|| | | ||
 

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் & சுய உதவிக் குழுக்கள்

tamil english

வானிலை
மண் வளம்
நீர் வளம்
விதை
பண்ணை சார் தொழில்கள்
ஊட்டச்சத்து
அறுவடைக்குப்பின் சார்
தொழில் நுட்பம்

உயிரிய தொழில்நுட்பம்
உயிரி எரிபொருள்

 

ரெப்கோ அறக்கட்டளை சிறுகடன் வசதி

ரெப்கோ அறக்கட்டளை நிறுவனம் (அரசு சார்பபற்ற நிறுவனம்) என்பது சிறுகடன் வசதி ரெப்கோ வங்கியின் (இந்திய அரசு நிறுவனம்) நிறுவனச் சட்டம் (பகுதி 25) ன் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒன்றாகும். இது லாபத்தை எதிர்பார்க்கும் நிறுவனமாக இல்லாமல் வங்கி மூலம் சுய உதவிக் குழுக்களுக்கு அவர்களின் வருமானத்தை அதிகரிக்க மட்டும் அல்லாமல் வாழ்க்கை தரத்தை அதிகரிக்கவும் வழங்கப்படுகிறது.

குறிக்கோள் :

வங்கிகள் மூலமான சிறுதொழில் கடனை விரிவுபடுத்தி அதன் மூலம் வறுமையிலும் ஆதரவற்ற நிலையிலும் உள்ள ஏழை ஆண்கள், பெண்களிடம் உள்ள வறுமையை குறைக்கும் நிலையை உருவாக்குகிறது. இந்த சுய உதவிக் குழுக்களை உருவாக்குதன் மூலம் ரெப்கோ அறக்கட்டளை நிறுவனம் கிராம மற்றும் நகர்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை மாற்றிக் காட்ட விரும்புகிறது.

பிரித்தல்:

சிறு தொழில் கடனுக்கான ரெப்கோ அறக்கட்டளை நிறுவனம், ரெப்கோ வங்கி வழங்கும் சிறுதொழில் கடன் நிறுவனத்தை ஒரு தனித்தன்மை வாய்ந்த நிறுவனமாக உயர்த்த விரும்புகிறது. மேலும் ரெப்கோ வங்கி ஒரு இந்திய அரசு நிறுவனம் இந்த தொழிற்துணிவு ஆர்வத்தை விரிவுபடுத்துவதன் மூலம் சுய உதவிக் குழுக்களுக்கு நல்ல சேவையினை முன்னேறிய மக்கள் மூலம் வழங்குவதோடு நல்ல ஒருமைப்பாட்டு உணர்வையும் வழங்குகிறது.

திட்டமிடுதல்:

சுய உதவிக்குழு உறுப்பினர்களுடைய குழந்தைகளின் கல்வித்தரத்தை உயர்த்துவது (உதாரணமாக) அவர்களுடைய குழந்தைகள் உயர் கல்வி அடைய இலக்கு வைத்தல்.

நல்ல வீட்டு வசதிகளை உருவாக்குதல் - புதிய வீடுகள் கட்டித்தருதல் - இருக்கின்ற வீடுகளை மேம்படுத்துதல்.
சுய உதவிக் குழுவின் உறுப்பினர்களை வியாபார நடவடிக்கைகளில் முன்னேற்றமடைய செய்தல். இதன் காரணமாக பல்வேறு பொருளாதார நடவடிக்கைகள் மீது மிகுந்த விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது.

மிக ஆழமான விவசாய பயிர்ச்சிகள் மற்றம் கடினமான உழைப்புகள் வருமானம் உயற வழி வகுப்பதோடு, எண்ணற்ற சொத்துக்களை உருவாக்கவும் உதவுகிறது. சில ஏரியாக்களில் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் நிலங்களை பொருளாதார உதவியோடு நிலங்களை குத்தகைக்கு எடுத்து பார்ப்பதோடு, பின்னர் நில உரிமையாளாகளாக விரைவில் ஆக முடியும் என்ற நம்பிக்கையோடு உள்ளனர். இது உறுப்பினர்களுக்கு நம்பிக்கையை வளர்ப்பதோடு மட்டுமல்லாமல் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் ஆலோசனைகளை செய்வதன் மூலம் உறுப்பினர்களுக்கு பாலினப் பாகுபாடின்றி சுகாதாரப் பயிற்ச்சிகளையும் பகிர்ந்து கொள்கின்றனர்.

பொருளாதார பரிமாற்றம் கிடையாத அரிய இடங்களில் கூட நடமாடும் வங்கியையோ அல்லது செயற்கைக் கோள் அலுவலகம் மூலமாகவோ வரவு செலவுக்கணக்கை வைத்துக் கொள்ள உதவுகின்றனர்

சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கும் கடன் ஏறத்தாழ நூறு சதவீதம் திரும்ப வந்நதடைந்து விடுகின்றன.

களப்பணியில் அவர்களுடன் ஒன்றாகவும் மறைமுகமாகசவும் இணைந்து பணியாற்றுகின்றனர்.

ரெப்கோ அமைப்பின் குறிக்கோள்கள் மற்றும் பங்குகள்:

குழு அமைத்தல்:

வறுமை நிலைமைஇ சமூக உணர்வுகள் மற்றும் குடும்ப சூழ்நிலைகள் ஆகியவற்றின் அடிப்படையில் ஆய்வுகள் செய்து குழு அமைக்கின்றனர்.

உறுப்பினர்களை ஒரு சந்திப்பிற்கு ஏற்பாடு செய்து சிறு உதவிக் குழு அமைய உதவியாக இருக்கின்றனர்.

நடுநிலையான பயிர்ச்சிகள் கொடுப்பதோடு, வங்கிகளில் கணக்கு ஆரம்பிக்கவும் உறுதுணையாக இருக்கின்றனர்.

குழு உறுப்பினர்களுக்கு சேமிப்பை ஊக்கப்படுத்துகின்றனர்

           
உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வும், இளைய தலைமுறையினருக்கரிய வருமானத்திற்கரிய செயல்திறன் பயிற்ச்சியும் அளிக்கின்றனர்.

இந்த முயற்சி தொடர பயிற்ச்சியும் அளிக்கின்றனர்

வெற்றி பெற்ற குழுக்களுக்கு தன்னம்பிக்கையை அதிகரிக்க விழிப்புணர்வு சுற்றுலாலவுக்கு ஏற்பாடு செய்தல்.

வங்கி இணைப்பு:

கட்டுமானப் பணிக்கு கடன் ஆலோசனை வழங்குதல் மற்றும் தேவையான அளவுக்கு கடன் அளவை அனுமதித்தல்.

கடன் வாங்குவதற்கான பத்திரங்களை தயார் செய்தல் மற்றும் சிறந்த பயனான கடன் அமைப்பிடம் ஏற்படுத்திக் கொடுத்தல்.

குழு சந்திப்புகளில் கலந்து கொள்வதன் மூலமும், பெரிய அளவில் சந்திப்புகளை நிகழ்த்தியும் கடன் தொகையை தவறாமல் திருப்பிச் செலுத்த ஆலோசனைகளை வழங்குதல்.

பிற்காலத்தில் தேவையானதை அறிந்து கொள்ளுதல் அதாவது கட்டடத்திறமை, பொருளாதாரம் மற்றும் சமுக உணர்வு நடவடிக்கைகள்.

ரெப்கோ வங்கியின் சிறுதொழிற்கடனை அமுல்படுத்துதல்:

ரெப்கோ வற்கியின் சிறுதொழிற்கடன் வழங்குவதன் மூலம் குறிககோளை என்னவென்றாவது கிராமப்புற மக்களின் குறையை போக்குவதும் குறிப்பாக நீலகிரி மாவட்டத்திலுள்ள சுய உதவிக் குழுக்களுக்கு 2002ல் வங்கி நடத்திய அவர்களது கல்வித்தரம் அடிப்படையிலும் தேவையான உதவிகளை வழங்குவதாகும்.

அந்த அரிக்கைகளின் அடிப்படையில் பார்க்கும் போது கடனில் சிக்கித் தவிக்கும் ஒவ்வொரு குடும்பமும் இந்த சிறுதொழில் அமுல்படுத்துவதை மிகுந்த எதிர்பார்ப்புடன் வரவேற்பது மட்டுமல்லாமல் இதன் மூலம் கடன்காரர்களிடம் வாங்கிய 240% சதவீத வட்டியினால் மிகவும கஷ்டமான வாழ்க்கையையே வாழ்ந்து வாழ்க்கையில் வறுமையுடன் தொடர்ந்து வாழ்வது என்ற நிலையில்லாமல் அவர்களிடமிருந்து விடுபடும் வாய்ப்பும் உள்ளது. வங்கிகள் தாங்கள் நடைமுறைபடுத்தும் பொருளாதார கடன் நடைமுறை வங்கி திட்டத்தால் எதிர்பார்க்கும் மக்களுக்கு போதுமானதாக இல்லாததாக அமைந்துவிடுகிறது.

இந்த வங்கி 30 குழுக்களில் இருந்து தொடங்கி சிறிய கடன் அளவான ரூபாய் 3 இலட்சத்தில் தொடங்கி இப்பொழுது கடன் நடவடிக்கைகள் 12,000க்கும் அதிகமான குழுக்களுக்கு ரூபாய் நூறு கோடி ரூபாய் வரைக்கும் மூன்று வருட காலத்திற்க்குள் விரிவுபடுத்தி, அனேகமாக நூறு சதவிகிதம் வரை திரும்பப் பெற்று சாதனை புரிந்துள்ளது.இதை உதாரணமாக வைத்து சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு தவறாத சேமிப்பை ஏற்படுத்தி அவர்களுக்கு தேவையான பணஉதவி, பொருளாதார நடவடிக்கைகளின் வகைகள் மற்றும் அவர்களுடைய திறமையின் அடிப்படையில் அவர்களுக்கு நிதி ஒதுக்கீடு விரிவுபடுத்தப்படுகிறது.

இந்த அபார சாதனையை அடைந்த பிறகு, வங்கி இந்த வளர்ச்சி அடைந்த வாய்ப்பை தமிழ்நாட்டில் மீதம் உள்ள மாவட்டங்களில் உள்ள சுயஉதவிக் குழுக்களுக்கு இதோடு இன்னும் புதுமையாக தேவைப்படும் மக்களுக்கு வழங்குகிறது. கடந்த 4 வருட தற்கால நிகழ்வுகளை வைத்து மார்ச் 2010க்கு முன்னர் 20,000 குழுக்களுக்கு சிறு கடன் உதவியாக 100 கோடி வரை வழங்க முடிவெடுத்து அதை நடக்கும் வருடமே அமுல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

முன்பு அரசு சார்ப்பற்ற நிறுவனத்தையே எதிரபார்த்து சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்குவது, கட்டடத்திறமைகள் போன்றவை, எங்களுடைய வங்கி கடனளிக்கும் நிறுவனமாக மட்டுமே இருந்தது. சில இடங்களில் உள்ள சுய உதவிக் குழுக்களின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லாததாலும், போதுமான விழிப்புணர்ச்சி இல்லாததாலும், குழுக்களுக்கு செயல்பாட்டுத் திறனை வளர்க்க ஒரு எங்கள் சொந்த நிறுவனம் மூலம் ஒரு துணை அமைப்பை ஏற்படுத்தி அவர்களுடைய பணிகளுக்குத் துணையாக இருக்கிறது. எங்களுடைய துணை அமைப்பு ரெப்கோ அறக்கட்டளையின் சிறுகடன் வசதி போல பெயரிட்டு செக்சன் எண் 25ல் பதிவு செய்யப்பட்டள்ளது. ஆனால் இது இலாப நோக்கத்திற்காக அல்ல இந்த அமைப்பு பணிகளை விரிவுபடுத்திக் கொண்டிருக்கின்ற சுய உதவிக் குழுக்களுக்கு ஒரு முன்னுதாரனமாக மற்ற அரசு சார்பற்ற நிறுவனங்களுக்கு விளங்குகிறது.

இந்த தனித்தன்மை வாய்ந்த உதாரணத்தை நமது வங்கி இந்தியாவிலேயே முதன் முறையாக அறிமுகப்படத்தியுள்ளது. மேலும் இந்த குழுக்கள் கடன் வசதியை அதிகப்படத்த நமது வங்கிக்கு உதவி செய்வது மட்டுமல்லாமல் இந்த பணிகளை கண்காணிக்கவும் பொறுப்பேற்றுக் கொண்டு அவர்கள் செயல்திறனை அதிகரிக்கவும் அதன் பலனாக அவர்களுடைய கடன் உட்கிரகித்துக் கொள்கிற திறமையையும் கண்காணிக்கிறது. இந்த வகையில் தேவையான தொழில் நுட்பங்களை மேம்படுத்திய பிறகு இந்த அமைப்பு சிறு தொழில் கடன் நிறுவனமாக முன்னேறி கடனளிப்பது மற்றும் பயனாளிகளுக்கு பிற சேவைகளும் அளிப்பது ஆகிய இரண்டு செயல்களையுமே செய்கின்றது. அங்கே முற்றிலும் மாறுபட்ட பயனை நமது துணை அமைப்பு அரசு சார்பற்ற நிறுவனம் போல் நடவடிக்கை அளிப்பதோடு பயனுள்ள முறையில் உருவாக்கி நியாயமான வழிமுறைகளை இந்த குழுக்களுக்கு வழங்குகிறது.

SIDBIயுடன் இணைதல்: பங்குதாரராக

இந்த வங்கியானது எஸ்.ஜ.டி.டி. ஜ உடன் இணைத்து சிறு நிதி உதவி வசதிகளை ஏராளமான சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி/ அடிப்படை தேவைகளுக்கும் மற்றும் பயனாளிகளின் திறன் வளர்ப்பு நடவடிக்கைகளுடன் இணைந்து வீட்டின் உபயோகத்திற்கு தேவையான நிதி வசதிகளை என.ஜ.டி.பி.ஜ ஆலோசனை முறையில் வழங்குகிறது.

எம்.ஓ.சி இடையில் எக்ஜிம் வங்கி:

எம.ஓ.சி இடையில் எக்ஜிம் வங்கி உதவியாக இருக்கும் கீழ்கண்ட ஏரியாக்கள் வருமாறு:

           
இந்த புரிந்துணர்தல் மூலம் கிராமப்புற ஏழை மக்கள் சுய உதவிக் குழுக்கள் மூலம் நடக்கும் ஏற்றுமதி அடிப்படை நடவடிக்கைகளை ரெப்கோ வங்கியின் சிறு தொழில் கடன் மூலம் முன்னேற்றமடைய செய்கிறது.

குறிப்பிட்ட நுகர்வோருக்கான அடயாளங்கள்/ரெப்கோ சிறுகடன் தொழில் நிறுவனம் வழங்கும் சயஉதவிக்குழுகாரர்களின் பங்குதாரர்கள் வழங்கும் ஏற்றுமதி வியாபாரம், சர்வதேச சந்தைகளின் பொருட்களைப் பற்றிய கருத்து மாற்றங்கள், தொழில்நுட்பம், வணிகம், வியாபாரம், மூலதன வசதிகள் வழங்கும் அதிக ஒத்துழைப்புடன் கூடிய விளம்பரப்படுத்தப்பட்ட சர்வதேச சந்தைகளின் வியாபாரங்கள்.

பதிப்பகங்களின் பரிமாற்றங்கள் மற்றும் பிற பயனுள்ள இலக்கியங்களை புதிய முன்னேற்றங்களால் பின் தங்காத படி இரண்டு நிறுவனங்களையுமே தக்க வைத்துக் கொள்ளல்.

இணைந்து படித்தலை அமைத்தல் மற்றும் பரஸ்பர விருப்பமுள்ள ஏரியாக்களில் ஆராய்ச்சிகள் நடத்துதல்.

தேவையான அளவுகளோடு ஒருவருக்கொருவர் வேலை செய்வது மற்றும் ஏற்றுமதி வசதிகளை பற்றி ஒருவருக்கொருவர் தெரியப்படுத்திக் கொள்ளுதல்.
யூடிஜஎம்எஃப் அமுல்படுத்தும் சிறு ஓய்வுதியத் திட்டம்:

ரெப்கோ வங்கி யூடிஜஎம்எஃப் மூலம் வழங்கும் சிறு ஓய்வூதிய திட்டம் ஒரு மூன்னோடியாக திகழ்வதோடுஇ பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வாழும் மக்களுக்கு ஒரு பொதுநிலை பாதுகாப்பாக விளங்குகிறது.

தென் மாவட்டங்களில் உள்ள சுய உதவிக்குழுக்களுக்கு அதிக அக்கறை எடுத்துள்ளது. இப்பொழுது வரை அதிக பெண் பயனாளி கொண்ட 4500 சுய உதவிக்குழுக்கள் மூலம் 75,000 உறுப்பினர்கள் உள்ளனர்.

ஆரம்ப கட்டங்களில் 10000 உறுப்பினர்கள் சேர்வரர்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த திட்டம் மூலம் ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியத்திற்குரிய காப்புரிதித் தொகை பிடிக்க வேண்டும் என்ற திட்டம் அமுல்படுத்தப்பட்டது. மூன்று வருட காலங்களில் 50 சதவீத உதவிக்குழுக்களை இந்த பொது நல பாதுகாப்பு திட்டத்துக்கு சேர்க்க இலக்கு வைக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் மிகக் குறுகிய காலங்களில் 50,000 உறுப்பினர்களிடம் இருந்து ரூபாய் ஒரு கோடி வரை வசூலிக்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது.

எல்.ஜ.சி.யின் சிறு காப்பீட்டுத் திட்டம்(ஜன  யோஜனா)

சிறு கடன் உள்ளடக்கிய சிறு காப்பீடு ஒரு அங்கமாக சுய உதவிக் குழுக்களுக்கு விளங்க வைக்க வங்கியோடு தொடர்புடைய ஏஜென்சி மூலம் நடத்துகிறது.

எல்.ஜ.சி யுடன் சேர்ந்து ஒரு ஏற்பாட்டை செய்து சுய உதவிக் குழுக்களை மாஸ்டர் பாலிசியில் சேர வைத்து அவர்கள் நம்முடைய வங்கியில் கணக்கு வைத்துள்ளனர். சுய உதவிக் குழுக்களின் பொதுநல பாதுகாப்பை ஜன பீமா யோஜனா (ஜேபிஒய்) என்ற ஆயூள் காப்பீட்டு நிறுவனம் எடத்தக் கொள்கிறது.

இந்த திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்:

சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு 18 வயதிலிருந்து 59 வயதுக்கு இடையில் இருக்க வேண்டும்.
காப்புறுதி ரெப்கோ வங்கியின் பெயரில் இருக்க வேண்டும்.
அனைத்து பரிவர்த்தனைகளும் ரெப்கோ வங்கியின் மூலமே வழங்கப்படும்.
மத்திய அரசின் மூலம் 50 சத தவணைத் தொகை தள்ளுபடித் திட்டத்தின்படி உறுப்பினர் மீதமுள்ள 50 சதவீத தொகையை செலுத்த வேண்டும்.

பயன்கள்:

இறந்த காலத்தில் உறுப்பினர் ரூபாய் 30,000/- வரை அவருடைய வாரிசு பெறுவர்.
இடையில் விபத்தினால் இறக்கும் பொழுதோ அல்லது இயற்கையாகவோ/விபத்து நடந்தால் மொத்த தொகை கிட்டாவிட்டாலும் கீழ்கண்ட பயன்களைப் பெறுவார்கள்

  1. விபத்தினால் மரணம் அடைந்தால் : ரூபாய் 75,000/-
  2. நிரந்தர நோயாளியாக விபத்தினால் ஏற்பட்டால் : ரூபாய் 75,000/-
  3. விபத்தினால் இரண்டு கண்களையோ அல்லது இரண்டுகை கால்களையோ அல்லது ஒரு கண் மற்றும் ஒரு காலையோ இழந்தால் : ரூபாய் 75,000/-
  4. விபத்தினால் ஒரு கண் அல்லது ஒரு கை காலையோ இழந்தால் :ரூபாய் 37,500/-

தவணை:

ஒரு உறுப்பினறுக்கு வருடத்திற்கு தவணைத் தொகை ரூபாய் 200/- இதில் நூறு ரூபாயை எல.ஜ.சி யுடன் இணைந்து மத்திய அரசு தள்ளுபடி செய்வதால் உறுப்பினர் வருடாந்திரத் தவணையாக ரூபாய் 30/- வீதம் ஏதாவது இணைந்த ஒரு காப்பீட்டத் திட்டத்தில் ஜேபியில் காப்பீட்டுத் தொகையுடன் அதிகமாக கட்டினால் ரூபாய் 5000/- பெறுவர். அதனால் ஒரு உறுப்பினர் ஜேபியு திட்டத்துடன் சேர்த்து ரூபாய் 130/- வீதம் கட்டினால் அவரது கணவரோ அல்லது மனைவியோ ரூபாய் 5000/- வரை பெறுகிறார்கள்.

மாதந்தோறும் வசூலிக்கப்படும் தவனைத் தொகையை சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு ரசீது வழங்கப்படுகிறது.

கூடுதல் பயன்கள்:

ஜேபிஒய் திட்டத்தில் இணைந்து உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு உதவித் தொகை வழங்குவதோடு தேர்ந்தெடுக்கப்பட்ட முறையிலும் சிக்ஸா சாய யோகனா திட்டம் முறையில் வழங்கப்படகிறது.

9,10,11&12 ஆம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு அதிகமாக இரண்டு அல்லது அதற்கு மேல் குழந்தைகள் இருந்தால் ஏதாவது ஒரு குழந்தைக்கு மூன்று மாதத்திற்கு ஒருமுறை ரூபாய் 100/- வீதம் வழங்கப்படும். இதற்காகத் தனிக் காப்பீட்டுத் தொகை கிடையாது.

எம.ஒ.யுடன் டான் அமைப்பு:

M/s.டான் அமைப்பு சிறந்த ஆலோசனைகளையும் செய்முறை உதவிகளையும் வழங்கி சிறு உதவிக் குழு நிகழ்ச்சியை விரிவடையச் செய்கிறது. M/s.டான் அமைப்பு செயல்பாட்டுத் திறனையும் கைத் தொழில் உதவிகளையும் வழங்குவதோடு பயிற்சி நிகழ்ச்சிகளையும் நிகழ்த்தியும் நிகழ்ச்சி பணியாளர்களை சந்திப்பதோடு, ரெப்கோ அமைப்போடு தொடர்புடைய மக்கள் தலைவர்களையும் சந்திக்கின்றனர்.

முகவரி:

ரெப்கோ அமைப்பின் சிறு தொழில் கடன்
(ஏற்பாடு: ரெப்கோ வங்கி - இந்திய அரசு நிறுவனம்)
“ரெப்கோ டவர்”, 33, தெற்கு உஸ்மான் வீதி,
டி.நகர், சென்னை - 600 017.
தொலைபேசி : +914428340715, 28342845
மொபைல்    : 094444 41460
மின் அஞ்சல் : rfmc@repcofoundation.com
இணைய தளம்: www.repcofoundation.com

ஆதாரம்    : http://www.repcofoundation.com

 

 

 

 
   

திருந்திய நெல் சாகுபடி
துல்லிய பண்ணையம்
நன்னெறி வேளாண்
முறைகள்

நன்னெறி ஆய்வக
முறைகள்

நன்னெறி மேலாண்மை
முறைகள்

   
   
   
   

அரசு திட்டங்கள் & சேவைகள்
நீர்வள,நிலவள திட்டம்
வட்டார வளர்ச்சி
வங்கி சேவை & கடனுதவி
பயிர் காப்பீடு
வேளாண் அறிவியல் நிலையம்
விவசாய தொழில்நுட்ப
மேலாண்மை முகாம்

கிசான் அழைப்பு மையம்(1551)
பல்லாண்டு மேம்பாட்டு
குறிக்கோள்

தன்னார்வ தொண்டு
நிறுவனங்கள் &
சுய உதவிக் குழுக்கள்

   
   
   

குறைந்த பட்ச ஆதார விலை
இடுபொருள் நிலவரம்
ஏற்றுமதி & இறக்குமதி
காப்புரிமை

   
   

சுற்றுச்சூழல் மாசுப்பாடு
இயற்கை சீற்ற மேலாண்மை
தகவல் & தொலைத்தொடர்பு
தொழில்நுட்பம்

முக்கிய வலைதளங்கள்

     

வல்லுனரை கேளுங்கள்