|| | | ||||
 

பயிர் காப்பீட்டு திட்டம் :: தி நியூ இந்தியா அசூரன்ஸ் கம்பெனி லிட்

வானிலை
மண் வளம்
நீர் வளம்
விதை
பண்ணை சார் தொழில்கள்
ஊட்டச்சத்து
அறுவடைக்குப்பின் சார்
தொழில் நுட்பம்

உயிரிய தொழில்நுட்பம்
உயிரி எரிபொருள்

 

கால்நடை காப்பீடு

  • கவனயீர்ப்பு
  • காப்பீடு காப்புறுதி
  • முக்கிய விடுபட்டவைகள்
  • காப்பீடு காப்புறுதி செயல்படுத்துவதற்கான ஆவணங்கள்
  • கால்நடைகளைக் கண்டறிதல்
  • பணக்கோரல் நெறிமுறைகள்

கவனயீர்ப்பு

  • கீழ்க்கண்ட உள்நாட்டு, அயல் நாட்டு மற்றும் கலப்பின இனங்கள் இத்திட்டத்தில் வரும்.
  • கறவை மாடுகள் மற்றும் எருதுகள்
  • இளம் கன்று மற்றும் எருமைகள்
  • பொதிக் காளைகள்
  • காளைகள் (காயடிப்பு செய்யப்பபட்ட காளைகள்) மற்றும் காயடிப்பு செய்யப்பட்ட எருதுகள்.
  • குறிப்பிட்ட வயது வரம்பிற்குற்பட்ட கால்நடைகளை காப்பீடு திட்டத்திற்கு ஏற்றுக்கொள்ளப்படும்.
  • உடன்பாட்டிலுள்ள காப்பீடு தொகை, கால்நடையில் சந்தை மதிப்பாகும்.
  • உடன்பாட்டிலுள்ள தொகை அல்லது சந்தை மதிப்பு, குறைவாக இருக்கும் எதுவாயினும் PTD பணக்கோரல்களின் போது, நஷ்டஈடு 75 சதவிகிதம் காப்பீடு தொகைக்கு உட்பட்டதாக இருக்கும்.
  • ஒரு வருடத்திற்கான அடிப்படை வெகுமதி விகிதம், 4 சதவிகிதம் காப்பீடு தொகையை பொருத்ததாகும். நீண்ட காலத் தள்ளுபடிகளும் வழங்கப்படும்.
  • அரசாங்க மானியத் திட்டங்களின் கீழ்வரும் கால்நடைகளுக்கு, இத்திட்ட உடன்பாட்டின் கீழ் வெகுமதி விகிதங்களில் சலுகைகள் அளிக்கப்படும்.
  • குழு தள்ளுபடிகள் வழங்கப்படும்.

காப்பீடு காப்புறுதி
இத்திட்ட உடன்பாடு, கீழக்கண்டவைகளால் மரணம் ஏற்படும் பட்சத்தில், நஷ்டஈடு வழங்கும்.

  • விபத்து (தீ, மின்னல், வெள்ளம், புயல், சூறாவளிக் காற்று, நிலநடுக்கமு:. புயல் காற்று, சூறாவளி மற்றும் பஞ்சம்)
  • திட்ட உடன்பாடு காலத்திற்குள் ஏற்படும் நோய்கள்
  • அறுவை சிகிச்சை
  • கலவரம் மற்றும் வேலை நிறுத்தம்
  • திட்ட உடன்பாட்டை நிரந்தர மலட்டுத்தன்மைக்கும் கூடுதல் வெகுமதி கட்டுவதன் மூலம் விஸ்தரிக்கப்படும்.
  • கறவை மாடுகள், நிரந்தரமாகவும், ஒட்டு மொத்தமாகவும் கருத்தரித்தல் அல்லது பால் சுரக்கும் தன்மையை இழந்து விட்டால், நிரந்தர மலட்டுத்தன்மை அடைந்ததாக இருக்கும்.
  • பொலி காளைகள், நிரந்தர மலட்டுத்தன்மை அடைந்திருந்தால், அதை இனச்சேர்க்கைக்கு உதவாது. எருதுகள், கன்றுகள் / எருமைகள் மற்றும் காயடித்த ஆண் எருமைகள் மேலே குறிப்பிட்டுள்ள பயன்களுக்கு உதவாது நிரந்தர மலட்டுத்தன்மை உடையதாக அறிக்கை படிவத்தில் குறிப்பிட்டிருக்கும்.

முக்கிய விடுபட்டவைகள்
பொதுவாக விடுபட்டவைகள்

  1. விசமத்தனமாகவோ அல்லது தானக காயம் நேர்ந்தாலோ அல்லது ஊதாசீனம், அளவு மீறிய சுமை, திறமையற்ற சிகிச்சை அல்லது உடன்பாட்டில் குறிப்பிடப்படாத மற்றும் எழுத்து வடிவத்தில் நிறுவனத்தின் அனுமதி பெற்றிராத பயன்களுக்காக கால்நடைகளை பயன்படுத்துதல்.
  2. திட்டம் தொடங்குவதற்கு முன்பாக ஏற்படும் விபத்து அல்லது நோய் தாக்குதல்கள்.
  3. தகுதிப் பெற்ற கால்நடை  மருத்துவர்களின் சான்றிதழ் பெற்று அழித்தாதொழிய அல்லது சட்டப்படி அதிகாரமுள்ளவர்களின் ஆணை அல்லது நோக்கத்துடன் மிருகங்களை வதைப்பது.
  4. திருட்டு  மற்றும் காப்பீடு செய்த கால்நடையை சட்ட விரோதமாக விற்பது.
  5. போர், படையெடுப்பு அந்நிய விரோதிகளின் செயல், விரோத செயல்கள் (அறிவிக்கப்பட்ட அல்லது அறிவிக்கப்படாத போர்), உள்நாட்டுப் போர், கிளர்ச்சி போராட்டம், புரட்சி கலக்கம், கடும் எதிர்ப்பு.
  6. இராணுவம் அல்லது ஆக்கிரமிப்பு அல்லது அதன் பின்விளைவுகள் அல்லது மிரட்டல் முயற்சி.
  7. அணு ஆயுதங்களால் ஏற்படும் எவ்வகையான விபத்து, நஷ்டம், அழிவு, சேதாரம், சட்டப்படி நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஏற்படுதல்.
  8. எவ்வகையான பின்விளைவுகளால் ஏற்படும் பாதிப்புகள்.
  9. விமான மற்றும் கடல்வழி போக்குவரத்து.
  10. திட்டம் ஆரம்பித்த 15 நாட்களுக்குள் நோய் தாக்குதலுக்கு மற்றும் திட்டத்தில் குறிப்பிட்டிராத பணக்கோரல்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.

குறிப்பாக விடுபட்டவைகள்

  1. லட்சுமிபூர் மற்றும் சிபாசாஹர் மாவட்டங்கள் மற்றும் அஸ்சாமில் புதிதாக உருவாக்கப்பட்ட இரு மாவட்டங்களில் உள்ள கால்நடைகளுக்கு ஏற்படும் நுரையீரல் மற்றும் உறை அழற்சி.
  2. காது குத்துதல்கள் இல்லாது பெறப்பட்ட பணக்கோரல்கள்.

காப்பீடு காப்புறுதி செயல்படுத்துவதற்கான ஆவணங்கள்
திட்டறிக்கை படிவம்

  • வயது, அடையாளக் குறிகள், ஆரோக்கியம் மற்றும் கால்நடையின்  “சந்தை கால்நடை ஆராக்கிய சான்றிதழை” விலை போன்றவை குறிப்பிட்ட நிலையில் தகுதிப் பெற்ற கால்நடை மருத்துவரிடமிருந்து பெறவேண்டும்.

கால்நடைகளை கண்டறிதல்

  • காப்பீடு செய்யப்பட்ட கால்நடைகளை கண்டுபிடிப்பதற்கு பொருத்தமான இயற்கை அடையாளக்குறிகள் மற்றும் அதன் நிறம் போன்றவைகள் திட்டறிக்கை படிவத்தில் மற்றும் கால்நடை மருத்துவரின் ஆய்வறிக்கையில் குறிப்பிடவேண்டும்.
  • பொருத்தமான பொருட்கள் கொண்டு கால்நடைக்கு குத்துதல் மற்றும் குறியீடு எண்ணை கால்நடை ஆரோக்கிய சான்றிதழில் குறிப்பிடவேண்டும்.
  • அதிக மதிப்புடைய கால்நடைகளுக்கு, கால்நடையின் புகைப்படங்கள் எடுப்பது வலியுறுத்தப்படுகின்றது.

பணக்கோரல் நெறிமுறைகள்
கால்நடைகளுக்கு மரணம் ஏற்படும் பட்சத்தில், உடனடியாக காப்பீடு நிறுவனத்திற்கு கீழ்க்கண்டத்தேவையான ஆவணங்களுடன் தெரிவிக்கவேண்டும்.

  • சரியாக பூர்த்தி செய்த பணக்கோரல் படிவம்
  • தகுதிப்பெற்ற கால்நடை மருத்துவரிடமிருந்து நிறுவனப் படிவத்தில் பெறப்பட்ட மரணச் சான்றிதழ்
  • பிரேத பரிசோதனை ஆய்வறிக்கை நிறுவனத்திற்க தேவைப்படும் பட்சத்தில்.
  • கால்நடையின் காது குத்துதலை ஒப்படைக்கவேண்டும். காதுகுத்துதலை ஒப்படைக்காவிடில், காது குத்துதல் இல்லையேல் பணக்கோரல் இல்லை என்ற நிலை உருவாகும்.

நிரந்தர மலட்டுத்தன்மைக்கான பணக்கோரல் நெறிமுறைகள்

  • தகுதிப் பெற்ற கால்நடை மருத்துவரிடமிருந்து சான்றிதழ் பெறவேண்டும்.
  • நிறுவனத்தின் கால்நடை அதிகாரியும், கால்நடை பரிசோதிப்பார்.
  • முழுமையான சிகிச்சை படிவம், பயன்படுத்திய மருந்துகள், ரசீதுகள் போன்றவைகளைச் சமர்ப்பித்தல்.
  • கால்நடை மருத்துவர் / நிறுவனத்தின் மருத்துவரிடமிருந்து ஆய்வறிக்கை பெற்று இரண்டு மாதங்களுக்கு பிறகு பணக்கோரல்கள் அனுமதிக்கப்படும்.
  • காப்பீடு தொகையின் 75 சதவிகிதத்திற்குள் நஷ்டஈடு தொகை இருக்கும்.

விண்ணப்பப் படிவத்தை இணையதளத்திலிருந்து எடுக்க இங்கே அழுத்தவும்.
மற்ற பிற விவரங்களுக்கு இங்கே அழுத்தவும்.

 
   

திருந்திய நெல் சாகுபடி
துல்லிய பண்ணையம்
நன்னெறி வேளாண்
முறைகள்

நன்னெறி ஆய்வக
முறைகள்

நன்னெறி மேலாண்மை
முறைகள்

   
   
   
   

அரசு திட்டங்கள் & சேவைகள்
நீர்வள,நிலவள திட்டம்
வட்டார வளர்ச்சி
வங்கி சேவை & கடனுதவி
பயிர் காப்பீடு
வேளாண் அறிவியல் நிலையம்
விவசாய தொழில்நுட்ப
மேலாண்மை முகாம்

கிசான் அழைப்பு மையம்(1551)
பல்லாண்டு மேம்பாட்டு
குறிக்கோள்

தன்னார்வ தொண்டு
நிறுவனங்கள் &
சுய உதவிக் குழுக்கள்

   
   
   

குறைந்த பட்ச ஆதார விலை
இடுபொருள் நிலவரம்
ஏற்றுமதி & இறக்குமதி
காப்புரிமை

   
   

சுற்றுச்சூழல் மாசுப்பாடு
இயற்கை சீற்ற மேலாண்மை
தகவல் & தொலைத்தொடர்பு
தொழில்நுட்பம்

முக்கிய வலைதளங்கள்

     

வல்லுனரை கேளுங்கள்

   
 

|| | | ||||

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2008