|
நெல் கூண்டுப்புழு
தாக்குதலின் அறிகுறிகள் : |
- நன்கு வளர்ச்சியடைந்த புழுக்கள் நெற்பயிர் இலையால் ஆன குழல் வடிவக் கூடுக்குள் காணப்படுகின்றன. அந்த குழல் வடிவ கூடுகள் இலைநுனிகளில் தொங்கிக் கொண்டிருக்கும்.
- புழுக்கள் இலைகளின் சாற்றை உறிஞ்சி நரம்புகள் மட்டும் வெளியே தெரியும்.
- கூட்டுப்புழு கூண்டுக்குள் உண்டாகி, இலைகளின் அடிப்பகுதியில் ஒட்டிக்கொண்டிருக்கும்.
- இலைகளின் பச்சையத்தை சுரண்டி உண்ணுவதால், இலைகள் வெள்ளைநிறக் காகிதம் போல் தோன்றும்.
- தூர்களை சுற்றி குழல் வடிவ கூண்டுகளை, இலைகளின் நுனிப்பகுதியை வெட்டி உண்டாக்குகிறது.
- குழல் வடிவ கூண்டுகள் நீரின் மீது மிதக்கின்றன.
- கத்திரிக்கோல் கொண்டு சரியான கோணத்தில் வெட்டப்பட்டது போல் இலைகள் வெட்டப்பட்டிருக்கும்.
|
|
|
துார்களைச் சுற்றி குழாய் வடிவ கூடுகள் மிதந்து கொண்டிருக்கும் |
சருகு போன்ற வெள்ளை நிற இலைகள் |
|
மேலே செல்க |
பூச்சியை கண்டறிதல் : |
|
அறிவியல் பெயர் - நிம்புலா டீபன்க்டாலிஸ்
- முட்டை :
முட்டைகள் இளம் மஞ்சள் நிறத்தில், தட்டு போன்று, மென்மையாகவும், ஒழுங்கற்ற வடிவத்திலும் காணப்படும். நீரின் மீது மிதந்து கொண்டிருக்கும் இலைகளின் அடிப்பகுதிகளில் முட்டைகள் இடப்பட்டிருக்கும்.
- புழு :
புழுக்கள் பச்சை நிறத்தில், ஆரஞ்சு பழுப்பு நிறத் தலைப்பகுதியுடன் காணப்படும். ஒவ்வொரு புழுவும் குழல்வடிவக் கூடுக்குள் உயிர் வாழும். இந்த கூடுகள் இலைகளில் தொங்கிக்கொண்டிருக்கும். நன்கு வளர்ச்சியடைந்த புழுக்கள் 15 மி.மீ நீளம் வரைக் காணப்படும்.
- கூட்டுப்புழு :
இலைக்கூடுகளுக்குள் கூட்டுப்புழு உருவாகிறது. புதிதாக உருவான கூட்டுப்புழுக்கள் பால் போன்று வெண்மை நிறத்தில் தோன்றி, பின் இளம் மஞ்சள் நிறத்திற்கு மாறி விடும்.
- முதிர்பூச்சி :
சிறியதாக, வெள்ளை நிறத்துடன், மங்கிய பழுப்பு நிற அலை போன்ற குறிகளுடன் காணப்படும். ஆண் பூச்சிகளை விட பெண் பூச்சிகள் பெரியதாக இருக்கும். இரவு நேரத்தில் தான் முட்டையிடுதல் நடைபெறும். |
|
|
புழு |
முதிர்பூச்சி |
|
|
முதிர்பூச்சி |
|
|
மேலே செல்க |
மேலாண்மை : |
|
உழவியல் முறைகள் :
- துார்களிலிருக்கும் புழுக்களை கீழே விழச் செய்ய, இளம்பயிர்களின் குறுக்கே கயிரைப் போட்டு இழுத்தால் கூடுகள் நீரில் விழும். பின் வயலிலுள்ள நீரை வடிய செய்யலாம் அல்லது வயலின் ஒரு புறத்திலிருந்து மறுபுறத்திற்கு நாற்றின் மீது படும்படி கயிரைக் கொண்டு இழுத்தால் முட்டைகளும் கீழே விழுந்துவிடும்.
- சரியான அளவு உரம் அளித்தல், அகலமாக இடைவெளி விடுதல் மற்றும் பருவத்திற்கு முன்பே நடவு செய்ய வேண்டும்.
- ஒரு ஏக்கருக்கு ஆறு லிட்டர் என்ற அளவில் மண்ணெண்ணெய் பயன்படுத்தி கூண்டுப்புழுக்களை கட்டுபடுத்தலாம்.
|
|
|
பயிரின் மேல் கயிறு இழுத்து புழுக்களையும், முட்டைகளையும் கீழே விழ செய்யவும் |
நீரில் மண்ணெண்ணெய் கலந்து அளிக்கவும் |
|
|
இரசாயன முறைகள் :
- மிதைல் பாரத்தியான் 0.05% (அ) மோனோகுரோட்டோபாஸ் 0.05 % (அ) குயினைல்பாஸ் 0.05% தெளிக்க வேண்டும்.
|
|
|
மோனோகுரோட்டாபாஸ் தெளிக்கவும் |
குயினைல்பாஸ் தெளிக்கவும் |
|
|
உயிரியல் முறைகள் :
- இரை விழுங்கியான நத்தைகள் நெல் கூண்டுப்புழுக்களின் முட்டைகளை உண்ணுகின்றன.
- நீர்த்துளை வண்டுகள் மற்றும் உண்மை நீர்வாழ் வண்டுகள் இதன் புழுக்களை உட்கொள்கின்றன.
- சிலந்திகள், தட்டான் பூச்சிகள் மற்றும் பறவைகள் முதிர்ப்பூச்சிகளை உண்ணுகின்றன.
|
|
|
நீர் வண்டுகள் கூண்டுப்புழுவை உண்கின்றன |
தரை வண்டுகள் புழுக்களை உண்ணும் |
மேலே செல்க |
|