மேலாண்மை: |
|
உழவியல் முறைகள் :
- அதிகளவு தழைச்சத்து உரம் அளிப்பதை தவிர்க்க வேண்டும்.
- இடைவிட்ட வடிகாலின் மூலம், பாசனத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.
- இந்திய நெல் ஆராய்ச்சிக் கழகம் வெளியிட்டுள்ள வெண்முதுகுடைய தத்துபூச்சிகளை எதிர்க்கும் திறன் கொண்ட மரபணுக்களையுடைய இரகங்களான ஐஆர் 26, ஐஆர் 64, ஐஆர் 36, ஐஆர் 56, மற்றும் ஐஆர் 72 ஆகிய இரகங்களை பயிரிடுதல்.
- நெருக்கமான நடவு செய்தலைத் தவிர்த்து, ஒவ்வொரு 2.5-3.0 மீட்டர் அளவிற்கு இடையே 30 செ.மீ கலவன் அகற்றும் பாதை விட்டு நடவு செய்தல் வேண்டும். இதனால் பூச்சித்தாக்கத்தைக் குறைக்க முடிகிறது.
|
|
|
அதிகப்படியான தழைச்சத்து உர பயன்பாட்டை தவிர்க்கவும் |
வயலில் அடிக்கடி நீரை வடித்து கட்டவும் |
|
|
30 செ.மீ. அளவு கலவன் பாதை விடவும் |
ஐஆர் 36 போன்ற எதிர்ப்பு இரகங்களை பயிரிடவும் |
|
இரசாயன முறைகள் :
- பொருளாதார சேத நிலை அளவ : கொன்றுண்ணி சிலந்திகள் இல்லாத நிலையில், 1 துாருக்கு ஒரு தத்துப்பூச்சி என்றஅளவிலும், சிலந்திகள் 1/குத்து என்ற அளவிலிருக்கும்போது துாருக்கு 2 தத்துப்பூச்சிகள் என்ற அளவிலும் இருக்கலாம்..
- கீழ்வரும் ஏதேனும் ஒன்றை தெளிக்க வேண்டும். பாஸ்போமிடான் 40 SL @ 1000 மிலி/எக்டர் (அ) மோனோக்ரோட்டோபாஸ் 36 SL @ 1250 மிலி/எக்டர் (அ) கார்போஃபூரான் 3 ஜி @ 17.5 கிலோ/எக்டர் (அ) டைக்லோர்வாஸ் 76 நீரில் கரையும் திறன் @ 350 மிலி/எக்டர்
- தாவரச்சாறுகளை பயன்படுத்துதல்:
பெரிய நங்கை (ஏன்ட்ரோகிராபிஸ் பேனிகுலேடா) கஷாயம் 3-5 சதவிகிதம் (அ) பூண்டு, இஞ்சி, மிளகாய்ச் சாறு (அ) வேப்பெண்ணெய் 3 சதவிகிதம் @ 15 லிட்டர்/எக்டர் (அ) இழுப்பை எண்ணெய் 6 சதவிகிதம் @ 30 லிட்டர்/எக்டர் (அ) வேப்பங்கொட்டைச்சாறு 5 சதவிகிதம் @ 25 கிலோ/எக்டர்
|
|
|
பாஸ்போமிடான் தெளிக்கவும் |
கார்போஃபூரான் தெளிக்கவும் |
|
|
இழுப்பை எண்ணெய் பயன்படுத்தவும் |
வேப்பணெண்ணெய் பயன்படுத்தவும் |
|
உயிரியல் முறைகள்:
- “அனாக்ரஸ் சிற்றின” வகை முட்டை ஒட்டுண்ணிகளையும், “பேச்சிகோனேட்டோபஸ் சிற்றின” வகையின் இளங்குஞ்சுகள் மற்றும் முதிர்ப்பூச்சிகள் ஆகியவற்றை நெற்பயிரில் விடுவதன் மூலம் தத்துப்பூச்சிகளைக் குறைக்கலாம்.
- சிறந்த விளைவு தரும் கொன்றுண்ணிகளான காக்ஸினெல்லா அர்குயேடா, சிர்டார்ஹினஸ் லிவிடிபென்னிஸ் மற்றும் டிட்தஸ் பர்விசெப்ஸ் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டும்.
- முட்டைகளின் பொதுவான ஒட்டுண்ணிகளாக “குளவி” இன வரிசைகள் விளங்குகின்றன. இம்முட்டைகளை நாவாய்ப்பூச்சிகள் மற்றும் சிலந்திகள் வேட்டையாடி உணவாக எடுத்துக்கொள்கின்றன. இதன் இளங்குஞ்சுகள் மற்றும் முதிர்ப்பூச்சிகளை பொதுவான கொன்றுண்ணிகளான சிலந்திகள் மற்றும் பொறி வண்டுகள் உணவாக பயன்படுத்திக் கொள்கின்றன.
- நீர்த்துளை வண்டுகள், உண்மை நீர் வண்டுகள், தட்டான் பூச்சி, ஊசித்தட்டான் மற்றும் நாவாய்ப்பூச்சிகளான தண்ணீர் தேள், சிறு மற்றும் பெரிய இனத் தேள்கள் ஆகியவை நீர்பரப்பில் விழும் இளம் தத்துப்பூச்சிகள் மற்றும் முதிர்ப் பூச்சிகளை உட்கொள்கின்றன.
- வெண்முதுகுடைய தத்துப்பூச்சிகளை இயற்கை உயிரியல் கட்டுப்பாட்டுக் காரணிகள் மூலம் கடுப்படுத்தலாம். (எ.கா) சிறு குளவிகள் தத்துப்பூச்சிகளின் முட்டைகளை ஒட்டுண்ணியாக செயல்பட்டு உட்கொள்கின்றன.
- தத்துப்பூச்சிகளின் இளம் உயிர்கள் மற்றும் முதிர்ப் பூச்சிகளை கொன்றுண்ணி சிலந்திகள் மற்றும் வண்டுகள் உணவாக எடுத்துக் கொள்கின்றன. இதன் இளம் பூச்சிகள் மற்றும் முதிர்நிலைப் பூச்சிகளை உண்மை நீர் வாழ் வண்டுகள் மற்றும் நீர்த்துளை வண்டுகள் முதிர்ச்சியடையாத நிலையுடைய ஊசித்தட்டான் பூச்சிகள், தட்டான் பூச்சிகள், நீர் வாழ்தேள்கள், மற்றும் பெரு நாவாய்ப்பூச்சிகள் ஆகியவை கொன்றுண்ணிகளாகச் செயல்பட்டு தத்துப்பூச்சிகளை உட்கொள்கின்றன.
- சிலந்திகள், செம்பலினிடு வண்டு, தரைவண்டுகள், மற்றும் நாவாய்ப்பூச்சிகள் ஆகியவை நெற்பயிரில் வெண்முதுகுடைய தத்துப்பூச்சிகளைத் தேடி அதனை உட்கொள்ளும்.
|
|
|
|
|
|
|
முட்டைகளை உண்ணும் கரையான்கள் |
இயற்கை எதிரி - மிரிட் நாவாய்பூச்சி |
|
|
இயற்கை எதிரி - மிரிட் நாவாய்பூச்சி |
இரை விழுங்கி - பொறி வண்டு |
|
பொறி முறைகள்:
- இரவு நேரங்களில் விளக்குப் பொறிகளை வைக்க வேண்டும்.
- பகல் நேரங்களில் மஞ்சள் நிற ஒட்டுப் பொறிகளைப் பயன்படுத்தலாம்.
- வெள்ளொளித் தன்மையுடைய விளக்குப் பொறிகளை 1-2 மீட்டர் உயரத்தில் (@ 4/ஏக்கர்) பொருத்தி பூச்சிகளின் தொகையைக் கண்காணிக்க வேண்டும்.
|
|
|
வெண் இழை விளக்குப்பொறி வைக்கவும் |
விளக்குப்பொறி வைக்கவும் |
|
|
இரவு நேரங்களில் விளக்குப்பொறி வைக்கவும் |
மஞ்சள் ஒட்டுப்பொறி பகல் நேரங்களில் வைக்கவும் |
மேலே செல்க |