|
ஊதுபத்தி நோய்
தாக்குதலின் அறிகுறிகள்: |
|
|
|
- வெள்ளைப் பூசண இழைகள் கதிரின் கிளைகளை ஒன்றுடன் ஒன்று இணைப்பதால், கதிர்கள் கற்றையாகவும், அழுக்கு நிறத்துடனும், நீள் உருளை வடிவ அகர்பத்தி அல்லது ஊதுபத்தி போன்ற குச்சிகளாக வெளி வரும். எனவே இந்நோய் ஊதுபத்தி நோய் எனப் பெயர் பெற்றது.
- வெள்ளைப் பூசண இழை மற்றும் பூசண இழை சிதில்கள் குறுக்கு வண்ணக்கோடுகளை கண்ணாடி இலைகளின் நரம்புகள் வழியே பூங்கொத்து வெளி வருதலுக்கு முன்னரே உருவாக்குகிறது. நோய் தாக்கப்பட்ட கதிர்களில் எவ்வித தானியங்களும் உருவாகாது.
- நோய் தாக்கப்பட்ட பயிர்கள், பின் உருமாறிய தானியக் கதிர்கள் உருவாக்கும்.
- கதிர் வெளிவரும்போதே விதைகளிலும் நோய் தாக்கம் ஆரம்பமாகிறது.
- தென்னிந்தியாவின் பல பகுதிகளில் இந்நோய் தாக்குதல் அதிக அளவில் காணப்படுகிறது. பெரும்பாலும் தமிழ்நாட்டில மதுரை மாவட்டம், கேரளாவில் வையநாடு, கர்நாடகா மாநிலத்தில் கொள்ளிஹள் மற்றும் தென் கனரா மாவட்டங்களில் அதிகமாய் காணப்படுகிறது.
|
|
|
வெள்ளைப் பூசண இழை மற்றும் பூசண இழை சிதில்கள்கொண்டகதிர் |
அழுக்கு நிறத்துடனும், நீள் உருளை வடிவ ஊதுபத்தி போன்ற குச்சிகளாககதிர் வெளி வரும் |
|
மேலே செல்க |
|
நோய் காரணி: இபிலிஸ் ஒரைசே சிட் |
|
|
|
(உட்பிரிவு: டியூட்டரோமைக்கோடினா: தொகுதி: ஸ்பேய்ரோப்சிடேல்ஸ்: குடும்பம்: எக்சிபுலேசியே)
முழுமை நிலை: பலன்சியா ஒரைசே சட்டைவே ஹஸியோகா
(உட்பிரிவு: அஸ்கோமைக்கோடினா: தொகுதி (வரிசை): ஸ்பேரியேல்ஸ், குடும்பம்: ஹைப்போகிரியேசியே இப்பூசணத்தின் முழுமைநிலை அஸ்கோய்சீட், ப்லன்சியா ஒரைசே சட்டைவே)
நோய் சுழற்சி:
- பூசணம் விதை வழி பரவுகிறது. மேலும் இவை ஊடுருவும் தன்மையுடையது.
- நோய் தாக்கப்பட்ட நாற்றுக்களின் இளம் இலைகளில் சாம்பலான வெள்ளை நிற படலமாக பூசண வளர்ச்சி காணப்படும். நோயுற்ற விதைகள் நிலையான நோய்க்கு முக்கிய பங்கு வகிப்பதில்லை.
- பூசணம் புல்வகைகளான ஈஸ்அச்னி எலிகன்ஸ், சைனோடான் டேக்டைலான், பென்னிசிடம் சிற்றினம் மற்றும் ரொக்ரோஸ்டிஸ் டினுாய்ஃபோலியா ஆகியவற்றில் தோன்றி பயிர்களுக்கு பரவுகின்றது.
- மிகவும் முன்னரே விதைத்த மற்றும் தாமதமாக விதைத்த பயிர்களில் நோயின் தாக்கம் சற்று குறைவாகவே காணப்படும்.
|
இபிலிஸ் ஒரைசே வித்துக்கள் |
|
|
|
நுண்நோக்கியில்நோய் காரணி - இபிலிஸ் ஒரைசே |
|
மேலே செல்க |
கட்டுப்பாடு முறைகள்: |
|
|
|
- விதைப்பதற்கு நோயற்ற நல்ல விதைகளையே தேர்ந்தெடுக்க வேண்டும்.
- கேப்டன் அல்லது தீரம் உடன் விதை நேர்த்தி மேற்கொள்ள வேண்டும்.
- விதைகளை விதைப்பதற்கு முன், 50-54 செ வெப்ப அளவு கொண்ட வெந்நீரில் விதைகளை 10 நிமிடங்கள் நன்கு ஊற வைக்க வேண்டும்.
- விதைகளில் ஏதேனும் நோய்க் காரணிப் பொருள்கள் காணப்பட்டால் அவற்றை வெப்பலுாட்டம் முறை (சூரிய ஒளி நேர்த்தி) மூலம் சிறப்பாகக் கட்டுப்படுத்த முடிகிறது.
- வயலிலிருக்கும் நோயுற்ற பூங்கொத்துக்களை அகற்றி அழித்துவிட வேண்டும்.
|
|
|
கேப்டான் மருந்து கொண்டு விதை நேர்த்தி செய்க |
விதைக்கும் முன் விதைகளை சூரிய வெப்பத்தில் உலர்த்தவும் |
மேலே செல்க |
|