|
புகையான்
பூச்சியை கண்டறிதல் : |
|
அறிவியல் பெயர் - நீலப்பர்வேடா லுாஜென்ஸ்
- முட்டை :
இலையுறைகளில் 2-12 தொகுதிகளாக முட்டைகள் இடப்பட்டிருக்கும். (பயிரின் அடிப்பகுதியின் அருகில் அல்லது இலைத்தாள்களின் அடிப்பக்க நடுநரம்புகளில்), வெள்ளையான, ஒளி ஊடுருவுகின்ற, மெலிந்த நீள் உருளை வடிவிலும், வளைவான முட்டைகள் 2 வரிசைகளில் நேர்கோட்டில் வைக்கப்பட்டிருக்கும். (வட்டமான சற்று குவிந்த வடிவத்திலுள்ள பெண் பூச்சியால் உருவான முட்டைதோலால் முட்டைகள் மூடப்பட்டிருக்கும். பயிர்ச் செடியின் பரப்பிலிருந்து நுனிகள் மட்டுமே வெளியே துருத்திக் கொண்டிருக்கும்).
- இளம்பூச்சி :
புதிதாக பொரிந்து, வெளிவந்த இளம் உயிரிகள் பருத்தி போன்று வெண்மையான நிறத்தில், 0.6 மி.மீ நீளத்துடன் இருக்கும். பின் 5 வது வளர்ச்சிநிலையில் இவை ஊதா நிறமான பழுப்பு நிறம் போன்றும், 3.0 மிமீ நீளத்துடன் மாறிவிடும்.
- முதிர்ப்பூச்சி :
முதிர்ச்சியடைந்த தத்துப்பூச்சி 4.5-5.0 மிமீ நீளத்துடன், மஞ்சளான பழுப்பு முதல் கரும்பழுப்பு நிற உடலைக் கொண்டிருக்கும். அதன் இறக்கைகள் நிறமில்லாமல், மங்கிய மஞ்சள் நிறமாகக் காணப்படும். இரண்டு தனிச்சிறப்புடைய இறக்கை அமைப்புகளைக் கொண்டது. “நீளிறக்கைகள்” மற்றும் “சிற்றிறக்கைகள்” (இறக்கை வெளிப்புற அமைப்பு பல காரணிகளால் துாண்டப்படுகின்றது. அதாவது, இளம் உயிரிப் பருவத்தில் கூட்டமாகவும், உணவின் அளவு மற்றும் தரம் குறைந்தும், குறுகிய நாள் அளவு, மற்றும் குறைந்த வெப்பநிலை ஆகியவை முதிர்ச்சி நிலையை மேம்படுத்துகின்றன). |
|
|
முட்டை |
இளம்பூச்சி |
|
|
முதிர்பூச்சி |
முதிர்பூச்சி |
|
மேலே செல்க |
மேலாண்மை : |
|
உழவியல் முறைகள் :
- பூச்சிகளின் முன் தாக்க நிலையின்போது 3-4 நாட்களுக்கு வயலில் நீரை வடிகட்ட வேண்டும்.
- பழுப்பு தத்துப்பூச்சிகளின் வளர்ச்சியைக் குறைப்பதற்கு, தழைச்சத்து உரத்தை பிரித்திடுதல் வேண்டும்.
- 3 வார இடைவெளிக்குள் ஒருமித்த நடவு செய்தல் மற்றும் நெற்பயிர் தடை காலத்தை பாதுகாத்தல் ஆகியவை புகையான்களின் பெருக்கத்தைக் குறைக்கிறது.
- இந்திய நெல் ஆராய்ச்சிக்கழகம் வெளியிட்டுள்ள நெல் இரகங்களில் புகையான் களை எதிர்க்கும் திறன் கொண்ட மரபணுக்கள் உள்ளன. அவை ஐஆர் 26, ஐஆர் 64, ஐஆர் 36, ஐஆர் 56, மற்றும் ஐஆர் 72 ஆகிய இரகங்கள் ஆகும்.
- இப்பூச்சியை எதிர்க்கும் திறன் கொண்ட இரகங்களான பிஒய் 3, கோ 42, எடிடீ 35, எடிடீ 37, பிடிபீ 33 மற்றும் பிடிபீ 21, அருணா, கனகா, கார்த்திகா, கிருஷ்ணவேணி, மகோன், அபீ, ஆஷா, திவ்யா ஆகிய இரகங்களைப் பயிரிடுதல் வேண்டும்.
- நெருக்கமான நடவைத் தவிர்த்து, ஒவ்வொரு 2.5-3.0 மீட்டருக்கும் இடையில் 30 செ.மீ இடைவெளி கலவன் அகற்றும் பாதை விட்டு நடுவதால் பூச்சித் தாக்குதலைக் குறைக்க முடிகிறது.
|
|
|
அதிகப்படியான தழைச்சத்து உர பயன்பாட்டை தவிர்க்கவும் |
வயலில் அடிக்கடி நீரை வடித்து கட்டவும் |
|
|
30 செ.மீ. அளவு கலவன் பாதை விடவும் |
ஐஆர் 36 போன்ற எதிர்ப்பு இரகங்களை பயிரிடவும் |
|
இரசாயன முறைகள்:
- பொருளாதார சேத நிலை அளவு : ஒரு குத்துக்கு 1 சிலந்தி இருக்கும் நிலையில் ஒரு துாருக்கு 2 பழுப்பு தத்துப்பூச்சி இருக்கலாம்.
- பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்துவதற்கு முன்னர், வயலிலுள்ள நீரை வடிகட்ட வேண்டும். பின், பயிர்ச்செடிகளின் அடிப்பகுதியில் பூச்சிக்கொல்லிகளைத் தெளிக்க வேண்டும்.
- சில பூச்சிக்கொல்லிகளில் செயற்கை பைரித்ராய்டு, மிதைல் பேரத்தியான், ஃபென்தியான், மற்றும் குயினால்பாஸ் போன்ற புத்துயிர்ப்பு தரும் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தலைத் தவிர்க்க வேண்டும்.
- கீழ்வரும் ஏதேனும் ஒன்றை தெளிக்க வேண்டும் :
பாஸ்போமிடான் 40 எஸ்எல் 1000 மிலி/எக்டர் (அ) மோனோக்ரோட்டோபாஸ் 36 எஸ்எல் 1250 மிலி/எக்டர் (அ) பாசலோன் 35 இசி 1500 மிலி/எக்டர் (அ) கார்பரைல் 10 டி 25 கிலோ/எக்டர் (அ) மீதைல் டெமட்டான் 25 இசி (திரவமாற்று திரட்டு) 1000 மிலி/எக்டர் (அ) அசிபேட் 75 எஸ்பி 625 கிராம்/எக்டர் (அ) க்லோர்பைரிபாஸ் 20 (இசி) 1250 மிலி/எக்டர் (அ) கார்போஃபூரான் 3 ஜி 17.5 கிலோ/எக்டர் (அ) டைக்லோர்வாஸ் 76 நீரில் நனையும் செறிவுடைய (டபல்யுஎஸ்சி) 350 மிலி/எக்டர்
- தாவரச்சாறு பயன்படுத்தல் :
வேப்பெண்ணை 3 சதவிகிதம், 15 லிட்டர்/எக்டர் (அ) இழுப்பை எண்ணை 6 சதவிகிதம் 30 லிட்டர்/எக்டர் (அ) வேப்பங்கொட்டைச்சாறு 5 சதவிகிதம் 25 கிலோ/எக்டர்.
|
|
|
குளோர்பைரிபாஸ் தெளிக்கவும் |
பாஸ்போமிடான் தெளிக்கவும் |
|
|
அசிப்பேட் பயன்படுத்தவும் |
இலுப்பை எண்ணெய் 30 லி/எக்டர் பயன்படுத்தவும் |
|
உயிரியல் முறைகள்:
- இயற்கை எதிரிகளான “லைகோசா சூடோஅன்னுலேட்டா, “சிர்டார்ஹினஸ் லிவிடிபென்னிஸ்” ஆகிய முதிர்நிலைப் பூச்சிகள் (200-250 நாவாய்ப் பூச்சிகள்/எக்டர்) பழுப்பு இலைத் தத்துப்பூச்சிகளின் அதிகத் தாக்குதலின் போது 10 நாட்கள் இடைவெளியில் அவற்றை விடுவிக்க வேண்டும்.
- முட்டைகளின் பொதுவான ஒட்டுண்ணிகள் “குளவி-பூச்சிகளின் வரிசைகள்” ஆகும். நாவாய்ப்பூச்சிகள் மற்றும் எண்கால் சிலந்திகள் ஆகியவை முட்டைகளை உட்கொள்ளும். முட்டைகள் மற்றும் இளம்பூச்சிகள் இரண்டையும் நாவாய்ப்பூச்சிகள் உட்கொள்கிறது. பொதுவான ஒட்டுண்ணிகளால் இளம்பூச்சிகள் மற்றும் முதிர்ப்பூச்சிகள் உட்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக சிலந்திகள் மற்றும் பொறிவண்டுகள் இதனை உட்கொள்கின்றன.
- நீர்வாழ் மற்றும் நீர்வண்டுகுடும்பப் பூச்சிகள், தட்டான் பூச்சிகள், ஊசித்தட்டான் மற்றும் சில நாவாய்ப் பூச்சிகள் நீர்ப்பரப்புகளில் விழுகின்ற புகையான்களின் முட்டைகள் ,இளம்பூச்சிகள் மற்றும் முதிர் உயிரிகளை உட்கொண்டு விடுகின்றன.
- பூசண நோய்க்காரணிகளும் பழுப்பு தத்துப்பூச்சிகளைத் தாக்குகிறது.
|
|
|
கரையான்கள் முட்டைகளை உண்ணும் |
இயற்கை எதிரி - லைக்கோசா சூடோஅன்னுலேட்டா |
|
|
இயற்கை எதிரி - கிரிட்டோர்ஹைனஸ் லிவிடிபென்னிஸ் |
இரை விழுங்கி - பொறி வண்டு |
|
பொறி முறைகள் :
- இரவு நேரங்களில் விளக்குப் பொறிகளை வைக்க வேண்டும்.
- பகல் நேரங்களில் மஞ்சள் நிற பொறிகளைப் பயன்படுத்துதல் வேண்டும்.
- விதைப் பாத்திகளுக்கு அருகில் விளக்குப் பொறிகளை வைக்கக் கூடாது.
- வெள்ளொளித் தன்மையுடைய விளக்குப் பொறிகளை 1-2 மீட்டர் உயரத்தில் (@ 4/ஏக்கர்) பொருத்தி பூச்சிகளின் தொகையைக் கண்காணிக்க வேண்டும்.
- விளக்குப் பொறியின் அடிப்பகுதியில் தண்ணீர் நிரப்பப்பட்ட தொட்டியைப் பொருத்தி அதில் மண்ணெண்ணையை சேர்க்க வேண்டும். இதனால் பொறியில் பிடிபட்ட பூச்சிகளைக் கொல்ல முடிகிறது.
|
|
|
வெண் இழை விளக்குப்பொறி வைக்கவும் |
விளக்குப்பொறி வைக்கவும் |
|
|
இரவு நேரங்களில் விளக்குப்பொறி வைக்கவும் |
மஞ்சள் ஒட்டுப்பொறி பகல் நேரங்களில் வைக்கவும் |
மேலே செல்க |
|