|
கர்நாடகா சமூகம் சார்ந்த நீர் மேவாண்மை திட்டத்தில் பங்களிப்பு தொழில்நுட்ப வளர்ச்சியின் அனுபவம்:
பெங்களூர் விவசாய அறிவியல் பல்கலைக்கழ ஜலா சம்வார்த்தன யோஜன சங்கமுடன் இணைந்து ஒப்பந்தத்தின் மூலம் மேற்கொண்ட திட்டம் இது ஒரு கர்நாடகா அரசின் முன்னோடி அமைப்பாகும். இது கர்நாடகாவின் மையத்தில் மற்றும் கிழக்கில் உள்ள வரற்சி பகுதியில் உள்ள 1500 ஏக்கரில் ஆலோசனை சேவைகளை மேற்கொண்டு உற்பத்தியை அதிகரித்தது இது உலகவங்கியின் உதவியின் கீழ் இயங்கும் கர்நாடக சமூகம் சார்ந்த குழு மேலாண்மை திட்டம் ஆகும். இந்த ஆலோசனை சேவை ஒப்பந்தத்தை தவிர இந்த பல்கலைக்கழகம் பங்களிப்பு தொழில்நுட்ப வளர்ச்சித் திட்டம் உற்பட பல்வேறு விவசாய வளர்ச்சி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மூன்று வருடங்களில் காலம் (2003 லிருந்து 2005 வரை) இந்த பல்கலைக்கலகம் 174 கிராமங்களில் பங்களிப்பு தொழில் வளர்ச்சி பணிகளை அறிமுகப்படுத்தியுள்ளது நெல் பயிர் (77), சூரிய காந்தி (45), சோளம் (15), நிலக்கடலை (15), ராகி (3), தோட்டக்கலை பயிர்கள் (19) போன்றவற்றில் உள்ள பிரச்சனைகளை கண்டறிவதற்காக செயல்படுத்தப்பட்டது. இந்த பங்களிப்பு தொழில்நுட்ப வளர்ச்சி பணிகளில் குளத்துப் பாசன பகுதி விவசாயிகள் சமூக உதவி குழுவின் அலுவலக பிரதிநிதிகள் (என்.ஜி.ஓ), விவசாய துறை மற்றும் பல்கலைக்கழகம் போன்றவை பங்கு கொண்டன.
இதில் உள்ளடங்கிய முக்கிய பணிகள்
அ) தரப்படுத்தப்பட்ட சாகுபடி முறைகள், களை மேலாண்மை சாகுபடி தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம், சராசரியான நெல் சாகுபடிக்கு தேவையான நீர் பாசன அட்டவனை
ஆ) சூரியகாந்தி, சோளம் மற்றும் ராகியில் குருங்கிணைந்த பயிர் மேலாண்மை முறைகள்
இ) நிலக்கடலை மற்றும் தோட்டக்கலைப் பயிர்களில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நீர் மேலாண்மை முறைகள்
குறிப்பிடத் தகுந்த முடிவுகள் பங்களிப்பு தொழில்நுட்ப வளர்ச்சியில் பெறப்பட்டது. அவை சராசரியான சூழ்நிலையில் தரப்படுத்தப்பட்ட சாகுபடி முறைகள். இந்த திட்டம் 2003 - 04 லில் முதலில் 26 பகுதிகளில் 10 ஹெக்டரில் முதல் நிலையாக மேற்கொள்ளப்பட்டது. பின்னர் 600 ஹெக்டரில் 2005 - 06 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டது. மேலும் சோளம், சூரியகாந்தி, நிலக்கடலை, மற்றும் தோட்டக்கலை பயிர்களில் சில குறிப்பிட தகுந்த முடிவுகள் பெறப்பட்டது. கிராம அளவிலான சோதனை பணிகளில் விவசாய பணியாளர்கள் மட்டுமல்லாது திட்ட அலுவலர்களும் உற்சாகத்துடன் ஈடுபட்டனர். இது களப் பணியாளர்களுக்கு தன்னம்பிக்கையை உருவாக்கி தொழில்நுட்பங்களை கண்டறிதல் / மாற்றியமைத்தல் மற்றும் பரவச் செய்தல் போன்றவற்றிற்கு உதவியது. இந்த முக்கியமான அணுகுமுறையை விவசாய வளர்ச்சி நடவடிக்கைகளுக்கு கையாள உதவியதற்காக பெருமைப்பட வேண்டும்.
முடிவுரை
இந்த பங்களிப்பு தொழில்நுட்ப வளர்ச்சியானது முக்கிய பிரச்சனைகளை கண்டறிதல், பிரச்சனைகளை தீர்க்க மாற்று வழிவகைகளை கண்டறிதல் மாற்று காரணிகளை சோதித்து பார்த்தல், தகுந்த யுக்திகளை உருவாக்குதல் மற்றும் பிரச்சனைகளை தீர்க்க நடைமுறைப்படுத்துதல் போன்றவற்றிற்கு உதவுகிறது. இது விவசாயிகள் விரிவாக்க அலுவலர்கள் மற்றும் விஞ்ஞானிகள் போன்றவர்களின் ஒருங்கிணைந்த முயற்சியினால் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் இந்த திட்டம் ஆராய்ச்சி அமைப்புகளின் பிரச்சனைகளை கண்டறிதல், சோதனைகளை மேற்கொள்ளுதல் மற்றும் விரிவாக்க அமைப்பின் மூலம் விவசாயிகளுக்கு முடிவுகளை வெளியிடுதல் போன்ற கால விரயங்களை தவிர்க்கிறது. இந்த தொழில்நுட்ப வளர்ச்சி பணிகளின் பங்கு கொண்டுள்ள விவசாயிகள் மற்றும் விரிவாக்க பணியாளர்கள் போன்றவர்களுக்கு மிகவும் ஏற்புடைய ஒன்றாக உள்ளது. இருந்தாலும் பங்களிப்பு தொழில்நுட்ப வளர்ச்சியானது மையங்கள் சார்ந்த ஆராய்ச்சிகளுக்கும் அல்லது விரிவாக்க பணியாளர்கள் கையாளுகிற பண்ணை சோதனைகளுக்கும் ஏற்புடையது அல்ல.
இது ஒரு முழுமையான பணியாகும். இது விவசாய அறிவியலின் திறன்கள் மற்றும் சக்திகளை ஒருங்கிணைந்த முதன்மை மற்றும் திறன்மிக்க விவசாய சமூகத்திற்கு பிரச்சனை தீர்க்க தகுந்த தொழில்நுட்பங்களை வழங்குகிறது.
ஆதாரங்கள்
நாகராஜன.என். 2003 ராய்தாரா கேய்த்தரா பத்தசீல் அனுஸ்தனா மார்கதரசி (வழிமுறைகளை நடைமுறைப்படுத்தும் விவசாயிகளின் களப் பள்ளி) காயத்தரி புக் கம்பெனி, பெங்களூர்.
நாகராஜா, என், 2004 அர்ணிராவாரி (அக்ரோபிக்) பட்டாட பிசயாடா அனுபவகலூ, காயத்திரி புக் கம்பெனி, பெங்களூர்.
|
|