முதல் பக்கம் தொடர்புக்கு  

குருத்து ஈ

தாக்குதலின் அறிகுறிகள் :

  • புழுக்கள் குருத்துகளின் உள்ளேயுள்ள இளந்திசுகளை உண்ணும்.
  • மஞ்சள் கலந்த வெள்ளைநிற நீளவாட்டு ஓரங்கள் கொப்புளம் துளையுடன் காணப்படும்.
  • இளம் இலைகள் நுனியின் அருகில் கீழ்புறமாக தொங்கும்.
  • குருத்து ஈக்கள் இலைப்பரப்பைத் தாக்கும். தாக்குதலின் ஆரம்ப நிலையில், இலை ஓரங்களில் வெள்ளைநிற குறுகலான கோடுகளுடன் காணப்படும்.
  • வெள்ளை நிற அல்லது ஒளி ஊடுருவக் கூடியதாக காணப்படும்.
  • இலைகளின் மீது பூச்சிகள் கடித்த புள்ளிகள் வரிசைகளில் காணப்படும்.  மேலும், பயிர்கள் வளர்ச்சி குன்றி குட்டையாகத் தோன்றும்.
  • காற்று வீசும் போது சேதமான இலைகள் எளிதாக உடைந்துவிடும்.
இலைகளின் விளிம்புகளில் மஞ்சள் கலந்த வெள்ளை நிற கொப்புளம் காணப்படும் காலில்லா, ஈ புழுக்கள் இலைகளில் இருக்கும்

மேலே செல்க

பூச்சியை கண்டறிதல் :

              அறிவியல் பெயர் - ஹைடிரல்லியா ஸஸக்கீ

  • முட்டை:
    வெள்ளை நிறத்தில், சுருள் வடிவமாக, இலைகளின் இருபக்கங்களிலும் தனியாக முட்டைகளை இடும்.

  • புழு :
    புதிதாக வெளி வந்த புழு கண்ணாடி போன்று, மங்கிய வெள்ளை நிறத்தில் காணப்படும்.  பின் வளர்ச்சியடையும் போது மஞ்சள் நிறத்திற்கு மாறிவிடும்.  புழுக்கள் இலையின் கீழ்நோக்கிச் சென்று குருத்துக்குள்ளே சேதத்தை ஏற்படுத்தும்.  சேதம் ஏற்பட்ட இலைகளின் மேல் சிறு துளைகளும்,  இலை ஓரத்தில் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறப் புள்ளிகளுடனும் காணப்படும்.

  • கூட்டுப்புழு :
    இலையுறைகளுக்கிடையே கூட்டுப்புழு உண்டாகிறது. அங்கு கூட்டுப்புழு தண்டுகளுடன் தளர்வாக ஒட்டிக் கொண்டிருக்கும்.  கூட்டுப்புழு இளம் பழுப்பு நிறத்திலிருந்து அடர் பழுப்பு நிறமாகவும், பகுதி நீள் உருளை வடிவமாகவும் காணப்படும்.

  • முதிர்பூச்சி :
    வளர்ச்சிபெற்ற பூச்சிகள் அடர்சாம்பல் நிறத்தில் இருக்கும்.  இவை 1.8-2.3 மி.மீ அளவுடன் காணப்படும்.
   
முட்டை புழு
புழு முதிர்பூச்சி

மேலே செல்க

மேலாண்மை:

  • பொருளாதார சேத நிலை :  25 % சேதமடைந்த இலைகள்.
  • மாற்று சார்பு செடிகளை அகற்றவேண்டும் மற்றும்  பருவத்திற்கு முன்னரே நடவு செய்யவேண்டும்.
  • பரிந்துரைக்கப்பட்ட சாம்பல் சத்து உரத்தை பயன்படுத்தவேண்டும்.
  • ஃபென்தியான் 100 இ.சி 500 மிலி (அ) குயினைல்பாஸ் 25 இ.சி 1000 மிலி/எக்டர் என்ற அளவில் தெளிக்கவேண்டும்  அல்லது திமெட் 5 கிலோ/ஏக்கர் இடவேண்டும்.
  • ஓபியஸ் சிற்றினம், டெட்ராஸ்டிக்கஸ் சிற்றினம் மற்றும் டிரைக்கோகிரேம்மா” சிற்றினம் என்ற முட்டை ஒட்டுண்ணிகளை வயலில் வெளிவிட்டு முட்டைகளை அழிக்கவேண்டும்.
  • லைகோசாசூடோ அன்னூலேடா என்ற சிலந்தி வகைகள்  வளர்ச்சி பெற்ற குருத்து ஈக்களை உண்கின்றன.
  • சிறு குளவிகள் குருத்து ஈயின் முட்டைகள் மற்றும் புழுக்களின் மீது ஒட்டுண்ணியாகச் செயல்படுகின்றன. டோலிகோபோபிட் வகை ஈக்கள் முட்டைகளையும், பைடிரிட் ஈக்கள் மற்றும் சிலந்திகள் குருத்து ஈக்களையும் உண்கின்றன.
மாற்று பயிர்களை அகற்றவும் ஃபென்த்தியான் தெளிக்கவும்
 
காலில்லா புழு மீது ஒட்டுண்ணியாகும் குளவிகள்  
மேலே செல்க