உயிரித் தொழில் நுட்பம் - ஒர் அறிமுகம் |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பயிர் சாகுபடி |
வானிலை |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கிரோமோர் பயோடெக்
நிலத்தை பயிர் செய்ய தயார் படுத்தல் சொட்டு நீர் பாசனமுறையைப் பயன்படுத்தலாம். ஒரு நாளைக்கு வாழைச்செடிக்கு 20 லிட்டர் தண்ணீர் சொட்டு நீர் பாசன முறையில் தரவேண்டும். கடும் வெயில் காலத்தில் ஒரு மாதத்தில் ஒர வெள்ளப் பாசனம் கொடுக்கலாம். உர அளவு உரத்தை எட்டு முறை பிரித்து கொடுக்கலாம். உரத்தை முதல் மற்றும் இரண்டாம் தடவை கொடுக்கும் போது வளைய முறையில் 15 - 20 செ.மீ செடியிலிருந்து தள்ளி இடவேண்டும். உரத்தை மூன்றாம் மற்றும் நான்காம் தடவை கொடுக்கும் போது அதே முறையில் 40-50 செ.மீ தள்ளி இடவேண்டும். ஐந்தாவதிலிருந்து எட்டாவது தடவை வரை 60லிருந்து 70 செ.மீ தள்ளி இடவேண்டும். மண்வளத்திற்கு ஏற்றவாறு உரங்களை பயன்படுத்தவேண்டும். மண் ஆய்வு குறிப்பின் படி உரத்தை பயன்படுததவேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. பொதுவாக ஒரு செடிக்கு 180:180:270 கிராம் விகிதம் தழை / மணி /சாம்பல் சத்தைப் பிரித்து பின்வரும் முறைப்படி கொடுக்கவேண்டும்.
பச்சை உரம் மற்றும் சணப்பு அல்லது தக்கைப் பூண்டை ஊடுபயிராக பயன்படுத்தும் போது களைகளைத் தவிர்க்கலாம். வயலில் உள்ள களைகளை நீக்கி சுத்தமாக வைக்கவேண்டும். வாழைப்பயிா வளரும் போது இடைக்கன்றுகளை அகற்றவேண்டும். சாறு உறிஞ்சும் பூச்சிகளான அசுவினி, இலைப்பேன் மற்றும் இலைத் தின்னும் புழு வாழைக் கன்றில் காணப்பட்டால், 2 மிலி / லிட்டர் தண்ணீரில் வேப்பம் எண்ணெய்யை தெளிக்கவேண்டும். செடி நட்டபின் 90லிருந்து 110 நாட்களுக்குள் தொழு உரம் (அ) வேப்பம் புண்ணாக்கு இட்டபின் மண் அணைத்தல் வேண்டும். வாழை தார் முழுவதும் உருவான ஒரு வாரத்திற்கு பின் நுனியிலுள்ள ஆண் மலரை (மொட்டு) வெட்டிவிடவேண்டும். வாழைத் தாரில் வெயில் படாதவாறு கடைசி இலையை மடக்கிவிடவேண்டும். பலத்த காற்று மற்றும் வாழைத் தாரின் எடையைத் தாங்க மரக்கட்டை சாட்டை மரக்கட்டை (அ) தைல மரக்கட்டையை அணைக்குடுக்கவேண்டும். |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
திருந்திய நெல் சாகுபடி |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
TN உழவர் சந்தை |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அரசு திட்டங்கள் & சேவைகள் |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
குறைந்த பட்ச ஆதார விலை |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
சுற்றுச்சூழல் மாசுப்பாடு |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | விவசாயிகளின் கூட்டமைப்பு | விவசாயிகளின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| கேள்வி பதில் | தொடர்புக்கு © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008-10
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||