|
பாக்கனோ நோய் (அல்லது) துார் அழுகல் நோய்:
(ஜிபரெல்லா ஃபூஜிகுராய்)
தாக்குதலின் அறிகுறிகள்: |
|
|
|
- நோய் தாக்கப்படட பயிர்கள் நாற்றங்காலிலும் வயலிலும் வழக்கத்திற்கு மாறான உயரத்துடன் காணப்படும்.
- பயிர்கள் மெலிந்து, மஞ்சள் கலந்த பச்சை நிற இலைகளுடனும், வெளிரிய பச்சை நிற கண்ணாடி இலைகளையும் கொண்டிருக்கும்.
- நாற்றுக்கள் துார்விடும் பருவத்தில் காய்ந்துவிடும்.
- பயிரில் துார்கள் குறைந்தும், இலைகள் காய்ந்தும் காணப்படும்.
- இந்நோய் தாக்கப்பட்ட பயிர்களில் பூக்காமலும், கதிர்கள் அறைகுறையாகவும், பூக்கள் மலட்டுத் தன்மையுடனும் மணிகள் நிரம்பப்படாமலும் இருக்கும்.
விதைப்பாத்திகளில் நோய் தாக்கப்பட்ட நாற்றுக்கள் வேர்களில் புள்ளிகளுடன் காணப்படும்.
- இந்நாற்றுக்கள் நடவு செய்வதற்கு முன்னோ அல்லது நடவிற்குப் பின்னரோ இறந்துவிடும்.
|
|
|
துார் அழுகல் நோய் |
துார் அழுகல் நோய் |
|
மேலே செல்க |
|
நோய்க் காரணி: |
|
|
|
|
- நோய் காரணிகள் இனக்கலப்பு முறையால் பூசண வித்துக்களை அஸ்கஸ் எனும் பைக்குள் உருவாக்கிறது.
- அஸ்கி நீள் உருளை வடிவமாகவும், உந்துருள் வடிவமாகவும், மேல்புறம் தட்டையாகவும் 90-102 x 7-9 மைக்ரோ மீட்டர் அளவு கொண்டது. அவை 4-6 பூசணவித்துக்களுடையது. ஆனால் அரிதாக 8 பூசண வித்துக்களையும் கொண்டிருக்கும்.
- பூசண இழைகள் கிளைகளுடனும், தடுப்புச் சுவருடனும், காணப்படும். மேலும் பூசணங்கள் நுண் பூஞ்சை இழை சிதில்கள் மற்றும் பெரும்பூஞ்சை இழை சிதில்களைக் கொண்டிருக்கும். இவை நுண் மற்றும் பெரும் பூசண இழைகளை உருவாக்குகிறது.
- இழை முடிச்சுகள் 80 x 100 மைக்ரோ மீட்டர் அளவுடையது. இவை வட்டமாக கரு நீள நிறமுடன் காணப்படும். இலைத்துளைகள் ஏறக்குறைய மஞ்சளாக, பழுப்பு நிறமாக அல்லது ஊதா நிறமாகவும் இருக்கும்.
|
துார் அழுகல் நோய்க்காரணி |
துார் அழுகல் நோய்க்காரணியின் பெரு, நுண் வித்துக்கள் |
|
மேலே செல்க |
நோய் மேலாண்மை: |
|
|
|
- சுத்தமான விதைகளைப் பயன்படுத்தவேண்டும்.
உப்பு நீரைப் பயன்படுத்தி எடைகுறைவான நோய் தாக்கப்பட்ட விதைகளை விதைக்குவியலிருந்து பிரித்தெடுக்க வேண்டும்.
- விதைகளை விதைக்கும்முன் திரம், தியோபனேட்மிதைல், அல்லது பெனோமைல் போன்ற பூச்சிக்கொல்லிகளுடன் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
- விதை எடையில் 1-2% பெனோமைல் (அ) பெனோமைல் - டி பயன்படுத்தி விதை பூச்சு செய்ய வேண்டும்.
- அக்ரோசன் ஜிஎன், சிரசன் @ 2 கிராம் செயற்கூறு/கிலோவிதையுடன் விதை நேர்த்தி செய்யவேண்டும். 1% தாமிர கந்தக கரைசல் அல்லது 2.0% ஃபார்மலின் உடன் விதைகளை நனைக்கவேண்டும்.
|
|
|
பினோமில் - விதை பூச்சு மருந்து |
உப்பு நீர் மூலம் சப்பைவிதைகளை நீக்கவும் |
மேலே செல்க |
|