பெடல்ஸ் பூங்கொத்து அலங்காரம் – திருமதி. இரா.உமாராஜீ

பெயர் : திருமதி.இரா.உமாராஜீ  
முகவரி : க/பெ. இராஜசேகர்,
42, ரெங்கநாதன் சாலை,
பத்திரிக்குப்பம் போஸ்ட்,
அரிசி பொயிங்குப்பம் வழி,
கடலூர் – 607 002 அலைபேசி எண் : 9965121620
குறு /சிறு/ பெரு விவசாயிகள் : சிறு தொழில் முனைவோர்  

வெற்றிக்கான காரணங்கள் மற்றும் அவைகளின் பங்கு

நிலைய பயிற்சிகள்
  • வேளாண் அறிவியல் நிலையம் விருத்தாசலத்தில் திருமதி உமாராஜீ அவர்கள் ஒரு சாதாரண இல்லத்தரசியாக அக்டோபர் 2012 மாதத்தில் ஐந்து  நாட்கள் நடைபெற்ற பூங்கொத்து தயாரிப்பு என்ற தொழில்பயிற்சியில் கலந்து கொண்டார்.
  • பின்னர் தனது சொந்த முயற்சியினாலும் நிலைய அணுகுமுறைகள் காரணமாகவும், தொழில்முனைவோராக உருபெற்றார்.

நிலைய பயிற்சிகள் /செயல்விளக்கத் திடல்களின் பங்கு

பூங்கொத்து தயாரித்தல், உலர் மலர் கொத்துகளை உருவாக்குதல், மேடை அழகுபடுத்துதல் என்ற தலைப்புகளில் வேளாண்மை அறிவியல் நிலைய விருத்தாச்சலத்தால் நடத்த பெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் தனி தொழிலாக தொடங்குவதற்கு ஊக்குவிக்கப்பட்டார்கள். விளைச்சல் /ஏக்கர்/ உற்பத்தி ஒரு மாதத்திற்கு சுமார் ரூ.25000 வருமானமும், ஒரு வருடத்திற்கு சராசரியாக ரூ.2.5 இலட்சமும் இந்த தொழிலின் மூலம் பெறுகிறார். வேலை வாய்ப்புகள்

  • மகளிர்க்கும், கிராமபுற இளைஞர்களுக்கும் எதிர்காலத்தில் நல்ல வேலை வாய்ப்பை அளிக்க கூடிய தொழிலாகும்.
  • இத் தொழிலில் இவர் தம்மோடு 5 பேரை பணியிலமர்த்தி செயல்பட்டு வருகின்றார்.

தொழில்நுட்பத்தின் மூலம் பெறப்பட்ட மாத வருமானம் பாண்டிச்சேரியில் மற்றுமொரு விற்பனைமையத்தினைத் எதிர்காலத்தில் துவங்க திட்டமிட்டுள்ளதோடு சென்னையிலும் தன் விற்பனையை விரிவு படுத்த திட்டமிட்டு வருகின்றார்.பண்ணை விரிவாக்கம் பற்றிய எதிர்கால திட்டம்ஒரு சாதாரண இல்லத்தரசி நமது நிலைய பயிற்சியின் வாயிலாக மாதம் ரூ.25000 வரை வருமானம் ஈட்டும்போது, பெண்கள் சுய உதவிக்குழு மூலமாக இத்தொழிலைச் செய்தால், “மலர்க் கொத்து” தயாரிக்கும் தொழிலில் பெரிய அளவில் லாபகரமான தொழிலாக செய்ய இயலும்.பிறருக்கு எடுத்துக்கூறும் உண்மை

  • கடலூர் மாவட்டமானது விவசாயத் தொழில் மட்டும் பிரதானமாக நடைபெறும் மாவட்டமாகும்.
  • இங்கு மலர் உபயோகம் பெரிய அளவில் இல்லை.

இருந்தாலும் இதன் மூலம் இவர் மாதம் ஒரு பெரிய தொகையை ஈட்டுவது இத்தொழிலில் ஈடுபடுவோருக்கு ஒரு உற்சாகத்தினைத் தரும் செயல் ஆகும்.

தொழில்நுட்பம் சார்ந்த படங்கள்

நிலையத்தில் பூங்கொத்து தயாரித்தல் பயிற்சி பல்கலைக்கழக துணைவேந்தர் அவர்கள் உமாராஜீ அவர்களின் பூங்கொத்துகளின் வகைகளை பார்வையிடுதல்
Updated on Feb , 2015
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015