உயிரித் தொழில் நுட்பம் :: விதைக்கரணைப் பெருக்கம்: கரும்பு |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பயிர் சாகுபடி |
வானிலை |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இடம் அமைத்தல்: 5-6 முறை ஆழமாக உழுது, நிலத்தைப் பண்படுத்த வேண்டும். அடியுரம் இடுதல்: கடைசியாக உழும் போது எரு (அ) பண்ணைக்கழிவு 10 டன் / ஏக்கர் இட வேண்டும். வரப்பும் வாய்க்காலும் அமைத்தல்: (5x2) அடியில் இடை வெளிவிட்டு வரப்பும் வாய்க்காலும் அமைக்க வேண்டும். விதைத் தேவைப்பாடு: 5000 திசுவளர்ப்புக் கன்றுகள் சுமார் 1 ஏக்கருக்குத் தேவை.
நடுதல்:
உயிர் உரம்: களை மேலாண்மை: முதல் 90 நாட்கள், பயிரை களைகள் இன்றி பார்த்துக் கொள்ள வேண்டும். மண் அணைத்தல்: லேசாக மண் அணைத்தல் என்பது முதல் உரமிடல் அன்றும், அதிகமாக மண் அணைத்தல் என்பது நடவு செய்த 90ம் நாள் கழித்தும் செய்ய வேண்டும். நீர்ப் பாசனம்: மொத்தமாக 38 முறை நீர்ப்பாசனம் கரும்புச் சாகுபடிக்குத் தேவைப்படுகிறது.
நன்செய் நிலத்தில் பயிரிடும்போது தகுந்த வடிகால் முறையை, மழைக் காலங்களில் செய்து நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வளர்ச்சி ஊக்கிகள்: சைட்டோசைம் / பயோசைம் இவற்றை 180 மி.லி அளவுக்கு நடவு செய்த 45 மற்றும் 90ம் நாள் தெளிக்க வேண்டும். நுண் ஊட்டச் சத்துகள்: 2கி.கி ஜிங்க்சல்பேட் + 2கி.கி பெரஸ் சல்பேட் + 2கி.கி டை அம்மோனியம் பாஸ்பேட் + 1கி.கி யூரியா + 100லி நீர் இவற்றை நடவு செய்த 45 மற்றும் 60ம் நாள் தெளிக்க வேண்டும். அறுவடை: திசு வளர்ப்பு கரும்பானது 7ம் மாதத்தில் முதல் அறுவடையும், பின்பு 13ம் மாதத்தில் 2ம் அறுவடையும் செய்து இவைகளை விதைகளாகப் பயன்படுத்தலாம். மூன்றாம் அறுவடை 10ம் மாதம் கழித்துப் பெறப்பட்டு சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்பலாம். இவற்றில் சர்க்கரையின் அளவு அதிகம் காணப்படும். விளைச்சல்: மரபு வழியில் பயிர் செய்வதைக் காட்டிலும், திசுவளர்ப்பில் பயிர் செய்வதால் 40 % அதிக விளைச்சல் கிடைக்கின்றது. ஆதாரம்: குரோமோர் பயோடெக் விமிடெட் |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||
திருந்திய நெல் சாகுபடி |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||
TN உழவர் சந்தை |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அரசு திட்டங்கள் & சேவைகள் |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||
குறைந்த பட்ச ஆதார விலை |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||
சுற்றுச்சூழல் மாசுப்பாடு |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வல்லுனரை கேளுங்கள் |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | விவசாயிகளின் கூட்டமைப்பு | விவசாயிகளின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| கேள்வி பதில் | தொடர்புக்கு © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008-10
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||