|
கதிர்நாவாய்ப்பூச்சி
|
தாக்குதலின் அறிகுறிகள் : | ||
தாக்குதலின் தன்மை : இளம் பூச்சிகள் மற்றும் முதிர் நிலைப்பூச்சிகள் இரண்டும் சேதத்தினை ஏற்படுத்துகின்றன. குஞ்சுகள் பொரிக்கப்பட்டு 3-4 மணி நேரத்திற்குப்பிறகு அவை பயிர்களின் மேல் உணவு உட்கொள்கின்றன. நுனி அருகிலிருக்கும் இலைச்சாறின் மேல் உட்கொள்ளுதல் அல்லது பால்ப்பருவ நிலையில் வளர்ச்சியடையும் பூங்காம்பின் பால் போன்ற சாறுகளை உட்கொள்ளுதல். பால் சாறை உறிஞ்சுவதால், முழுவதும் நிரம்பப்படாத பகுதி நிரம்பிய தானியமற்ற உமிச் செதில்களுடன் காணப்படும். இவை வெறுக்கத்தக்க ஒரு மணத்தை வெளியிடுகிறது. அதுவே “குந்தி நாவாய்ப்பூச்சிகள்” எனப்படுகிறது. தீவிர பூச்சித் தாக்குதலினால் 50 சதவிகிதம் மகசூல் குறைவு ஏற்படுகின்றது. வைக்கோல் வெறுக்கத்தக்க மணத்தை அளித்து, அவை கால்நடைகளை ஈர்க்காத வண்ணம் இருக்கிறது. |
தானிய மணிகளின் மீது உண்ட காயங்களும், புள்ளிகளும் காணப்படும் |
கதிர்கள் பதராகி நேராக நிற்கும் |
வயலில் இளம்குஞ்சுகள் காணப்படும் |
வயலில் நாவாய்பூச்சிகள் காணப்படும் |
|
மேலே செல்க |
பூச்சியை கண்டறிதல் : | ||
அறிவியல் பெயர் - லெப்டோகோரிசா அக்யூடா
|
||
முட்டை | இளம் பூச்சி | |
முதிர்ப்பூச்சி | முதிர்ப்பூச்சி | |
மேலே செல்க |
மேலாண்மை : | ||
உழவியல் முறைகள்:
|
||
நாவாய் பூச்சிகளை கைகளால் சேகரித்து அழிக்கவும் | வயலை களைகளற்று வைக்கவும் | |
டி.கே.எம. 9 போன்ற குண்டு இரகங்களை பயன்படுத்தவும் | நாவாய் பூச்சிகளை சேகரிக்க கை வலைகளை பயன்படுத்தவும் | |
இரசாயன முறைகள்:
|
||
வசம்பு பொடி சாறு தெளிக்கவும் | கார்பைரில் தூவவும் | |
பூச்சிக்கொல்லியை தெளிக்கவும் | மாலத்தியான் பயன்படுத்தவும் | |
உயிரியல் முறைகள்:
|
||
உயிர் எதிரி - புல்வெளி வெட்டுக்கிளி | உயிர் எதிரி - பொறி வண்டு | |
நாவாய்பூச்சிகளை தின்னும் தட்டான் பூச்சிகள் | முட்டைகள் மீது ஒட்டுண்ணியாகும் சிறு குளவிகள் | |
தாவரச்சாறு முறைகள்:
வேப்பங்கொட்டையின் சாறு 5 சதவிகிதம் @ 25 கிலோ/எக்டர் (அ) நொச்சி இலைப்பொடி சாறு 5 சதவிகிதம் (அ) ஐப்போமியா இலைப் பொடி சாறு 5 சதவிகிதம் (அ) வேல மர இலைப் பொடி சாறு 5 சதவிகிதம்
|
||
கொடிபூவரசு இலை சாற்றை பயன்படுத்தவும் | வேப்பங்கொட்டை சாறு தெளிக்கவும் | |
நொச்சி இலை சாற்றை பயன்படுத்தவும் | கருவேல் பொடி சாற்றை பயன்படுத்தவும் | |
மேலே செல்க |