முதல் பக்கம் தொடர்புக்கு  

வெட்டுக்கிளி

தாக்குதலின் அறிகுறிகள் :

  • நாற்றுக்கள் மற்றும் இலைப்பரப்பை ஒழுங்கற்ற முறையில் உண்ணும்.

  • இலை ஓரங்களின் பெரும்பகுதிகளை உண்டுவிடும்.

  • கதிர் பருவத்தில் தண்டுகளை வெட்டி உண்ணும்.

  • இலை நரம்பை தவிர, இலை முழுவதையும் உண்டுவிடும்.

  • இலை பரப்பின் மேல் இளம்பூச்சிகள் மற்றும் முதிர்பூச்சிகள் காணப்படும்.
   
புழுக்கள் இலைகளை ஒழுங்கற்றவாறு உண்ணும் விளிம்பு (அ) நுனியிலிருந்து இலைகள் ஒழுங்கற்று கடிக்கப்பட்டிருக்கும்

மேலே செல்க

பூச்சியை கண்டறிதல் :

             அறிவியல் பெயர் - கைரோகிளைப்பஸ் பானியன்

  • முட்டை :
    முட்டைகள் 30-40 எண்ணிக்கையில் கூட்டமாக இடப்பட்டிருக்கும். பருவ மழைப் பொழிவு தொடக்கத்தின் போது இந்த முட்டைகள் வெளிவந்து விடும். முட்டைகள் மஞ்சள் நிறத்தில், நீர்ப்புகாதவாறு பசை போன்ற பொருளால் மூடப்பட்டிருக்கும்.

  • இளங்குஞ்சுகள் :
    இளங்குஞ்சுகள் புற்கள் மற்றும் நெற்பயிரினை உண்கின்றன.

  • முதிர்பூச்சி :
    ஆகஸ்ட்-செப்டம்பர் மாதத்தில் இளம் குஞ்சுகள் வளர்ந்து முதிர்ப்பூச்சிகளாகின்றன. பெருவெட்டுக்கிளி 1½ இன்ச் நீளம் கொண்டது. முன் மார்பு பாகத்தின் மேல் மூன்று கருநிறக் குறுக்கு கோடுகள் காணப்படும். இதனால் பூச்சியை எளிதில் கண்டறியலாம். சிறு வெட்டுக்கிளி 1 இன்ச் நீளமுடன் முன் மார்பு பாகத்தின் இரு பக்கங்களிலும் நீளவாட்டில் பழுப்பு நிறக்கோடுகளுடன் காணப்படும்.
   
வெட்டுக்கிளி வெட்டுக்கிளி

மேலே செல்க

மேலாண்மை:

உழவியல் முறைகள் :


  • அறுவடைக்கு பின்னர் நிலத்தில் நீரை தேக்கி வைத்தல், வரப்புகளை சீர் செய்தல், வரப்புகள்/பாத்திகளை சுத்தம் செய்வதால் முதிர்வெட்டுக்கிளிகளை இரவு நேரத்தில் நேரடியாக இலைப்பரப்பிலிருந்து அகற்றலாம்.

  • வரப்புகளை சீர் செய்தல் மற்றும் வயலை உழவு செய்வதால் முட்டைகள் மண்ணின் மேற்பரப்பிற்கு வரும். அவற்றை பறவைகள் பொறுக்கிக் உண்ணும்.
வாத்துகளை வயலில் விடவும் நாற்றங்காலில் நீரை தேக்குவதால் மறைந்திருக்கும் புழுக்களை வெளிக்கொண்டு வரலாம்


இரசாயன முறைகள் :


  • பியூட்டா ஹெக்ஸா குளோரைடு (5-10%) அல்லது மிதைல் பாரத்தியான் 2 % @ 25-30 கிலோ/எக்டர் என்ற அளவில் பயிர்களின் மேல் துாவ வேண்டும்.

  • மாலத்தியான் 5% @ 20 கிலோ/எக்டர் என்ற அளவில் பயிர்களின் மேல் தூவ வேண்டும்.

  • பூச்சிக்கொல்லிகளை இலைவழித் தெளிப்பாக அளிப்பதன் மூலமாகவும் வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்தலாம்.
மாலத்தியான் தூவவும் பி.எச்.சி. தூவவும்


உயிரியல் முறைகள் :


  • சிறு கொம்புடைய வெட்டுக்கிளிகளின் முட்டைகளின் மீது குளவிகள் ஒட்டுண்ணியாகச் செயல்பட்டு அழிக்கின்றன. ஈ வகை மற்றும் கரையான்கள் வெட்டுக்கிளிகளின் முட்டைகளை இரையாக உட்கொள்கிறது.

  • வெட்டுக்கிளியின் இளங்குஞ்சுகள் மற்றும் முதிர்பூச்சிகள் இரண்டையும் பல்வேறு எறும்பு சிற்றின வகைகள் உட்கொள்கின்றன.

  • பறவைகள், வெளவால், வயல் எலிகள், சுண்டெலி, காட்டுப் பன்றிகள், நாய்கள், மரவட்டை உயிரிகள், மீன்கள், நீர்-நில வாழ்விகள், ஊர்வன மற்றும் குரங்குகள் வெட்டுக்கிளிகளை இரையாக உட்கொள்கின்றன.
முட்டை ஒட்டுண்ணி - டிலோமோனஸ் ரீமஸ் படைப்புழுவிலிருந்து ஒட்டுண்ணி புழு வெளிவரும்
 
கூட்டுப்புழு ஒட்டுண்ணி - நெட்டிலியா சிற்றினம்  
மேலே செல்க