|
நுண்பயிர்ப் பெருக்கம் மற்றும் மரபுவழிப் பெருக்கத்தில் கரும்புச் சாகுபடியாளர்கள் வயல்வெளியில் செயல்திறன் ஓர் ஒப்பீடு.
சாராம்சம்
திசுவளர்ப்பின் மூலம் பெறப்பட்ட இரகமான கோ.ஜெ 64 ஆனது மரபு வழிப் பெருக்கத்தில் உருவாக்கப்படுவதை விட அதிக அளவு உயிர் மொட்டுக்களையும் அதிக உயரத்தையும் கொண்டுள்ளது. மேலும் 13.2 சதவிகிதம் அளவுக்கு அதிக மகசூலும், மற்றும் 11.03 சதவிகிதம் அதிக சர்க்கரை அளவும் அதிகரித்துக் காணப்படுகிறது. இந்த ஒப்பீடானது மரபு வழியில் பின்பற்றப்படும் முறைகளை திசு வளர்ப்பில் பெறப்பட்ட விதைக் கொண்டு சாகுபடி செய்வது சரியானது என அறிவுறுத்தப்படுகிறது.
அறிமுகம்
மரபு வழிக் கரும்புச் சாகுபடியில் பயிர்ப் பெருக்கமானது மிகத் தாமதமாக அதாவது ஒரு வருடத்தில் ஒன்று முதல் 10 பருவங்களில் மட்டுமே நடக்கிறது. மேலும் நோய்க் காரணிகள் பாதிப்பானது ஒரு தலைமுறையிலிருந்து மற்ற தலைமுறைக்கு கடத்தப்படுவதுடன் மகசூல் மற்றும் தரம் குறைகிறது. ஆகவே நன்கு பராமரிக்கப்படும் பயிர் பெருக்கம் அதிக அளவில் உற்பததி செய்வதற்குத் தேவைப்படுகிறது. நுண்பயிர்ப் பெருக்கமானது, திசு வளர்ப்பு முறையில் அதிக நிலைப்புத தன்மையும், அதிக அளவு உற்பத்தி செய்யவும் உற்பத்தித் திறனை அதிகரிக்கவும் ஆகும். நடப்பு விசாரணையில் பஞ்சாப் (ஹரியானா) மூலம் செய்யப்பட்டது.
பொருட்கள் மற்றும் முறைகள்
கரும்பு கோ.ஜெ. 64 இரகமானது, பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகத்தின் மரபியல் மற்றும் உயிரித் தொழில்நுட்பத்தின் பயிர்ப் பெருக்கத்துறையின் பல்வேறு சோதனை ஆராய்ச்சிகளின் மூலம் பெறப்பட்டது.
பயிர் நுண் பெருக்க செயல் முறை அட்டவணையானது “கோசல்” என்பவரால் பின்பற்றப்பட்டன. தாவரப் பகுதியானது டீப்போல் மற்றம் கிருமிநாசினி கொண்டு 10 முதல் 15 நிமிடங்கள் ஓடும் நீரில் நன்கு மேலும் அதன் மேற்புற கிருமி நீக்கமானது 0.1 சதவிகிதம் மெர்குரிக்குளோரைடு 10 நிமிடம் உயிரியற்ற காற்று வீசு அறையில் வைத்துப் பின்பு 3 முறை கிருமி நீக்கம் செய்யப்பட்ட காய்ச்சி வடித்த வடிநீர் கொண்டு கழுவவேண்டும். 15-20 செ.மீ அளவு இருக்குமாறு கூர்மையான கத்தியை அசிட்டிக் அமிலம், பென்சைல் அமினோஃப்யூரின் மற்றும் ஜி.ஏ 3 0.5 மிலி / ஒரு ஊடகக்குடுவை. இதனை திரவ ஊடகத்திற்கு பின் மாற்றும் போது பென்சைல் அமினோஃப்யூரின் மற்றும் கைனின் அளவை 0.5 மி.கி / லிட்டர் என்ற அளவில் சேர்க்கவேண்டும்.
இதே அளவு கரும்புக் கொத்தினை மேலும் பெருக்கிட 15 நாட்களுக்குள் பிரித்து அதே ஊடகத்தில் வளர்க்கவேண்டும். இடைவெளியானது தேவைப்படும் எண்ணிக்கை அளவினைப் பொறுத்தது. தண்டு வளர்ச்சியானது பாதியளவு அகார் ஊடகம், மற்றும் திரவ, எம்.எஸ் உடன் நிக்கோடினிமிக் அசிடிக் அமிலம் 5.0 மி.கி / லிட்டர் மற்றும் அதிக அடர்வுடன் சுக்ரோஸ் 7 சதவிகிதம் அளவு ஆகும். இவ்வாறு பயிர் நுண் பெருக்கத்தில் வளர்க்கப்பட்ட கணுக்கள் பின்பு கடினமாக்க பாலித்தீன் பைகளில் இட்டு அவற்றை பாலித்தீன் கூடத்தில் வளர்ச்சிச் செய்யவேண்டும். பயிர் நுண்பெருக்க இரகமான கோ.ஜெ.64 பாட்டியாலா மாவட்டத்தின் சில பகுதிகளிலும், மிர்பூர் மற்றும் ஃபதேகார் சாஹிப் இவ்விடங்களில் வளர்க்கப்பட்டது. அவை நவம்பர் மாதத்தில், 1.5 அடி இடைவெளியில் நடப்பட்டது. மேலும் வேளாண் குணங்களான மொதம்தக் கரையும் திண்மங்கள் ஆகஸ்ட் மாதத்திலும் மற்றும் மகசூல் இதனுடன் சர்க்கரையின் அளவு அளவிடப்படும். இவை நவம்பர் மாதத்தில் பதிவுறச் செய்யப்படுகிறது.
ஆய்வு முடிவுகள் மற்றும் விவாதம்
கரும்பு இரகம் கோ.ஜெ 64 பயிர் நுண் பெருக்கம் மூலம், எம்.எஸ். ஊடகம், இதனுடக் இன்டோல் அசிட்டிக் அமிலம் (0.5 மி.கி / லிட்டர்) பென்சைல் அமினோஃப்யூரின் (0.5 மி.கி / லிட்டர்) மற்றும் ஜி.ஏ -3 (0.5 மி.கி / லிட்டர்) சேர்ந்து உருவாக்கப்பட்டது. உட்செலுத்தி 12 முதல் 15 நாட்கள் கழித்து முளைத்தல், நன்கு பரிமாற்றப்பட்ட தண்டு ஊடகத்தில் வளர்க்கப்பட்டது என அறியலாம். மொட்டுக்களின் வளர்ச்சி நன்கு வளர்ச்சியுறும் தண்டுத் தொகுதியிலிருந்து வருகிறது. பின் அதனை திரவ ஊடகத்திற்கு மாற்றப்பட வேண்டும். ஃபீனால் வெளியேற்றப்படுவதால் சில நுனி மொட்டுக்களானது காய்ந்து விடுகிறது. பெரும்பாலும் ஊடக பழுப்பு நிறமாற்றத்திற்கு .ஃபீனால் வெளியேற்றமே காரணம் ஆகும். அவை புதிய தண்டு வளர்ச்சியைப் பாதிப்பதில்லை.
தண்டின் வளர்ச்சியானது ஊடகத்தின் வளர்ச்சியைப் பொறுத்து 15-20 நாட்களில் வளர்ந்து விடுகின்றன. பின்பு நீண்ட வேர்த் தொகுப்பானது 10-12 நாட்களிலும் வளர்ந்துவிடுகின்றன. பின்பு இதனை வேர் ஊடகத்திற்கு மாற்றப்படவேண்டும். சமீபத்திய ஆராய்ச்சிகளின் வாயிாக, செடியினை பாலித்தீன் பைகளுக்கு மாற்றுவதன் மூலம் 94 சதவிகிதம் தாங்கும் தன்மை அளவு ஆகும். இந்த ஆராய்ச்சியை தாலிவால் (1994 எ,பி) பல்வேறு காரணிகளால் கடினமடையசத் செய்தலில் கரும்பின் நுண் பெருக்கத்தில் மேற்கொண்டார்.
தாவரத்தின் வளரும் அமைப்பானது அடிப்படையில் நோய்க் காரணி அற்ற புதியதாக இருத்தல் வேண்டும். முதல் தலைமுறை கணுவில் இருந்து தரமான விதைக் கணுக்கள் பெறப்படுகிறது. அப்படி, தாவரப் பகுதியானது குறுகிய காலத்தில் அதிக அளவுக் கதிர்களை உருவாக்க முடியும்.
திசு வளர்ப்பின் வயல்வெளி செயல்பாடுகளில் ஒப்பிட்டு ஆய்வு
அட்டவணை-1ல் ஓராண்டில் கண்டறியப்பட்ட வேளாண் அளவீடுகள் திசு வளர்ப்பு கரும்பலி பஞ்சாப் மாவட்டமான பாட்டியாலா,பதேகார்ஃப் சாஹிப் இவற்றிலும் மற்றும் கரும்பு இனப்பெருக்க நிறுவனம் கர்னால் ஹரியானா இவற்றிலும் பயிரிடப்பட்டன. பின்பு, புள்ளியியல் அளவீடுகளை 5 மண்டலங்களில் பல்வேறு குண்ங்களில் செய்யப்பட்டது. இதில் திசு வளர்ப்புக் கரும்பானது கரும்பு இனப்பெருக்கு நிறுவனத்தில் 240 செ.மீ ஆகவும், பிரிபூரில் 206.75 செ.மீ,பதேகார்பில் 206.25 செ.மீ ஆக இருந்தது. இவை மற்ற வரப்புகளில் அமைக்கப்பட்ட கணுவை விட அதிகம். இருப்பினும் “தூரி” பகுதியில் பயிரிடப்பட்ட கரும்பின் நீளம் 167.5 செ.மீ அளவே உள்ளது. இதற்கு காரணம் முறையாக பாசனம் செய்யாமல் இருந்ததே ஆகும்.
அட்டவணை 1 ஓராண்டு வளர்க்கப்பட்ட திசு வளர்ப்பு கரும்பான கோ. ஜெ 64ன் பல்வேறு இடங்களில் பஞ்சாப் மற்றும் கரும்பு இனப்பெருக்கு நிறுவனம் ஹரியானா, இவற்றில் சமவாய்ப்புள்ள “கரும்பு” பயிரில் எடுக்கப்பட்ட அளவீடுகள்
இடம் |
நீளம்
(செ.மீ) |
சுற்றளவு கணு செ.மீ |
கணுக்களின் எண்ணிக்கை |
கணுக்கொத்து எண்ணிக்கை |
இடைவெளி செ.மீ |
விளைச்சல் குவி பிளாட் |
சர்க்கரை அளவு சதவீதம் |
பாரன் (பஞ்சாப்) |
191.5 |
7.58 |
16.2 |
14.4 |
12.3 |
60.5 |
9.14 |
மிர்பூர் பதேகார்ஃப் சாஹிப் |
206.75 |
6.4 |
14.5 |
22.0 |
12.5 |
64.3 |
9.75 |
பதேகார்ஃப் பகுதி பார்ஹி |
206.75 |
8.12 |
16.8 |
15.7 |
9.8 |
63.6 |
9.34 |
துரி பாட்டியாலா |
167.5 |
7.8 |
11.7 |
11.3 |
11.8 |
57.7 |
8.7 |
கரும்பு வளர்ப்பு நிறுவனம் (கர்னூல்) |
240.0 |
12.2 |
30.0 |
7.0 |
9.1 |
62.6 |
9.46 |
முக்கிய வேறுபாடு (சதவீதம்) |
0.524 |
0.157 |
0.736 |
0.964 |
0.3765 |
0.3765 |
0.1982 |
முக்கிய மாறுபாடு
(சதவீதம்) |
8.507 |
8.954 |
13.347 |
27.04 |
10.591 |
12.423 |
7.467 |
பதேகார்ப் பகுதி மற்றும் கரும்பு வளர்ப்பு நிறுவனத்தைத் தவிர மற்ற இடங்களில் கரும்பன் சுற்றளவு குறைந்து காணப்பட்டது. ஆனால் அந்த குறிப்பிட்ட இடங்களில் கணுவின் சுற்றளவு 12.2 செ.மீ ஆக இருந்தது. உயரமாக உள்ளக் கரும்புகளில் அதனுடைய கணுக்களின் சுற்றளவும் குறைவாக இருந்தது. ஏனெனில் சைட்டோகைனின் விளைவு ஆகும். எப்படிப் பார்த்தாலும், திசு வளர்ப்புக் கரும்பானது, அதிக எண்ணிக்கையில் கணுக்களையும் மற்றும் கணுவிடைப் பகதிகளையும் கொண்டுள்ளது. தூரிப் பகுதியில் பயிரிடப்பட்ட திசு வளர்ப்புக் கரும்பானது, மரபு வழிக்கரும்மைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் கணுக்களைக் கொண்டுள்ளது (15). பதேகார்ப் பகுதியில் 9.1 செ.மீ அளவு கணுப்பகுதியின் நீளமானது, மரபு வழியில் பயிரிடப்பட்ட 10.3 செ.மீக்கும் குறைவாக உள்ளது.
பொதுவாக சுற்றளவு குறைவாக உள்ள கரும்பின் கொத்துப் பகுதியில் அதிக அளவு கணுக்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. மிர்பூரில் உற்பத்தி செய்யப்பட்ட எண்ணிக்கை 22. ஆனால் மரபு வழியில் உற்பத்தி செய்யப்பட்ட ஃபதேகார்ப்பில் 12.8 அளவே இருந்தது. இதே போல் கரும்பு வளர்ப்பு நிறுவனத்தில் 7 கணுக்கள் ஒரு கொத்தில் இருந்தது. திரு. சீனிவாசன் ஆய்வறிக்கையின்படி (1992) சிறிய சுற்றளவு கொண்ட கரும்பானது, பிழி திறனுக்கு ஏற்றவாறும், அதிக எடையும் கொண்டதாக உள்ளது. திருஇ ஹெண்டர் அவர்கள் ஆய்வறிக்கையின்படி (1983) ஒவ்வொரு கொத்தையும் 18 கணு இருக்குமாறு செய்து தண்டின் வளர்ச்சியை 740 தோட்டத்தில் ஆய்வை மேற்கொண்டபோது மரபு வழியில் பயிரிடுவதை விட, திசு வளர்ப்பின் போது அதிக மகசூல் கிடைக்கின்றது.
கட்டுப்பாட்டில் அதன் விளைச்சல் 56.8 குவிண்டால் / பிளாட் மிர்பூரில் திசு வளர்ப்பில் 64.3 குவிண்டால் / பிளாட் பார்ஹீ பகுதியில் 63.6 குவிண்டால் / பிளாட் திசு வளர்ப்பு நிறுவனம் கர்னூலில் 62.2 குவிண்டால் / பிளாட் இதில் அதிக எண்ணிக்கையில் திசு வளர்ப்பின் மூலமே பெறப்பட்டது. மேலும் “சர்க்கரை” பெறப்பட்ட அளவும் திசு வளர்ப்புக் கன்றில் சாத்தியமாகிறது. அதிக அளவு சர்க்கரை 9.75 சதவிகிதம் மிர்பூரிலும், 9.45 சதவிகிதம் கரும்பு இனப்பெருக்கு நிறுவனம் கர்னூலிலும் 9.34 சதவிகிதம் பாரிப் பகுதிகளிலும் பெறப்பட்டது. ஆனால் கட்டுப்பாடு உள்ளவற்றில் 8.52 சதவிகிதம் பகுதியிலும் பெறப்பட்டது. திரு. கிளரு மற்றும் அருணா (1998)ன் ஆய்வறிக்கையின் படி திசு வளர்ப்புக் கன்றில் அதிக அளவுச் சர்க்கரை மற்ற மரபு வழிக் கன்றைவிடக் கிடைக்கிறது.
திசு வளர்ப்புக் கரும்பானது புதிய இரகத்தினை மேம்படுத்தவும், உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், நோய்க் காரணியற்ற சூழலில் வளர வழிவகை செய்கிறது. பயிர் நுண் பெருக்கமானது, உண்மை வழியில் தாவரத்தினை உற்பத்தி செய்யவும், தரமானக் கன்றுகளை உருவாக்கி, மேம்படுத்த, பழைய கணுக்களைப் புதுப்பிக்க உதவுகிறது. முதல் வருடம், கரும்பினை விதைக்காக விட்டு விட்டு, பின்பு விளைச்சலுக்கு விடும் போது அதிக மகசூல் கிடைக்கிறது.
|
|