|
பயிறினத் துறை
பணியாளர் குழுமம் மற்றும் வளர்ச்சி
பயிறு வகைத் துறை 1943 ஆம் ஆண்டு கோயமுத்தூரில் தொடங்கப்பட்டது. இத்துறை பல்கலைக்கழக வளாகத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் வடக்கே அமைந்துள்ளது. இம்மையம் தமிழ்நாட்டின் வடமேற்கு மண்டலத்தில் 411.98 நிலைத் தோற்றம் மற்றும்
110 N அட்சரேகை, 770E தீர்க்காம்ச ரேகை நடுவே அமைந்துள்ளது. இதன் மொத்த பரப்பளவு 69 ஏக்கர் ஆகும். இப்பகுதி 8.5 அமில நிலையுடன் செம்மண் மற்றும் கரிசல் மண் கொண்ட பகுதியாகும். இம்மையத்தில் சராசரி மழைப் பொழிவின் அளவு 730மிமீ ஆகும். இதன் சராசரி வெப்பநிலை அதிகபட்சம் 31.940 செ மற்றும் குறைந்தபட்சம் 21.780 செ ஆகும்.
உளுந்து (விக்கின மூங்கோ எல்), பாசிப் பயிறு (விக்கினா ரெடியெட்டா), துவரைப் பருப்பு (கஜனஸ் கஜால்), கடலைப் பருப்பு (சீசர் ஆரிட்டினம் எல்), கொள்ளு (மேக்கிரோடைலோமா யூனிப்பொலோரம்), சோயா மொச்சை (கீலைசின் மேக்ஸ் எல்), தட்டைப் பயிறு (விக்கினா யூகியுலேட்டா எல்), அவலை (லாப்லா பர்ப்யூரியஸ் வெர் டைப்பிகஸ்) மற்றும் மொச்சை (லாப்லா பர்ப்யூரியஸ் வெர் லிக்னோஸ்) இவையனைத்தும் பலவகைப்பட்ட பயிறு வகை தானியங்கள் ஆகும்.
குறிக்கோள்கள்
- உயர் விளைச்சல் கொண்ட இடைக்கால அளவு துவரை இரகங்களுக்கான பரிணாமம்
- உயர் விளைச்சல் தரும் குறுகிய கால அளவுடைய துவரைக் கலப்பினங்களை பயன்படுத்த கூடிய திசுவறைக்குழம்பு வளர்ச்சிக்கு உகந்த ஆண் மலட்டு கோடுக்கான பரிணாமம்
- உயர் விளைச்சல் தரும் குறுகிய கால அளவு கொண்ட தட்டைப்பயிறு இரகங்களுக்கான பரிணாமம்
- சோயா மொச்சைக்கான வெளிச்ச வெப்ப உணர்வற்ற மற்றும் உயர் விளைச்சல் ரகங்களுக்கான பரிணாமம்
- வறட்சி சகிப்புத்தன்மை கொண்ட கொண்டைக்கடலை ரகங்களுக்கான பரிணாமம்
- எதிர்கால இனப்பெருக்க திட்டத்திற்கு அனைத்து பயிறு வகை பயிரில் உள்ள பண்பகத் தொகுதிக்கான பரிணாமம்
- பல்வேறு பயிறு வகை பயிர் ரகங்களின் தூய மரபணு உற்பத்தி
- மானாவாரி திட்டம், விளைச்சலை அதிகப்படுத்தல் மற்றும் ஊடுபுயிர் சாகுபடி நுண்ணுயிரி விதைகளுக்கான வேதி முறை செயல்பாடு மற்றும் வாழ்வியல் சார்ந்த சீர்குலைவு இவையனைத்திற்க்கான தொழில்நுட்பம்
- உயிர் கட்டுப்பாட்டு முகமை மூலம் நோய்களை கட்டுப்படுத்தல்
- பயிறு வகைகளுக்கு பூச்சிக்கான ஒருங்கிணைந்த மேலாண்மை மதிப்பீடு
- முதுநிலை பட்ட ஆராய்ச்சியை நிறைவேற்றல்
- வளர்ந்த தொழில் நுட்பங்கள் மற்றும் புதிய ரகங்களை பிரபலப்படுத்தல்
- ரகங்களின் சாகுபடி மற்றும் கலப்பின விதைகளின் உற்பத்திக்கான மாறுபட்ட தொழில்நுட்பங்களுக்கான பயிற்சி வழங்குதல்
தொடர்பு கொள்ள
பேராசிரியர் மற்றும் தலைவர்
பயிறுவகை துறை
தாவரயின இனப்பெருக்கம் மற்றும் மரபியல் மையம்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்
கோயமுத்தூர் – 641 003
தமிழ்நாடு, இந்தியா
மின்அஞ்சல்: pulses @tnau.ac.in |
|