|
NAIS - Role play of various Agencies:
பல்வேறு நிறுவனங்களின் பங்குகள்:
- நிதி நிறுவனங்களின் பங்கு மற்றும் பொறுப்புகள்
- மாநில அரசு / யூனியன் பிரதேசங்களின் நிர்வாகத்தின் பங்கு மற்றும் பொறுப்புகள்
- நடைமுறைப்படுத்தும் நிறுவனத்தின் பங்கு மற்றும் பொறுப்புகள்
- விவசாயிகளின் கடமைகள்
மண்டல அலுவலகத்தின் முகவரி
1. நிதி நிறுவனங்களின் பங்கு மற்றும் பொறுப்புகள்:
நபார்டு வங்கி / பாரத ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ள விதிமுறைகளின் படி திட்டங்களின் பயன்பாட்டிற்கு SAO கடன்கள் வழங்கும் நிர்ணயிக்கப்ப்ட்ட நிறுவனங்கள் அனைத்தும் நிதி நிறுவனங்கள் என அழைக்கப்படும்.
ஒவ்வோர் வணிகமயமாக்கப்பட்ட வங்கியும் நடைமுறைப்படுத்தும் நிறுவனத்தின் ஒப்புதலுடன் சில முகமை மையங்களை தீர்மானித்து அதன் பகுதி / மாவட்டம் / மாநில கிளைகளுடன் இணைந்து செயல்படுத்தும் கிளை அலுவலகங்களை காட்டிலும் வணிக வங்கிகளுக்கான முகமை மையங்கள் குறைவாக இருக்கும். கூட்டுறவு வங்கிகளுக்கு, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியும், பாரத ரிசர்வு வங்கிக்கு அதன் தலைமை அலுவலகமும் முகமை மையங்களாக செயல்படும்.
நடைமுறைப்படுத்த தேவையான முகமை மையங்களை இவ்வங்கிகள் பின் வரும் பணிகளை கவனிக்கும். பயிர்கள் மற்றும் பரப்பளவு
- மாநில அரசு / யூனியன் பிரதேசம் ஆகியவற்றிடமிருந்து பற்றிய அறிவிப்பு வந்தவுடன் முதன்மை வங்கிகள் அத்தகவலை அதன் கட்டுப்பாட்டிற்கு கீழுள்ள கிளை அலுவலகங்களுக்கு தெரியப்படுத்தும்
- நிதி நிறுவனங்கள் கடன் பெறும் விவசாயிகள் பயிர் கால கடனுக்காக காப்பீட்டின் முதன்மை தொகைக்காக கூடுதல் கடன் வழங்கும்
- ஒவ்வோர் முகமை மையங்களும், பயிர் வரிசை, கூறப்பட்ட பரப்பளவின் படி, மாதாந்திர பயிர் காப்பீடு தீர்மானங்கள் ஆகியவற்றை கூறப்பட்ட வடிவத்தில் நடைமுறைப்படுத்தும் நிறுவனத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். இது பயிர்கடன் திட்டத்தின் கீழ் கடன் பெறும் அனைத்து விவசாயிகளுக்கும் பொருந்தும். பிற விவசாயிகளுக்கு அவர்களின் திட்ட அறிக்கையின் படி சமர்ப்பிக்கப்படும்.
- இத்திட்டம் நல்ல முறையில் இயங்குவதற்காக, முதன்மை நிதி நிறுவனம் அதன்கீழ் இயங்கும் முகமை வங்கிகள் மற்றும் பயிர்கடன் வழங்கும் கிளைகள் ஆகியவற்றிற்கு தேவையான விதிமுறைகளை வழங்கவேண்டும்
- கிசான் கடன் அட்டையின் (kissan credit card) கீழ் வழங்கப்படும். காப்பீடு பெறும் பயிர்கடன்கள் அனைத்திற்கும், நிதி நிறுவனங்கள் இத்திட்டத்திற்கு தேவையான கட்டுப்பாடுகள் மற்றும் ஆவணங்களை பராமரிக்க வேண்டும்
நிதி நிறுவனங்களின் பிற பொறுப்புகள்:
- இத்திட்டத்தின் அம்சங்கள் குறித்து விவசாயிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்
- திட்ட அறிக்கை படிவங்களை நிரப்ப விவசாயிகளுக்கு வழிகாட்டுதல் மற்றும் தேவைப்படும் ஆவணங்களை அவர்களிடமிருந்து பெறுதல்
- பயிர்கடன் வழங்கும்பொழுது விதிமுறைகளை கடைபிடித்தல் மற்றும் வழங்கப்பட்ட கடன்களின் நோக்கம் நிறைவேற்றப்பட்டதை உறுதி செய்தல்
- கடன் பெற்ற மற்றும் கடன் பெறாத உறுப்பினர்களுக்கு ஒருங்கிணைந்த அறிக்கையை அனுப்புதல் மற்றும் அதன் பிரதியை தவணை தொகையுடன் கிளை அலுவலகத்திற்கு அனுப்புதல்
- திட்டஅறிக்கை படிவங்கள், பிற ஆவணங்கள், மாவட்ட குழுவினர் ஆய்வு செய்யும் அறிக்கை ஆகியவற்றிக்கு தேவையான ஆவணங்களை பராமரித்தல்
நிதி நிறுவனங்கள் / முகமை வங்கிகள் / கடன் வழங்கும் மையங்கள் ஆகியவற்றிக்கு சிறப்பு நிபந்தனைகள்:
- காப்பீடு தொகையானது கடன் தொகையின் அடிப்படையில் கொடுக்கப்பட்டிருந்தால், நிதி நிறுவனம் பயிர் காப்பீடு அறிக்கையை நடைமுறைப்படுத்தும் நிறுவனத்திற்கு ஒரு மாதத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும். காப்பீடு தொகையானது வேறு நிபந்தனைகளின் பேரில் அமைந்தால், திட்டஅறிக்கை பெற்றபின் கடைசி தேதியின் ஒரு மாதத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும்
- முகமை மையங்கள் தாம் பெற்ற பணக்கோரலை, தனி கிளைகள் / தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் ஆகியவற்றிற்கு அனைத்து விவரங்களுடன் ஏழு நாட்களுக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இக்கிளைகள் / தொ.வே.கூ.ச ஆகியவை பயன்பெறும் விவசாயிகளுக்கு ஏழு நாட்களுக்குள் பணத்தை தர வேண்டும். விவசாயிகளின் மற்றும் அவர் பெற்ற பணக்கோரலும், கிளைகள் / தொ.வே.கூ.ச ஆகியவற்றில் அறிவித்து வெளியிடப்படும்
- நடைமுறைப்படுத்தும் நிறுவனம், முகமை மையங்கள் / கிளைகள் / தொ.வே.கூ.ச ஆகியவற்றின் ஆவணங்கள் / தஸ்தா வேஜீகள் ஆகியவற்றை எந்த நேரத்திலும் பார்வையிடும் அனமதியுண்டு
- பாரத ரிசர்வ் வங்கி / நபார்டு வங்கிகளால் பரிந்துரைக்கப்பட்ட பயிர்கடன் வழங்குதல் தொடர்பான விதிமுறைகள் நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும். இவ்விதிமுறைகளில் ஏதேனும் மாற்றம் / தனர்வு இருந்தால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களுக்கு அதனை தெரிவிக்கும். அப்படி தெரிவிக்காத பட்சத்தில் நடைமுறைப்படுத்தும் நிறுவனங்கள் அம்மாற்றங்களை கவனத்தில் கொள்ளாமல் இருக்கலாம்
- முகமை வங்கி / கிளைகள் / தொ.வே.கூ.ச ஆகியவற்றில் ஏற்பட்ட தவறுகள் / விடுபடுதல் போன்ற நிலையில் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய பயன்கள் பறிக்கப்பட்டால், அச்சமயங்களில் அந்நிறுவனங்கள் விவசாயிகளுக்கு நன்மையே செய்தல் வேண்டும்
- விவசாயி கலப்புப் பயிர் பண்ணையம் செய்திருந்தால், அதனில் காப்பீடு செய்யப்பட்ட பயிரின் பரப்பளவை கணக்கிட்டு காப்பீட்டுத் தொனை வழங்கப்பட வேண்டும்
2. மாநில அரசு / யூனியன் பிரதேசங்களின் நிர்வாகத்தின் பங்கு மற்றும் பொறுப்புகள்:
- மாநில அரசு / யூனியன் பிரதேசங்கள் ஒவ்வோர் பயிர் காலத்திற்கு முன்னும், ஒவ்வோர் பயிர்கயுக்கான பரப்பளவு மற்றும் காப்பீடு தவணை தொகையை (வணிக பயிர்கள் / தோட்டக்கலை பயிர்களுக்கு மட்டும்) வெளியிட வேண்டும்
- மேலும் நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களுக்கு திட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்ட பயிர்களின், கடந்த 10 ஆண்டு கால மகசூல் விவரங்களை தெரிவிக்க வேண்டும்
- கூடுமானவரையில் மாநில அரசு / யூனியன் பிரதேசமானது ஒவ்வோர் பயிரிற்கும் குறைந்த பரப்பளவையே குறிப்பிடும். ஏனெனில் குறைந்த பரப்பளவு ஒருமித்தாகவும், பயிர் இழப்புகளை (எ.கா) சூறாவளி மற்றும் நிலச்சரிவு போன்றவையை துல்லியமாக கணக்கிடவும் ஏதுவாகும்
- மாநில அரசானது திட்டத்திற்குட்பட்ட நிதி நிறுவனங்கள் அனைத்திற்கும் ஒவ்வோர் பயிர் காலத்திலும் தேவையான அறிவிப்புகளை வெளியிட வேண்டும். அறிவிப்புகளில் கீழ்காணும் விவரங்கள் அவசியமாக இருத்தல் வேண்டும்
- பல்வேறு மாவட்டங்களில் உள்ள பயிர்கள் மற்றும் அதன் பரப்பளவு
- பல்வேறு விவசாய குழுக்கள் மற்றும் பயிர்களுக்கு உண்டான தவணைத் தொகை மற்றும் உதவித் தொகை
- திட்ட அறிக்கை பெறுவது மற்றும் தவணைத் தொகை செலுத்த கடைசித் தேதி மற்றும் பயிர் காப்பீடு அறிவிப்புகள் ஆகியவற்றை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களுக்கு அனுப்புதல்
- இந்திய அரசின் கீழ் இயங்கும் வேளாண் அமைச்சகத்தின் அவசரகால நிதிக்கு தேவையான தொகையில் மாநில அரசு தன் பங்கை செலுத்த வேண்டும்
- மாநில அரசு / யூனியன் பிரதேசமானது பொதுவாக பயிர் கணிப்பு ஆய்வுகள் செய்யப்படுவதை உறுதிப்படுத்துவதுடன், பலமுறை அறுவடை செய்யும் பயிர்களில் ஆய்வு முறைகளை வலுப்படுத்துவதால் பயிர்களின் மகசூல் விவரங்களை துல்லியமாக கணக்கிடலாம். மேலும் மாநில / யூனியன் பிரதேச அரசாங்கங்கள் நடைமுறைப்படுத்தும் நிறுவனத்துடன் சேர்ந்து பயிர் சாகுபடி செய்யும்போது நேரும் ஆபத்துகளால் ஏற்படும் பயிர் இழப்பினை காப்பீடு செய்த ஒவ்வோர் விவசாயிக்கும் கணக்கிட உறுதுணையாக இருக்க வேண்டும்
- தேவைப்படும் அளவிற்கு மேற்பார்வை குழுக்களை அமைக்க வேண்டும்
- குறிப்பிட்ட பயிர்களுக்கான மகசூல் விவரங்களை மாதிப் படிவத்தின் படி காலவரைக்குப்பட்ட தேதிக்குள் நடைமுறைப்படுத்தும் நிறுவனத்திற்கு அனுப்பிவிட வேண்டும்
- இப்படி பயிர் கணிப்பு ஆய்வுகளின் படி பயிர் மகசூல் விவரங்களை அனுப்பாமலோ (அ) குறிப்பிட்ட காலவரையரைக்குள் மகசூல் விவரங்களை நடைமுறைப்படுத்தும் நிறுவனத்திற்கு அனுப்பாமல் இருந்தாலோ அச்சமய்ஙகளில் நேரும் பணக்கோரலுக்கு மாநில அரசு / யூனியன் பிரதேச நிர்வாகமே பொறுப்பாகும்
- பயிர் அறுவை ஆய்வுகளின் ஆவணங்களை மாவட்ட / மாநில அளவில் அணுகும் வசதி நடைமுறைப்படுத்தும் நிறுவனத்திற்கு உண்டு
- மாநில அரசு / யூனியன் பிரதேச நிர்வாகம், மாவட்ட நீதிபதியின் கீழ் இயங்கக்கூடிய மாவட்ட கண்காணிப்பு குழுவினை (மா.க.கு) அமைக்க வேண்டும். இதன் உறுப்பினர்களாக மாவட்ட வேளாண் அதிகாரி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, முண்ணனி வங்கியின் பிரதிநிதி மற்றும் நடைமுறைப்படுத்தும் நிறுவனம் ஆகியவை இருக்கும். இக்குழுவானது இத்திட்டத்தின் நடைமுறைப்படுத்துவதை கையாள்வதுடன் 15 நாட்களுக்கு ஒருமுறை - பயிர் சாகுபடி, அறிக்கை மற்றும் பருவகால வானிலை அறிக்கையை, கொண்டு தயார் செய்த ஆவணங்கள், கடன் வழங்கிய விவரம், சாகுபடி பரப்பளவு ஆகியவையும் இக்குழு கண்காணிக்கும். மா.க.கு மேலும் பயிர் அறுவை ஆய்வுகளையும் கண்காணிக்கும்
- கடன் பெறாத விவசாயிகளுக்கு இத்திட்டம் அவர்தம் விருப்பம் ஆகும் ஆதலால், மாநில அரசு / யூனியன் பிரதேசங்களின் அனைத்து பயன்களையும் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டும் என்பதால் அதற்கு விளம்பரம் அளிக்கப்படும்
3. நடைமுறைப்படுத்தும் நிறுவனத்தின் பங்கு மற்றும் பொறுப்புகள்:
- நடைமுறைப்படுத்தும் நிறுவனம் திட்டத்தின் அவசரகால நிதி மற்றும் தவணைத் தொகைகளை கையாள்வதற்கு தனி வங்கிக் கணக்கினை ஆரம்பிக்கலாம்
- பயிர் மகசுல் பற்றிய தகவல் தளம் அமைத்தல் மற்றும் தொழில் நெறி நிறுவனத்தின் மூலம் அசல் தவணைத் தொகையினை கணக்கிடுதல்
- பணக்கோரல் பற்றி முடிவெடுத்தல்
- திட்டத்தில் கூறியுள்ள வரையரைக்குட்பட்ட பணக்கோரலுக்கு பொறுப்போற்றுக் கொள்ளுதல்
- சர்வதேச சந்தையில் மறுகாப்பீடு பற்றிய ஏற்பாடுகளுக்கு உடன்படிக்கை செய்தல்
- பயிற்சி, விழிப்புணர்வு மற்றும் விளம்பர நிகழ்வுகளுக்கு ஒருங்கிணைந்து செயலாற்றுதல்
- இந்திய அரசிற்கு வரவு மற்றும் புள்ளியியல் விவரங்களை அளித்தல்
- திட்டத்தின் அமுல் படுத்துவதற்கான தனியார் நிறுவனம் அமைப்பது பற்றிய சாத்தியக் கூறுகளை ஆராய்தல் மற்றும் கண்டறிதல்
4.விவசாயிகளின் கடமைகள்:
- பருவ கால வேளாண் செயல்பாடுகளுக்கான கடன் பெற்ற விவசாயிகள் அனைவருக்கும் இத்திட்டம் கட்டாயம் என்பதால் இத்திட்டத்தின் கீழ் கூறப்பட்டுள்ள அனைத்து கடன் வசதிகளையும் உபயோகிப்பது மற்றும் காப்புறுதி பாதுகாப்பு பெறுவது விவசாயிகளின் கடமையாகம்
- பல்பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டிருந்தால், ஒவ்வோர் பயிரின் விகிதமும் கட்டாயம் வெளியிடப்படவேண்டும்
- கடன் பெறாத விவசாயிகளின் திட்ட அறிக்கை குறிப்பிட்ட தேதிக்குள் மட்டும், மாநில அரசு / யூனியன் பிரதேச நிர்வாகத்துடன் ஆவோசனை செய்த பின் ஏற்றுக் கொள்ளப்படும்
கடன் பெறாத விவசாயிகளின் முக்கிய கடமைகள் பின்வருவன:
- காப்புறுதி பாதுகாப்பு பெற ஆவல் உள்ள விவசாயிகள் குறிப்பிட்ட வங்கியின் கிளைகளில் கணக்கு வைத்திருக்க வேண்டும்
- விவசாயி குறிப்பிட்ட வங்கியின் கிளை / தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தினை அணுகி திட்டஅறிக்கையை அதற்குரிய படிவத்தில் சமர்ப்பிக்க வேண்டும்
- சாகுபடி நில உரிமை பெற்றிருந்தால் அவ்விசாயி அதற்கேற்ற ஆவண ஆதாரங்களை கொடுக்க வேண்டும் (வங்கி கணக்குப் புத்தகத்தின் நகல், 7/ 12/ நில வெளியீடு (அ) நில வரவு இரசீது ஆகியவற்றை இணைக்க வேண்டும்)
- பயிர் சாகுபடி பரப்பளவு சான்றிதழை தேவைப்பட்டால் சமர்ப்பிக்க வேண்டும்
மண்டல அலுவலகத்தின் முகவரி:
முதல் தளம், ஆந்திரா இன்சூரன்ஸ் பில்டிங்,
பழைய எண்.156 / புதிய எண்.323, தம்பு செட்டி வீதி,
பாரீஸ் கார்னர்,
சென்னை - 600001,
தமிழ்நாடு.
ஆதாரம்:
http://www.aicofindia.org/file |
|