|
இலைக்கருகல் நோய்
(மைக்ரோடோச்சியம் ஒரைசே)
தாக்குதலின் அறிகுறிகள்: |
|
|
|
- இலை நுனியிலிருந்து கீழ்நோக்கி மங்கிய அல்லது கரும்பழுப்பு நிறத்துடன் புள்ளிகள் காணப்படும்.
- முதிர்ந்த இலைகளில் வெளிரிய பழுப்பு நிற நீள வடிவமுடைய ஒளிஊடுருவக்கூடிய புள்ளிகள் காணப்படும்.
- இலைத்தாளில் பல புள்ளிகள் இணைந்து, பின் இறுதியில் இலைகள் கருகிவிடும்.
- நோய் தாக்கப்பட்ட பகுதிகள் காய்ந்து பின் இலைகள் கருகியது போன்று காட்சியளிக்கும்.
- ஒளி ஊடுருவிச் செல்லக்கூடிய இலை நுனிகள் மற்றும் இலை ஓரங்கள்.நோய் தாக்கப்பட்ட இலை நுனிகளில் நடுநரம்பின் அருகில் பிளவு ஏற்படும்.
- குறிப்பாக அதிக காற்றின் போது இலைநுனிப்பிளவுகள் பெருமளவில் காணப்படும்.
|
|
|
இலைக்கருகல் நோய் |
இலைக்கருகல் நோய் |
|
மேலே செல்க |
|
நோய்க் காரணி: (மைக்ரோனோச்சியம் ஒரைசே) |
|
|
|
|
- பூசணத்தின் மேல்பரப்பில் பூசண இழைச் சிதில்கள் உருவாகின்றன.
இவை வில் வடிவத்திலிருந்து நிலா வடிவமாகவும், இளமையாக இருக்கும்போது ஒற்றை உயிரணு (திசு) கொண்டது.
- முதிர்ச்சி நிலையில் 2 உயிரணுக்களுடனும் அவ்வபோது 2-3 குறுக்குச் சுவருடனும் காணப்படும்.
அஸ்கி நீள உருளை வடிவத்திலிருந்து குண்டாந்தடி வடிவமாகவும், ஒருகுமிலுடனும் காணப்படும்.
- (அஸ்கஸின் உட்புற மற்றும் வெளிப்புறச் சுவர்கள் ஏறக்குறைய விறைப்பானதாக இருக்கும். மேலும் அவை பூசணவித்துக்கள் வெளிவரும்போதும் பிரியாது.)
அஸ்கோஸ்போர்ஸ் (பூசண இழைகள்) ஒன்றாக இணைந்தும், நிமிர்ந்தும், சற்று வளைந்தும், 3-5 குறுக்குச் சுவருடனும் காணப்படும்.
|
இலைக்கருகல் நோய்காரணியின் கொனிடியா |
இலைக்கருகல் நோய்காரணி |
|
மேலே செல்க |
கட்டுப்பாடு முறைகள்: |
|
|
|
- அதிகளவு உரங்கள் அளிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
பெனோமைல், கார்பென்டசீம், குய்ட்டோஜுன் மற்றும் தியோஃபனேட்-மிதைல் ஆகியவற்றுடன் விதை நேர்த்தி செய்யவேண்டும்.
- பெனோமைல், ஃபென்டின் அசிடேம், எடிஃபென்பாஸ் மற்றும் வலிடாமைசின் ஆகியவற்றை வயலில் தெளிக்கவேண்டும்.
- கேப்டோஃபால், மேன்கோசிப் மற்றும் காப்பர் ஆக்ஸிக்லோரைடு, ஆகியவற்றை இலைவழி உரமாக அளிக்கவேண்டும்
|
|
|
மேங்கோசெப் தெளிக்கவும் |
வாலிடாமைசின்-தடுப்பு மருந்து |
மேலே செல்க |
|