
- ஒலிகோசிட்டா யசுமட்சுய் (குளவி, தேனீ, போன்ற பூச்சியியல் வரிசை டிரைக்கோகிரேமட்டிடே)
- அனாக்ரஸ் சிற்றினங்கள் (குளவி, தேனீ போன்ற பூச்சிகளின் பூச்சியியல் வரிசை மைமாரிடே)
- கொனட்டோசீரஸ் சிற்றினங்கள் (குளவி, தேனீ சார்ந்த குடும்பம் மைமாரிடே)
- மிக அதிக அளவில் காணப்படும் கொன்றுண்ணி பச்சை நாவாய்ப்பூச்சி (சிர்டோரினஸ் லிவிடிப்பென்னிஸ்). இவை முட்டைகள் மற்றும் இளங்குஞ்சுகளை வேட்டையாடிக் கொன்றுவிடும்.
- ஸ்ட்ரெப்ஸிப்டீரன்ஸ், சிறு குளவிகள், மற்றும் நுாற் புழுக்கள் ஆகியவை தத்துப்பூச்சிகளின் இளம் குஞ்சுகள் மற்றும் முதிர் பூச்சிகளில் ஒட்டுண்ணியாகச் செயல்பட்டு அதனைக் கொன்றுவிடும்.
- மேலும் நீர்வாழ் நாவாய்ப்பூச்சிகள், ஊசித்தட்டான், தட்டான் பூச்சிகள், மற்றும் சிலந்திகள் ஆகிய பூச்சிகளாலும் பச்சைத் தத்துப்பூச்சி தாக்கப்படுகிறது. பூசண நோய்க் காரணிகள் பச்சைத் தத்துப்பூச்சியின் இளம் உயிரிகள் மற்றும் முதிர் பூச்சிகளைத் தாக்குகிறது.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
உயிர் எதிரி குளவி - கோனாடோசிரஸ் வகை |
முட்டை ஒட்டுண்ணி - ஆங்கரஸ் சிற்றினம் |
|
|
இரை விழுங்கி - மிரிட் நாவாய்பூச்சி |
இரை விழுங்கி சிலந்தி - அர்ஜியோப் கேடினுலேட்டா |
|
பொறி முறைகள்:
- பச்சைத் தத்துப்பூச்சிகளின் எண்ணிக்கைகளைக் கண்டறிவதற்கு விளக்குப்பொறிகளை பயன்படுத்தலாம்.
- அதிகாலை நேரத்தில் விளக்குப் பொறியை சுற்றி பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தோ அல்லது தூவியோ கவரப்பட்ட பச்சைத் தத்துப்பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.
|
|
|
விளக்குப்பொறி வைக்கவும் |
பிரமோன் பொறி வைக்கவும் |
மேலே செல்க |
|