|| | | ||
 

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் & சுய உதவிக் குழுக்கள்

tamil english

வானிலை
மண் வளம்
நீர் வளம்
விதை
பண்ணை சார் தொழில்கள்
ஊட்டச்சத்து
அறுவடைக்குப்பின் சார்
தொழில் நுட்பம்

உயிரிய தொழில்நுட்பம்
உயிரி எரிபொருள்

வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கும் அரசு சாரா நிறுவனங்கள்

தான் (மனித செயல்பாடு மேம்பாட்டு நிறுவனம்)

மனித செயல்பாடு மேம்பாட்டு கழகம் அக்டோபர் 2, 1997 ஆம் ஆண்டு துவங்கப்பட்டதாகும். இந்திய அறக்கட்டளை சட்டத்தின்படி அறக்கட்டளையாக இணைக்கப்பட்டுள்ளது. அறக்கட்டளையின் நோக்கம் யாதெனில் இளம் ஆண்கள் மற்றும் பெண்களை ஊக்குவித்து கல்வி அறிவை வழங்குவதாகும். மேலும் மற்றும் பெண்களை ஊக்குவித்து கல்வி அறிவை வழங்குவதாகும். மேலும் ஊரக மேம்பாட்டில்

புதுமைகளை உருவாக்குவது மற்றும் நாட்டில் உள்ள வறுமையை ஒழிக்க முனைப்புடன் செயல்படுகின்றனர். இறுதியாக புதுமையான தொழில்நுட்பங்களைக் கொண்டு ஏழைகளின் வாழ்க்கை தரத்தை முன்னேற்ற பாடுபடுகின்றனர்.

தோற்றம் மற்றும் குறிக்கோள்கள்

புதுமையான முன்னேற்றங்களின் அடித்தளம்

நுண்நிதி, பாசனமுறை, தரிசு நில மேம்பாடு, பஞ்சாயத்துடன் இணைந்து செயல்படுவது ஆகியவற்றை பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது.

அறநிறுவனங்களை மேம்படுத்துதல்

ஏழைகளின் வாழ்க்கை தரத்தை முன்னேற்ற பெரிதும் பாடுபடுகிறது.

மனிதவள மேம்பாடு

இளைய தொழில் நெறிஞர்களின் கல்வி அறிவு, மனப்பாங்கு மற்றும் திறமைகளை ஊக்குவிக்க முனைந்து செயல்படுகிறது.

கொள்கைகளின் வழிகாட்டுதல்

  • மிகத்தரம் வாய்ந்த மனித வளத்தை அடித்தளத்தில் பணிக்கு அமர்த்தல்.
  • அரசு மற்றும் முக்கிய நிறுவனங்களின் கூட்டமைப்பு செயல்பாடுகளுக்கு வழிவகுத்தல்.
  • பொது மக்களை மேம்படுத்தும் நிறுவனங்களை ஊக்குவித்தல்
  • ஏழை மக்களின் தரத்தை முன்னேற்றி அவர்களின் வறுமை நிலையை ஒழித்தல்.

தேசிய மற்றும் உலக அளவில் திட்ட பங்களிப்பு

மனித செயல்பாடு மேம்பாட்டு அறநிறுவனம் தமிழ்நாடு கூட்டமைப்பு வேளாண் மேம்பாட்டுத் திட்ட நிகழ்ச்சியுடன் இணைந்து விவசாயிகள், தொழிலதிபர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கல்லூரி அங்கத்தவனுக்குள் ஆலோசனைகளை ஊக்குவித்தல், இவை திட்டக் கருத்தரங்குகள், பணிமனைக்கூட்டம் நடத்துவது பின்பு ஆராய்ச்சிக்களை மேற்கொண்டு ஆவணங்களை வெளியிடுவது மற்றும் மத்திய மற்றும் மாநில அரசின் திட்டங்களான நீர்வள மேம்பாடு, பாசன முறை மற்றும் ஊரக மேம்பாட்டு திட்டத்தில் பங்கு கொள்வதாகும்.

தமிழ்நாடு மட்டும் கர்நாடகா மாநிலங்களில் சிறு நீர்வள நிர்வாக செயற்குழு அமைக்கப்பட்டு விவசாயிகளின் நலனுக்காக நீர் மற்றும் பாசன முறைகளை பற்றிய திட்டங்களை வகுத்துள்ளனர்.

Silhouette of woman in water

களஞ்சியம் சமூக வங்கித்திட்டத்தின் கீழ் மனித செயல் மேம்பாட்டு அறநிறுவனம் சிறு நிதி திட்டத்தின் உறுப்பினராக பல தேசிய மற்றும் சர்வதேச மாநாட்டில் பங்கேற்று, ஏழைகளின் வறுமை மற்றும் இளம் பெண்களின் வாழ்க்கை தரத்தைப் பற்றி கூறுகின்றனர்.

மனித செயல் மேம்பாட்டு அறநிறுவனம் சர்வதேச மாற்று நிதி நிலைய பிணையத்தின் முக்கிய உறுப்பினர் ஆகும். இவை சிறு நிதியை பற்றி ஆராய்ச்சி மேற்கொள்வதில் ஆர்வம் காட்டுகிறது. மனித செயல் மேம்பாட்டுக் கழகத்தின் முக்கியப் கருப்பொருள் நிகழ்ச்சி யாதெனில் களஞ்சியம் மற்றும் வயலகம் ஆகும். மேலும் அவை ஏழைகளின் நலனுக்காக புதுமையான தொழில்நுட்பங்களை கண்டுபிடிப்பதில் முனைந்து செயல்படுகின்றன.

இத்தகைய புதுமைகள் - புதிய வாய்ப்புகள் மற்றும் சவால்களை மனித செயல் மேம்பாடு அறநிறுவனத்திற்கு ஏற்படுத்தித் தருகிறது.

டாட்டா - தான் நிறுவனம், ஏழைகளுக்கான தகவல் தொழில்நுட்பங்கள், மானாவாரி வேளாண்மை மற்றும் பஞ்சாயத்துடன் இணைந்து பணியாற்றுவது ஆகியவை தானின் முக்கிய செயல்பாடுகளாகும்.

களஞ்சியம் சமூக வங்கித் திட்டம்

களஞ்சியம் சமூக வங்கித் திட்டம் பெண்கள் மேம்பாடுகளை கருத்தில் கொண்டு பணியாற்றுகின்றன. மேலும் உள்ளூர் பெண்கள் நிதி நிறுவனங்கள் சொந்தமாக ஆரம்பித்து வறுமை மற்றும் பாலினக் கொடுமைகளை ஒழிக்க முனைந்து செயல்படுகின்றனர். 15-20 ஏழைப் பெண்கள் ஒருங்கிணைந்து களஞ்சியம் என்று இயங்கி வரும் சுய உதவிக்குழு சமூக நிதி நிறுவனத்தின் முதன்மைப் பிரிவு ஆகும்.

பஞ்சாயத்து மற்றும் வட்டாரம் அளவிலான தொகுதி மற்றும் கூட்டமைப்புகள் குடிநீர், ஆரோக்கியம் கல்வி, சுகாதாரமர், அடிப்படை வசதி பரிமாற்றம் போதை ஒழிப்பு, பாலினக் கொடுமைகள் இல்லாமை ஆகியவற்றில் களஞ்சியத் திட்டத்திற்கு உதவி செய்கின்றன. மேலும் வங்கி மற்றும் முக்கிய நிதி நிறுவனங்களின் தொடர்புகளை ஏற்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

மேலும் களஞ்சிய இயக்கம் என்ற இயக்கத்தைத் தொடங்கி பல புதுமையான நிகழ்ச்சிகளின் மூலம் பெண்களைக் கவருகின்றன.

வயலக தொட்டி வேளாண் மேம்பாட்டுத்திட்டம்

தொட்டி என்பது பல ஆண்டு காலமாக லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தப்படும் கிராமப் பொது சொத்துக்கள் ஆகும். தீபகற்ப இந்திய மக்களின் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுவது தொட்டிப் பாசன முறை ஆகும். இத்தகைய தொட்டிகளை ராஜாக்கள் மற்றும் உள்ளூர் தலைவர்கள் கட்டியதாகும். தெற்குப் பகுதியில் கிராம சபாக்கள் இயங்கி வருகின்றன. இவற்றின் முக்கியச் செயல்பாடுகள் யாதெனில் மூலதனங்களை நீடிக்கச் செய்து, மக்களின் வாழ்க்கை தரம் உயரும் என்று உத்திரவாதம் அளிக்கிறது.

ஊரணி

dhan


ஊரணி என்பது கிராமத்து மக்களின் நீர்த்தேவை பூர்த்தி செய்யவும் மற்றும் நிலத்தடி நீரைச் சேமிக்கவும் அமைத்த சிறு குளங்கள் ஆகும். ஊரணி புணர்வாழ்வு இயக்கத்தின் மூலம் விநியோகம் செய்யும் நீர் செலவு மிகவும் குறைவே ஆகும். இவற்றின் விளைவுகள் எவ்வித சுற்றுப்புற பாதிப்புமின்றி நீடித்த நன்மையைத் தருவதாகும். பிறகு நிர்வாகத்தில் ஏதேனும் மாற்றம் இருப்பின், அனைத்து பொது உடமைகள் மற்றும் தொட்டிகள் மேற்பார்வையற்று பாதுகாப்பின்றி இருக்கிறது. எனவே விவசாயிகளின் பிழைப்பு மற்றும் கிராமப் பொருளாதார வளர்ச்சி குன்றி விடும். வயலகம் தொட்டி வேளாண் மேலாண்மை திட்டம் தொட்டி முறை நிர்வாகம், முன்னேற்றம் மற்றும் மேலாண்மை நோக்கித் திட்டம் தொட்டி முறை நிர்வாகம், முன்னேற்றம் மற்றும் மேலாண்மை நோக்கி முளைத்து செயல்படுகிறது. உள்ளூர் தொட்டி நிர்வாகத்தை சரிவர பராமரித்தால் தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காணமுடியும. விவசாயப் பெருமக்களை ஒன்றுக் கூட்டி விழுதொடர் வட்டாரம் மற்றும் மாவட்ட அளவில் முடிவு எடுக்கப்படும்.

டாட்டா தான் நிறுவனங்கள்

டாட்டா தான் நிறுவனங்களின் முக்கிய நோக்கம் யாதெனில் முன்னேற்ற மேலாண்மை கல்வி, பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையமாக திகழ வேண்டும் என்பதாகும். இளம் பெண் மற்றும் ஆண்களை பல்வேறு துறைகளில் சிறந்தவர்களாக உருவாக்கப் பெரிதும் பாடுபடுகின்றனர். டாட்டா தான் நிறுவனம் முன்னேற்ற மேலாண்மையின் கீழ் இரண்டு ஆண்டு முதுநிலை பட்டப்படிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. மேலும் குறுகிய கால முன்னேற்ற மேலாண்மை திட்டத்தை அரசு சாரா அமைப்புகள் கல்லூரி அங்கத்தவர்கள் ஆராய்ச்சியாளர்கள், அரசுத் துறை நிறுவனங்கள் மற்றும் பல ஆகியவற்றிற்கு அளிக்க உள்ளது.

மானாவாரி பண்ணையம் அல்லது சாகுபடி

மானாவாரி வேளாண்மை இந்தியப் பொருளாதாரத்தை முன்னேற்ற முக்கியப் பங்கு வகிக்கிறது. மானாவாரி வேளாண்மை சுமார் 177 மாவட்டங்களில் 68 சதவிகித சாகுபடி பரப்புகளை, உள்ளடக்கியுள்ளது. மழையின் சராசரி அளவு மாறிக்கொண்டே இருப்பதால், மானாவாரி நிலத்தில் உற்பத்தித் திறன் குறைந்து சிறு மற்றும் குறு விவசாயிகளின் வாழ்க்கையை திசை மாற்றியுள்ளது. மானாவாரிச் சாகுபடியின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு தான் நிறுவனம், மானாவாரி ஆய்வுத் திட்டம் ஒன்றை பின்வரும் குறிக்கோள்களோடு துவங்கியுள்ளனர்.

மானாவாரிச் சாகுபடியில் செய்யும் இடத்தேர்வு மற்றும் குறிப்பான காரணங்களை அறிதல்.

மானாவாரிச் சாகுபடியின் மொத்த உற்பத்தித் திறனை மேம்படுத்துவது இத்திட்டம் அக்டோபர் 2, 2002 ஆம் ஆண்டு தான் நிறுவன துவக்க விழா நாளில் தொடங்கப்பட்டது. முன்னோடித்திட்டம் நடைமுறைப்படுத்துவது ஆரம்பக் கட்டத்தில் உள்ளது.

ஏழை அல்லது வறுமை மக்களுக்கான தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பங்கள்

தொழில்நுட்பங்கள் கருவிகளாக செயல்பட்டு பல தடைகளை தகர்த்து, பல்வேறு உலகத் தகவல்களை சேகரிப்பதன் பொருட்டு நிறுவனம் மற்றும் தனி நபரின் ஆற்றலை மேம்படுத்துகிறது.

தான் நிறுவனம் ஏழைகள் அல்லது வறுமை மக்களின் நலன்களுக்காக தகவல் தொழில்நுட்பங்களை சில குறிக்கோள்களுடன் தொடங்கி உள்ளது.  அவை பின்வருவன.

  • ஆராய்ச்சி மற்றும் முன்னோடி செயல்பாடு திட்டங்களின் மூலம் தகவல் தொழில்நுட்பங்களை ஏழை மக்களும் பயன்படுத்த திட்டமிடுதல்.
  • கிராமப் பள்ளியில் ஆராய்ச்சி மற்றும் கல்லூரி நிலையங்கள் ஒருங்கிணைந்து மின் ஆட்சி மற்றும் கல்வியைத் துவக்குதல்.
  • இணையதள தடைகளை கிராமப்புறம் மற்றும் நகரச் சேரி பகுதிகளில் அமைத்து, கணினி கல்வி, மின்னஞ்சல், மின் தபால் வேளாண் விற்பனை நுண்ணறிவு ஆகியவற்றை அளித்தல்.
  • மேலும் இத்திட்டத்தில் களஞ்சியம் மற்றும் வயலக உறுப்பினர்களுக்கு கணினி கொண்ட முதியவர்கள் கல்வி மையம் மற்றும் உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு கணினி பயிற்சி மையத்தை அமைத்துள்ளனர்.

பஞ்சாயத்துடன் பணிபுரிவது

இந்தியாவில் கிராமப்புற பஞ்சாயத்து நிலையங்களின் வரலாற்றை பற்றி அறிய 100 வருடத்திற்கு முன் செல்லவேண்டும். சுதந்திரத்திற்கு முன் பஞ்சாயத்து முறைகள் ஊதாசீனப்படுத்தப்பட்டது. தான் நிறுவனம் கிராமப் பஞ்சாயத்து முறையின் முக்கியத்துவத்தை அறிந்து அவற்றை நடைமுறைப்படுத்தி ஏழை மக்கள் மற்றும் மிகவும் நலிந்தவர்களை முன்னேற்றினர்.

மக்களாட்சி பஞ்சாயத்து முறையை முன்னோடித்திட்டமாக பின்வரும் குறிக்கோள்களுடன் தொடங்கியுள்ளனர்.

  • கிராமப்புற நிலையங்களை ஊக்குவித்தல் மற்றும் வலிமைப்படுத்துதல்.
  • பஞ்சாயத்து நிலையங்களின் நீடித்த செயல்பாட்டிற்கு தேவையான மூலதனங்களை மாநில உதவியின்றி சேகரித்தல்.
  • நடைமுறையில் உள்ள மரபுவழி முறைகளை பஞ்சாயத்துக்களுடன் இணைத்து மக்களின் பங்களிப்பை மேம்படுத்தி ஒற்றுமையை பேணுவார்.

ஒருங்கிணைப்பு மையங்கள்

தான் நிறுவனம், ஏழைகளின் நல்வாழ்வுக்காக பல புதுமைகளை கண்டுபிடிப்பதில் முனைந்து செயல்பட்டு வருகிறது. தான் நிறுவனத்தின் முக்கிய இரண்டு கருப்பொருளான டாட்டா தான் நிறுவனம் மற்றும் ஏழைகளுக்கான தகவல் தொழில்நுட்பத் திட்டம் முன்னோடி நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு முன்னேறி உள்ளது. மானாவாரி வேளாண்மை மற்றும் பஞ்சாயத்துடன் இணைந்து பணிபுரிவது ஆகிய இரண்டு புதிய திட்டங்கள் முன்னோடித் திட்டமாக தொடங்கியுள்ளது. மைய அலுவலகத்தின் பலவித செயல்கூறுகள் மற்றும் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பதாகும். இவற்றுள் முக்கிய செயல்கூறுகள் யாதெனில் மனிதவள மேம்பாடு மூலதனங்கள திரட்டுதல், உத்திகளுடன் திட்டமிடல், திட்ட ஆலோசனை வழங்குதல், உடன்பாடு ஆதரவு, புதிய திட்டங்களை ஊக்குவித்தல் ஆகும்.
மூலதனம் : http://www.dhan.org/

நிர்டு (NERD)

மரபில்லா ஆற்றல் மற்றும் ஊரக மேம்பாடு, சங்கம் 1984 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு, சங்க பதிவுச் சட்டம் மற்றும் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டதாகும். சிறு பெண்கள் குழுவாக அமைத்து ஒருங்கிணைந்த மேம்பாட்டு திட்டத்தை தேசிய மேம்பாடு உதவியைக் கொண்டு தொடங்கி உள்ளனர்.

மரபில்லா ஆற்றல் மற்றும் ஊரக மேம்பாடு சங்கம் சுய உதவிக்குழுக்கள் அமைப்பதன் மூலம் பெண்களை நல்ல நிலைக்கு மேம்படுத்துதல் திரும்ப பெறக்கூடிய ஆற்றல் திட்டங்களான சாண எரிவாயு திட்டம், சூரிய ஆற்றல் திட்டம், புகையில்லா சுல்ஹாதிட்டம், தரிசு மேம்பாடு மற்றும் நீர் மேலாண்மை மண்புழு மட்கு உரம் தயாரித்தல் மற்றும் அங்கக பண்ணைத் திட்டங்களை ஊக்குவித்தல்.

சூரிய ஒளி திட்டம்

சுமார் 260 சூரிய ஒளி விளக்கு மற்றும் 4 விற்பனை மற்றும் சேவை மையங்களை நிறுவியுள்ளனர்.

மலக்கழிவு மற்றும் சாணஎரிவாயு திட்டம்

சமுதாய கழிவறையில் பராமரிப்பு மிக முக்கியப் பிரச்சனை வாய்ந்ததாக கருதப்படுகிறது. சுய உதவிக்குழு பெண்கள் தற்பொழுது கழிப்பறைகளை சுத்தம் செய்து சுகாதாரமாக பராமரிக்கின்றன. ஆயினும் இக்குழுக்கள் மாதாந்திர மின்சார மற்றும் நீர் செலவுத் தொகையை கட்டுவது மிகவும் சிரமமாக இருப்பதாகக் கூறுகின்றனர். மேலும் கழிவு தொட்டி மலக்கழிவுகளினால் நிரம்பிக் கொண்டிருப்பதால், அப்புறப்படுத்திக் கொண்டு இருக்கவேண்டும் என்றும் கூறினர். இத்தகைய பிரச்சனைகளை தீர்வு காண்பதற்கு, ஆற்றல் ஊரக மேம்பாட்டுத் துறை மலக்கழிவு மற்றும் சாண எரிவாயு திட்டத்தை தொடங்கியுள்ளது. சுமார் 12 மாவட்டங்கள் அடங்கிய தமிழ்நாட்டில் சாண எரிவாயு அமைத்து, சுய உதவிகள் சந்திக்கும் மின்சாரம் மற்றும் நீர்ச்செலவுகளை ஏற்றுக் கொள்கிறது.

சூரிய அடுப்பு

இவை சுற்றுப்புறத்திற்கு உகந்தவையாகும். இயற்கையான சூரிய ஒளி ஆற்றலைக் கொண்டு உருவாக்கப்பட்டதாகும். சுமார் 150 அடுப்புகளை இத்திட்டம் அமைந்துள்ளது.

சாண எரிவாயு

சாண எரிவாயு என்பது ஆற்றல் மிகுந்த சமையல் எரிபொருளாகும். இயற்கை எரிபொருளான விறகு வர்த்தக ரீதியான எல்பிஜி எரிபொருள் காட்டிலும், சாண எரிவாயு ஆற்றல் மிக்க மற்றும் பாதுகாப்பானது ஆகும்.

மேலும் கிராமப்புற மக்களுக்கு, சாண எரிவாறு ஓர்  மிக்பெரிய வரப்பிரசாதமாகும். கடந்த 23 வருடங்களில் சுமார் 10,500 சாண எரிவாயு அடுப்புக்களை அமைந்துள்ளது.
புகையில்லா சுல்ஹா சமையல் அடுப்புத் திட்டம்

சுல்ஹா சமையல் அடுப்புத் திட்டம் மேம்படுத்தப்பட்ட சமையல் அடுப்புத் திட்டமாகும். ஏனெனில் இவை புகையில்லா குறைந்த அளவு எரிபொருள்களை எடுத்துக் கொள்கிறது. இத்திட்டம் சுமார் 4550 புகையில்லா சுல்ஹா அடுப்புகளை ஏழை விவசாயிகளுக்கு வழங்கியுள்ளது.

கழிவு மேம்பாட்டுத் திட்டம்

நகர மற்றும் சிறு கிராமங்களில் திடக் கழிவுகள அப்புறப்படுத்துவது மிகவும் பிரச்சனைக்கு உரியதாகும். பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதினால், சுற்றுப்புறம் பாதிக்கப்படுவதோடு மனிதனுக்கு பலவித கேடுகள் விளைகின்றன. மக்களுக்கு கழிவுப் பொருட்களை எவ்வாறு அப்புறப்படுத்தவேண்டும் என்ற விழிப்புணர்வுகளை உருவாக்க வேண்டும். குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டுமே போட வேண்டும் என்ற அறிவுறுத்தவேண்டும். இவற்றைப் பற்றி அறிய வடவள்ளியில் மாதிரித் திடல்களை ஊரக மேம்பாட்டு அமைத்துள்ளனர். சுமார் 60 ஏழைப் பெண்களை வடவள்ளியில் தேர்வு செய்து 4 சுய உதவிக்குழுக்களாக அமைத்துள்ளனர். அவர்கள் கழிவுப் பொருட்களை சேகரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். நகரப் பஞ்சாயத்து அதிகாரிகள் தேர்வு செய்த சுய உதவிக் குழுப் பெண்கள் அனைவருக்கும் கழிவுப் பொருட்கள் சேகரிப்பதற்காக கூலி வழங்குகின்றனர். அனைத்து கழிவுப்பொருட்களையும் மதிப்பு வாய்ந்த இயற்கை மட்கு உரமாக மாற்ற மண்புழு மட்கு உரப் பிரிவுகளை அமைக்க முடிவெடுத்துள்ளனர். இத்தகைய உரங்களை வேலையில்லாத இளைஞர்கள் விற்பனை செய்வதன் மூலம் இவ்வமைப்பு நீடிப்பதற்கு முக்கியக் காரணமாகிறது. புதுமையான அறிவியல் திடக்கழிவு மேம்பாடுகளை டயாட்டோ நிறுவனம் ஆதரவு அளிக்கிறது.

மண்புழு மட்கு உரம் தயாரித்தல்

வீடு மற்றும் விவசாய கழிவுப் பொருட்களை மதிப்பூட்டப்பட்ட இயற்கை உரமாக மாற்ற, எளிமையான மண்புழு மட்கு உரம் தயாரித்தல் அமைப்பை வீடு. பண்ணை மற்றும் பள்ளியில் அமைத்துள்ளனர். இத்தகைய உரங்கள இராசயன உரத்திற்கு பதிலாக உபயோகப்படுத்தலாம். மேலும் நீடித்த இயற்கை வேளாண்மைக்கு வித்திடுகிறது.

பழங்குடியினருக்கு வாழ்வு ஒளி மிளிர சாண எரிவாயுத்திட்டம்

தளிங்கி என்ற பழங்குடியினரின் வாழ்வை மிளிரச் செய்ய சாண எரிவாயு சமையல் எரிபொருட்களாக அறிமுகப்படுத்த  தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. தளிங்கி அமராவதி காட்டுப் பிரிவு உடுமலைப் பேட்டை, கோயம்புத்தூர், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ளது. தளிங்கி, அமராவதி காட்டின் உட்பகுதியில் சுமார் 6 கி.மீ தொலைவில் அமைந்துள்ளதால், போக்குவரத்து வசதி இல்லை. வருங்காலத்தில் எந்தவிதத் திட்டமும் மேற்கொள்ள இயலாது. விறகுகளை வெட்டி அவற்றைச் சமையல் எரிபொருளாக உபயோகிக்கின்றன. மின்சார வசதி இல்லாததால், மண்ணெண்ணெய் அதற்குப் பதிலாக உபயோகிக்கின்றன.

நீர்ப்பிடிப்பு மேம்பாட்டுத் திட்டம்

சில வருடங்களாக, இயற்கை வளமான நிலங்கள், நீர், தாவரங்களை மேம்படுத்துவது சமூகத்திடையே விழிப்புணர்வு வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிர்டு மேம்பாட்டுத் துறை கோயம்புத்தூர், அன்னூர் வட்டாரத்தில் வடவள்ளி நீர்ப்பிடிப்புத் திட்டம் மற்றும் 1750 எக்டர் நிலங்கள். கப்பார்ட் ஊரக மேம்பாட்டுத் துறை, இந்திய அரசு, புதுடெல்லி நிதி உதவியுடன் மேம்படுத்தப்படுகிறது.

புதுப்பித்த ஆற்றல் மற்றும் அவை சம்மந்தப்பட்ட திட்டங்களில் உள்ள விவசாயிகள் மற்றும் சுய உதவிக் குழு பெண்களுக்கு பின்வரும் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

  1. உணவு பதப்படுத்துதல்
  2. சாண எரிவாயு அமைப்பு
  3. மண்புழு மட்கு உரம் தயாரித்தல்
  4. சுய உதவிக்குழு பயிற்சி
  5. சுய உதவிக்குழு உறுப்பினர் உரிமைக்கான பயிற்சி
  6. நீர் மேம்பாடு பயிற்சி
  7. உயிர் உரம் தயாரித்தல்
  8. தொழிலதிபர் உரிமைக்கான பயிற்சி
  9. கைவினைப் பொருட்கள் தயாரிப்புக்கான பயிற்சி
  10. தையல் பயிற்சி
  11. கணினி பயிற்சி
  12. பேக்கரிப் பொருட்கள் தயாரிப்புக்கான பயிற்சி
  13. கால்நடை மற்றும் செம்மறி ஆடு வளர்த்தல்

மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
நிர்டு சொசைட்டி
249, சித்தி வினாயகா காலனி
வடவள்ளி
கோயம்புத்தூர் 641 041
தமிழ்நாடு மாநிலம்
இந்தியா
மின்னஞ்சல் : nerdsocietycoimbatore@hotmail.com
மூலதனம் : http://www.nerdsociety.in/

மைரடா

மைரடா அமைப்பு தனது முக்கியத் திட்டங்களினால் கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள அனைத்து மக்களுக்கு ஓர் அரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது. மேலும், 6 மாநிலங்களுக்கும் ஆதரவு அளிக்கிறது. கம்போடியா, பர்மா மற்றும் பங்காளதேஷ் போன்ற வெளிநாடுகளில் சுய உதவிக்குழு உறவு முறைகளை ஊக்குவிக்கின்றன. இவற்றின் முக்கியக் குறிக்கோள் யாதெனில் சுய உதவிக்குழு அமைப்பு மற்றும் இதர அரசு சாரா நிறுவனங்களுடன் கூட்டு உரிமையைக் கொண்டு ஏழை மக்களுக்கு உதவி செய்வதே ஆகும்.

நோக்கம்

  • ஏழை மக்களின் வாழ்வு முன்னேற புதுமையான தொழில்நுட்பங்களைக் கொண்டு, ஆதரவு சம் அந்தஸ்து ஆகியவற்றைக் கொடுப்பது.
  • ஏழை குடும்பங்களின் வாழ்வு மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகளை பாதுகாப்பது.
  • முதன்மை ஆரோக்கிய முறை மற்றும் எப்.ஐ.வி எய்ட்ஸ் மற்றும் இதர நோய் கட்டுப்பாடு முறையைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவது.

எனவே மைராடா மேம்பாட்டு இலக்குகளை அடைவதற்கு செயல்படுகிறது.

இலக்கு 1       :           வறுமை மற்றும் பட்டினியை ஒழிப்பது
இலக்கு 2       :           முதன்மை கல்வி  வழங்குவது
இலக்கு 3       :           பாலினத்தின் உரிமை மற்றும் பெண்களை முன்னேற்றுவது
இலக்கு 4-5    :           குழந்தை இறப்புகளை குறைப்பு மற்றும் தாய்மை
ஆரோக்கியத்தை பேணுவது.
இலக்கு 6       :           எச்.ஐ.வி எய்ட்ஸ், டூபர்குளோசிஸ், மலேரியா மற்றும் இதர 
நோய்களை தடுப்பது.
இலக்கு 7       :           சுற்றுப்புறத் தூய்மையை மேம்படுத்துவது

சர்வதேச கூட்டு மேம்பாடு

முக்கிய செயல்கூறுகள் யாதெனில்

  • மலைப்பகுதி மேம்பாட்டுத்திட்டம்
  • நீர்ப்பிடிப்பு மேம்பாடு
  • வேளாண் விரிவாக்கம்
  • ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம்
  • உள்ளூர் நிலையங்கள்
  • அறிவாலயம் பயிற்சி மையங்கள்

தமிழ்நாட்டில் மைராடாவின் பணிகள் ஈரோடு தாளவாடி மற்றும் ஜெர்மலம், நீலகிரியில் உள்ள காட்டேரி மற்றும் தர்மபுரியில் உள்ள ஒசூர் மாவட்டங்களில் சிறப்பாக நடைபெறுகிறது.

மேலும் அவரது பணிகளை அறிந்து கொள்ள பின்வரும் இணையதளத்தை தொடர்பு கொள்ளலாம்.
http://www.myrada.org/projects.htm

மேலும் விவரங்களுக்கு
மைராடா, தலைமை அலுவலர்
எண் 2, சேவை சாலை, டோம்சூர் லே அவுட்
பெங்களூர் 560 071, கர்நாடகா, இந்தியா
தொலைபேசி
91-0-80-25352028
25353166, 25354457
மின்னஞ்சல் : myrada@vsnl.com
இணையதளம் : http://www.myrada.org/

தேசிய வேளாண் நிறுவனம்

http://www.nationalagro.org/index.html

தேசிய வேளாண் நிறுவனம் பொது நற்பணி அறக்கட்டளையாக மார்ச் 2000 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. வட தமிழ்நாட்டு பகுதியில் 18,500 குடும்பங்களை தேர்வு செய்து சுமார் 60 கிராமங்களில் இரண்டுப் பிரிவுகளாக இத்திட்டம் கடைபிடிக்கப்பட்டது. இவற்றின் முக்கியக் குறிக்கோள் யாதெனில் வேளாண், கால்நடை மற்றும் சமூக மேம்பாட்டினால் விவசாயிகளின் வாழ்க்கை தரம் உயர்வடையச் செய்வதாகும்.

ஊரக மேம்பாடு குறித்த தேசிய வேளாண் நிறுவனத் திட்டங்கள்

  • வேளாண்மை மேம்பாட்டிற்கான தொழில்நுட்ப மாற்றம்
  • மண் சோதனையின் மூலம் தொழில்நுட்ப ஆதரவு தருவது மற்றும் பயிர்சத்து மற்றும் பயிர் இரகங்களைத் தேர்வு செய்வது பற்றிய ஆலோசனை வழங்குவது.
  • நீர் மற்றும் பண்ணை மேலாண்மை
  • மாதிரிப் பண்ணை அமைத்தல்
  • விவசாயப் பயிற்சி மையம் அமைத்தல்
  • கால்நடை மேம்பாடு மற்றும் கால்நடை வளர்ப்புப் பற்றி ஆலோசனை வழங்குதல்.
  • சமூக செயல்பாடுகளை ஊக்குவிப்பது எ.கா கல்வி சுய உதவிக் குழுக்களுக்கு வருமானத்தை பெருக்க வழிவகுப்பது மற்றும் ஊரக ஆரோக்கிய வழிப்புணர்வு முகாமைப் போன்ற பயிற்சிகளைத் தருதல்.

கிராமப் பிரிவுகள்

சன்னாம்பேட் பிரிவு - சுன்னாம்பேட், புதுப்பட்டு, புதுக்குடி சின்ன களக்கடி புதுப்பேட்டை, இல்லடு, புதுத்தோட்டம், கப்பிவாக்கம், தங்கல், கரும்பாக்கம் தேன் பாக்கம், கவனூர், தோட்டாச்சேரி கல்பட்டு டிகேகுளம் கொளத்தூர், விகே அகரம், கொட்டைக்காடு, வெள்ளூர், மனப்பாக்கம், வேம்பனூர், ஒத்தி விளக்கம், வேணாங்குபட்டு, பலாம்பாக்கம், வில்லிபாக்கம், குமுளி, பிள்ளன்குப்பம், சித்தூர், மாம்பாக்கம் அகரம், அண்டர்குப்பம், அரசூர், மாம்பட்டு, புத்திரன்கோட்டை, பணையடிவாக்கம்.

கும்மிடிப்பூண்டி பிரிவு - அக்ரஹாரம், மணலூர், அமரம்பேடு எம்என் கண்டிகை, பொம்மாஜிகுளம் பஞ்சலை, புதூர், பெரியபுள்ளியூர், பத்திரிவேடு, பூவளம்பேடு, சின்ன பொம்மாஜிகுளம், சிறுவடா, கண்ணன் பேட்டை, தானிபூண்டி, கிமலூர், தட்டையான் கண்டிகை, கொள்ளனூர், தேர்வாய், மதரப்பாக்கம், வன்னிமாலி, பொந்தவாக்கம், நிமலூர் மற்றும் கொண்டமணலூர்.

வேளாண் சார்ந்த செயல்பாடுகள்

  • பயிர் உற்பத்தி மேம்பாட்டிற்கான வேளாண் தொழில்நுட்ப மாற்றம்
  • மண் பரிசோதனை மற்றும் முக்கியப்பயிர் சத்துக்கான பரிந்துரை
  • நீர் மேம்பாடு
  • பூச்சி மற்றும் நோய்க் கட்டுப்பாடு
  • பயிற்சி நிகழ்ச்சிகள் - வேளாண் சார்ந்த தொழில்நுட்பம் / பண்ணைத் தொழில்நுடபங்கள்
  • விற்பனை ஆதரவு எ.கா பருத்திப் பயிரைக்கூடுதல் விலைக்கு விற்பது

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

தேசிய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மேம்பாட்டு மையம்
அண்ணாப் பல்கலைக்கழகம்
தரமணி வளாகம்
சென்னை 600 113
தமிழ்நாடு, இந்தியா
தொலைப்பேசி
+9144-22542803
9144-22542598
மின்னஞ்சல் : nationalagro@gmail.com
இணையதளம்: www.nationalagro.org
சேவா (நீடித்த வேளாண்மை மற்றும் சுற்றுப்புற தொண்டு நிறுவனம்)

சேவா என்பது ஓர் அரசு சாரா நிறுவனமாகும். இந்த நிறுவனம் தமிழ்நாடு சங்கப் பதிவுச் சட்டத்தின் கீழ் (பதிவு எண் 136192) கீழ்ப் பதிவு செய்யப்பட்ட நிறுவனமாகும். சேவாவின் முக்கியச் செயல்பாடுகள் யாதெனில், சுய உதவிக் குழுக்களை (பெண்கள், விவசாயிகள்,கால்நடை வளர்ப்பாளர்கள் மற்றும் புதுமையாளர்கள்) ஊக்குவிப்பது மேலும் உள் சேவா நிறுவனம் (தமிழகத்தில் உள்ள உள்ளூர் கால்நடை வகையினங்களின் சேகரிப்பு மற்றும் புதுமை கண்டுபிடித்தலின் முறைகளைப் பரவச் செய்தல் மற்றும் ஒருங்கிணைத்தலாகும்.

பாரம்பரிய அறிவு, இயற்கை செயல்கூறுகள், வேளாண் புதுமைகள், கால்நடை வளர்ப்பு மற்றும் இயற்கை வள மேம்பாடு பற்றிய தகவல்களை தருவதற்காக தமிழில் நம் வழி வேளாண்மை என்ற செய்தி மலரை வெளியிட்டுள்ளது.

மேலும் தேனீ வளர்ப்பு நிறுவனத்தின் உறுப்பினராகப் பல நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனத்துடன் கூட்டு வைத்து அவற்றின் மூலம் பல அறிய தொழில்நுட்பத் தகவல்களைப் பெறுகிறது.

மேலும் சேவா என்பது லைப் நெட்வொர்க்கின் முக்கிய உறுப்பினராக இருக்கிறது.

முக்கியச் செயல்பாடுகள்

  • கால்நடை வகையினப் பாதுகாப்பு
  • புதுமையான தொழில்நுட்பங்கள்
  • சுய உதவிக்குழு
  • சுனாமி புணர்வாழ்வு பணிகள்

தொடர்புக்கு

சேவா
எண்.45, டி.பி.எம் நகர்
விராத்திபட்டு, மதுரை 625 010
தமிழ்நாடு, இந்தியா
தொலைபேசி : 91-452-2380082
மின்னஞ்சல் : vivekseva@dataone.in
http://www.sevango.in/contact.php

உள்ளூர் அளவிலான நிறுவனங்கள்:
அறிவாலயம் பயிற்சி மையம்:
தமிழ்நாட்டில் மைராடா ஈரோட்டில் தளவாடி மற்றும் சர்மலம், நீலகிரியில் கட்டோரி மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் ஒசூர் பகுதிகளில் செயல்படுகிறது.
கீழ்க்கண்ட இணைப்பின் வழியாக மைராலின் பணிகளை காணமுடியும்:
http://www.myrada.org/projects.html

அதிக விபரங்களுக்கு தொடர்புகொள்ள:

எம் ஒய் ஆர் ஏடி ஏ - தலைமை அலுவலகம்
என்.2 சர்வீஸ் ரோடு, டும்லூர் லேஅவுட்
பெங்களூர் - 560071, கர்நாடகா - இந்தியா
தொலைபேசி எண்: 91 - (0)80-25352028
-25353166, 25354457

மின்னஞ்சல்: myrada@vsnl.com
இணையதளம்: http://www.myrada.org/
தேசிய விவசாய அறக்கட்டளை: http://www.nationalagro.org/index.html

 

 
   

திருந்திய நெல் சாகுபடி
துல்லிய பண்ணையம்
நன்னெறி வேளாண்
முறைகள்

நன்னெறி ஆய்வக
முறைகள்

நன்னெறி மேலாண்மை
முறைகள்

   
   
   
   

அரசு திட்டங்கள் & சேவைகள்
நீர்வள,நிலவள திட்டம்
வட்டார வளர்ச்சி
வங்கி சேவை & கடனுதவி
பயிர் காப்பீடு
வேளாண் அறிவியல் நிலையம்
விவசாய தொழில்நுட்ப
மேலாண்மை முகாம்

கிசான் அழைப்பு மையம்(1551)
பல்லாண்டு மேம்பாட்டு
குறிக்கோள்

தன்னார்வ தொண்டு
நிறுவனங்கள் &
சுய உதவிக் குழுக்கள்

   
   
   

குறைந்த பட்ச ஆதார விலை
இடுபொருள் நிலவரம்
ஏற்றுமதி & இறக்குமதி
காப்புரிமை

   
   

சுற்றுச்சூழல் மாசுப்பாடு
இயற்கை சீற்ற மேலாண்மை
தகவல் & தொலைத்தொடர்பு
தொழில்நுட்பம்

முக்கிய வலைதளங்கள்

     

வல்லுனரை கேளுங்கள்