|
சில் வண்டு
தாக்குதலின் அறிகுறிகள் : |
- இலைகளில் ஒழுங்கற்றது முதல் நீள்வாட்ட வடிவ துளைகள் காணப்படும்.
- இலைப்பரப்பு முழுவதையும் வெட்டி உண்டு, நடு நரம்புப் பகுதி மட்டும் எஞ்சி நிற்கும்.
- காய்ந்த குருத்து.
|
|
|
பாச்சையால் ஏற்படும் சேதம் |
பாச்சையால் ஏற்படும் சேதம் |
|
மேலே செல்க |
பூச்சியை கண்டறிதல் : |
|
அறிவியல் பெயர் - யூஸ்சிர்டஸ் கான்சின்னஸ்
- முட்டை :
முட்டைகள் நீண்டு-முட்டை வடிவமாக இருக்கும். புதிதாக இடப்பட்ட முட்டைகள் வெள்ளை நிறத்திலும், பின் ஆரஞ்சு நிறமாகவும் மாறிவிடும்.
- இளம் பூச்சிகள் :
இளம்குஞ்சுகள் வளர்ச்சியடைந்த பூச்சிகளைப் போல ஒரே நிறமுடையவை. இறக்கைகளை தவிர, இது வளர்ச்சியடைந்த பாச்சைகளைப் போலவே காணப்படும். இதன் வயிற்றுப் பகுதியைச் சுற்றி ஒரு ஜோடி பழுப்பு முதல் கருப்பு நிறமான புள்ளிகள் காணப்படும்.
- முதிர்பூச்சி :
வளர்ச்சியடைந்த பாச்சைகள் வெளிரிய பழுப்பு நிறமாக இருக்கும். இவை 1.0-1.8 செ.மீ நீளமுடையது. நீளமான உணர் கொம்புகள் மற்றும் கால்களை உடையது. பெண்பூச்சிகள் நீளமாக மற்றும் ஈட்டி வடிவ முட்டையிடும் உறுப்பை கொண்டது. ஆண் பூச்சியைவிட பெண் பூச்சி நீளமான அளவுடன் காணப்படும்.
|
|
|
சில் வண்டு |
நீளக்கொம்புடைய பாச்சை |
|
|
நீளக்கொம்புடைய பாச்சை |
|
|
மேலே செல்க |
மேலாண்மை : |
|
- நெல் வயலில் நீர் தேங்கி இருக்குமாறு வைக்கவேண்டும். இதனால் பாச்சைகள் மண்ணுக்குள் துளையிட்டுச் செல்வதையும், பயிர்ச் சேதம் ஏற்படுவதையும் தடுக்க முடியும்.
- நச்சு இரையை ஈரமான அரிசித் தவிடு மற்றும் பூச்சிக் கொல்லியுடன் கலந்து தயார் செய்து, நெல் வயல் வரப்புகளில் வைப்பதன் மூலம், இரவில் மேயும் வயல் பாச்சைகளைக் கொல்ல முடியும்.
- ஆழ்நீர் தேக்க பகுதிகளில், நெற்பயிர் நடவின்போது மண்/விதைகளை இராசயன நேர்த்தி செய்வதால் பூச்சிகளை சிறந்த முறையில் கட்டுப்படுத்த முடியும்.
- மெல் இடைக் குளவி குடும்பச் சிற்றினங்களான லிரிஸ் ஆருலென்டா, மோட்ஸ் மனிலே, மோட்ஸ் சப்டிஸ்செல்லேட்டஸ் மற்றும் மோட்ஸ் லோபோரியோசஸ் ஆகியவை வயல் பாச்சகைள் மீது ஒட்டுண்ணியாகச் செயல்படுகின்றன.
|
|
|
இடையான் பூச்சி |
நெல் தவிடு + நஞ்சு இரை |
|
மேலே செல்க |