|
இலைப்பேன்
பூச்சியை கண்டறிதல் : |
|
அறிவியல் பெயர் - ஸ்டென்கிடோத்திரிப்ஸ் பைஃபார்மிஸ்
- முட்டை :
பயிர்ச் செடியின் தண்டுகளை நோக்கி அதன் பக்கவாட்டில் அமைந்திருக்கும், மென்மையான இலைகளின் திசுக்களில் பூச்சிகள் முட்டைகளை தனியாக வைத்திருக்கும். முட்டைகள் நிறமில்லாமலும், பின் முதிர்ச்சிடையும்போது, வெளிறிய மஞ்சள் நிறமாக மாறிவிடும். இலைத்தாள் திசுக்களின் பிளப்புகளில் முட்டைகள் இடப்பட்டிருக்கும். முட்டையின் மேல்பகுதியின் பாதி வெளிப்படுத்தியிருக்கும்.
- இளம் பூச்சி :
புதிதாக பொரிக்கப்பட்ட இளம்பூச்சிகள் தெள்ளத் தெளிவாக இருக்கும். ஆனால் முதல் தோல் உரித்தலுக்குப் பிறகு மஞ்சளான வெள்ளை நிறமாக மாறி பின் கருப்பான கால்கள், தலை மற்றும் உணர்கொம்புகளை உருவாக்குகிறது. திறக்கப்படாத இளம் இலைகளின் மென்மையான திசுக்களை இளம் புழுக்கள் உட்கொள்ளும்.
- கூட்டுப்புழு :
சுருண்ட இலைகளின் உள்ளே கூண்டுப்புழுவதால் ஏற்படும். மேலும் அதன் புடைவளர்ச்சி மற்றும் இறக்கைகள் வளர்ச்சி தெளிவாகக் காணப்படும்.
- முதிர்ப்பூச்சிகள் :
முதிர்ச்சியடைந்த பூச்சிகள் 1 மி.மீ நீளம் கொண்டு கரும்பழுப்பு முதல் கருப்பு நிறத்துடன் மயிரிழைகளாலான இறகுகளைக் கொண்டிருக்கும். ஆண் பூச்சிகள் பெண் இனப்பூச்சிகளைவிட சிறியதாகவும், மெலிந்தும் காணப்படும். பூச்சித் தொகையில் ஆண் இனப் பூச்சிகள் மிக அரிதாக காணப்படுவதால், கன்னி இனப்பெருக்கமுறையைக் கொண்டுள்ளது. (பாலினச் சேர்க்கையில்லாத இனப்பெருக்கம்)
|
|
|
|
|
இளம் பூச்சி |
இரக்கையுடைய இளம் பூச்சி |
|
|
முதிர்ப்பூச்சி |
முதிர்ப்பூச்சி |
|
மேலே செல்க |
|