|
|
வானிலைச் சார்ந்த முன்னோடிப் பயிர் காப்பீடு திட்டம் (WBCIS)
வானிலைச் சார்ந்த பயிர்க் காப்பீடு, மழை, வெப்பநிலை, உறைபனி, ஈரப்பதம் போன்ற வானிலை வழியலகுகள் காப்பீடு பெற்ற விவசாயிகளுக்கு ஏற்படும் எதிர்பாராத பயிர் இழப்பு மற்றும் பொருளாதார இழப்பு போன்ற இன்னல்களை குறைக்கும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
வானிலைச் சார்ந்த பயிர் காப்பீடு திட்டம் என்பது ஒரு விவசாயி நல்லப் பயிர் மகசூல் பெறுவதற்கான அனைத்த முயற்சிகள் எடுத்தாலும், வானிலை நிலைகளால் ஏற்படும் பயிர் உற்பத்தி பாதிப்பு மற்றும் பயிர் மகசூல் குறைவு போன்றவற்றிற்கு நஷ்டஈடு வழங்கும் வகையில் உருவாகப்பட்டிருக்கின்றது. பயிர் மகசூல் மற்றும் வானிலை வழிகளுக்கிடையே உள்ள வரலாற்று உடன் தொடர்பு ஆய்வுகளின் உதவியுடன் நிலவும் வானிலை (தூண்டுதல்) மற்றும் அந்நிலைக்கு அப்பால் நிலவும் வானிலைகளால் ஏற்படும் பயிர் பாதிப்பும் கணிக்கப்படுகின்றது. ஒரு விவசாயிக்கு வானிலை தூண்டுதல்களால் ஏற்படும் பாதிப்பு மற்றும் இழப்பு நிலைகளைக் கொண்டு காப்பீடு நஷ்டஈடு வழங்கும் முறை வடிவமைக்கப்பட்டுள்ளது.
வானிலை சார்ந்த பயிர் காப்பீடு திட்டத்தின் மூலம், ஒரு விவசாயிக்கு பயிர் மகசூலுக்கு ஏற்பட்டிருக்கும் பயிர் இழப்பை வானிலை இலக்குகளை பிரதிநிதிகளாக எடுத்துக்கொண்டு, பயிர் இழப்பிற்கான நஷ்டஈடு வழங்கப்படுகின்றது. வரவு செலவுத் திட்ட திட்டறிக்கையின் இலக்கைப் பொறுத்து, இந்திய விவசாய காப்பீடு நிறுவனம் வானிலைச் சார்ந்த பயிர் காப்பீடு முன்னோடித் திட்டத்தை 2007 காரீஃப் பருவத்தில் கர்நாடகத்தில் 70 ஹீப்ளிகளில், எட்டு மானாவாரி பயிர்களுக்கு செயல்படுத்தியது.
இத்திட்டம் ராஜஸ்தான், சாடிஸ்கார், மத்தியப் பிரதேசம் மற்றும் பீஹார் போன்ற மாநிலங்களில் 2007-08 ரபி பருவத்தில் செயல்படுத்தப்பட்டது.
மத்தியப் பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், பீஹார், ராஜஸ்தான், ஜார்கண்ட், மஹாராஸ்டிரா, கர்நாடகா, ஒரிஸ்ஸா மற்றும் தமிழ்நாடு போன்ற 70 மாநிலங்களில் இத்திட்டம் 2008 காரீஃப் பருவத்தில் செயலாக்கப்பட்டது.
மீண்டும் 2008-09 ரபி பருவத்தில் ஹரியானா, பீஹார், ராஜஸ்தான், ஜார்கண்ட், கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், சாடிஸ்கார் மற்றும் ஹிமாச்சல பிரதேசம் போன்ற 10 மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டது.
வானிலைச் சார்ந்த பயிர்க் காப்பீடு முன்னோடித்திட்டம் (WBCIS) - அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
மற்ற பிற விவரங்களுக்கு இங்கே அழுத்தவும்.
|
|