பங்களிப்பு தொழில் நுட்ப வளர்ச்சி
பங்களிப்பு தொழில்நுட்ப வளர்ச்சி எப்பொழுது செயல்படுத்தப்படுகிறது?
பங்களிப்பு தொழில்நுட்ப வளர்ச்சி என்பது நீண்ட கால பணியாகும். மேலும் இது தகுந்த தொழில்நுட்பங்கள் இல்லாத பொழுதும் குறிப்பிட்ட பகுதியில் உள்ள குறிப்பிட்ட பிரச்சனைகளைப் பற்றி அறியவும். மேலும் காலம் சென்ற தொழில் நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம் அதிக ஈடுபொருளும் அதனால் அதிக உற்பத்தி செலவு ஏற்படுகிற பொழுதும் சுற்றுப்புறச் சூழல் பாதிப்படைகிறபொழும். இது மேற்கொள்ளப்படுகிறது.
பங்களிப்பு தொழில்நுட்ப வளர்ச்சி எங்கு மேற்கொள்ளப்படுகிறது:
பங்களிப்பு தொழில்நுட்ப வளர்ச்சியானது முன்னோட்டங்களை மேற்கொள்ள தயாராக உள்ள விவசாயின் நிலங்களில் மேற்கொள்ளப்படுகிறது. கட்டுப்பாட்டு முறைகளும் மேற்கொள்ளப்படும். இத்தகைய கட்டுப்பாட்டு முறைகள் நில அளவை பொறுத்து தகுந்த முறைகள் கையாளப்படும்.
பங்களிப்பு தொழில்நுட்ப வளர்ச்சியின் பல்வேறு நிலைகள்:
பங்களிப்பு தொழில்நுட்ப வளர்ச்சியானது குறிப்பிட்ட வரை முறைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுகிறது. பங்களிப்பு தொழில்நுட்ப வளர்ச்சியில் பயிற்றுனர்கள் வெளி சமூகத்திலிருந்து பங்களிப்பு தொழில் நுட்ப வளர்ச்சி செயல்படுத்தப்படும் இடங்களில் தங்களாகவே வந்து அறிமுகம் செய்துகொண்டு அங்குள்ள மக்களிடம் ஒரு சிறந்த உறவுகளை ஏற்படுத்திக் கொண்டு முன்பிருந்த விவசாய சூழ்நிலைகளை ஆராய்தல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்காக விவசாயிகளை ஒரு இணைப்பின் மூலம் கூட்டுறவு முறையில் வேளாண் பணிகளை மேற்கொள்ளுதல். இது சமூகவியல் சமூக பொருளாதார தன்மை மற்றும் தற்பொழுதைய அரசியல் பரிமானம் போன்றவைகளையும் உள்ளடக்கியது பங்களிப்பு தொழில்நுட்ப வளர்ச்சியின் செயல்பாடுகுள் ஆறு நிலைகளை உள்ளடக்கியது. பிரச்சனைகளை கண்டறிதல் தீர்வுகளை கண்டறிதல் பரிசோதனைகளை வடிவமைத்தல் முன்னோட்டம் / பரிசோதனைகளை மேற்கொள்ளுதல் ஆராய்ச்சியின் விளைவுகள் மற்றும் முடிவு பற்றி தகவல்களை மதிப்பிடுதல் போன்றவையாகும். ஒவ்வொரு நிலைகளிலும் வெளிநிலை முகமைகளின் பணிகள் மற்றும் எதிர்பார்க்கப்படும் முடிவுகளை விவரித்தல் போன்ற அணுகு முறைகள் மேற்கொள்ளப்படும். இந்த நிலைகளின் அமைப்பு படங்களில் காட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு நிலைகளிலும் இதன் பணிகள் இங்கு விவரிக்கப்பட்டுள்ள வரிசை முறைகளை பின்பற்ற வேண்டிய கட்டாயமில்லை.
|