|| | ||||
 

அறுவடைக்குப்பின் சார் தொழில் நுட்பம்

 
       

வானிலை
மண் வளம்
நீர் வளம்
விதை
பண்ணை சார் தொழில்கள்
ஊட்டச்சத்து
அறுவடைக்குப்பின் சார்
தொழில் நுட்பம்

உயிரிய தொழில்நுட்பம்
உயிரி எரிபொருள்

 

கோதுமையில் மதிப்பூட்டப்பட்ட பொருட்கள்

பதப்படுத்தப்பட்ட பொருட்கள்

முளைகட்டிய கோதுமை

  • நல்ல தரமுள்ள கோதுமையை குளிர்ந்த நீரில் 36 மணி நேரம் மிதமான வெப்பநிலையில் ஊறவைத்து 2 அல்லது 3 முறை இடையிடையே நீரை மாற்றவேண்டும்.
  • ஊறவைத்த கோதுமையை 2-3 கனத்தில் மெல்லிய வலையில் பரப்பவும்.
  • மிதமான வெப்பநிலையில் 3 நாளில் முளைத்து முளை வெளிவரும். முளைக்கும் போது அமைலேஸ் மற்றும் புரோட்டியேஸ் உருவாகிறது.
  • முளைத்த முளையானது மெதுவாக காயும் போது அமைலேஸானது மாச்சத்தாக நீர்க்கப்படுகிறது. மிதமான வெப்பநிலையில் உலரும் போது என்சைம் செயல்பாடு இழப்பு ஏற்படாமல் இருக்கிறது. உலரவைத்திலின் போது நீரில கரைக்கூடிண கார்போஹைட்ரேட் மற்றும் நைட்ரஜன் (பெப்டோன் மற்றும் பெப்டைப்ஸ்) அதிகரிக்கின்றன.

அமைலேஸ் அதிகம் உள்ள உணவு
முளைகட்டிய தானியமாவில் அதிக அளவு ஆல்பா அமைலேஸ் என்சைம் உள்ளது. இந்த என்சைமானது மாவிலுள்ள நீளமான கார்போஹைட்ரேட் இணைப்பு சங்கிலியை சிறிய அளவிலான டெக்ஸ்டிரின் ஆக மாற்றுகிறது. அரைத்தேக்கரண்டி அளவு அமைலேஸ் அதிகம் உள்ள உணவு அதிக திடப்பொருள் சேரும் அளவைக் குறைக்கின்றது (45 கிராம்) 25 கிராம் - மாவு 15 இனிப்பு பொருள்  5 – எண்ணெய் சேர்த்து 100 மிலி தண்ணீருடன் சேர்த்து சூப் (கஞ்சி) பதம் காய்ச்சவும். இவ்வாறு செய்யப்படும் கூழ் குழந்தைகளுக்கான இணை உணவாக குறைந்த பாகுநிலையிலுள்ள அதிக ஆற்றலும் கொண்ட உணவாகும்.
முளைகட்டியதிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட பொருள் மருந்து தயாரிப்பதிலும் மற்றும் பால்பவுடர் தயாரிப்புக்கும் பயன்படுகிறது.


ஆவியால் சூடு செய்யப்படும்  கோதுமை
pht_wheat_valueaddtn_clip_image002_0000.jpgமுழுக்கோதுமை சுத்தம் செய்து தயார் நிலைப்படுத்தப்படகிறது. நன்கு மூடிய வெளிப்புறத்தில் இருந்து  சூடுபடுத்தக்கூடிய அரை 14 கிலோ / செ.மீ 2  அழுத்தத்தில் ஆவியால் சூடு செய்யப்படும். திடீரென அறை திறக்கப்படும் போது நீராவியால் தானியத்தின் அளவு பலமடங்கு பெரிதாகின்றது.


பாப்கார்ன்
images/pht_wheat_valueaddtn_clip_image002_0001.jpgபாப்கார்ன் என்பது பழமை வாய்ந்த சிற்றுண்டியாகும். விரிவாக்க அளவு முக்கயிமான தரமாக பாப்பானில் உள்ளது. அதன் தன்மை (மிருதுவாகவும், மொறுமொறுப்பாக) சார்ந்து பாப்கானில் விரிவாக்க அளவு காணப்படுகிறது. 177 டிகிரி சென்டிகிரேடு வெப்பநிலையில் 2.5 டன் / செ.மீ 2   நீராவி வெப்பநிலையில் கோதுமையின் உட்பரப்பு சூடாகும் போது கோதுமை உடைந்த அதன் கொள்ளளவு அதிகமாகிறது.

கோதுமை அவல்
சுத்தம் செய்த தானியத்தை கலனில் அடைத்து அது நீராவி செலுத்தி அதன் ஈரப்பதத்தை 21 சதவீதமாக்கவேண்டும். நீராவி செலுத்திய கோதுமையை உருளைகளில் செலுத்தும் போது தானியம் மேல் உறை உடைந்து தட்டையாகிறது. தட்டையான தானியத்தை சுழல் முறை கொதிகலனில் இட்டு முளைக்கட்டிய தானிய உப்பு சர்க்கரை, 90 நிமிடம் 90 அழுத்தத்தில் வேக வைக்கப்படுகிறது. வேகவைத்த தானியமானது மென்மையாகவும், ஊடுருவக் கூடியது மற்றும் மரநிறத்தையுடையது. இதில் 40-45 சதவிகிதம் ஈரப்பதம் நிறைந்ததாகவும் கஞ்சி போன்று ஒட்டக்கூடியது ஆகும். வேக வைத்த தானியத்தை சூடுபடுத்தி 80-85 டிகிரி சென்டிகிரேட் அவல் இயந்திரத்தில் (தட்டையாக்கப்படுகிறது) 3 சதவீத ஈரப்பதத்திற்கு உலர வைக்கப்படுகிறது.

மேலே

அடுமனைப் பொருட்கள்

ரொட்டி   

மூலப்பொருட்கள் எடை போடுதல்

சலித்தல் மற்றும் கலக்குதல்

நீர் சேர்த்து சமன்படுத்துதல்

முதல் நிலை கலவை கலக்குதல் (ஈஸ்ட், பால் , இதரப் பொருட்கள்)

மாவு பிசைதல்

மாவு உப்புதல் இடையில்

திருப்புதல் மற்றும் மடக்குதல்

மாவு சமமாகப் பிரித்து எடை போடுதல்

உருட்டுதல்

இடைப்பட்ட சரிபார்த்தல்

வடிவமைத்தல்

ரொட்டி தயாரிக்க உள்ள தட்டுகளில் அடுக்குதல்

தகடுகளை மூடி போடுதல்

அடுமனை செய்தல்

ஆறவைத்தல்

துண்டுகளாக்குதல்

முழுக் கோதுமை ரொட்டி தயாரிப்பு

தண்ணீர் + ஈஸ்ட் + சர்க்கரை

தண்ணீர் + ஈஸ்ட் + சர்க்கரை

மாவு + குளூட்டன் + கொழுப்பு நீக்கப்பட்ட சோயா மாவு

கலக்குதல் மற்றும் பிசைதல் (15 நிமிடம்)

உப்பு மற்றும் வெண்ணெய் சேர்த்து தேய்த்தல்

மாவு பிசைதல் (Knock back method)

ஊறவைத்தல் 45 நிமிடம்

மாவு பிசைதல்

பிரித்தல் (225 கி துண்டுகளாக)

வடிவமைத்தல் (20 நிமிடம்)

ஊறவைத்தல் (20 நிமிடம்)

அடுமனையில் சூடு செய்தல்

ஆறவைத்தல்

துண்டுகளாக்குதல்

பாலித்தீன் பைகளில் அடைத்தல்

சேமித்தல்

அதிக நார்ச்சத்து நிறைந்த ரொட்டி தயாரித்தல்

முழுக் கோதுமை மாவு + வெந்தயம் + குதிரைவாளிஉலர்ந்த தாமரை தண்டுப் பொடி

ஒன்றாக கலக்குதல்

ஈஸ்ட், சர்க்கரை மற்றும் வெண்ணெய் சேர்த்தல்

பிசைதல்

முதல் ஊறவைத்தல் (45 நிமிடம்)

பிசைதல் மற்றும் வடிவமைத்தல்

2வது ஊறவைத்தல் (20 நிமிடம்)

அடுமனையில் சூடுசெய்தல் 200டிகிரி சென்டிகிரேட் 30 நிமிடம்

ஆறவைத்தல்

ரொட்டி பாலித்தீன் பைகளில் போட்டு ஒட்டுதல்

சேமித்தல்

பன்

மாவு சலித்தல்

மாவு பிசைதல் (15 நிமிடம்)

புளிக்க வைத்தல் (30 நிமிடம்)

பிசைதல் (Knockback)

இடித்தல்

பிரித்தல் (50 கிராம்)

உருண்டைகளாக்குதல்

ஊறவைத்தல் (30 நிமிடம்)

அடுமனையில் சூடாக்குதல் (250 டிகிரி செ வெப்பநிலையில் 20 நிமிடங்கள்)

ஆறவைத்தல் (1 மணி நேரம்)

பாலித்தீன் பைகளில் போட்டு ஒட்டுதல்

விற்பனைக்கு அனுப்புதல்

கேக்குகள்

மாவு சலித்தல்

ஒன்றாக கலக்குதல் (20 நிமிடம்)

வடிவமைத்தல்

அடுமனையில் சூடு செய்தல் (200 டிகிரி செ வெப்பநிலையில் 30 நிமிடம்)

ஆறவைத்தல்

பெட்டியில் அடைத்தல்

விற்பனைக்கு அனுப்புதல்

ரஸ்க் / சூப் குச்சி
தேவையான பொருட்கள்

முழுக்கோதுமைமாவு - 85 கிராம்
கொழுப்பு நீக்கப்பட்ட சோயா மாவு   - 15 கிராம்
சர்க்கரை - 2.5 கிராம்
உப்பு   - 2 கிராம்
குளூட்டன்      - 2.5 கிராம்
தாவர கொழுப்பு - 2.5 கிராம்
ஈஸ்ட்  - 1 கிராம்
தண்ணீர் - 40 மிலி

தண்ணீர் + மாவு + குளுட்டன் + கொழுப்பு நீக்கப்பட்ட சோயா மாவு + ஈஸ்ட் + சர்க்கரை

ஒன்றாக கலக்குதல்

மாவு பிசைதல்

உப்பு, சர்க்கரை போட்டு தோய்த்தல்

ரஸ்க்   ஆப் குச்சி
ஊறவைத்தல்

பிசைதல்

பிரித்தல் (225 கிராம்)

உருண்டை வடிவில் உருட்டுதல்

ஊறவைத்தல் (10 நிமிடம்)

அடுமனையில் ஆடு செய்தல் 30 நிமிடம் (200 டிகிரி செ வெப்பநிலை)

குளிர வைத்தல் 7-8 மணி நேரம்

சிறு துண்டுகளாக்குதல்

அடுமனையில் சூடு செய்தல் 15 நிமிடம் (200 டிகிரி செ)

ஆறவைத்தல்

பாலித்தீன் பைகளில் போட்டு மூடுதல் சேமித்தல்

சிறு சிறு உருண்டைகளாக்குதல்

குச்சி போன்று மெல்லிசாக உருட்டுதல்

அடுமனையில் சூடு செய்தல் 30 நிமிடம் (200 டிகிரி செ) வெப்பநிலையில்

ஆறவைத்தல்

பாலித்தீன் பைகளில் போட்டு மூடுதல் மற்றும் சேமித்தல்

நார்ச்சத்து நிறைந்த ரஸ்க் தயாரித்தல்

முழுக்கோதுமை மாவு + வெந்தயம் + குதிரைவாளி + உலர்ந்த தாமரை தண்டு பொடி

ஒன்றாக சேர்த்து கலக்குதல்

ஈஸ்ட்,சர்க்கரை மற்றும் வெண்ணெய் சேர்த்தல்

பிசைதல்

முதலில் ஊறவைத்தல் (20 நிமிடம்)

மாவு பிசைதல் மற்றும் வடிவமைத்தல்

2 ஊறவைத்தல் (10 நிமிடம்)

அடுமனையில் சூடு செய்தல் (200 டிகிரி செ வெப்பநிலையில் 30 நிமிடம்)

ஆறவைத்தல்

பாலித்தீன் பைகளில் அடைத்தல்

சேமித்தல்

குக்கிஸ்

மாவு சலித்தல்

ஒன்றாக கலக்குதல்

தட்டையாக்குதல்

சிறு துண்டுகளாக்குதல்

அடுமனையில் சூடு செய்தல் (180 டிகிரி செ வெப்பநிலையில் 15 நிமிடம்)

ஆறவைத்தல் (1 மணி நேரம்)

பாலித்தீன் பைகளில் போட்டு ஒட்டுதல்

விற்பனை செய்தல்

ஊட்டச்சத்து நிறைந்த விலை மலிவான குழந்தைகளுக்கான ரொட்டி (பிஸ்கட்)

கலக்குதல்

மாவு + வறுத்த பச்சைப்பயிறு + பால் பவுடர் மைதா / சோளம் / ராகி மாவு

மென்மையாக்கு பொருள் சேர்த்தல் (பேக்கிங் சோடா) சலித்தல்

சாக்கரை மற்றும் வனஸ்பதி சேர்த்து பசை பேலாக்குதல்

இறுதியாக பிசைதல் முட்டை வெள்ளைக் கரு கேரட் பவுடர் சேர்த்து சேர்த்து இறுதியாக பிசைதல்

இறுதியாக பரவச் செய்தல்

பிசைதல் பரவச்செய்தல் அடுமனை தட்டுகளில் அடுக்கி வைத்தல்

அடுமனை செய்தல் (160 டிகிரி செ வெப்பநிலையில் 15 நிமிடம்)

ஆறவைத்தல்

பாலித்தீன் பைகளில் போட்டு ஒட்டச் செய்தல்

சேமித்தல் (அறைவெப்பநிலையில்)

டோநட்
டோநட் உலகெங்கும் பல்வேறு நாடுகளில் உணவு விடதிகளில், ரெஸ்டாரண்ட் மற்றும் சிற்றுண்டி கடைகளிலும் கிடைக்கின்றது. இது பார்க்க கவரும் விதமாகவும், அவையாகவும் பெரும்பாலும் விழாக்காலங்களில் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் பெரும்பாலும் தேநீர் சமயங்களில் பயன்படுகிறது. டோநட் தயாரிக்க தேவையான பொருட்கள்.

மாவு

-

100 சதவிகிதம்

சர்க்கரை

-

35 சதவிகிதம்

எண்ணெய்

-

7 சதவிகிதம்

பேக்கிங் மாவு

-

4.5 சதவிகிதம்

முட்டை

-

30 சதவிகிதம்

உப்பு

-

0.5 சதவிகிதம்

ஜாதிக்காய் பொடி

-

0.5 சதவிகிதம்

பட்டைப்பொடி

-

0.45 சதவிகிதம்

பேக்கிங் சோடா

-

பால் பவுடர்

-

5 சதவிகிதம்

தண்ணீர்

-

40 சதவிகிதம்

மஞ்சள் நிறம்

-

தேவையான அளவு

செய்முறை

  • மாவு, ஜாதிக்காய் பொடி, உப்பு, பட்டைப்பொடி, பால் பவுடர் மற்றும் பேக்கிங் மாவு சரியான அளவு எடுத்து சலித்துக் கொள்ளவும்.
  • சர்க்கரைப் பொடி மற்றும் வெய்ணெய் சேர்த்து கிரீம் (பசை) செய்யவும்.
  • நன்றாக அடித்த முட்டை மற்றும் கிரீம் ஒன்றாக சேர்க்கவும்.
  • மஞ்சள் நிறத்தை தண்ணீரில் சேர்க்கவும்.
  • பேக்கிங் சோடா மற்றும் அடித்த முட்டையுடன் சேர்க்கவும்.
  • மென்மையான மாவாக்கவும்.
  • 1/3 செ.மீ தடிமனுள்ளவாறு உருளைகளில் மாவு சேர்த்து டோநட் கட்டர் வெட்டி பயன்படுத்தி வெளிப்புற பரப்பளவு 7 செ.மீ உட்புற பரப்பளவு 2.5 செ.மீ கொண்டதாக வெட்டவும்.
  • எண்ணெயில் போட்டு வெட்டிய டோநட்டை பொறிக்கவும். மேற்புறம் பொன்னிறமாகவும் நன்றாக உப்பி வந்தவுடன் வெளியில் எடுக்கவும்.
  • 500 கிராம் மாவிற்கு 36 டோநட் செய்யலாம்.

காய்கறி பப்ஸ்
தேவையான பொருட்கள்

மைதா - 1 கிலோ
வெண்ணெய் - 250 கிராம்
உப்பு  - 1 தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் - அரை தேக்கரண்டி

பூரணம் செய்யத் தேவையான பொருட்கள்

வேகவைத்த உருளைக் கிழங்கு - அரை கிலோ
கேரட் - 100 கிராம்
பீன்ஸ் - 100 கிராம்
பச்சைப் பட்டாணி - 200 கிராம்
வெங்காயம் (பெரியது) - 100 கிராம்
தக்காளி - 150 கிராம்
மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - 1 தேக்கரண்டி
மல்லித்தூள் - 3 தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
கரம் மசாலா பொடி - 1 தேக்கரண்டி
கறி மசாலா பொடி - 2 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி

பிசைதல் (10 நிமிடம்)

பிரித்தல்

மாவு தட்டையாக்குதல்

பூரணம் நிரப்புதல்

அடுமனையில் சூடு செய்தல் (45 நிமிடம்)

ஆறவைத்தல்

சேமித்தல்

பீசா
தேவையான பொருட்கள்

மைதா - 200 கிராம்
கொழுப்பு - 30 கிராம்
உப்பு - அரை தேக்கரண்டி
ஈஸ்ட் - 5 கிராம்
சர்க்கரை - 5 கிராம்
முட்டை - 1 எண்ணிக்கை
பால் - 40 மிலி
எண்ணெய் - 30 மிலி
பூரணம் செய்ய
தக்காளி - 3 எண்ணிக்கை
பாலாடைக்கட்டி - 4 பாக்கெட்ஸ்
மிளகாய் - 4 அல்லது 5
வெங்காயம் - 2 பெரியது
மல்லி / கறிவேப்பிலை / சிறிய கட்டு  - 1 எண்ணிக்கை
உப்பு தேவைக்கேற்ப
கொடை மிளகாய்  - தேவைக்கேற்ப
காளான் - தேவைக்கேற்ப
http://agritech.tnau.ac.in/postharvest/pht_wheat_valueaddtn_clip_image002_0010.jpg

செய்முறை

  • மாவை இரண்டு முறை சலிக்கவும்.
  • வெதுவெதுப்பான நீரில் சர்க்கரை மற்றும் ஈஸ்ட் சேர்க்கவும்.
  • நீரின் உப்பு சேர்த்து மாவுடன் சேர்த்து பிசையலாம்.
  • முட்டை நன்றாக சேர்த்து மாவுடன் சேர்த்து பிசையவும்.
  • 40 நிமிடம் பிசைந்த மாவை வைக்கவும்.
  • மாவை 1/8 தடிமனுள்ளவையாக உருட்டி வெண்ணெய் மாவு தடவிய தகட்டில் முன் கரண்டியால் குத்தி வைக்கவும்.
  • பூரணம் மேற்புறத்தில் நிரப்பவும். அதன் மேல் பாலாடைகட்டித் துருவல்களை சேர்க்கவும்.
  • 15 முதல் 20 நிமிடம் வைக்கவும்.
  • அடுமனையில் 450 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையில் 25 முதல் 50 நிமிடம் வைக்கவும்.
  • சூடாக பரிமாறவும்.

காக்ரா

kakra காக்ரா என்பது இந்தியாவில் தட்டையாக்கப்பட்ட ரொட்டி அல்லது சப்பாத்தி ஆக இந்தியாவின் மேற்குப் பகுதியில் குறிப்பாக குஜராத்தில் உள்ளது. ஆட்டா (முழுக்கோதுமை மாவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல பிசையப்பட்டு உருட்டி தட்டையாக்கப்படுகிறது) 1 முதல் 1.5 மி.மீ தடிமனும் 17 முதல் 25 செ.மீ சுற்றளவும் சூடான கல்லில் (pan) அடிக்கடி அழுத்தி மற்றும் மிதமான தீயில் வறுக்கப்படுகிறது. வணிக ரீதியாக மசாலாப் பொருட்கள் சேர்த்து மசாலா காக்ராவாகவும், கீரை வகைச் சேர்த்து போஜி காக்ராகவும், நெய் சேர்த்து நெய் காக்ராவாகவும் சர்க்கரைச் சேர்த்து மற்றும் சாதாரண காக்ராகவும் விற்பனை செய்யப்படுகிறது. காக்ராவுடன் வேகவைத்த காய்கறிகள், அல்லது சட்னி சேர்த்தம் காபி அல்லது தேநீருடன் சேர்த்து சாப்பிடலாம். விலையானது ஒப்பிடும் போது சப்பாத்தியை போன்றே உள்ளது.

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு - 100 கிராம்
உப்பு   - 3 கிராம்
தண்ணீர் - 75 மிலி

செய்முறை

  • 100 கிராம் கோதுமை மாவுடன் 3 கிராம் உப்பு சேர்த்து தேவையான அளவு நீர் சேர்த்து மாவு பிசைதல் வேண்டும்.
  • 10 நிமிடம் நன்கு அழுத்தி பிசையவேண்டும்
  • 15 கிராம் அளவுள்ள சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி வடிவில் அலுமினிய உருளையில் உருட்ட வேண்டும். இதனால் வாட்டும் போது உப்பாமல் இருக்கும். காக்ரா தடிமனனானது 1.22 மி.மீட்டராககவும் சுற்றளவு ஆனது 15 செ.மீ ஆகும்.
  • காக்ரா சுடும்போது அடிக்கடி துணி மூட்டை கொண்டு அழுத்தவேண்டும். அழுத்தம் கொடுக்கும் போது சூடு ஒரே மாதிரி பரவும். காக்ரா 5 நிமிடங்களில் தயாரிக்கலாம். வெப்பநிலை 160 டிகிரி செ பெரும்பாலும் தயாரிக்கப்படுகிறது.

அதிக நார்ச்சத்து நிறைந்த காக்ரா தயாரித்தல்

முழுக்கோதுமை மாவு + வெந்தயம் + கொள்ளு + உலர்ந்த தாமரை தண்டு + கறிவேப்பிலை பொடி

கலக்குதல்

தண்ணீர் சேர்த்து பிசைதல்

15 கிராம் அளவுள்ள உருண்டைகளாக உருட்டுதல்

தட்டையாக்குதல் (15 செ.மீ பரப்பளவுள்ள)

வாட்டுதல்

ஆறவைத்தல்

பாலித்தீன் பைகளில் அடைத்து ஒட்டுதல்

சேமித்தல்

பிழியப்பட்ட உணவு வகைகள் தயாரித்தல்
பிழிதல் முறையில் வேகவைத்த ஈரமான மாவுச்சத்து பொருளைக் கொண்டு அழுத்த மற்றும்  வெப்பநிலையில் பயன்படுத்தி, இயந்திர உதவியால் செய்யப்படுகிறது. இதில் சிறிய அளவுகளில் கடலை மாவு, மரவள்ளி மாவு, சோயா மாவு, பால் பொடி, கேசின், குளூட்டன் காய்கறிகள் மற்றும் மசாலாப் பொருட்கள் சேர்க்கப்படும். மேலும் இதனால் வைட்டமின் மற்றும் தாது உப்புச் சத்துக்கள் அதிகரிக்கின்றன.
சபாகத்தி மற்றும் வெர்மிசிலி செய்முறை

spaghettiபிழியப்படும் உணவுகள் மைதாவில் இருந்தும் வேறு சில பொருட்கள் சேர்த்தும் அல்லது சேர்க்காமலும் குளிர்ந்த நீர் அல்லது மிதமான சூடுள்ள நீர் சேர்த்து மாவு பிசையப்பட்டு அச்சு இயந்திரங்களில் தேவையான வடிவங்களில் பிழியப்படுகிறது. பிழியப்பட்ட பொருட்களானது தேவையான அளவு நீளங்களில் வெட்டப்பட்டு உலர வைக்கப்படுகிறது. உலர வைக்கப்பட்ட பொருளானது பாலித்தீன் பைகளில் இட்டு ஒட்டப்படுகிறது.

தானியங்கள்

அரைவையில் அரைத்தல்

சலித்தல்

ஒன்றாக பிசைதல்

பிழிதல்

பிழியப்பட்ட பொருளில்

விட்டமின் அமினோஅமிலங்கள் மற்றும் தாது உப்புக்கள் சேர்த்தல்

உலர வைத்தல்

பாலித்தீன் உறைகளில் இடுதல்

நூடுல்ஸ்
மைதா                        -           1 கிலோ
முட்டை                      -           4 எண்ணிக்கை
சோளமாவு                  -           50 கிராம்
தண்ணீர்                     -           தேவையான அளவு

செய்முறை

முட்டையை நன்கு அடித்து மைதாவில் சேர்த்து மென்மையாக பிசையவும். தேவையான அளவு நீர் சேர்த்து பிசைந்து 15 நிமிடம் வைக்கவும். அதை ஒரு ஈரத்துணி கொண்டு மூடி உலராமல் வைக்கவும். மெதுவாக பிசைந்து எலுமிச்சை அளவு உள்ள உருண்டைகளாக உருட்டவும் உருண்டைகளை தேய்த்து சோளமாவு சேர்த்து ஒட்டாமல் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கவும். அடுக்கியவைகளை நீளமான துண்டுகளாக வெட்டவும். நிழலில் உலர்த்தி பாலித்தீன் பைகளில் அடைக்கவும்.

செய்முறை

3 குவளை தண்ணிரில் 200 கிராம் நூடுல்ஸ் சேர்த்து வேக வைக்கவும். மீதமுள்ள தண்ணீரை வடிகட்டவும்.

பயறு, பழங்கள், காய்கறிகள் மற்றும் காளான்  கலந்து செய்யும் நூடுல்ஸ்

images/pht_wheat_valueaddtn_clip_image002_0014.jpgமைதா 20 சதவிகிதத்தை நீக்கி அதற்கு பதிலாக 20 சதவிகிதம் பயறு மாவு அல்லது சிறு தானிய மாவு அல்லது பழக்கூழ் அல்லது காய்கறிக் கூழ் சேர்த்து ஊட்டச்சத்து அதிகப்படுத்தப்படலாம்.
மைதா + 20 சதவிகிதம் + கேரட் கூழ்
மைதா + 20 சதவிகிதம் + பீட்ரூட் கூழ்
மைதா + 20 சதவிகிதம் + புதினா கூழ்
மைதா + 20 சதவிகிதம் + பூசணிக்காய் கூழ்
மைதா + 20 சதவிகிதம் + கடலைமாவு
மைதா + 20 சதவிகிதம் + சோயா மாவு
மைதா + 20 சதவிகிதம் + காளான் மாவு

நூடுல்ஸ் மசாலா கலவை

வெங்காயம்    - 100 கிராம்
பூண்டு   - 20 கிராம்
இஞ்சி - 10 துண்டுகள்
மஞ்சள் - 2 கிராம்
மிளகாய் - 5 கிராம்
உப்பு - 5 கிராம்

அனைத்துப் பொருட்களையும் உலர வைத்து அரைத்துக் கொள்ளவும். ஒன்றாகக் கலந்து, சலித்துக் கொள்ளவும். உப்பு சேர்க்கவும்.

நூடுல்ஸ் தயார் செய்யும் முறை

மைதா

சலித்தல்

கோதுமை, ராகி, பச்சைப்பயிறு, பாசிப்பருப்பு

சுத்தம் செய்தல்

கழுவுதல்

காய வைத்தல்

அரைத்தல்

கேரட்

கழுவுதல்

நறுக்குதல்

காயவைத்தல் 70 டிகிரி 8 மணி நேரம்

அரைத்தல்

அனைத்துப் பொருட்களையும் சரியான விகிதத்தில் கலக்குதல்

ஆவியில் 5 நிமிடம் வேகவைத்தல்

சலித்தல்

2 சதவிகிதம் உப்பு 30 மிலி தண்ணீரில் சேர்த்து 15-20 நிமிடங்கள் பிசைதல்

பிழிதல்

உலரவைத்தல்

பாலித்தீன் பைகளில் அடைத்தல்

நார்ச்சத்து நிறைந்த நூடுல்ஸ் தயாரித்தல்

முழுக்கோதுமை மாவு + வெந்தயம் கொண்டு + உலர வைக்கப்பட்ட தாமரைத் தண்டு

ஆவியில் வேகவைத்தல் (15-20 நிமிடம்)

கட்டிபடாமல் கலக்குதல்

சலித்தல்

30 சதவீத நீரில் 1 சதவிகிதம் உப்பு சேர்த்து பிசைதல்

பிழியும் இயந்திரத்தில் பிழிதல்

Tempering (இரவு முழுவதும்)

உலர வைத்தல் 45 டிகிரி வெப்பநிலையில் 2 மணி நேரம்

பாலித்தீன் பைகளில் அடைத்து பாதுகாத்தல்

செய்முறை

  • மைதாவை ஆவியில் 10 நிமிடம் வேக வைக்கவும்.
  • பயிறு மாவு 15 நிமிடம் ஆவியில் வேக வைக்கவும்.
  • ஆவியில் வேக வைத்த மாவை ஆறவைத்த சலித்துக் கொள்ளவும். (மைதா + பயிறு மாவு + உப்பு)
  • இக்கலவையை பிழிவானில் பிழிய தண்ணிர் சேர்த்து (400 மிலி / கிலோ) 15-20 நிமிடம் பிசையுமாறு செய்து பிழியவேண்டும்.
  • வெளிவரும் நூடுல்ஸை ஆவயில் 12 நிமிடம் வைத்து பாதியளவு
  • அதற்கு விரைவுத் தன்மை ஏற்பட 10 மணி நேரம் அறை வெப்பநிலையில் வைத்துப் பின்பு அறை உலர்ப்பானில் 50 டிகிரி செ வெப்பநிலையில் 2 முதல் 4 மணி நேரம் வைக்கவும்.

பிழியப்பட்ட பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் இனிப்பு மற்றும் காரங்கள்

பிழியப்பட்ட பொருள் - 100 கிராம்
வெங்காயம்   - 15 கிராம்15 கிராம்
பச்சை மிளகாய் - 4 எண்ணிக்கை
கருவேப்பிலை - சிறிது
கடுகு - அரைத் தேக்கரண்டி
கடலைப்பருப்பு - அரைத் தேக்கரண்டி
உளுந்து  - 1 தேக்கரண்டி
உப்பு - 3 கிராம்
எண்ணெய் - 20 மிலி
தண்ணீர் - 250 மிலி

மக்ரோனி

மக்ரோனி என்பது குழாய் போன்ற அமைப்பு உடையது. ஸ்பகதியானது சிறிய  திட உருளை போன்றும், சேமியாவானது குச்சி போன்றும் மற்றும் நூடுல்ஸ் பாஸ்தா பொருட்களானது பல வடிவங்களில் காணப்படுகிறது. பாஸ்தா பொருட்களில் நூடுல்ஸ் தவிர மற்றவை கோதுமை மாவில் தயாரிக்கப்படுகிறது. இது தவிர கடலை மாவு, சோயா மாவு மற்றும் மரவள்ளி மாவு பயன்படுத்தப்படுகிறது. வைட்டமின் மற்றும் அமினோ அமில சத்துக்கள் உயர்த்தியும் தயாரிக்கப்படுகிறது.


சேமியா தயாரிப்பு
தேவையான பொருட்கள்
மைதா மாவு                -           100 கிராம்
உப்பு                           -           2 கிராம்
தண்ணீர்                      -           35 மிலி
செய்முறை
மைதாவானது ஆவியில் 5 நிமிடங்கள் வேகவைத்து தேவையான அளவு நீர் மற்றும் உப்பு சேர்த்து இக்கலவையை பிழிவானில் செலுத்தினால் அச்சுக்கள் வழியாக சேமியாவாக வெளிவருகிறது. வெளிவரும் சேமியாவை ஆவியில் 5 முதல் 10 நிமிடங்கள் வேகவைத்து 60 டிகிரி செ வெப்பநிலையில் 6 மணி நேரம் அறை உலரவைப்பானில் காய வைத்து பாலித்தீன் பைகளில் அடைக்கப்படும்.
ஊட்டச்சத்து உயர்த்தப்பட்ட பிழியப்பட்ட பொருட்கள்

கோதுமை மாவு

- 80 கிராம்
கொழுப்பு நீக்கிய சோயா மாவு - 20 கிராம்

தண்ணீர்

- 32 மிலி

உப்பு

- 2 கிராம் / 100 கிராம்

பயிறு மாவு கலந்து
அரைத்து பயிறு மாவு (கடலைப்பருப்பு, பாசிப்பயிறு மற்றும் பட்டாணி) கலந்து 1:1:1 மாவு தயாரிக்கப்படும்.      
உப்புமா
செய்முறை
pht_wheat_valueaddtn_clip_image002_0016.jpgஎண்ணெய் சூடு செய்து கடுகு சேர்த்து பொரியவும். உளுந்து மற்றும் கடலைப்பருப்பு, வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும். வெங்காயமானது  பொன்னிறமாக மாறும் போது நீர் சேர்த்து கொதிக்க விடவும். பிழியப்பட்ட பொருள் மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும். மென்மையாக வரும் வரை வேக வைக்கவும்.

 

தயிர் சேமியா
தேவையான பொருட்கள்

பிழியப்பட்ட பொருள் - 100 கிராம்
கடுகு 2 கிராம்
பச்சை மிளகாய் - 4 எண்ணிக்கை
இஞ்சி     - 2 கிராம்
கறிவேப்பிலை -    2 கிராம்
தயிர் - 100 மிலி
எண்ணெய் - 10 மிலி

செய்முறை
பிழியப்பட்ட பொருளானது ஆவியில் வேக வைக்கவும். பச்சைமிளகாய், இஞ்சி, சிறு துண்டுகளாக்கவும். தாளித்த எண்ணெய், கடுகு, பச்சைமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து அதனுடன் தயிர் கலக்கவும். வேகவைத்த சேமியாவை அதனுடக் கலந்து பரிமாறவும்.
தக்காளி சேமியா
தேவையான பொருட்கள்
பிழியப்பட்ட பொருள் -           100 லி
தக்காளி                                   -           25 கிராம்
பச்சை மிளகாய்                      -           4 எண்ணிக்கை
கருவேப்பிலை                         -           2 கிராம்
வெங்காயம்                             -           20 கிராம்
மசாலாப் பொருட்கள்              -           2 கிராம்
செய்முறை
பிழியப்பட்டப் பொருளானது ஆவியில் வேகவைக்கவும். எண்ணெய் சூடு செய்து அதனுடன் மசாலா மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி மற்றும் உப்பு சேர்த்து தொடர்ச்சியாக 5 நிமிடம் வேக வைக்கவும். வேக வைத்தப் பொருள் நன்றாக சேர்த்துக் கலக்கவும்.
எலுமிச்சை சேமியா
பிழியப்பட்ட சேமியா             -           100 கிராம்
எலுமிச்சை ரசம்                    -           25 மிலி
நறுக்கிய வெங்காயம்             -           20 கிராம்
வரமிளகாய்                           -           5 கிராம்
நறுக்கிய இஞ்சி                      -           5 கிராம்
கடலைப்பருப்பு                      -           5 கிராம்
கடுகு                                     -           2 கிராம்
மஞ்சள் தூள்                           -           2 கிராம்
எண்ணெய்                             -           10 மிலி
உப்பு                                     -           தேவைக்கேற்ப

செய்முறை

வேகவைத்த சேமியாவுடன் கடுகு, கடலைப்பருப்பு, மிளகாய், எலுமிச்சைசாறு உப்பு மஞ்சள் சேர்த்து தாளிக்கவும். தாளித்த பொருட்களை ஒன்றாகக் கலக்கவும்.

இனிப்பு மண்டலங்கள் (கோதுமை)
தேவையான பொருட்கள்
பிழியப்பட்ட பொருள்             -           100 கிராம்
தேங்காய் துருவல்                  -           40 கிராம்
சர்க்கரை                               -           20 கிராம்
நெய்                                     -           10 கிராம்

செய்முறை
பிழியப்படும் பொருளானது ஆவியில் 15 நிமிடம் வேகவைத்து அதனுடன் நெய் சர்க்கரை துருவிய தேங்காய் ஆகியவை நன்றாக கலக்கவும்.

பாயாசம்
பிழியப்பட்ட பொருள்            -           100 கிராம்
பால்                                    -           100 மிலி
சர்க்கரை                              -           50 கிராம்
முந்திரி பருப்பு                       -           100 கிராம்
உலர்ந்த திராட்சை              -           5 கிராம்
பொடியாக்கிய ஏலக்காய்      -           2 கிராம்
பால் நன்றாக கொதிக்க வைத்து சர்க்கரை சேர்க்கவும். அதனுடன் வறுத்த சேமியா சேர்த்து நன்கு வேகவிடவும். பின்பு நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் திராட்சை சேர்த்து அத்துடன் சேர்த்து 5 நிமிடம் வேக வைத்து சூடாக பரிமாறவும்.

தயார் நிலை உணவுகள்
உடனடி ரவை தோசை மாவு தயாரிக்கும் முறை
இந்தியாவில் தோசையானது புளிக்க வைத்துத் தயாரிக்கக்கூடிய பதார்த்தமாகும். 6:1 மற்றும் 10:1 என்று விகிதத்தில் அரிசி மற்றும் பருப்பு வகை கலந்து ஊறவைத்து, அரிசி சிறிது கரகரப்பாக அரைத்தும் மற்றவை மென்மையாக அரைத்து புளிக்க வைத்து சூடான சட்டியில் ஊற்றி தோசையாக வார்க்கப்படுகிறது. தோசை பல வகைகளகா மசாலா தோசை, வெங்காய தோசை, ரவை தோசை எனப் பலவகைகளில் உணவு விடுதிகளிலும் தயாரிக்கப்படுகிறது.

அரிசி மாவு தயாரிக்கும் முறை
புழுங்கல் அரிசி ஐ.ஆர் 20 5 மணி நேரம் நீரில் ஊறவைக்கவும். நீரிலுள்ள தண்ணீரை வடிகட்டி சூரியஒளி உலர்ப்பானில் 5 மணி நேரம் உரல வைக்கவும். காய வைத்த அரிசியை அரைத்து பிஎஸ் 36 வகை சல்லடைப் பயன்படுத்தி சலிக்கவும்.

தேவையான பொருட்கள்
மைதா                         -           100 கிராம்
வெள்ளை ரவை          -           100 கிராம்
அரிசி மாவு                  -           100 கிராம்
சீரகம்                          -           5 கிராம்
உடைத்த மிளகு          -           2 கிராம்
சிட்ரிக் அமிலம்           -           (5 மி.கி) 0.05 சதவிகிதம்
சோடியம் பை கார்பனேட்      -           0.2 சதவிகிதம் (20 மிகி)
மேற்கூறிய அனைத்துப் பொருட்களையும் ஒன்றாக கலந்து காற்றுப்புகாத கொள்கலனில் அடைக்கவும். தேவையான பொழுது எடுத்து ரவை தோசையாக மாற்ற ஒரு பங்கு ரவை தோசை மாவுடன் 2 பங்கு தண்ணீர் சேர்த்து நன்றாகக் கலக்கவும். 30 நிமிடங்கள் ஊறவைத்துப் பின்பு தோசை வார்க்கவும்.

பாம்பே அல்வா கலவை
மைதா             -           80 கிராம்
சோளமாவு      -           20 கிராம்
கேசரி கலர்      -           சிறிது
அனைத்துப் பொருட்களையும், ஒன்றாகக் கலந்து உலர்த்துவானில் 80 டிகிரி நெ வெப்பநிலையில் 2 மணி நேரம் உலர்த்தவும். பின்பு ஆறவைத்து அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகக் கலந்து பாலித்தீன் பைகளில் போட்டு ஒட்டவும். ஒரு பங்கு மாவுடன் 2 பங்கு தண்ணீர் 2 பங்கு சர்க்கரை சேர்த்து கலந்து வேகவைக்கவும்.  பின்பு வனஸ்பதி அல்லதுநெய் சேர்த்து 50 கிராம் 20 நிமிடம் கைவிடாமல் கிளறவும். இறுதியாக உடைத்த முந்திரி மற்றும் melonseeds சேர்த்து நெய் தடவிய தட்டில் ஊற்றி ஆறவைத்து துண்டுகளாக்கவும்.

செய் முறை
மைதா மாவு                -           அரை கிலோ
சோளமாவு                  -           100 கிராம்
பால் பவுடர்                 -           400 கிராம்
சர்க்கரைப் பொடி        -           அரை கிலோ
ஏலக்காய்த்தூள்          -           5 கிராம்
முந்திரி                                    -           5 கிராம்
சிவப்பு நிறம்               -           1 துளி
நெய்                            -           3 தேக்கரண்டி
மைதா மற்றும் சோளமாவை ஒன்றாகக் கலந்து சலிக்கவும். பிறகு பால் பொடி கலந்து மீண்டும் சலிக்கவும். இதனுடன் பொடித்து, ஏலக்காய் கலர்ப்பொடி சேர்த்து கலக்கி பாலித்தீன் உறைகளில் போட்டு மூடவும்.
அல்வா செய்முறை
ஒரு பங்கு தண்ணீருக்கு 1 பங்கு மாவு சேர்த்து பாத்திரத்தில ஊற்றி கெட்டியாகும் வரை வேகவைக்கவும். இதனுடன் நெய் மற்றும் ஏலக்காய் சேர்த்து நெய் பிரிந்து வரும் வரை வேகவைக்கவும்.
கேரட், முளைக்கீரை, கருவேப்பிலை மற்றும் முள்ளுக்கீரை கலந்த சேமியா

முழுக்கோதுமை மாவு

ஆவியில் 20 நிமிடம் வேக வைக்கவும்

பட்டாணி / கொண்டைக்கடலை / வரகு

சுத்தம் செய்தல்

கழுவுதல்

உலரவைத்தல்

பொடித்தல்

கோதுமை மாவு சேர்த்தல்

கேரட், முளைக்கீரை முள்ளு முருங்கை இலை

கழுவுதல்

சிறு துண்டுகளாக்குதல்

விழுதுபோல் அரைத்து + கோதுமை மாவு சேர்த்தல்

அனைத்துப் பொருளும் சரியான விகிதத்தில் நன்றாக கலக்குதல்

2 கிராம் உப்புடன் 30 மிலி தண்ணீர் சேர்த்தல்

இயந்திரத்தில் பிசைதல் (15-20 நிமிடம்)

பிழிதல் 15 நிமிடம் ஆவியில் வேகவைத்தல்

உலரவைத்தல்

பாலித்தீன் பைகளில் போட்டு ஒட்டுதல்

மசாலா கலந்த சேமியா

கோதுமை மாவு

ஆவியில் 20 நிமிடம் வேகவைத்தல்

பட்டாணி / கொண்டைக்கடலை மாவு

சுத்தம் செய்தல்

கழுவுதல்

உலர வைத்தல்

பொடித்தல்

முழுக்கோதுமைமாவுடன் அனைத்துப் பொருட்களையும் சரியான விகிதத்தில் ஒன்றாக கலத்தல்

சீரகம் / மிளகு

அரைத்தல்

2 கிராம் உப்புடன் 30 மிலி நீர் சேர்த்தல்

இயந்திரத்தின் உதவியுடன் பிசைதல் (15-20 நிமிடங்கள்)

பிழிதல்

ஆவியில் 15 நிமிடம் வேகவைத்தல்

உலர வைத்தல் (60 டிகிரி செ வெப்பநிலையில் 24 மணி நேரம்)

பாலித்தீன் பைகளில் போட்டு மூடல்

இனிப்பு போளி தயாரிக்கும் முறை

மைதா, சோயா மாவு, உப்பு, எண்ணெய் மற்றும் நீர்

நன்கு மென்மையான விதத்தில் மாவை பிசைந்து கொள்ளவும்.

30 நிமிடம் ஊறவிடவும்.

சிறு உருண்டைகளாக உருட்டவும்

சப்பாத்தி போன்று தேய்க்கவும்.

நடுவில் பூரணம் வைத்து மூடி உருண்டைகளாக்கி திருப்பி தேய்க்கவும்.

எண்ணெய் சிறிதளவு சேர்த்து சுடவும்

ஆறவைத்தல்

 
   

திருந்திய நெல் சாகுபடி
துல்லிய பண்ணையம்
நன்னெறி வேளாண்
முறைகள்

நன்னெறி ஆய்வக
முறைகள்

நன்னெறி மேலாண்மை
முறைகள்

   
 
 
   

அரசு திட்டங்கள் & சேவைகள்
நீர்வள,நிலவள திட்டம்
வட்டார வளர்ச்சி
வங்கி சேவை & கடனுதவி
பயிர் காப்பீடு
வேளாண் அறிவியல் நிலையம்
விவசாய தொழில்நுட்ப
மேலாண்மை முகாம்

கிசான் அழைப்பு மையம்(1551)
பல்லாண்டு மேம்பாட்டு
குறிக்கோள்

தன்னார்வ தொண்டு
நிறுவனங்கள் &
சுய உதவிக் குழுக்கள்

   
 
 

குறைந்த பட்ச ஆதார விலை
இடுபொருள் நிலவரம்
ஏற்றுமதி & இறக்குமதி
காப்புரிமை

 
 

சுற்றுச்சூழல் மாசுப்பாடு
இயற்கை சீற்ற மேலாண்மை
தகவல் & தொலைத்தொடர்பு
தொழில்நுட்பம்

முக்கிய வலைதளங்கள்

   

வல்லுனரை கேளுங்கள்