1. நிலக்கடலை பால்
படிகள் நிலை
- நல்ல தரம் வாய்ந்த நிலக்கடலை சுத்தம் செய்து வறுத்து மேற்புற சிவப்பு நிறத் தோலை நீக்கவும்.
- சலித்தல் முறையில் பருப்புகளை பிரித்தெடுத்து கெட்டுப் போனவற்றை நீக்கவும்.
- சுத்தம் செய்த பருப்பை மென்மையான பசைப் போன்று அரைத்துக் கொள்ளவும். அதன் எடையைப் போன்று 7 மடங்கு நீர் சேர்த்து கலக்கவும். கால்சியம் ஹைட்ராக்சைடு கரைசல் சேர்த்து அமில காரத் தன்மையை 6.8 என சரிக்கொண்டு வரவும். கலவையாக டை சோடியம் பாஸ்பேட் மற்றும் அமிலம் பொட்டாசியம் பாஸ்பேட் அமில காரத்தன்மை 7.0 சேர்த்து பாலின் நிலைப்புத் தன்மை பெறச் செய்கிறது.
- பாலை வடிகட்டி அதனுடன் வைட்டமின்கள் எ,டி.பி2 போலிக் அமிலம், பி 12 தாது உப்புக்கள் கால்சியம் மற்றும் இரும்பு இல்லாத சத்துக்கள் சேர்க்கப்படுகிறது.
- பாலை ஒருமுகப்படுத்தி, ஆவியில் வேகவைத்து, பாட்டிலில் நிரப்பி குளிர் சாதனப் பெட்டியில் வைத்து அருந்தவும்.
- சோயாபால் மற்றும் கடலைப் பால், மழலையர் பள்ளி மற்றும் பள்ளிக் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பானமாகும்.
|
நிலக்கடலை வெண்ணெய்
- நல்ல தரம் வாய்ந்த கடலை சுத்தம் செய்து மிதமான வெப்பநிலையில் சூடு செய்து மணம் வரும் வரை வறுக்கவும்.
- மேற்புற சிவப்புத் தோலை நீக்கி வறுத்த கடலையை ஆவியில் வேக வைக்கும் இயந்திரத்தில் அனுபப்பட்டு சலித்து கெட்டுப்போன பருப்புகள் நீக்கப்படுகிறது.
- பருப்புக்கள் அரைக்கும் இயந்திரத்தின் உதவியுடன் அரைக்கப்பட்டு ஹைட்ரஜனேற்றம் செய்யப்பட்ட கொழுப்பில் வைட்டமின் எ 5 சதவிகிதம் சோடியம் குளோரைடு 2 சதவிகிதம் சேர்க்கப்படுகிறது. இந்தக் கலவை அரைக்கப்பட்டு மென்மையான பசை போன்று பாட்டிலில் அடைக்கப்படுகிறது. நிலக்கடலை, வெண்ணெய் ஆனது. சப்பாத்தி, பூரி மற்றும் ரொட்டியுடன் சேர்த்து சாப்பிட ஏற்றது.
|
|
தேவையான பொருட்கள்
மாவு |
- |
120 கிராம் |
சர்க்கரை |
- |
85 கிராம் |
வனஸ்பதி |
|
85 கி |
முட்டை |
- |
1 |
கடலை |
- |
150 கி |
பேக்கிங் பவுடர் |
- |
1 தேக்கரண்டி |
பால் |
- |
சிறிதளவு |
வெண்ணிலா மணமூட்டி |
- |
சிறிதளவு |
செய்முறை
- மைதா மற்றும் பேக்கிங்பொடி சேர்த்து கலக்கவும். இரு முறை சலிக்கவும்.
- சர்க்கரை மற்றும் வெண்ணெய் சேர்த்து பசை போன்று செய்யவும்.
- முட்டையை வெண்ணலா மணமூட்டி சேர்த்து அடித்து சர்க்கரைப் பசையுடன் சேர்க்கவும்.
- இதனுடன் மைதா மற்றும் பாதிக் கடலையைச் சேர்க்கவும். மாவு திருப்பி போட்டு தேவையான அளவு பால் சேர்த்து மாவைப் பிசையவும்.
- சிறு உருண்டைகளாக, வெண்ணெய் தடவிய தட்டில்அடுக்கு அதன் மேற்புறத்தல் கடலையில் தூவவும்.
- அடுமனையில் 350 டிகிரி பாரன்ஹீட்டில் 20 நிமிடம் வைக்கவும்.
கடலை மிட்டாய்
தேவையான பொருட்கள்
கடலை |
- |
200 கிராம் |
வெல்லம் |
- |
200 கிராம் |
வெண்ணிலா மணமூட்டி |
- |
சிறிதளவு |
செய்முறை
- கடலையை லேசாக வறுக்கவும்.
- வெல்லத்தை தேவையான அளவு நீர் சேர்த்து கரைத்து வடிகட்டவும். வெல்லப்பாகை சூடு செய்து 115 டிகிரியிலிருந்து 120 டிகிரி செ வெப்பநிலைக்கு குறைந்த நீரில் சூடேற்றுவும்.
- கடலையை பாகுடன் சேர்த்து கடலை மேற்புறம் நெய் தடவிய பூச்சு போல மடியும் வரை கலக்கவும்.
- இந்தச் சூடானக் கலவையை நெய் தடவிய தட்டு அல்லது மரப்பலகையில் ஊற்றவும்.
- இதைச் சதுரமாக வெட்டி அல்லது உருண்மையாகவும் உருட்டலாம்.
எண்ணெய் புண்ணாக்கு
எண்ணெய் தொழிற்சாலைகளில் எண்ணெய் பிரித்தெடுத்த பிறகு உள்ள புண்ணாக்குகளில் நிறைந்துள்ள அதிக அளவு புரதம், ஆற்றல் அனைத்தும் விலங்குகளுக்கு தீவனமாகின்றன. இவை மனிதன் உட்கொள்ளத் தேவையான தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவை மிக மலிவான ஆனால் ஊட்டச்கத்து நிறைந்த உணவு. புண்ணாக்கானது தட்டையாக்கப்பட்டட உருவத்திலும் நீளத் தகடுகள் போன்றும் கிடைக்கிறது. எண்ணெய் பிரித்தெடுக்க உள்ள கரைசலில் இருந்து நீக்கப்பட்ட புண்ணாக்குகளில் காய வைக்கப்படுகிறது. புண்ணாக்குகளில் 0.7-0.4 சதவிகிதம் வரை எண்ணெய் காணப்படுகிறது. எண்ணெய் விதைத்து புண்ணாக்கு எளிதாக விழக்கூடிய பொருளாகும்.
கடலை எண்ணெய் புண்ணாக்கு
உலர்ந்த பொருள் |
- |
91.5 சதவிகிதம் |
சாம்பல் |
- |
4.81 சதவிகிதம் |
நார்ச்சத்து |
- |
13.5 சதவிகிததம் |
கால்சியம் |
- |
0.2 சதவிகிதம் |
மெக்னீசியம் |
- |
0.4 சதவிகிதம் |
பாஸ்பரஸ் |
- |
0.7 சதவிகிதம் |
கடலைப்புண்ணாக்கானது முக்கியத்துவம் வாய்ந்த தீவனம் இதில் 2-7 சதவிகிதம் எண்ணெய், 45-55 சதவிகிதம் மற்றும் 4-10 சதவிகிதம் நார்ச்சத்து எண்ணெய் பிரித்தெடுக்கும் விதம் பொறுத்து அதிக எண்ணெய் சத்து நிறைந்தது. தீவனமாகவும் 2 சதவிகிதம் குறைந்த எண்ணெய் சத்துக் கொண்டது. சுகாதாரமான வகையில் அரைத்த பொடி மனிதன் உணவுத் தேவைக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
எள்ளு எண்ணெய் விதை புண்ணாக்கு
மேல் தோல் நீக்கிய கரைசலில் பிரித்தெடுக்கப்பட்ட எண்ணெய் புண்ணாகானது 60 சதவிகிதம் புரதம் நிறைந்தது. எள்ளு புண்ணாக்கு முக்கியத்துவம் வாய்ந்த விலங்குகள் தீவனமாகும் எள்ளு புரதத்தில் அதிக அளவு மித்தியோனின் மற்றும் குறைந்த அளவு லைசின் கொண்டது.
சூரியகாந்தி விதைப் புண்ணாக்கு
இவை மாட்டுத் தீவனமாக அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. மனிதன் உட்கொள்ள சில இடையூறுகளான பாலிமீனதல் மற்றும் பைட்டேட்டஸ் இதன் மேற்புறத் தோலில் இருக்கின்றன. இதை அதிக புரதச்சத்து நிறைந்தும் குறைந்த பாலிபினால் பைட்டேட் கொண்டவையாக மாற்ற பியூட்டனல் அமிலத்தில் 1:2 என்ற விகிதத்தில் அமிலகாரத்தன்மை 5.0 ஆகவும் - 0.6 என் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தில் பிரித்தெடுத்து, ஒருமுக நிலைப்படுத்தி, நைட்ரஜன் நிரப்பில் சூழலில் அறை வெப்பநிலையில் உலரவைக்கப்படுகிறது. சூரியகாந்தி புண்ணாக்காவது அதிக புரதம் நிறைந்தும் எளிதில் ஜீரணிக்க கூடியதாகவும் குழந்தை ஊட்டச்சத்துக்களாகவும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் பாலுக்கு மாற்று உணவாக கொடுக்க முடியாது.
தனிப்படுத்தப்பட்ட புரதம் - எண்ணெய்வித்து புண்ணாக்கிலிருந்து
பதப்படுத்தும் முறை இதில் தரப்படுத்தப்பட்டுள்ளது. 85-90 சதவிகிதம் புரதம் சோயாபீன் மற்றும் கடலை புண்ணாக்கில் இருந்து பெறப்படுகிறது. கடலைப் புண்ணாக்கிலிருந்து பெறப்படும் தனிப்படுத்தப்பட்ட புரதம் பெறும் முறை கீழ்க்கண்டவாறு.
- உண்ணக்கூடிய கடலைப்புண்ணாக்கில் கரைசல் மூலம் பிரித்தெடுத்தல்.
- பிரித்தெடுத்த புரதத்தை சோடியம் ஹைட்ராக்சைடு கரைசலில் நீர்க்கச் செய்து அமில காரத்தன்மை
- படியப்பட்ட புரதத்தில் அமில காரத் தன்மை 4.5 ஆக ஹைட்ரோ குளோரின் அமிலம் சேர்த்தல்.
- புரதத்தை வடிகட்டுதல் மற்றும் நீரினால் கழுவுதல் புரதங்களை தண்ணீரால் கரையச் செய்து அமில காரத்தன்மை 7.0 செய்து தூறல் உலர்ப்பானில் உலர்த்துதல்.
கடலை தனிப்படுத்தப்பட்ட புரதத்தின் பயன்கள்
காய்கறி பதப்படுத்தப்பட்டதால், குழந்தை உணவுகள், புரதம் மிகுந்த பிஸ்கட் மற்றும் ரொட்டி தயாரிக்க இது பயன்படுகிறது.
தொழில்நுட்பம் கிடைக்குமிடம்
அறுவடைக்குப் பின்சார் தொழில்நுட்ப மையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை. மனையியல் கல்லூர் மற்றும் ஆராய்ச்சி நிலையம், மதுரை. |