|
கருநாவாய்ப்பூச்சி
தாக்குதலின் அறிகுறிகள் : |
- நீர் மட்டத்திற்கு சற்று மேலே தண்டுகளின் அடிப்பகுதியில் நாவாய்ப்பூச்சிகள் காணப்படும்.
- பயிர் வளர்ச்சி குன்றி, துார்களின் எண்ணிக்கையும் குறைந்து, இலைகள் சிவப்பு கலந்த பழுப்பு நிறமாக மாறி பின் காய்ந்துவிடும்.
- இலைகளின் மேல் வெளிரிய பச்சைநிற புள்ளிகளுடன் காணப்படும்.
- வளர்ச்சி குன்றிய கதிர்(அ) கதிர்கள் உருவாகமலும், முழுமையற்று வெளிவந்த கதிர்கள், நிரம்பாத பூங்கிளைகள் அல்லது கதிர்ப்பருவத்தில் வெள்ளைகதிர்களும் தோன்றும்.
தாக்குதலின் தன்மை :
- இளம் பூச்சிகள் மற்றும் முதிர் நாவாய்ப்பூச்சிகள் இரண்டும் பயிரிலேயே இருந்து கொண்டு, பயிரின் அடிப்பகுதியிலுள்ள சாற்றை உறிஞ்சி, பயிர்களைக் குட்டையாக்குகின்றன.
- இலைகள் சிவப்பு கலந்த பழுப்பு நிறமாக மாறுதல் மற்றும் நெல்மணிகள் வளர்ச்சியின்றியும் காணப்படும்.
- பால் பருவத்திலிருக்கும் கதிர்களை நாவாய்ப்பூச்சிகள் உண்கின்றன. இதனால் கதிர்களில் பழுப்பு நிறப் புள்ளிகள் அல்லது நிரம்பாத நெல் மணிகளுடன் காணப்படும்.
- தீவிரத் தாக்குதலால் பயிர்கள் மடிந்துவிடும். இதனால் நெல் வயல் முழுவதும் காய்ந்து, கருகிக் காணப்படும். இதுவே “நாவாய்ப்பூச்சிக் கருகல்” அல்லது “எரிந்தது போன்ற தோற்றம்” ஆகும்.
|
|
|
தண்டுகளின் அடிப்பகுதியில் நாவாய்ப்பூச்சிகள் காணப்படும |
இலைகளின் மீது வெளிரிய நீள் புள்ளிகள் காணப்படும் |
|
மேலே செல்க |
பூச்சியை கண்டறிதல் : |
|
அறிவியல் பெயர் - ஸ்கோட்டினோபோரா லுாரிடா
- முட்டை :
முட்டைகள் உருளை வடிவத்தில், மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில், இரு வரிசைகளில், 10 சிறு கூட்டங்களாக இலைகளின் மேல் இடப்பட்டிருக்கும்.
- இளம்பூச்சி :
இளம் பூச்சிகள் பழுப்பான மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில், வயிற்றுப் பகுதியில் சில கருப்புப் புள்ளிகளுடனும் காணப்படும்.
- முதிர்பூச்சி :
தட்டையாக, 7-9 மிமீ நீளமுடன், பழுப்பு கலந்த கருப்பு நிறத்தில், தெளிவான முக்கோண வடிவ நெஞ்சுப்பகுதி மற்றும் முன்நோட்டத்துடன் அமைந்து, இருபுறமும் முள்ளினைக் கொண்டிருக்கும். |
|
|
கருநாவாய் பூச்சி |
|
|
கருநாவாய் பூச்சி |
|
|
மேலே செல்க |
மேலாண்மை : |
|
- துார்வைக்கும் பருவத்தில் 10% சேதம் (அ) ஒரு குத்துக்கு 5 நாவாய்ப்பூச்சிகள் என்ற எண்ணிக்கை.
- வயலிலுள்ள களைகளை அகற்றவும். உழவு மேற்கொள்ளும்போது வயலை நன்கு உலர விட வேண்டும்.
- ஒரே முதிர்ச்சிப்பருவம் கொண்ட நெல் இரகங்களைப் பயிரிடுவதால், பூச்சியின் சுழற்சியை அழிக்க முடிகிறது.
- நேரடி விதைப்பு நெற்பயிரில் குறைந்த துார்கள் மட்டுமே காணப்படுகிறது. எனவே நெற்பயிர் வளர்ச்சி குறைந்து காணப்படுகிறது.
- வயலை வெள்ளப்பாசனம் செய்வதன் மூலமும் அதிகளவில் முட்டைகளை மடிய செய்யலாம்.
- பெளர்ணமி தினத்தன்று விளக்குப்பொறியை வயலில் வைப்பதன் மூலம், அதிக அளவிலான நாவாய்ப்பூச்சிகளை அவை கவர்கிறது.
- சிலந்திகள், பொறி வண்டுகள் மற்றும் குளவிகள் போன்ற இரை விழுங்கிகளை பாதுகாக்க வேண்டும்.
- வாத்துக்களை நெல் வயலில் விட வேண்டும்.
- மோனோகுரோட்டோபாஸ் @ 100 மிலி/எக்டர் (அ) அசிப்பேட் 625 கிராம்/எக்டர் (அ) வேப்பங்கொட்டைச்சாறு 5% தெளிப்பதால் கருநாவாய்ப்பூச்சிகளைச் சிறந்த முறையில் கட்டுப்படுத்த முடிகிறது.
|
|
|
வாத்துகளை வயலில் விடவும் |
இரைவிழுங்கி சிலந்திகளை பாதுகாக்கவும் |
|
|
விளக்குப்பொறியை வயலில் வைக்கவும் |
வேப்பங்கொட்டை சாறு தெளிக்கவும் |
மேலே செல்க |
|