|
தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
பெரியகுளம்
தமிழ்நாட்டில், தேனி, பெரியகுளம் நெடுஞ்சாலையில் உள்ள, பெரியகுளத்தில் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையமானது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஒரு அங்கமாகும். இந்த நிலையத்தின் அருகே மேல பழனி மலை இருப்பதால் இயற்கை அழகையையும் வனப்பையையும் தருகிறது. இது கடல் மட்டத்திலருந்து 300 மீட்டர் உயரத்திலும், 100 வட அட்சரேகையிலும் அமைந்துள்ளது. இப்பகுதியின் காலநிலை, அநேக தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்வதற்கு ஏற்றதாக அமைந்துள்ளது. இந்த நிலையமானது கற்பிப்பதற்கும், ஆராய்ச்சி செய்வதற்கும், ஏற்ற சுற்றுச்சூழல் இருப்பதால், நல்ல வாய்ப்பாக உள்ளது.
இந்த கல்லூரியானது 100 ஹெக்டேர் பரப்பளவில், கற்பித்தல், ஆராய்ச்சி, பயிற்சி, விதை உற்பத்தி மற்றும் பயிர் பெருக்கம் செய்வதற்காக அமைந்துள்ளது. இதுவே இந்தியாவின் தென் பீடபூமி அமைந்துள்ள, தோட்டகலை கல்விக்காக அமைந்த முழுமையாக செயல்படக்கூடிய நிறுவனம்.
தோற்றம் மற்றம் வளர்ச்சி:
மதுரையைச் சுற்றி அமைந்த மாவட்டத்திலுள்ள பழம் சாகுபடி செய்யும் விவசாயிகளின் தேவைகளையும் குறைகளைப் போக்கவும், 1957 ஆம் ஆண்டு பெரியகுளத்தில், பழ ஆராய்ச்சி நிலையம் தொடங்கப்பட்டது. இந்த நிலையம், எல்லா தோட்டக்கலை பயிர்களிலும் ஆராய்ச்சியை விரிவுபடுத்தியுள்ளது. பின் பழம் மற்றும காய்கறி பயிர்களில் ஆராய்ச்சியின் விளைவினால் 1990 ஆம் ஆண்டு முழுமையான கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையமாக தரம் உயர்தப்பட்டது. இது பல துறைகளில் வளர்ச்சிப் பெற்று புதுப் பொலிவுடன் விளங்குகிறது.
நோக்கம்:
- மாணவர்களுக்கு, தோட்டக்கலை மற்றும் அதை சார்ந்த அறிவியல் பாடத்தில், நன்றாக கற்பிக்கப்பட்டு வருகிறது.
- இளங்கலை மற்றும முதுகலை மாணவர்கள், தோட்டக்கலை அறிவியலில் திறம் பட்டவர்களாக உருவாக்குவதே இம்மையம் மற்றும் புதிய சாகுபடி தொழில்நுட்பங்கள், முறைகளை உருவாக்குதல்.
- அடிப்படை மற்றும் அறிவியல் பூர்வ ஆராய்ச்சி மூலம், புதிய இரகங்கள், தோட்டக்கலை பயிர் உற்பத்தி பெருக்கம் மற்றும் சுற்றுப்புறச்சூழலை காத்தல் போன்ற செயல்களை நடத்துகிறது.
- விவசாயிகள், தொழில் முனைவோர்கள் மற்றும் துறை அலுவலர்களுக்கு பயிற்சிகளும் ஆலோசனைகளும் வழங்குகிறது.
இளங்கலை கல்விக்கான ஆரம்பமான இக்கல்லூரியானது 1993 ஆம் ஆண்டு முதல் முதுகலை கல்வி வழங்கப்பட்டது. இந்த நிலையமானது, இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகத்தின் அறிவுரைப்படி தேசிய அங்கீகாரம் வழங்கு வாரியத்ததால், 1999 ஆம் ஆண்டு அங்கீகாரம் பெற்றது.
இங்கு பயின்ற மாணவர்கள், வேலை வாய்ப்பு திடல் மூலமாக தோட்டக்கலை பட்டதாரிகளுக்கு ஏற்ற பணிகள், இளநிலை ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் மற்ற போட்டி தேர்வுகளுக்கான பயிற்சிகள், வெளிநாடுகளில் மேல்கல்வி பயில உதவிகள், வெளிநாடு பல்கலைக்கழகத்திலிருந்து உதவி பெற உதவுதல். புதிய தொடங்க ஆலோசனை வழங்குதல். வெளிநாடுகளில் பயிலும் மாணவர்களுடன் தொடர்பு கொண்டு தகவல்கள் மற்றும் வாய்ப்பு அறிய உதவுதல் போன்ற செயல்களை செய்து வருகிறது. இவற்றின் சீரிய பணியில் அநேக மாணவர்கள் தனியார் நிறுவனங்களில் நல்ல வேலையில் உள்ளார்கள்.
வெளியிடப்பட்ட இரகங்கள்:
தக்காளி |
- |
பி.கே.எம் 1 |
சப்போட்டா |
- |
பி.கே.எம் 1,2,3,4 |
முருங்கை |
- |
பி.கே.எம் 1, பி.கே.எம் 2 |
புளி |
- |
பி.கே.எம் 1 |
கத்தரி |
- |
பி.கே.எம் 1 |
புடலை |
- |
பி.கே.எம் 1 |
பீர்க்கை |
- |
பி.கே.எம் 1 |
கொடுக்காபுளி |
- |
பி.கே.எம் 1 |
பி.கே.எம் 4 (புதியதாக வெளியிடப்பட்ட இரகம்), ‘சப்போட்டா’
2003 ல், PKM 1 - லிருந்து திறந்த வெளி இனப்பெருகத்தின் மூலம் உருவாக்கி வெளியிடப்பட்டது. இந்த இரகத்தின் பழமானது, ‘ஸ்பின்டில்’ வடிவத்தில், வழுவழுப்புடன், இளம்பழுப்பு நிற தோலுடன் சந்தைக்கு ஏற்ற இரகம். இதன் உள்ளே இளம் ரோஸ் நிறத்துடன் கூடிய தேனுடன் பழுப்பு நிறத்தில் இருக்கும். ஆனால் பழுத்தவுடன் அடர்பழுப்பாக மாறாது. இது மற்ற இரகங்களை விட நீள் இரகமாதலால், இது முதல் தரமான சப்போட்டா பழ துண்டுகள் தயாரிக்கப்பயன்படும். நன்கு பழுத்தவுடன், இப்பழத்தின் சதை பகுதியானது, காய்ந்த துண்டுகளாகி விடுவதால், இது உண்பவர்களை கவரவும், ஏற்றுமதிக்கு ஏற்ற வாய்ப்புள்ளதாகவும் உள்ளது.
விதை கருவூலம் - காத்தல்
இங்கு கீழ்க்கண்ட பயிர்களில் விதை கருவூலங்கள் சேகரிக்கப்பட்டு பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது.
மா |
- |
35 |
புளி |
- |
6 |
சப்போட்டா |
- |
16 |
தக்காளி |
- |
49 |
கொய்யா |
- |
6 |
நாவல் |
- |
8 |
புடலை |
- |
6 |
எலுமிச்சை |
- |
6 |
முருங்கை |
- |
30 |
பலா |
- |
12 |
கீரை வகை |
- |
70 |
மருந்து செடிகள் |
- |
460 |
இதர பழவகைகள் |
- |
52 |
இங்கு சேகரித்து வைத்துள்ள 400 வகை மருந்து செடிகள் இயற்கையாக நலத்திற்கு உகந்தது. இது தன்மை, மருத்துவ குணம், அதன் தரத்தை மதிப்பிடல், சாகுபடி செய்தல், சுத்திகரித்தல் மற்றும் பெருக்கம் செய்தல் போன்றவைகள் செய்யப்பட்டு வருகிறது. இங்கு அமைந்த மருந்துச் செடிகள் தோட்டமானது. மருத்துவ செடி பூக்கள், நட்சத்திர தோட்டம், பச்சை பூங்காவாக அலங்கரித்து இயற்கை நலத்தை பறைச்சாற்றுவதாக அமைந்துள்ளது.
மேலும் 53 அரிய பழவகைகள், தென் பீடபூமி பகுதியில் சேகரிக்கப்பட்டு, கிழக்கு பகுதியில் வளர்க்கப்பட்டு வருகிறது.
பழங்கள் மற்றும் காய்கறிகளை, உயிரிகளால் மட்கக்கூடிய பிளாஸ்டிக் கொண்டு சிப்பம் அடைக்கும் தொழில்நுட்பம்.
‘பிளாஸ்டிக்’ கொண்டு பொருட்களை சிப்பம் அடைத்தால் நல்ல பாதுகாப்பாகவும், செலவு அதிகமில்லாததாகவும், எப்போதும் அழிவில்லாததாகும். ஆனால், அது சுற்றுப்புறச்சூழலுக்கு பிரச்சினையாகவும், இயற்கையில் கிடைக்கும் எண்ணெய் மற்றும் வாயு திரும்ப நிரப்பமுடியாத வளத்திலிருந்து தயாரிப்பதால், பிரச்சினையாகவும் உள்ளது. இந்த பிரச்சினைகளுக்கு தீர்வாக, எளிதில் மட்கக்கூடிய பிளாஸ்டிக் பொருள்களை திரும்ப திரும்ப கிடைக்கக்கூடிய பொருளிலிருந்து தயாரித்து பயன்படுத்தும் உத்தி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குச்சிக்கிழங்கில் இருக்கும் ‘ஸ்டார்ச்சு’ பொருளானது நுண்ணுயிர்களால் லாக்டிக் அமிலமாக்கப்பட்டு, அது வேதியியல் முறைகளின் மூலம் ‘பிளாஸ்டிக்’ ஆக மாற்றப்படுகிறது. அது ‘பாலிலாக்டைட்’ எனப்படுகிறது.
பாக்டீரியா கொண்டு பிளாஸ்டிக் துகள்களாக குச்சிக் கிழங்கு ஸ்டார்ச்சு மாற்றப்பட்டது. அது ‘பாலி ஹைட்ராக்சி அல்கனோட்’ என்று அழைக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.
அப்படியே இருந்தாலும் ‘பாலிலாக்டைட்’ மற்றும் ‘பாலி ஹைட்ராக்சி அல்கனோட்’ இரண்டும் சாதாரணமாக பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கை விட அதிக விலையாகும். ஸ்டார்ச்சை பயன்படுத்தி, அதை இதர அதிக விலையுள்ள எளிதில் மட்கக்கூடிய பாலிமருடன் சேர்ந்து, பலதரப்பட்ட வளையக்கூடிய பிளாஸ்டிக் தயாரிக்கலாம் அதை ஒரு மேல்பூச்சு பொருளாகப் பயன்படுத்தலாம்.
தக்காளியை, காக்கப்பட்ட சுற்றுச்சூலலில் சாகுபடி செய்தல்:
பெரியகுளம், தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் கோடை மற்றும் மழைக்காலங்களில் நிலவக்கூடிய, உகந்ததற்ற காலநிலையில் தக்காளி பயிரிட ஆராய்ச்சி நடைப்பெற்று வருகிறது. வெப்பத்தைக் தாக்கக்கூடிய இரகங்கள் (வீரிய ஒட்டு இரகங்கள், ஊடகப்பொருளின் தரத்தை நிர்ணயித்தல், (திரவ உர – நீர்பாசனம்), நீர் வழி உரம் இடுதல், பயிற்சி மற்றும் கவாத்து முறைகள் மற்றும் துல்லிய பண்ணைத்திட்டத்திற்கு தேவையான முறைகள் குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.
நிழல் வலை கூடம், கண்ணாடி வீடு, வீடு மற்றும் திறந்த வெளிகளில் உள்நாட்டு மற்றம் வெளிநாட்டு தக்காளி, இரகங்கள் ஆய்வு செய்யப்பட்டது. அதில் வெளிநாட்டு வீரிய ஒட்டு இரகமாக ‘அதிலா’, நம்முடைய வெப்ப சூழ்நிலையில், நிழல் வலைக் கூடத்தில் வளர்க்க உகந்தது.
இங்கு மேற்கு பகுதியில் 23’ 9’ 6’ மீட்டரில் ‘பாலி ஹவ்ஸ்’ குறைந்த செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இது ‘ஜி.ஐ பைப், 200 மைக்ரான் ‘எல் டி பி இ’ நாள் கொண்டு இயற்கையான காற்று நுழையும் வகையில் மேல் பகுதி மற்றும் சுற்றுப் பகுதியிலும் துளையிடப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூடத்தில் எல்லா தொடர் வளரும் தக்காளி வகைகளை மதிப்பிடப்பட்டுள்ளது. 12 வீரிய ஒட்டு இரகம் மற்றும் 12 இரகங்கள், சோதனை செய்ததில் மீனாட்சி, என்ஸ் 6666, ஹச் ஒய் 7611 மற்றும் கோ.டி.ஹச்1 போன்றவை நன்கு வளர்கிறது.
நுண்ணுயிர் உரம் தயாரிப்பு
திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டத்தில், உருவாக்கபட்ட முதல் நிலையமான நுண்ணுயிர் உரம் தயாரிப்பு கூடத்தில் தயாரிக்கப்பட்டு, அதை பற்றி பொது மக்களுக்கு தெரியப்படுத்தவும் அமைந்துள்ளது.
நீர் அறுவடை பூங்கா
இங்கு 0.5 ஹெக்டர் அளவில், சீத்தாப்பழம் மரமானது, சரிவுகளில், பாறை பகுதிகளில் நடப்பட்டு, அங்கு நுண்நீரானது அறுவடை செய்யப்படுகிறது. இந்த மாதிரியானது அனைவரும் பார்வையிட்டு, நேரில் காணும் பொருட்டு அமைக்கப்பட்டுள்ளது. நீண்ட வறட்சியான தாக்குதலினால், ஒவ்வொரு மழைத்துளியும் மதிப்பு மிக்கது. அதற்காக 6 பெரிய கட்டிடங்களிலிருந்து (8557மீ2) அனைத்து மழை நீரையும் ஓடும் நீரையும் சேகரிக்க ‘ஒரு கூரை நீர் அறுவடை மாதிரி’ அமைக்கப்பட்டு 85 லட்சம் நீர் சேகரிக்கப்படுகிறது. இதுவே நீர் சேமித்தலின் அவசியத்தை வலியுறுத்துவதாக அமைந்த ஒரு பெரிய மாதிரியாகும் இக்கல்லூரியில் உள்ளது.
உயிரியல்தொழில்நுட்ப ஆராய்ச்சி - மைய வசதி
மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர் மற்றும் நுண் பெருக்கத்தின் மூலம் பயிர் பெருக்கம் செய்வது பற்றி உலகமெங்கும் பேசப்படும் நேரத்தில், இங்கு உயிரி தொழில்நுட்ப ஆய்வுக்கூடம் அமைக்கப்படும். அதில் தோட்டக்கலை பயிர்களுக்கான உயிரி தொழில்நுட்பங்கள் தொடர்பான ஆய்வுகள் நடத்தப்பட்டு, மாணவர்களுக்கும் தொழில் முனைவோர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இதற்கு தேவையான நிதியை மாநில அரசு கொடுத்து உதவுகிறது. உயிரியல் மற்றும் இதர மாசுக்கள் இல்லாதவாறு அமைக்கப்பட்டுள்ளது. இதை ஆய்வகத்திற்கு அருகில் வணிக ரீதியாக செடியை கடினப்படுத்தும் அறை நன்கு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த வசதிகளால், தோட்டக்கலை பயிர்களில் உயிரி தொழில்நுட்பத்தின் முன்னோடியாக விளங்க உதவுகிறது.
நுண் பெருக்க முறை:
செவ்வாழை மற்றும் மலை வாழையில் தண்டுநுனிக் கொண்டு இனப்பெருக்க செய்ய ஆய்வு நடத்தப்பட்டது. எப்போதும் பயன்படுத்து ஊடகப் பொருளில் (MS Medium) சில மாற்றங்கள் செய்து 21 நாட்களில் தண்டு வளரும் உத்தியைக் கண்டுபிடித்துள்ளார்கள். ‘கேலஸ்’ வளர்ச்சி அடைய வைப்பது என்பது வாழையில் கடினம். ஆனால் 2,4, டியை ஊடகப் பொருளில் வைத்து, ‘கேலஸ்’ ஐ வளர்ச்சி அடைய வைத்துள்ளார்கள்.
மேலும் வாழை, உப்புக் கரைசலை தாங்கி வளரக்கூடிய மூலக்கூற்றை ஆய்தல், மருந்துப்பயிரில் நுண் பெருக்கமுறையில் பெருக்குதல், பயிர் பாதுகாப்புக்கு என பல ஆய்வுகள் நடத்தப்பட்டன.
- ஒருங்கிணைந்த கிராம மேம்பாட்டுதிட்டத்தின் கீழ், அழகிய நாயக்கன்பட்டி மற்றும் வாழையத்துப்பட்டி என்ற தேனி மாவட்ட கிராமங்களில், பயிற்சிகள், கருத்தரங்கு, ஆலோசனை சேவை போன்ற பல நடத்தி விவசாயிகள் மற்றும் கிராம இளைஞர், விவசாய பெண்மணி அனைவரும் பயன் அடைந்தனர்.
- இங்கு 60 ஹெக்டேர் நிலம் பின் சேர்க்கப்பட்டு, மாணவர்களுக்கும், அலுவலர்களுக்கும் பயன் அடையும் வகையில் பல் கட்டடங்கள் கட்டப்பட்டன.
- விவசாய ஆராச்சிக்கென, கண்ணாடி அறை, வலை அறை தோட்டங்கள், காலநிலை அறியும் ஆய்வகம் என பல தோற்றுவிக்கப்பட்ட மாணவர்களுக்கு செயல் வகுப்புகள் நடத்தப்பட்டது.
- விளையாட்டு திடல்கள் பல அமைக்கப்பட்டு, அதில் பல வசதிகள் அமைக்கப்பட்டு மாணவர்கள் விளையாட்டில் வளர்ச்சி பல அடைய உதவியது.
- பல்வேறு ஆய்வுக்கூடங்கள், கருத்தரங்கு கூடம் போன்றவை அமைக்கப்பட்டது.
- நீர் வள மேம்பாட்டிற்கும் மற்றும் நீர் வழங்கவும் பல்வேறு வகைகளில் நீர் தொட்டி, கூரை நீர் அறுவடை முறை, தரிசு நிலத்திற்கு நீர் அறுவடை மூலம் பெறுதல், தெளிப்பு நீர்ப்பாசனம், குழாய் முறை மூலம் வறண்ட நிலத்திற்கும் புல்வெளிக்கும் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
- கட்டிடங்கள், தோட்டங்கள், ஆராய்ச்சி அமைக்க தேவையான நில வளங்கள் உள்ளது.
- மாணவர்களும், அறிவியல் அறிஞர் பலர் கற்க வசதியாக, இணையதள வசதியுடன் கூடிய பெரிய நூலகங்கள் உள்ளது.
- இந்த மையமானது, இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் தேசிய விதை திட்டத்தின் கீழ் காய்கறி பயிர்களுக்கு வல்லுநர் விதை உற்பத்தி செய்யும் அங்கீகாரமையமாக உள்ளது. இதில் இந்திய அரசு, தமிழக வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை, ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் தனியார் விதை நிறுவனங்களுக்கு தேவையான விதைகளை உற்பத்தி செய்கிறது.
- இங்கு தக்காளி (பிகேஎம்1), மிளகாய் (பிகேஎம்1), வெண்டை (எம்டியூ1), பாகல் (கோ1), புடலை (பிகேஎம்1), பீர்க்கை (பிகேஎம்1), செடி முருங்கை (பிகேஎம்1,2), போன்ற இரகங்களில் விதை உற்பத்தி செய்யப்பட்டு, சான்றளிக்கப்பட்ட விதைகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் மிளகாய் (பிகேஎம்1), கத்தரி (பிகேஎம்1), பூசணி (கோ2), பாகல் (கோ1), செடி முருங்கை (பிகேஎம்1,2), தர்பூசணி (பிகேஎம்1), சுரைக்காய் (கோ1) போன்றவற்றில் உண்மை நிலை விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு விற்கப்படுகின்றன.
- 2001 ஆம் ஆண்டு தமிழக அரசின் உதவியுடன், மேம்படுத்தப்பட்ட நாற்றுப்பண்ணை வளாகம் அமைக்கப்பட்டு, அதில் நிழல் வலைக்கூடம், ‘மிஸ்ட், கூடம் மற்றும் சப்போட்டா, மா, புளி அடர் நடவு செய்யப்பட்டு உள்ளது.
|
|