|| | | |||
 

வெற்றிக் கதைகள் ::தினசரி சந்தை நிலவரம்

tamil English
       

வானிலை
மண் வளம்
நீர் வளம்
விதை
பண்ணை சார் தொழில்கள்
ஊட்டச்சத்து
அறுவடைக்குப்பின் சார்
தொழில் நுட்பம்

உயிரிய தொழில்நுட்பம்
உயிரி எரிபொருள்

 

தினசரி சந்தை நிலவரம்

சந்தை நிலவரம் ஏற்படுத்திய மாற்றம்


சந்தை நிலவரம் ஏற்படுத்திய மாற்றம்

 

விடிந்தால் சந்தை நிலவரம் என்ன என்றே தெரியாமல் நாம் கொடுப்பது தான் இன்றைய நிலவரம் என்று எண்ணிக்கொண்டு இருந்து எங்களுக்கு, தினசரி சந்தை நிலவரம் என்றால் என்ன ? எந்தப் பொருளை எந்தச் சந்தையில் இன்று விற்றால் கூடுதல் இலாபம் கிடைக்கும் : பணத்திற்கு பயமே இல்லாமல் தைரியத்தைக் கொடுத்து டிஎம்ஐ என்றால் அது கோவை வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகளையே சாரும்.
தர்மபுரி மாவட்ம் மோளையானூர் கிராமத்தைச் சார்ந்த சாமிக்கண்ணு.வி ஆகிய நான் துல்லிய பண்ணைய விவசாயி என்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
நான் கடந்த 25 ஆண்டுகளாக விவசாயம் செய்கிறேன். காய்கறி வகைகள் மற்றம்கிழங்கு வகைகளை பயிர் செய்து உள்ளூர் வியாபாரிகளுக்கு அவர்கள் கேட்ட விலைக்குக் கொடுத்து வந்தேன். காரணம் என் பொருளின் தரம், நுகர்வோரின் தேவை, எங்கே விற்பது ? யார் யார் நல்ல வியாபாரிகள் ? அங்கே எப்படி கொண்டு செல்வது ? நினைத்த பருவத்தில் பயிர் செய்ய முடியாமை, வெளி உலக அனுபவம் இல்லாமை, ஆகியவையே.
கடந்த 2005-2006 முதல் கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்திய துல்லிய பண்ணையத் திட்டத்தின் மூலம் வேளாண் விஞ்ஞானிகளின் அயராத உழைப்பின் மூலம் விவசாயம் செய்து நல்ல இலாபம் அடைந்த வருகிறேன்.
துல்லிய பண்ணையத் திட்டத்தின் மூலம் உழவு முறைகள், உயிர் இரக விளைச்சல் இரகங்கள், பயிரின் தேவை அறிந்து நீர் மற்றும் நீரில் கரையும் உரங்களை சொட்டு நீர்ப்பாசனம் மூலம் பயன்படுத்துவது முறையான பயிர் பாதுகாப்பு, அறுவடை தொழிற்நுட்பங்கள், ஆட்கள் பற்றாக்குறை சமாளிப்பது, நுகர்வோர் தேவை அறிந்து பயிர் செய்தல், போக்குவரத்து வசதி மேம்பாடு, குழுவாக சேர்ந்து சந்தைப்படுத்துதல், நல்ல வியாபாரிகளை அறிமுகம் செய்து, கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது போன்றவை துல்லிண வேளாண்மையின் மிகச்சிறந்த தொழிற்நுட்பங்கள் ஆகும்.
சந்தை முறைகள்
உள்ளூரில் ஒரு கிலோ தக்காளி 3 முதல் 5 வரை மட்டுமே விற்பனை செய்து வந்த எங்களை கோவை, ஒட்டன்சத்திரம், கொச்சின், கோயம்பேடு, பெங்களூர் சபல் போன்ற மிகப்பெரிய சந்தைகளை அறிமுகம் செய்ததோடு இல்லாமல் ரூ. 10 முதல் 20 வரை விற்பனை செய்து கூடுதலாக கிலோ ஒன்றுக்கு 15 ரூ வரை கூடுதல் இலாபமும் சில ஆயிரங்களையே பார்த்து வந்த எங்களுக்கு 2 முதல் 5 இலட்சங்களை ஆண்டு தோறும் பெற்று வருகிறோம் என்றால் அது துல்லியப் பண்ணையத் திட்டத்தின் மூலம், டிஎம்ஐயின் தன்னலமற்ற வேளாண் விஞ்ஞானிகளின் ஈடு இணையில்லா அயராத உழைப்புமே ஆகும் என்பதை மனநிறைவோடு கூறிக்கொள்வதரில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
எதிர்காலத்தில்

  • ஒப்பந்த காய்கறிகளை பயிர் செய்வது
  • ஒப்பந்த விவசாயிகளை சேர்ப்பது
  • தினசரி வாகன வசதி பால் வண்டி போல் ஏற்பாடு செய்வது
  • பணத்தை அவரவர் கணக்கிலே வரவு வைப்பது
  • நுகர்வோர் தேவை அறிந்து பயிரிட வலியுறுத்துவது

பல்வேறு வெளிமாநில சந்தைகளை அறிமுகப்படுத்துவது போன்ற பணிகளை செய்தால், நாங்கள் இன்னும முனைப்போடு விவசாயம் செய்வதோடு, நாங்கள் இன்னும் முனைப்போடு விவசாயம் செய்வதோடு அல்லாமல், எங்கள் வாழ்வில் மேலும் பல முன்னேற்றங்கள் அடைவோம் என்று கூறி வேளாண் விஞ்ஞானிகளுக்கு மீண்டும் ஒரு முறை என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படிக்கு
தங்கள் உண்மையுள்ள
வி. சாமிக்கண்ணு
9788318960


 
   

திருந்திய நெல் சாகுபடி
துல்லிய பண்ணையம்
நன்னெறி வேளாண்
முறைகள்

நன்னெறி ஆய்வக
முறைகள்

நன்னெறி மேலாண்மை
முறைகள்

   
 
 
   

அரசு திட்டங்கள் & சேவைகள்
நீர்வள,நிலவள திட்டம்
வட்டார வளர்ச்சி
வங்கி சேவை & கடனுதவி
பயிர் காப்பீடு
வேளாண் அறிவியல் நிலையம்
விவசாய தொழில்நுட்ப
மேலாண்மை முகாம்

கிசான் அழைப்பு மையம்(1551)
பல்லாண்டு மேம்பாட்டு
குறிக்கோள்

தன்னார்வ தொண்டு
நிறுவனங்கள் &
சுய உதவிக் குழுக்கள்

   
 
 

குறைந்த பட்ச ஆதார விலை
இடுபொருள் நிலவரம்
ஏற்றுமதி & இறக்குமதி
காப்புரிமை

 
 

சுற்றுச்சூழல் மாசுப்பாடு
இயற்கை சீற்ற மேலாண்மை
தகவல் & தொலைத்தொடர்பு
தொழில்நுட்பம்

முக்கிய வலைதளங்கள்

   

வல்லுனரை கேளுங்கள்