சுய தொழில்முனைவேர் – சாரதாம்பாள் நாற்றங்கால் மையம்

பெயர் : திரு.ஆ.ரமேஷ்  
முகவரி : த/பெ.ஆதிவராகன் பிள்ளை,
குணமங்கலம் அஞ்சல்,
ஸ்ரீ முஷ்ணம் – 608 703
கடலூர் மாவட்டம் அலைபேசி எண் : 9942515469
குறு /சிறு/ பெரு விவசாயிகள் : சிறு விவசாயி  

வெற்றிக்கான காரணங்கள் மற்றும் அவைகளின் பங்கு

பயிர் இரகம் /வேளாண் தொழில்
விதை உற்பத்தி
மேலாண்மை உத்திகள்

  • திரு.ரமேஷ் நெல் மற்றும் தரிசு உளுந்து பயிரிடும் விவசாயி, அவர் தனியார் கடைகளிலும் மற்றும் அரசு வேளாண்மை துறையிலும் விதைகளை வாங்கி பயிரிட்டு வந்தார்.
  • விருத்தாச்சலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் சான்று விதை உற்பத்தி செய்வது எப்படி என்பது பற்றி பயிற்சி நடத்தப்பட்டது. அதில் ரமேஷ் கலந்து கொண்டு பயிற்சி பெற்று தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் முதன் முதலில் விதை சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வந்தார்.

மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களின் பங்கு

  • விதை சுத்திகரிப்பு நிலையம் ஆரம்பித்து வெற்றிகரமாக செயல்படுத்தி பின்னர், தற்போது நெல், உளுந்து, பாசிப்பயறு மற்றும் தக்கைப் பூண்டு பயிர்களில் உண்மை நிலை விதையை அவரது வயல்களிலேயே பயிரிட்டு சான்று  பெற்று உண்மை நிலை விதையை உற்பத்தி செய்து “சிவசக்தி விதை” என்ற பெயரில் விற்று வருகிறார்.

நிலைய பயிற்சிகள், செயல் விளக்கத்திடல்களின் பங்கு
தரமான விதை உற்பத்தி நிலையப் பயிற்சிகள் மற்றும் களப் பயிற்சிகளும் செயல் முறை விளக்கங்களும் சிறப்பான முறையில் நிலைய வல்லுநர் குழுவினரால் நடத்தப்பட்டது. இவற்றில் கலந்து கொண்டு திரு.ரமேஷ் விதை உற்பத்தியில் தமக்கிருந்த சந்தேகங்கள் அனைத்தையும் நிவர்த்தி செய்து கொண்டார்.
சந்தையை பற்றி நுண் அறிவு
திரு.ரமேஷ் மற்றும் பயிற்சியில் பங்கு கொண்ட அனைத்து விவசாயிகளுக்கும் தரமான விதைகள் உற்பத்தி செய்வதோடு அவற்றை லாபகரமாகவும், கவர்ச்சிகரமாகவும் விற்பனை செய்வதற்கான சந்தை தொடர்பான ஆலோசனைகளும், விற்பனை உக்திகளும் கற்றுக் கொடுக்கப்பட்டன.
வேளாண் விஞ்ஞானிகள் / விரிவாக்க பணியாளர்களின் பங்கு

நல்ல தரமான கலப்பு இல்லாத சான்று பெற்ற விதையை உற்பத்தி செய்வது எப்படி என்பது பற்றி நிலையப்பயிற்சி கொடுத்ததோடு மட்டுமில்லாமல் கள வருகையின்  மூலம் விவசாயிக்கு தொழில்நுட்பங்களை கொடுத்து வந்தனர்.

விளைச்சல் /ஏக்கர்/உற்பத்தி

ஆண்டுக்கு 70 டன் அளவுள்ள விதைகளை உற்பத்தி செய்து விற்று வருகிறார்.

வேலை வாய்ப்புகள்

விதை உற்பத்தி மற்றும் சுத்திகரிப்பு நிலையத்தில் தினமும் 10 கூலி வேலை ஆட்களை பயன்படுத்தி வருகிறார்.

தொழில்நுட்பத்தின் மூலம் பெறப்பட்ட மாத வருமானம்

ஆண்டிற்கு தோரயமாக ரூபாய் மூன்று லட்சம் வரை வருமானம் பெற்று வருகின்றார்.

பண்ணை விரிவாக்கம் பற்றிய எதிர்கால திட்டம்

  • நிலக்கடலை மற்றும் எண்ணெய் வித்து பயிர்களில் விதை உற்பத்தி செய்வது மற்றும் மற்ற மாவட்டங்களுக்கு விதைகளை விற்பனை செய்வது.

பிறருக்கு எடுத்துக் கூறும் உண்மை

  • விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பயிர்களை உரிய தொழில்நுட்பத்தோடு பயிரிட்டு விதைகளை உற்பத்தி செய்து அதிக லாபம் பெறலாம்.
  • அவ்வாறு பயிரிட்டு வரும் விதைகளை தனக்குத்தானே பயன்படுத்தலாம் அல்லது அதை சான்று பெற்று விற்றும் பயனடையலாம்.

தொழில்நுட்பம் சார்ந்த படங்கள்

திரு.ரமேஷ் அவர்கள் நிலைய வளாகத்தில் நடத்தப்பட்ட ஒரு கண்காட்சயில் தமது விதைகளுடன் – பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் மண்டல திட்ட இயக்குநர் ஆகியோர் பார்வையிடுகின்றனர் திரு.ரமேஷ் அவர்களின் விதை சுத்திகரிப்பு நிலையம்
Updated on Feb , 2015
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015