|
|
செம்மறி ஆடு மற்றும் வெள்ளாட்டிற்கான காப்பீடு
- கவனயீர்ப்பு
- வாய்ப்புகள்
- விடுபட்டவைகள்
- காப்பீடு தொகை
- பணம் கோரும் நெறிமுறை
கவனயீர்ப்பு
அனைத்து பாரம்பரிய / நாட்டு வகை, கலப்பின மற்றும் அந்நில ரக செம்மறி ஆடுகள் மற்றும் வெள்ளாடுகள் இத்திட்டத்தின் கீழ் காப்புறுதி பெறத்தக்கது.
வாய்ப்புகள்
திட்டத்தின் உடன்பாடு, செம்மறி ஆடு மற்றும் வெள்ளாடுகளுக்கு இறப்பினால் ஏற்படும் இழப்பு மற்றும் தீ, மின்னல், வெள்ளம், சுழற்காற்று, பஞ்சம், நிலநடுக்கம், நிலச்சரிவு, அடிபடல், கலவரம் அல்லது நோய்கள் போன்ற விபத்துக்கள் காப்பீடு காலத்தில் ஏற்படும் பட்சத்தில் நஷ்ட ஈடு வழங்கப்படும்.
விடுபட்டவைகள்
பொதுவாக விடுபட்டவைகள்
- மத்தனமான அல்லது தானாகவே காயப்பட்டிருத்தல் அல்லது ஊதாசீனப்படுத்துதல், அதிகச் சுமை ஏற்றுதல். திறமையற்ற வகையில் சிகிச்சை அளித்தல் அல்லது உடன்பாட்டின் குறிப்பிடப்பட்டில்லாத மற்ற பிற காரியங்களில் நிறுவனத்தின் அனுமதி இன்றி ஈடுபடுத்துவது.
- அபாயங்கள் தொடங்குவதற்கு முன்பாகவே விபத்தில் சிக்கிக் கொள்வது அல்லது நோய் தாக்குதலுக்கு உள்ளாகியிருத்தல்.
- கால்நடை மருத்துவர்களிடமிருந்து மனிதாபிமானத்தின் அடிப்படையில் தீர்க்க முடியாத வேதனைகள் ஏற்பட்டிருக்கும் பட்சத்திலோ அல்லது சட்டப்படி அமைக்கப்பட்ட ஆணையத்தின் உத்தரவு படி வேண்டுமானால் இச் ஜீவராசிகளை கொல்லலாம். மற்றபடி இறைச்சிக்காக விலங்குகளைக் கொல்லுதல் கூடாது.
- காப்பீடு செய்த கால்கடைகள் திருடு போகுதல் மற்றும் சட்ட விரோதமாக விற்பனை செய்தல்.
- போர், போர் எடுத்தல், அந்நிய எதிரிகளின் செயல் யுத்தம் (அறிவிக்கப்பட்ட அல்லது அறிவிக்கப்படாத போர்) உட்போர், கிளர்ச்சி, புரட்சி கடும் எதிர்ப்பு, கலகம், குழப்பம், இராணுவம் அல்லது ஆக்கிரமிப்பு அதிகாரம் அல்லது அம்மாதிரியான பின் விளைவுகள் அல்லது மிரட்டல் முயற்சிகள்.
- அணு ஆயுதத்தால் நேராகவோ அல்லது மறைமுகமாகவோ சேதம் அல்லது சட்டப்படி திருப்பிக் கொடுக்கவேண்டிய கடன்.
- எவ்வகையான பின் விளைவுகளால் ஏற்படும் இழப்பு.
- விமானம் மற்றும் கடல் வழி போக்குவரத்து
- காப்பீடு அபாய காலம் தொடங்கிய 15 நாட்களுக்குள் திட்டத்திலில்லாத நோய் தாக்குதல்களுக்கு காப்புறுதி இல்லை.
குறிப்பாக விடுபட்டவைகள்
- துள்ளு நோய், செம்மறி ஆடு அம்மை, வெள்ளாடு அம்மை, ரிண்டர் பூச்சி, கோமாரி நோய், அடைப்பான், ஹெச் எஸ், பி 9, இந்நோய்களுக்கு முறைப்படி நோய் எதிர்ப்பு பாதுகாப்பு எடுத்திருந்து அதற்கான கால்நடைச் சான்றிதழ் நிறுவனத்திடம் கொடுத்தால் மட்டுமே காப்புறுதி உடன்பாடு வழங்கப்படும்.
காப்பீடு தொகை
- செம்மறி ஆடு மற்றும வெள்ளாடுகளின் சந்தை மதிப்பு இனம், பகுதி மற்றும் காலம் போன்றவற்றிற்கிடையே வேறுபடும். பரிசோதிக்கும் கால்நடை மருத்துவர்களின் பரிந்துரைகளை காப்பீட்டிற்கும், பணக்கோரல்களும் தீர்வு காணுதல் போன்றவற்றிற்கு முறையான வழிகாட்டுதல்களாக ஏற்றுக் கொள்ளப்படும்.
- காப்பீடு தொகை, 100 சதவிகிதம் சந்தை மதிப்பிற்கு மேல் போகாது.
பணக்கோரல் நெறிமுறை
கால்நடைகளுக்கு மரணம் ஏற்பட்டால், உடனடியாக காப்பீடு நிறுவனத்திற்கு தெரிவிக்க வேண்டும் மற்றும் காப்பீடு பெற்றவர் கீழ்க்கண்ட ஆவணங்கள் மற்றும் தேவையான தகவல்களை கொடுக்கவேண்டும்.
- சரியாகப் பூர்த்தி செய்த பணக்கோரல் படிவம்.
- நிறுவனத்தின் படிவத்தில் கால்நடை மருத்துவரிடமிருந்து பெறப்பட்ட இறப்புச் சான்றிதழ்.
- காப்பீடு நிறுவனத்திற்கு தேவைப்பட்டால், பிரேத பரிசோதனை ஆய்வறிக்கை.
தேவைப்படும் பட்சத்தில் காது குத்துதல்
மற்ற பிற விவரங்களுக்கு இங்கே அழுத்தவும்
|
|