|| | | ||||
 

வெற்றிக் கதைகள் :: தினசரி சந்தை நிலவரம்

tamil English
       

வானிலை
மண் வளம்
நீர் வளம்
விதை
பண்ணை சார் தொழில்கள்
ஊட்டச்சத்து
அறுவடைக்குப்பின் சார்
தொழில் நுட்பம்

உயிரிய தொழில்நுட்பம்
உயிரி எரிபொருள்

 

தினசரி சந்தை நிலவரம்

எளிதாக சந்தை தகவல்களை பெற உதவும் தினசரி சந்தை நிலவரம்

என் வாழ்க்கைத்தரத்தை மாற்றிய தினசரி சந்தை நிலவரம்: ஓர் அனுபவம்

இது தாண்டா வெற்றியின் ரகசியம் - தினசரி சந்தை நிலவரம்

எனது விவசாய வாழ்விற்கு ஒரு திருப்புமுனையாக அமைந்த தினசரி சந்தை நிலவரம்

கொச்சின் சந்தையின் மொத்த வியாபார தரகரின் வெற்றிக் கதை

கொச்சின் சந்தையின் மொத்த வியாபாரியின் வெற்றிக்கதை

தக்காளி விற்பனையின் அனுபவம்

தினசரி சந்தை நிலவரம் - எனது வாழ்க்கையில் ஏற்படுத்திய திருப்பு முனை

தினசரி சந்தை நிலவரத்தின் மூலம் குறிப்பிடத்தக்க மாற்றம்

பெங்களூர்: தினசரி சந்தை நிலவரத்தின் வெற்றிக்கதை - கோளூர் விவசாயி

தினசரி சந்தை நிலவரம் :  சந்தை வாய்ப்புகளை அள்ளித் தரும் ஓர் வரப்பிரசாதம்

நட்டத்திலிருந்து பாதுகாக்கும் பாதுகாவலன்

தினசரி சந்தை நிலவரம் : இலாபம் தரும் ஈட்டி தரும் ஓர் திட்டம்

தினசரி சந்தை நிலவரத்தால் மாறிய மாற்றம்

தினசரி சந்தை நிலவரம் - ஓர் ம்பிக்கை தரும் தகவல் மையம்

தினசரி சந்தை நிலவரம்: அதிக வருமானம் பெற உதவும் வழிகாட்டி

தினசரி சந்தை நிலவரம் ஏற்படுத்திய மாற்றம் மற்றும் எனது அனுபவம்

தினசரி சந்தை நிலவரம் ஏற்படுத்திய வியத்தகு மாற்றம்

தினசரி சந்தை நிலவரம்: வாழ்க்கையில் ஏற்படுத்திய மாயாஜாலம்

வாழ்க்கைத் தரம் உயர்ந்ததன் அனுபவக்கதை

விழிப்புணர்வு ஏற்படுத்திய தினசரி சந்தை நிலவரம்

விளைபொருட்கள் விற்பனையில் தன்னம்பிக்கை ஏற்படுத்திய தினசரி சந்தை நிலவரம்

வெற்றிக்கு வித்திட்ட தினசரி சந்தை நிலவரத்தின் அனுபவக்கதை

தினசரி சந்தை நிலவரம் - கோவை மாவட்டம் ரொட்டிக் கவுண்டனூர்

தினசரி சந்தை நிலவரம் - கோவை மாவட்டம் ரொட்டிக் கவுண்டனூர் -ரங்கசாமி


எளிதாக சந்தை தகவல்களை பெற உதவும் தினசரி சந்தை நிலவரம்

 

என் பெயர் நிர்மல் நான் தரகராக வேலை செய்து வருகிறேன். சிறு விவசாயிகளிடமிருந்து விவசாய பொருள்களை ஓரிடத்தில் ஒருங்கிணைந்து அந்த விளை பொருட்களை சந்தையில் விற்பனை செய்வது. விவசாயிகள் போக்குவரத்து செலவுகளை குறைக்க தரகர்களை நாடுகிறார்கள். நான் வியாபாரம் செய்யும் சந்தைகள் கோயமுத்தூர் எம்.ஜி.ஆர் சந்தை, மேட்டுப்பாளையம் சந்தை, அறுவடை செய்யும் சமயத்தில் நான் அனைத்து வியாபாரிகளையும் தொடர்பு கொண்டு வேண்டிய தகவல்களை பெறுவேன். அதன் பின்பு தான் எங்கு சென்றால் நல்ல லாபம் கிடைக்கும் என்பதை முடிவு செய்வேன். இந்த முறையைத்தான் கடந்த 6 வருடங்களாக பின்பற்றி வருகிறேன்.

அண்மையில் மேட்டுப்பாளையம் சந்தை ஆய்வாளர் மூலமாக உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம் மற்றும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் இணைந்து செயல்படுத்தும் தமிழ்நாடு மற்றும் அதை சுற்றியுள்ள 13 சந்தைகளின் விவரங்களை தரும் தினசரி சந்தை நிலவரத்தைப் பற்றி தெரிந்து கொண்டேன். இந்த தகவல்கள் www.indg.in/india/market-information மற்றும் www.tnau.ac.in ஆகிய இணையதளத்தின் மூலமாக கிடைக்கின்றன. இந்த இணைய தளத்தில் எல்லா நாள்களின் சந்தை விவரங்களையும் காண முடியும். இந்த இணையதளம் நிறைய உபயோகமான தகவல்களை கொண்டுள்ளது. வியாபாரியின் பெயர், முகவரி, தொலைபேசி எண் மற்றும் அவர் கையாளும் பொருள்கள் ஆகிய விவரங்கள் உள்ளது. மேலும் என் அலைபேசி எண்னையும் சந்தை விவரங்களை பெறுவதற்காக இதில் பதிவு செய்து உள்ளேன். இப்பொழுது சரியாக 3 மணிக்கு குறுந்தகவல்கள் வந்து விடுகுிறது. இந்த குறுந்தகவல்களைப் பற்றி குறிப்பிட்டு செல்ல விரும்புகிறேன். இது ஒரு பொருளுக்கு 2 சந்தைகளின் விலை நிலவரங்களை கொண்டுள்ளது. இது மிக எளிமையாக அனைவரும் புரிந்து கொள்ளும் படியாகவும் உள்ளது.

 இந்த தகவல்களின் உதவியால் என்னால் எளிதாக சந்தைகளை தேர்ந்து எடுத்து காய்கனிகளை விற்பனை செய்ய முடிகிறது. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் விவசாயிகளுக்கு வழங்கும் இந்த சேவையை மதிக்கிறேன். ஒரு தரகராக நான் ஒரு விஷயத்தை குறிப்பிட்டு சொல்ல விரும்புகிறேன். வியாபாரிகளிடம் இருந்து தகவல்களை பெறுவது எளிதான காரியம் அல்ல. இந்த திட்டத்தில் பணிபுரியும் 13 சந்தை ஆய்வாளர்களையும் பாராட்டுகிறேன். இந்த குறுந்தகவல் சேவையை எங்கள் அனைவருக்கும் இலவசமாக அளிப்பதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

பெயர்: நிர்மல்
தொழில்: தரகர்
அனுபவம்: 6 வருடம்
முகவரி: சிறுமுகை, மேட்டுப்பாளையம்
அலைபேசி: 09865497088


என் வாழ்க்கைத்தரத்தை மாற்றிய தினசரி சந்தை நிலவரம்: ஓர் அனுபவம்

 

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியில் வசித்து வரும் P.வில்வராஜ் என்ற நான் எனது தந்தையார் காலந்தொட்டு எங்களது நிலத்தில் வாழை, நெல், மற்றும் பல காய்கறிகளை விவசாயம் செய்து வருகிறோம். நெல் மற்றும் வாழைகளை எங்களது நிலத்திலேயே வந்து மொத்த கொள்முதல் செய்து கொள்வர். ஆனால் காய்கறிகளை திருநெல்வேலி டவுண் நயினார்குளம் மார்க்கெட்டுக்கோ அல்லது பாளை காந்தி மார்க்கெட்டுக்கோ எடுத்து சென்று கடிஷன் ஏஜென்ட்களிடம் மொத்த விலைக்கு தந்து வந்து விற்பனை செய்து வந்தேன்.

தமிழக தென் மாவட்டங்களில் பல காய்கனி வணிக வளாக மையங்கள் மற்றும் சந்தைகள் இருந்தாலும் விவசாயிகளான எங்களுக்கு உரிய உள்கட்டடைப்பு வசதி முறைகள் மற்றும் ஊக்க திட்டங்களும் நடைமுறை அளவில் செயல்படவில்லை. நாங்கள் விளைவிக்கும் காய்கனிகளை உள்ளூர் வியாபாரிகளுக்கும் கமிஷன் கடைகளுக்கும் மொத்த விற்பனைக்கு அவர்கள் கூறிய விலைக்கு கொடுத்து வந்தோம்.

காய்கறிகளின் விலையை கமிஷன் வியாபாரிகளே நிர்ணயித்து வருகின்றனர். வெளி மாவட்டங்களின் காய்கறிகளின் உண்மையான விலை நிலவரம் எங்களுக்கு தெரியாததால் அவர்கள் நிர்ணயித்த விலைக்கே கொடுத்து வந்தோம். இந்நிலையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் விரிவாக்கத் துறையின் மூலம் தினசரி காய்கறிகளின் விலைநிலவரம் மாநிலத்தின் பல பகுதிகளில் உள்ளபடி தெரிந்து கொள்ள முடியும் என்பதை மார்க்கெட்டில் விலை நிலவரம் சேகரித்து வந்த project analyst மூலம் தெரிந்து கொண்டேன்.

இதன் மூலம் மாநிலத்தில் மற்றும்மல்லாது அருகில் உள்ள எர்ணாகுளம் மார்க்கெட் நிலவரமும் தெரிகிறது. நாங்கள் வாழைகளை கேரளாவிற்கு தான் மொத்த வியாபாரிகளுக்கு விற்று வந்தோம். தற்போது நாங்கள் வாழை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறோம். ஆதலால் இம்முறை எங்களுக்கு அதிக பயனாய் இருக்குமென நம்புகிறோம்.
நான் மற்றும் என்னை போன்ற விவசாயிகளின் முன்னேற்றத்திற்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் விரிவாக்க கல்வி இயக்ககம் மற்றும் உன்னத பணிப்பியல் வளர்ச்சி மையம் இணைந்து வழங்கும் தினசரி சந்தை நிலவரம் இத்திட்டத்தின் மூலமும் சுயநலமற்ற தமிழ்நாடு வேளாண் விஞ்ஞரிகளின் ஈடு இணையில்லாத அயராத உடைப்புமே ஆகும் என்பதை மனநிறைவோடு கூறி மகிழ்ச்சி அடைகிறேன்.

வரும் காலங்களின் தமிழகமட்டுமின்றி பிற மாநிலங்களின் விவசாய சந்தைகளின் தினசரி சந்தை நிலவரத்தையும் தெரிவித்தால் என்னை போன்ற பல விவசாய மக்களும் முனைப்போடு விவசாயம் செய்வதோடு அல்லாமல் வாழ்வில் பல முன்னேற்றங்கள் அடைவோம் என்பதை வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞரிகளுக்கு மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.


இது தாண்டா வெற்றியின் ரகசியம் - தினசரி சந்தை நிலவரம்

 

தினசரி சந்தை தகவல் திட்டமான விவசாயிகள் விற்பனை பற்றிய முடிவுகளை எடுக்க உதவுகிறது. ஏனெனில் இது மிகவும் கடினமான பணியாகும். ஆனால் தர்பொழுதைய காலங்களில் இத்திட்டத்தின் மூலம் விவசாயிகள் வெற்றிகரமான முடிவுகளை எடுக்க முடிகிறது. விவசாயிகள் குழுவாக சேர்ந்து முடிவுகளை எடுக்கும் பொழுது அவர்கள் ஊக்கமடைவதோடு பிரச்சனைகளையும் உறுதியான மனதோடு சந்திக்க முடிகிறது. மேலும் அவர்களின் திட்டம் வெற்றியடையும் பொழுது அவர்களுக்கு ஊக்கம் தறுவதாகவும் அமைகிறது. எதிர்காலத்தில் அவர்களுக்கு வரும் பிரச்சனைகளை தீர்க முடிவதுடன் அதற்கான தீர்வுகளையும் தங்களுக்குள் கண்டறிய முடிகிறது. சந்தை பற்றிய முடிவுகளை எடுக்க விவசாயிகள் அனைத்து தகவல்களையும் பற்றி அறிந்தவராக இருத்தல் அவசியம். தங்களுக்காக வாய்ப்புகளை பற்றியும் அறிந்திருக்க வேண்டும். தங்களின் சந்தை பற்றிய விவரங்களை மேம்படுத்திக் கொள்ள அவர்கள் விலகிக்க வேண்டும்.

தினசரி சந்தை நிலவரத்திட்டத்தின் மூலம் விவசாயிகள் சந்தை பற்றிய விவரங்களை அறிய முடிகிறது. விவசாயி R.சுப்புராஜ் என்பவர் ஒட்டன்சத்திரம் தாலுகா பெரிய சரத்துப்பட்டியல் வசித்து வருகிறார். இவர் தனது 5 ஏக்கர் நிலத்தில் வெங்காயம் மற்றும் வெண்டை பயிர்செய்து வருகிறார். சிலர் தினசரி சந்தை நிலவரத்தை பற்றி அறியாதவரை அருகில் உள்ள மதுரை மற்றும் கோவை சந்தைகளில் விலை நிலவரங்களை பற்றி அறியாதவராகவே இருந்தார். இவர் விற்பனை செய்வதை பற்றி எந்த ஒரு விபரமும் அறியாதவராகவே இருந்தார். தனது பொருள்கள் முழுவதையும் ஒட்டன்சத்திரம் சந்தையில் மட்டுமே விற்பனை செய்து வந்தார். இவர் சாந்திகிராம் பல்கலைகழகத்தில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்தின் கடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பின்புதான் தினசரி சந்தை நிலவரத் திட்டத்தை பற்றி அறிந்து கொண்டார்.

தினசரி சந்தை நிலவர தகவலைப்பற்றி தெரிந்து கொண்ட பின்பு அவர் ஒரு பயிருக்கு இரண்டு சந்தை நிலவரங்களை குறுந்தகவல்களாக பெறமுடியும் என்பதையும் அறிந்து கொண்டார். அவர் வெங்காயத்திற்கு கோவை மற்றும் மதுரை சந்தை நிலவரங்களை தேர்ந்தெடுத்துக்கொண்டு அவர்களின் சந்தை நிலவரங்களை தினசரி அலைபேசியின் வழியாக குறுந்தகவல்களாக பெற்றுக்கொண்டார். தினசரி சந்தை நிலவரத்திட்டமானது விவசாயிகளுக்கு சந்தை நிலவரங்களை மதியம் 2.00 மணிக்கு அனுப்புகிறது. திரு.கே.சுப்பிரமணி மிளகாய் கோவை மற்றும் மதுரை சந்தையின் விலை நிலவரங்களை அறிந்து கொண்ட பின்பு திரு.கே.சுப்பிரமணி தனது பொருள்களை எந்த சந்தையில் விற்பனை செய்வது என்பது பற்றி தெளிவாக முடிவிற்கு வந்தார்.
மேலும் திரு.கே.சுப்பிரமணி அவர்கள் தனது பொருள்களை விற்பனை செய்ய அந்த சந்தையின் ஆய்வாளரை தொடர்பு கொண்டு எந்த வியாபாரியிடம் தனது பொருள்களை விற்பனை செய்வது என்பது பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளவும் பரிந்துரை செய்கிறார்.

இந்த கூட்டங்களின் மூலம் இதில் பங்கு கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் கூட்டங்களை நடத்துவது என்பது முக்கியமானது. திரு.கே.சுப்பிரமணி அவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்களின் சந்தை நிலவரங்களை அறிந்து கொள்ள விரும்புவதாக கூறுகிறார்.

R.சுப்புராஜ்
பெரிய கரத்துப்பட்டி
ஒட்டன்சத்திரம் தாலுக்கா
திண்டுக்கல்
அலைபேசி: 9965242843


எனது விவசாய வாழ்விற்கு ஒரு திருப்புமுனையாக அமைந்த தினசரி சந்தை நிலவரம்

 


திருநெல்வேலி மாவட்டம் பேட்டை பகுதியில் வசித்து வரும் R.வள்ளிநாயகம் ஆகிய நான் கடந்த பலவருடங்களாக எனது நிலத்தில் கத்திரிக்காய், வெண்டை, புடலங்காய், சுரைக்காய், கொத்தவரை மற்றும் தக்காளி ஆகிய பயிர்களை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறேன். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் தினசரி சந்தை நிலவரம் (www.indg.in) ஏற்படுத்திய மாற்றம் மற்றும் எனது அனுபவங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

நான் கடந்த பல ஆண்டுகளாக விவசாயம் செய்கிறேன். நாங்கள் விவசாயம் செய்யும் பகுதியானது பாசன நீர்ப்பிடிப்பு பகுதி என்பதால் காய்கனிகள் மற்றும் கிழங்கு வகைகளையும் அதிகமாக பயிரிட்டுள்ளேன். ஜீன் - அக்டோபர் பருவத்தில் தக்காளி, கத்தரி அதிக அளவில் பயிரிட்டு நல்ல மகசூல் தந்த நேரத்தில் வடகிழக்கு பருவமழையால் அதிக அளவில் விளைந்த தக்காளி விலை போகாமல் நஷ்டமடைய நேர்ந்தது. குறிப்பாக அதிக விளைச்சல் தந்த தக்காளி அழுகிபோனதால் அவற்றை வீணாக ஆற்றில் போடவும் நேர்ந்தது. மேலும் அருகிலுள்ள மாவட்டங்களில் காய்கனிகளின் வரத்து குறைவினால் சந்தையில் விலையும் உயர்ந்தது.

தமிழக தென் மாவட்டங்களில் பல காய்கனி வணிக வளாக மையங்கள் மற்றும் சந்தைகள் இருந்தாலும் விவசாயிகளான எங்களுக்கு உரிய உள்கட்டமைப்பு வசதி முறைகள் மற்றும் ஊக்க திட்டங்களும் நடைமுறை அளவில் செயல்படுத்தப்படவில்லை. நாங்கள் விளைவிக்கும் காய்கனிகளை உள்ளூர் வியாபாரிகளுக்கும் கமிஷன் கடைகளுக்கும் மொத்த விற்பனைக்கு அவர்கள் கூறிய விலைக்கு கொடுத்து வந்தோம்.
நாங்கள் உற்பத்தி செய்யும் காய்கனிக்கு உண்மையான விலை என்னவென்று தெரியாமல் இருந்த எங்களுக்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வரிவாக்க கல்வி இயக்கத்தின் (SAMETI) சார்பில் அவர்கள் வழங்கிய வேளாண் மற்றும் தோட்டக்கலை விளைபொருட்களின் தினசரி சந்தை நிலவரம் (DMI) எங்களது விவசாய வாழ்விற்கு ஒரு திருப்புமுனையாகவும் அவர்கள் வழங்கிய தினசரி சந்தை நிலவர பட்டியல் எங்களது உழைப்பிற்கு பேருதவியாக அமைந்தது.

இந்த சமயத்தில் தான் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் விரிவாக்க கல்வி இயக்ககம் (SAMETI) சார்பில் மூலமாக கைபேசியில் சிறு தகவல் (SMS) வழியாக சென்னை - கோயம்பேடு, ஒசூர், கோவை, மதுரை, ஒட்டன்சததிரம், திருச்சி, திருநெல்வேலி போன்ற மிகபெரிய சந்தைகளின் தினசரி விலை நிலவரத்தினை (DMI) அறிந்து கொண்டதன் மூலம் இதுவரை நான் உற்பத்தி செய்து வந்த காய்கனிகளின் விலையை நானே நிர்ணயித்து எந்த ஒரு இடைதரகர்களின் இடர்பாடு இல்லாமல் உள்ளூர் சந்தைக்கும் அதிக அளவில் விளைந்த காய்கனிகளை தமிழகத்தின் பிற மாவட்டங்களில் உள்ள விவசாய சந்தைக்கும் நானே நேரிடையாக காய்கனிகளை வியாபாரம் செய்கிறேன்.

நான் மற்றும் என்னை போன்ற விவசாயிகள் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் விரிவாக்க கல்வி இயக்ககம் மற்றும் உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம் (C-DAC) இணைந்து வழங்கும் தினசரி சந்தை நிலவரம் (DMI) இத்திட்டத்தின் மூலமும் தன்னலமற்ற தமிழ்நாடு வேளாண் விஞ்ஞானிகளின் ஈடு இணையில்லா அயராத உழைப்புமே ஆகும் என்பதை மனநிறைவோடு கூறிக்கொள்வதில் பெருமிதமும் பெருமகிழ்ச்சியும் அடைகிறேன்.
வரும் காலங்களில் தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உள்ள விவசாய சந்தைகளின் தினசரி சந்தை நிலவரத்தினை அறிமுகப்படுத்தினால் நானும் என்னை போன்ற பல விவசாய மக்களும் இன்னும் முனைப்போடு விவசாயம் செய்வதோடு அல்லாமல் எங்கள் வாழ்வில் மேலும் பல முன்னேற்றங்கள் அடைவோம் என்று கூறி வேளாண் விஞ்ஞானிகளுக்கு மீண்டும் ஒரு முறை என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


கொச்சின் சந்தையின் மொத்த வியாபார தரகரின் வெற்றிக் கதை

 

என் வியாபார குறிப்பு

என் பெயர் ஹாஜி வயது 35. நான் மொத்த வியாபாரம் செய்து வருகிறேன். இதில் எனக்கு 10 வருட அனுபவமுள்ளது. என் வியாபார நேரம் சாலை 5 மணி முதல் மாலை 2 மணி வரை. என் வாடிக்கையாளர்கள். சில்லறை வியாபாரிகள் சிறு வணிகர்கள் உணவு விடுதியாளர்கள் மற்றும் பொது நுகர்வோர்கள்.

தினசரி சந்தை நிலவரத்தின் மூலமாக விசாலமான தகவல் தொடர்புகள்

நான் சரக்குகளை மேட்டுப்பாளையம், ஒட்டன்சத்திரம், புளியம்பட்டி, ஊட்டி, மைசூர், மற்றும் பெங்களூர், நாச்சிபாளையம் ஆகிய இடங்களிலிருந்தும் புனேவில் இருந்து பெரிய வெங்காயத்தையும் பெறுகிறேன். இதுவரை வியாபாரத்திற்கான சரக்குகளை பெற கமிஷன் ஏஜெண்ஸ் மற்றும் பல்வேறு கொள்முதல் மையங்களில் உள்ள இடைத்தரகர்கள் மூலமாக பெற்று வருகிறேன். ஆனால் இப்பொழுது தினசரி சந்தை நிலவர திட்ட இணைய தள வெளியீட்டிற்கு பிறகு எனக்கு விசாலமான தகவல் தொடர்புகள் உற்பத்தியாளர்களிடமிருந்தும் வியாபாரிகளிடமிருந்தும் கிடைத்துள்ளது. பல்வேறு சந்தைகளின் விலை நிலவரங்களையும் தெரிந்து கொள்ள முடிகிறது. காய்கனிகளின் விலையானது அதிக ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டது. மேலும் இது வரத்து மற்றும் தேவைகளைப் பொறுத்து முடிவு செய்யப்படுகிறது. தற்பொழுது எனக்கு முதன்மை உற்பத்தியாளர்களிடமிருந்து தொலைபேசி அழைப்பு வருகிறது. (உ.ம்) பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் நேரடியாக என்னை தொடர்பு கொண்டு நல்ல விலைக்கு பொருள்களை வழங்க தயாராக உள்ளார்கள். இது பரஸ்பரம் இருவருக்கும் நன்மையை அளிப்பதாக உள்ளது. சில சமயம் சில்லறை வியாபாரிகள் மற்றும் பொது நுகர்வோர்களும் நேரடி வியாபாரத்திற்காக என்னை தொடர்பு கொள்கிறார்கள். இந்த சேவையின் மூலம் ஒரே இடத்தில் அனைத்து விலை நிலவரங்களும் கிடைக்க செய்கிறது. சிறந்த தகவல் தொடர்பு மற்றும் வேகமான பரிமாற்றம் நேர சேமிப்பு, சிறந்த சேவை மற்றும் சரியான விலை நிலவரங்களை அளிக்கும் தினசரி சந்தை நிலவர திட்டத்திற்கு எனது நன்றி.

திரு. ஹாஜி
நிதியா கட்டிடம்
பெருமானூர்
கொச்சின்
அலைபேசி: 09895631377


கொச்சின் சந்தையின் மொத்த வியாபாரியின் வெற்றிக்கதை

 

என் வியாபார குறிப்பு

என் பெயர் சாமி வயது 28, பட்டதாரி. எனக்கு 10 வருட அனுபவம் உள்ளது. சந்தையின் பெயர் எர்ணாகுளம் சந்தை கேரள மாவட்டத்தில் எர்ணாகுளத்தில் பேசின் சாலையில் அமைந்துள்ளது. இங்கு மொத்த மற்றும் சில்லறை வியாபாரங்கள் நடைபெறுகிறது. நான் எர்ணாகுளத்தில் பேசின் ரோட்டில் உள்ள எர்ணாகுளம் சந்தை கடை உரிமையாளர்களின் கூட்டமைப்பிலும் உறுப்பினராக உள்ளேன். சந்தையின் முக்கியமான வியாபார நாள் திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகள். சந்தையின் வேலை நாள்கள் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகள்.

சந்தையின் வேலை நாள்கள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஞாயிறு விடுமுறை நாள். சந்தையின் வேலை நேரம் காலை 5 மணி முதல் மதியம் 2 மணி வரை மொத்த வியாபாரமும் இரவு 9 மணி வரை சில்லறை விற்பனையும் நடைபெறும். சந்தை நாள்களில் சுமார் 25 சரக்கு லாரிகள் (ஒரு வாரி சுமார் 12 டன் எடை கொண்டதாக இருக்கும்) வந்து செல்லும். கோவை, ஊட்டி, மேட்டுப்பாளையம் மற்றும் சத்தியமங்களம் பகுதியில் உற்பத்தி குறைவாக இருக்கும் சமயங்களில் வரத்து குறைவாக இருக்கும். சந்தை நாள்களில் சராசரியாக இருக்கும் சரக்குகளின் வரத்து பற்றிய விபரம். மேட்டுப்பாளையம் (6-8), ஒட்டன்சத்திரம் (5-7), புளியம்பட்டி (4-6), ஊட்டி / மைசூர் மற்றும் பெங்களூர் (4-7), ஒசூர் / நாச்சிபுரம் பகுதியில் இருந்து தக்காளி (2-3), புனேவில் இருந்து பெரிய வெங்காயம் (2).

சரக்குகள் வந்து சேரும் நேரம் மற்றும் இறக்கும் நேரம் காலை 5 மணி முதல் 7 மணி வரை. சரக்குகள் வந்து சேரும் நேரம், போக்குவரத்து நெரிசல் மற்றும் சோதனை சாவடிகளின் அனுமதி போன்றவற்றை பொருத்து மாறுபடும். கூட்டமைப்பு வசதிகளான ரோடு, பாதுகாப்பு இடம், தகவல் தொடர்பு, போக்குவரத்து தொழிலாளர்கள் வசதி ஆகியவையும் உள்ளது. தளவாடங்களைப் பொறுத்தவரை லாரிகள், மினி லாரிகள், மினி வேன்கள், மூன்று சக்கர வாகனங்கள் ஆகியவையும் உள்ளன. கொள்முதல் செய்பவர்கள் சில்லறை வியாபாரிகள், சிறு மற்றும் குறு வணிகர்கள் உணவு விடுதியாளர்கள் மற்றும் பொதுநுகர்வேர்கள் அடங்குவர்.
தினசரி சந்தை நிலவரத்தின் மூலமாக விசாலமான தகவல் தொடர்பு:
நான் பொதுவாக சரக்குகளை பெரும்பாலும் ஒட்டன்சத்திரம், மேட்டுப்பாளையம், பெங்களூர், ஒசூர், நாச்சிபாளையம் மற்றும் புனேவில் இருந்து கொள்முதல் செய்வேன். நான் சரக்குகளை கமிஷன் ஏஜெண்ட் மற்றும் பல்வேறு இடங்களில் உள்ள கொள்முதல் மையங்களில் உள்ள இடைத்தரகர்கள் மூலமாக கொள்முதல் செய்வேன். ஆனால் இப்பொழுது தினசரி சந்தை நிலவர இணைய தள வெளியீட்டிற்கு பிறகு எனக்கு விசாலமான தகவல் தொடர்புகள் உற்பத்தியாளர்களிடமும், வியாபாரிகளிடமும் ஏற்பட்டுள்ளது. என்னால் பல்வேறு சந்தைகளில் உள்ள புத்தம் புதிய காய்கனிகளின் விலை நிலவரங்களை அறிந்து கொள்ள முடிகிறது. இப்பொழுது நான் முதன்மை உற்பத்தியாளர்களிடமிருந்தும் பொருள்களை பெற முடிகிறது. (உ-ம்) வேறு மாநிலங்களை சாரந்த விவசாயிகள் பொருள்களை எனக்கு சரியான விலைக்கு விற்பனை செய்ய தயாராக உள்ளார்கள். இது பரஸ்பரம் இருவருக்கும் நன்மையை அளிக்க கூடியதாக உள்ளது. சில சமயங்களில் சில்லறை வியாபாரிகள் மற்றும் பொது நுகர்வோர்களும் நேரடி வியாபாரத்திற்கு என்னிடம் வருகிறார்கள் சிறந்த தகவல் தொடர்பு மற்றும் வேகமான பரிமாற்றம் நேர சேமிப்பு சிறந்த சேவை மற்றும் சரியான விலையை அளிக்கும் தினசரி சந்தை நிலவர திட்டத்திற்கு எனது நன்றி.

திரு.சாமி
ஐவ் வீதி
எர்ணாகுளம்
அலைபேசி: 09846907884


தக்காளி விற்பனையின் அனுபவம்

 

என் பெயர் மது. நான் கடந்த 4 வருடங்களாக துல்லிய பண்ணைய விவசாய தொழில்நுட்பத்தின் மூலமாக 1.5 ஏக்கர் தக்காளி பயிர் செய்து வருகிறேன். நான் தக்காளியை அரியலூர், திருச்சி மற்றும் அருகில் உள்ள சந்தைகளில் விற்று வருகிறேன். நான் தக்காளி விற்பனையில் எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

தினசரி சந்தை நிலவரம்

தினசரி சந்தை நிலவரம் தமிழ்நாடு வேளாண் பல்கலை கழகத்தின் வேளாண் விரிவாக்க துறை இயக்கத்தினால் உருவாக்கப்பட்ட மிகச் சிறந்த திட்டம் ஆகும். தமிழ்நாடு வேளாண் பல்கலை கழகத்தின் தினசரி சந்தை நிலவர சேவையின் மூலமாக எங்களின் பொருள்களை விற்பனை செய்வதில் அதிக தன்னம்பிக்கை அடைந்துள்ளோம்.

விற்பனை

இடைத்தரகர்களின் இடையூறுகளினால் என்னால் சந்தை பற்றிய விவரங்களை பெற முடிவதில்லை. இதன் காரணமாக எனது விளைபொருள்களை குறைந்த விலைக்கு விற்க வேண்டி இருந்தது. தினசரி சந்தை நிலவரத்தின் மூலமாக சந்தை தகவல்களை அறிந்த பின்பு எனக்கு எங்கு விற்பனை செய்வது எப்படி விற்பனை செய்வது என்பது பற்றிய தெளிவான விவரங்கள் எனக்கு தெரிந்தது. திருச்சி சந்தை ஆய்வாளர் மூலமாக எனது அலைபேசி எண்னை குறுந்தகவல் சேவையில் பதிவு செய்து கொண்டேன். நான் தக்காளிக்கு கோயமுத்தூர் மற்றும் கும்பகோணம் சந்தையின் தகவல்களை பெறுவதற்காக தேர்ந்தெடுத்துக் கொண்டேன்.

தமிழ்நாடு வேளாண் பல்கலை கழகத்தின் தினசரி சந்தை நிலவர திட்டத்தின் மூலம் திருச்சி சந்தையில் குறிப்பிட்டுள்ள விலைக்கே தற்பொழுது விற்று வருகிறேன். மேலும் எனது விளைபொருள்களை கும்பகோணம், தஞ்சாவூர், மற்றும் அருகில் உள்ள சந்தைகளிலும் விற்று வருகிறேன். இதன் மூலம் எனது லாபம் கணிசமாக அதிகரித்துள்ளது. இப்பொழுது கும்பகோணம், தஞ்சாவூர் மற்றும் அருகில் உள்ள சந்தைகளில் விற்பதன் மூலமாக எனக்கு ரூ.14.00 / கிலோ செலவுகள் உட்பட என்ற அளவில் லாபம் வருகிறது.

எதிர்காலம்

நான் தமிழ்நாடு வேளாண் பல்கலை கழகத்தை இன்னும் அதிக சந்தைகளின் விலை நிலவரங்களை தருமாறு கேட்டுக்கொள்கிறேன். தற்பொழுது நான் வெவ்வேறு இடங்களில் நிறைய விளைபொருட்களை விற்று வருகிறேன். இந்த பெருமை அனைத்தும் தினசரி சந்தை நிலவர திட்டத்தினையும், தமிழ்நாடு வேளாண் பல்கலை கழகத்தையும் சேரும்.
தமிழக்த்தின் அதிக சந்தைகளின் விலை நிலவரங்களை அலைபேசியில் குறுந்தகவல்களாக அனுப்பினால் எங்களைப் போன்ற விவசாயிகளுக்கு நன்மை அளிப்பதாய் அமையும்.
இத்தகைய தகவல்கள் ஏராளமான விவசாயிகளுக்கு உதவியாக உள்ளது. இத்தகைய தகவல்களை வழங்குபவர்களின் பணி போந்நுவதற்குரியது.
தினசரி சந்தை நிலவர திட்டத்தினை அறிமுகப்படுத்திய தமிழ்நாடு வேளாண் பல்கலை கழகம் பற்றிய உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம் ஆகியவற்றிற்கு எங்கள் இதயம் கனிந்த நன்றிகள்.

ஆ.மது
அரியலூர்
திருச்சி
அலைபேசி: 9655339117


தினசரி சந்தை நிலவரம் - எனது வாழ்க்கையில் ஏற்படுத்திய திருப்பு முனை

 

மதுரை மாவட்டம் கருமாத்தூர் பகுதியில் வசித்து வரும் K.மாரியப்பன் ஆகிய நான் கடந்த பல வருடங்களாக எனது நிலத்தில் கத்திரிக்காய், வெண்டை, சம்பங்கி, புடலங்காய், சுரைக்காய், கொத்தவரை மற்றும் தக்காளி ஆகிய பயிர்களை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறேன். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தினசரி சந்தை நிலவரம் (www.indg.in) ஏற்படுத்திய மாற்றம் மற்றும் எனது அனுபவங்களை மீண்டும் ஒருமுறை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.

தமிழக தென் மாவட்டங்களில் பல காய்கனி வணிக மையங்கள் மற்றும் சந்தைகள் இருந்தாலும் விவசாயிகளான எங்களுக்கு உரிய உள்கட்டமைப்பு வசதி முறைகள் மற்றும் ஊக்க திட்டங்களும் நடைமுறை அளவில் செயல்படுத்தப்படவில்லை. நாங்கள் விளைவிக்கும் காய்கனிகளை உள்ளூர் வியாபாரிகளுக்கும் கமிஷன் கடைகளுக்கும் மொத்த விற்பனைக்கு அவர்கள் கூறிய விலைக்கு கொடுத்துவிட்டு நாங்கள் விவசாயத்திற்கு முதலீடு செய்த தொகைக்கு கூடுதலாக சழல ஆயிரங்களை மட்டும் இலாபமாகவும் சில நேரங்களில் என்னவென்று தெரியாமல் இருந்த எங்களுக்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் விரிவாக்க கல்வி இயக்ககத்தின் (SAMETI) சார்பில் அவர்கள் வழங்கிய வேளாண் மற்றும் தோட்டக்கலை விளைபொருட்களின் தினசரி சந்தை நிலவரம் (DMI) எங்களது விவசாய வாழ்விற்கு ஒரு திருப்புமுனையாகவும் அவர்கள் வழங்கிய தினசரி சந்தை நிலவர பட்டியல் எங்களது உழைப்பிற்கு பேருதவியாக அமைந்தது.

நான் கடந்த 12 ஆண்டுகளாக விவசாயம் செய்கிறேன். நாங்கள் விவசாயம் செய்யும் பகுதியானது பாசன நீர்பிடிப்பு பகுதி என்பதால் காய்கனிகள் மற்றும் கிழங்கு வகைகளையும் அதிகமாக பயிரிட்டுள்ளேன். கரீஃப் பருவத்தில் (ஜீன் - அக்டோபர்) தக்காளி, கத்தரி அதிக அளவில் பயிரிட்டு நல்ல மகசூல் தந்த நேரத்தில் வடகிழக்கு பருவமழையால் அதிக அளவில் விளைந்த தக்காளி விலை போகாமல் நஷ்டமடைய நேர்ந்தது. குறிப்பாக அதிக விளைச்சல் தந்த தக்காளி அழுகிபோனது மட்டுமில்லாமல் அவற்றை வீணாக ஆற்றில் போடவும் நேர்ந்தது. மேலும் அருகிலுள்ள மாவட்டங்களில் காய்கனிகளின் வரத்து குறைவினால் சந்தையில் விலையும் உயர்ந்தது.

இந்த சமயத்தில் தான் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் விரிவாக்க கல்வி இயக்ககத்தின் (SAMETI) சார்பில் மூலமாக கைபேசியில் சிறு தகவல் (SMS) வழியாக சென்னை - கோயம்பேடு, ஒசூர், கோவை, மதுரை, ஒட்டன்சத்திரம், திருச்சி, திருநெல்வேலி போன்ற மிகபெரிய சந்தைகளின் தினசரி விலை நிலவரத்தினை (DMI) அறிந்து கொண்டதன் மூலம் இதுவரை நான் உற்பத்தி செய்து வந்த காய்கனிகளின் விலையை நானே நிர்ணயித்து எந்த ஒரு இடைதரகர்களின் இடர்பாடு இல்லாமல் உள்ளூர் சந்தைக்கும் அதிக அளவில் விளைந்த காய்கனிகளை தமிழகத்தின் பிற மாவட்டங்களில் உள்ள விவசாய சந்தைக்கும் நானே நேரிடையாக காய்கனிகளை வியாபாரம் செய்கிறேன்.

இதனால் சில ஆயிரங்களையும் சில நேரங்களில் நஷ்டத்தையும் சந்தித்து வந்த நான் மற்றும் என்னை போன்ற விவசாயிகளும் இனிமேல் ஆண்டுக்கு 1 முதல் 2 இலட்சங்களை பெறுவோம் என்றால் அது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் விரிவாக்க கல்வி இயக்ககம் மற்றும் இந்திய முன்னேற்ற நுழைவாயில் உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம் (C-DAC) இணைந்து வழங்கும் தினசரி சந்தை நிலவரம் (DMI) இத்திட்டத்தின் மூலமும் தன்னலமற்ற தமிழ்நாடு வேளாண் விஞ்ஞானிகளின் ஈடு இணையில்லா அயராத உழைப்புமே ஆகும் என்பதை மனநிறைவோடு கூறிக்கொள்வதில் பெருமிதமும் பெருமகிழ்ச்சியும் அடைகிறேன்.

வரும் காலங்களில் தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உள்ள விவசாய சந்தைகளின் தினசரி சந்தை நிலவரத்தினை அறிமுகப்படுத்தினால் நானும் என்னை போன்ற பல விவசாய மக்களும் இன்னும் முனைப்போடு விவசாயம் செய்வதோடு அல்லாமல் எங்கள் வாழ்வில் மேலும் பல முன்னேற்றங்கள் அடைவோம் என்று கூறி வேளான் விஞ்ஞானிகளுக்கு மீண்டும் ஒரு முறை என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

K.மாரியப்பன்
த/பெ கருப்பணன்
கீழப்பெருமாள்பட்டி
உசிலம்பட்டி (Tk)
மதுரை  (Dt)
9944862552


தினசரி சந்தை நிலவரத்தின் மூலம் குறிப்பிடத்தக்க மாற்றம்

 

என் பெயர் திரு.அழகர்சாமி நான் ஒசூர் சந்தையில் காய்கனி கடை வைத்துள்ளேன். எனக்கு 21 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் தக்காளி மற்றும் குடமிளகாய் பயிர்செய்து வருகிறேன். நான் எனது விளைபொருள்களை உள்ளூர் சந்தையில் விற்பனை செய்து வருகிறேன். ஆனாலும் என்னால் உற்பத்தி செலவுகளை விடவும் வருமானம் குறைவாகவே இருந்தது. அதனால் நான் எனது பொருள்களை சென்னை மற்றும் கோயமுத்தூர் சந்தைகளில் விற்க திட்டமிட்டேன். அப்பொழுது நான் அறிந்து கொண்டு எனது அலைபேசி எண்னை அதில் பதிவு செய்து கொண்டேன்.

இந்த திட்டத்தின் மூலமாக சென்னை மற்றும் கோயமுத்தூர் சந்தைகளின் விலை நிலவரங்கள் குறுந்தகவல்களாக கிடைப்பதால் என்னால் தினசரி விலை நிலவரங்களை தெரிந்து கொள்ள முடிகிறது. தினசரி சந்தை நிலவர இணைய தளத்தின் மூலமாக மொத்த வியாபாரிகளின் விபரங்களை தெரிந்து கொண்டு எனது விளைபொருள்களை அனுப்பி வருகிறேன். இப்பொழுது எனது வருமானம் மற்றும் விவசாயம் இரண்டும் மேம்பட்டுள்ளது மேலும் நிறைய நன்மைகளை அடைந்துள்ளேன்.

விற்பனை

நான் எனது பொருள்களை உள்ளூர் சந்தையில் விற்று வருகிறேன். ஆனால் என்னால் உற்பத்தி செலவுகளை கூட பெற முடியவில்லை. அதனால் எனது பொருள்களை சென்னை மற்றும் கோயமுத்தூர் சந்தைகளில் விற்க திட்டமிட்டேன். இப்பொழுது எனக்கு நல்ல லாபம் கிடைத்து வருகிறது.

வரும் காலங்களில்

  1. காய்கனிகளுக்கு ஒப்பந்த முறை விவசாயம்
  2. தனிநபர்களின் கணக்கில் பணத்தை செலுத்திவிடுதல்
  3. வேறு மாநில சந்தைகளையும் அறிமுகப்படுத்துதல் இந்த சேவைகள் எங்களில் சமூக நிலையை உயர்த்த உதவும்.

தினசரி சந்தை நிலவரம் மற்றும் துல்லிய பண்ணைய திட்டத்தை அறிமுகப்படுத்திய தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகளுக்கு எங்களின் மனமார்ந்த நன்றி.

திரு.அழகர்சாமி
டி.எம்.ஜி காய்கனி வியாபாரி கடை எண்:159
ஹட், வி.வி.ஏ, பாதாளப்பள்ளி
ஒசூர் - 635109


பெங்களூர்: தினசரி சந்தை நிலவரத்தின் வெற்றிக்கதை - கோளூர் விவசாயி


முன்னுரை

என் பெயர் திரு.பி.ரெடியுரப்பா, த/பெ பேயண்ணா, வயது 41 கோலூர் கிராமம், ஆந்திராகள்ளி அஞ்சல், தொத்த பாலாப்பூர் தாலுக்கா. இது தலைநகர் பெங்களுரில் இருந்து 50 கி.மீட்டர் தொலைவில் தொடர்பாலூர் தாலூக்காவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது. நான் பி.காம் முடித்தவுடன் வேலைக்கான வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் நான் விவசாயத்தை எனது தொழிலாக மேற்கொண்டேன். மேலும் நான் கடந்த 12 வருடங்களாக சிறப்பாக ஈடுபட்டு வருகிறேன்.

உற்பத்தி செய்யும் பயிர்கள்

எனது மொத்த விவசாய பூமி 12 ஏக்கர் இதில் 7 ஏக்கர் வறண்ட பூமி 5 ஏக்கர் பாசன பூமி இதற்கு ஆழ்துழாய் கிணறு மூலம் நீர்பாசனம் செய்து வருகிறேன். இந்த நிலம் கருப்பு மண் வகையை சார்ந்தது. நான் தக்காளி மற்றும் சோளத்தை அதிகமாக பயிர்செய்து வருகிறேன். தக்காளிக்கு நாம்தரி நிறுவனத்தின் விதைகளையே உபயோகித்து வருகிறேன். தக்காளியை அக்டோபர் மாதம் 1 ஏக்கரில் வரிசைமுறையில் நடவு செய்தேன் ஒரு மாதத்திற்கு பிறகு பார்களாக மாற்றி அமைத்தேன். நடவின் பொழுது அடியுரமாக பண்ணை உறக்கழிவுகளை அடியுரமாக போடப்பட்டது. ஒரு மாதம் கழித்து கலப்பு உரம் 17:17:17 100கிலோ / ஏக்கர் மற்றும் வேப்பம் புண்ணாக்கு 100கிலோ / ஏக்கர் என்ற அளவில் கொடுக்கப்பட்டது. மேலும் நடவு செய்த ஒரு மாதத்திற்கு பிறகு செடிகள் சாயாதவாறு பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டது. பூஞ்சாணம் மற்றும் புழுக்களின் தாக்கத்தை தடுக்க பயிர்பாதுகாப்பு மருந்துகளான பெலிஷ்டின் மற்றும் ரெட்டோமில் தெளிக்கப்பட்டது. நடவு செய்த 2 மாதங்களுக்கு பிறகு பழங்கள் வரத்தொடங்கின. அறுவடையானது கூலி ஆட்களைக் கொண்டு 3 நாட்களுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்பட்டது. நான் ஒவ்வொரு அறுவடையின் பொழுதும் 150 மமூட்டைகளை அறுவடை செய்தேன். அறுவடை தொடர்ந்து ஒரு மாதம் நடைபெற்றது.

விற்பனை

உற்பத்தி பணிகளை நிறைவு செய்தவுடன் பெரிய நடவடிக்கையான விற்பனை நடவடிக்கையை தொடங்கினே். விற்பனைக்கு நாங்கள் அருகில் உள்ள தொட்டப்பலூர் ஏபிஎம்சி சந்தையையே சார்ந்து இருந்தோம். சில சமயங்களில் எஸ்வந்பூர் சந்தைக்கும் பெங்களூரூ கே.ஆர் சந்தைக்கும் அனுப்பி வந்தோம். இந்த மூன்று சந்தைகளின் விலைகளும் வேவ்வேறாக இருந்த காரணத்தினாலும் என்னால் ஒவ்வொரு சந்தையின் விலை நிலவரத்தை அறிய முடியாத காரணத்தினாலும் நான் தக்காளியை விற்பனை செய்வதில் சிக்கலை சந்தித்து வந்தேன். பெரும்பாலான சமயங்களில் நான் உள்ளூர் சந்தையில் விற்பனை செய்து வந்த காரணத்தினால் குறைந்த லாபத்தையே பெற்று வந்தேன்.

தினசரி சந்தை நிலவரத்தினால் விவசாயம் இலாபகரமானது

தொட்டபாலுர் தோட்டக்கலை அலுவலர் கிவானத் மூலமாக கே.ஆர் சந்தை ஆய்வாளர் ‚காந்த் அவர்களை சந்தித்தேன் அவர் மூலமாக தினசரி சந்தை நிலவரத்தை பற்றி அறிந்து கொண்டேன். கே.ஆர் சந்தை ஆய்வாளர் ‚காந்த் அவர்கள் எங்கள் கிராமத்திற்கு தோட்டக்கலை அலுவலர் கிவானத் அவர்களுடன் வந்தபொழுது எனது தோட்டத்திற்கும் வந்தார்.
அவர் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் தினசரி சந்தை நிலவர இணைய தளத்தை எனக்கு அறிமுகப்படுத்தினார். தினசரி சந்தை நிலவரம் விவசாயிகளுக்கு எப்படி விற்பனை தொடர்பான சிக்கல்களை தீர்ப்பதற்கு உதவுகிறது என்பதையும் தினசரி சந்தை நிலவரத்தை உபயோகப்படுத்தல் அதிகவிலையுள்ள சந்தைகளின் விற்பனை செய்வதன் மூலமாக அதிக லாபம் பெறமுடியும் என்பதையும் தெரியப்படுத்தினார். மேலும் நான் கே.ஆர் சந்தையைப் பற்றி அதிக தகவல்களையும் தெரிந்து கொண்டேன். சந்தையின் அமைப்பு ஏலவகை, ஏலநேரம், பணப்பட்டுவாடா முறை போன்ற தகவல்களையும் பெற முடிந்தது. நான் தினசரி சந்தை நிலவரத்தை பற்றி நன்கு அறிந்து கொண்ட பின்பு நான் தொடர்ந்து இணையதளத்தை பயன்படுத்தி வந்ததோடு. உள்ளூர் சந்தை தொட்டபாலூர் ஏ.பி.எம்.சி சந்தை, எஸ்வற்பூர் சந்தை மற்றும் கே.ஆர் சந்தை பெங்களூர் விலை நிலவரங்களையும் ஒப்பிட்டு வந்தேன். தக்காளியின் விலையானது உள்ளூர் சந்தை மற்றும் எஸ்வற்பூர் சந்தைகளை விட பெங்களூர் கே.ஆர் சந்தையின் விலை அதிகமாக இருந்தது. இதனால் நான் பெங்களூர் கே.ஆர் சந்தைக்கு பொருள்களை அனுப்புவது சிறந்தது என்பதை உணர்ந்து கொண்டேன். மேலும் இப்பொழுது நான் முன்பைவிட அதிக வருமானம் அடைந்து வருகிறேன். மேலும் நான் விவசாயம் இலஙகாமானது என்பதை உணர்ந்து கொண்டேன். மேலும் தோட்டக்கலை பயிர்களை அதிகவிலையுள்ள சந்தைகளில் விற்பனை செய்வதுதான் சிறப்பானது என்பதை அறிந்து கொண்டேன்.

இது தினசரி சந்தை நிலவரத்தின் மூலமாக சாத்தியமானது.
இந்த இணையதளத்தின் உள்ள தகவல்கள் எனக்கு மிகவும் உபயோகமாக உள்ளது. இதில் மொத்த மற்றும் சில்லறை விலை நிலவரங்கள் இருப்பதால் சந்தையின் விலை நிலவரங்களை ஒப்பிட்டு பார்த்து அதற்கு ஏற்றார்போல் அறுவடை காலங்களை திட்டமிட முடிகிறது. நான் விவசாயம் முன்பைவிட லாபகரமாக இருப்பதை உணர முடிகிறது. தினசரி சந்தை நிலவரங்களின் இத்தகைய குறிப்பிடத்தக்க நன்மைகள் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.

தினசரி சந்தை நிலவரம் எனக்கு விவசாயத்தின் மீதும் சந்தை படுத்துவதன் மீதும் அதிக ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. நான் தினசரி சந்தை நிலவரம் வழங்கும் தகவல்களை தொடர்ந்து பயன்படுத்தி வருவேன். இந்த இணையதளம் மட்டுமல்லாமல் நான் தக்காளியின் தினசரி சந்தை நிலவரங்களை அலைபேசியில் குறுந்தகவல்களாக பெற்று வருகிறேன். நான் எனது கிராமத்திலுள்ள எனது விவசாய நண்பர்களுக்கும் தினசரி சந்தை நிலவரத்தின் இணைய தள சேவைகளையும் மற்றும் குறுந்தகவல் சேவைகளையும் உபயோகப்படுத்தி பயன்படுத்துமாறு பரிந்துரை செய்கிறேன்.

தினசரி சந்தை நிலவரம் விற்பனையில் விவசாயிகளின் கண்ணோட்டங்களை மாற்றியுள்ளது. மேலும் விவசாயிகள் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்திடம் மற்றும் தினசரி சந்தை நிலவரத்திட்டத்தின் விஞ்ஞானிகள் மூலமாக குறிப்பிடத்தக்க சேவைகளை பெற்றுள்ளார்கள். நான் எனது மனமார்ந்த நன்றியினை தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகம் மற்றும் தினசரி சந்தை நிலவர திட்டத்திற்கும் தெரிவித்து கொள்கிறேன்.

பி.ரெடியுரப்பா
த/பெ பேயண்ணா
டெட்டாபாளூர் தாலுகா
பெங்களூர் மாவட்டம்
கர்நாடகா
அலைபேசி: 09844313443


தினசரி சந்தை நிலவரம் :  சந்தை வாய்ப்புகளை அள்ளித் தரும் ஓர் வரப்பிரசாதம்

 

தினசரி சந்தை தகவல் திட்டமான விவசாயிகள் விற்பனை பற்றிய முடிவுகளை எடுக்க உதவுகிறது. ஏனெனில் இது மிகவும் கடினமான பணியாகும். ஆனால் தர்பொழுதைய காலங்களில் இத்திட்டத்தின் மூலம் விவசாயிகள் வெற்றிகரமான முடிவுகளை எடுக்க முடிகிறது. விவசாயிகள் குழுவாக சேர்ந்து முடிவுகளை எடுக்கும் பொழுது அவர்கள் ஊக்கமடைவதோடு பிரச்சனைகளையும் உறுதியான மனதோடு சந்திக்க முடிகிறது. மேலும் அவர்களின் திட்டம் வெற்றியடையும் பொழுது அவர்களுக்கு ஊக்கம் தறுவதாகவும் அமைகிறது. எதிர்காலத்தில் அவர்களுக்கு வரும் பிரச்சனைகளை தீர்க முடிவதுடன் அதற்கான தீர்வுகளையும் தங்களுக்குள் கண்டறிய முடிகிறது. சந்தை பற்றிய முடிவுகளை எடுக்க விவசாயிகள் அனைத்து தகவல்களையும் பற்றி அறிந்தவராக இருத்தல் அவசியம். தங்களுக்காக வாய்ப்புகளை பற்றியும் அறிந்திருக்க வேண்டும். தங்களின் சந்தை பற்றிய விவரங்களை மேம்படுத்திக் கொள்ள அவர்கள் விலகிக்க வேண்டும்.

தினசரி சந்தை நிலவரத்திட்டத்தின் மூலம் விவசாயிகள் சந்தை பற்றிய விவரங்களை அறிய முடிகிறது. விவசாயி சுப்பிரமணி என்பவர் ஒட்டன்சத்திரம் தாலுகா பெரிய சரத்துப்பட்டியல் வசித்து வருகிறார். இவர் தனது 5 ஏக்கர் நிலத்தில் மிளகாய் மற்றும் வெண்டை பயிர்செய்து வருகிறார். சிலர் தினசரி சந்தை நிலவரத்தை பற்றி அறியாதவரை அருகில் உள்ள மதுரை மற்றும் கோவை சந்தைகளில் விலை நிலவரங்களை பற்றி அறியாதவராகவே இருந்தார். இவர் விற்பனை செய்வதை பற்றி எந்த ஒரு விபரமும் அறியாதவராகவே இருந்தார். தனது பொருள்கள் முழுவதையும் ஒட்டன்சத்திரம் சந்தையில் மட்டுமே விற்பனை செய்து வந்தார். இவர் சாந்திகிராம் பல்கலைகழகத்தில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்தின் கடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பின்புதான் தினசரி சந்தை நிலவரத் திட்டத்தை பற்றி அறிந்து கொண்டார்.

தினசரி சந்தை நிலவர தகவலைப்பற்றி தெரிந்து கொண்ட பின்பு அவர் ஒரு பயிருக்கு இரண்டு சந்தை நிலவரங்களை குறுந்தகவல்களாக பெறமுடியும் என்பதையும் அறிந்து கொண்டார். அவர் மிளகாய்க்கு கோவை மற்றும் மதுரை சந்தை நிலவரங்களை தேர்ந்தெடுத்துக்கொண்டு அவர்களின் சந்தை நிலவரங்களை தினசரி அலைபேசியின் வழியாக குறுந்தகவல்களாக பெற்றுக்கொண்டார். தினசரி சந்தை நிலவரத்திட்டமானது விவசாயிகளுக்கு சந்தை நிலவரங்களை மதியம் 2.00 மணிக்கு அனுப்புகிறது. திரு.கே.சுப்பிரமணி மிளகாய் கோவை மற்றும் மதுரை சந்தையின் விலை நிலவரங்களை அறிந்து கொண்ட பின்பு திரு.கே.சுப்பிரமணி தனது பொருள்களை எந்த சந்தையில் விற்பனை செய்வது என்பது பற்றி தெளிவாக முடிவிற்கு வந்தார்.
மேலும் திரு.கே.சுப்பிரமணி அவர்கள் தனது பொருள்களை விற்பனை செய்ய அந்த சந்தையின் ஆய்வாளரை தொடர்பு கொண்டு எந்த வியாபாரியிடம் தனது பொருள்களை விற்பனை செய்வது என்பது பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளவும் பரிந்துரை செய்கிறார்.

இந்த கூட்டங்களின் மூலம் இதில் பங்கு கொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் கூட்டங்களை நடத்துவது என்பது முக்கியமானது. திரு.கே.சுப்பிரமணி அவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்களின் சந்தை நிலவரங்களை அறிந்து கொள்ள விரும்புவதாக கூறுகிறார்.

கே.சுப்பிரமணி
பெரிய கரத்துப்பட்டி
ஒட்டன்சத்திரம் தாலுக்கா
திண்டுக்கல்
அலைபேசி: 9442953448


நட்டத்திலிருந்து பாதுகாக்கும் பாதுகாவலன்

 

என் பெயர் சண்முக சுந்தரம். நான் விவசாய தொழிலை 1967 ஆண்டு தொடங்கினேன். விவசாயம் எனது குடும்பம் சார்ந்த தொழில். என்னுடைய அனுபவத்தைக் கொண்டு 1975-1980 ஆம் ஆண்டுகளில் விவசாயம் மிகவும் சிறப்பாக இருந்தது. அந்த கால கட்டங்களில் தண்ணீர் பற்றாக்குறை கூலி தொழிலாளர்கள் பற்றாக்குறை பெரிய சிக்கல்களோ இல்லாத காலம். ஆனால் தற்பொழுது இந்த நிலை மாறியுள்ளது. மக்கள் இதனால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. நான் இது பரம்பரை தொழில் என்பதால் இதில் ஈடுபட்டேன். ஆனாலும் இது என்னுடைய தொழிலை மேம்படுத்த உதவவில்லை.

எனது தோட்டம் பற்றிய விபரம்

மொத்தம் 45 ஏக்கர்
நீர் பிடிப்பு நிலம்: 30 ஏக்கர்
பாசணநிலம்: 15 ஏக்கர்
முக்கிய பயிர்கள்: மரவள்ளி, தானியங்கள், நிலக்கடலை
மரங்கள்:
நெல்லி: 165 மரங்கள்
பலா: 120 மரங்கள்
மா: 75 மரங்கள்
நிலம்: செம்மண்
பருவம்: ஜனவரி - டிசம்பர்
உரம்: குறைந்த பட்ச ரசாயணம்

தினசரி சந்தை திட்டத்தின் அலைபேசி சேவையின் உபயோகம்

நாங்கள் சந்தைக்கு தர்பூசணி, முழாம்பழம் போன்றவற்றை அனுப்பி வருகிறோம். கடந்த காலங்களில் விலையை பற்றி தெரியாததால் சந்தையில் எனது பொருள்கள் எந்த விலைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்பது தெரியாது. ஆனால் இப்பொழுது பல்வேறு சந்தைளின் விலை நிலவரங்களை அலைபேசியின் மூலமாகவே தெரிந்து கொள்ள முடிகிறது. இதன் மூலம் எங்களின் பொருள்களுக்கான சரியான விலையை சந்தையில் பேரம் பேசி சரியான விலையை பெற முடிகிறது.
எங்களைப் போன்ற விவசாயிகள் பொருள்களை நேரடியாக விற்பனை செய்ய விரும்புகிறோம். மேலும் தொடர்ச்சியான தகவல்கள் வேண்டும் அப்பொழுது தான் எங்கள் பொருள்களுக்கு அதிகவிலை கிடைக்கும் சமயங்களில் விலை நிலவரம் பற்றி முன் கணிப்பு இருக்குமானால் அது எங்களை நட்டத்திலிருந்து பாதுகாக்கும்.

ச.சண்முக சுந்தரம்
மைனர் பண்ணை
அரந்தாவபுரம் அஞ்சல்
அம்மா பேட்டை வழி
பாபனாசம் தாலுகா
தஞ்சாவுர்
தொலைபேசி: 9952205102


தினசரி சந்தை நிலவரம் : இலாபம் தரும் ஈட்டி தரும் ஓர் திட்டம்


என் பெயர் K.சதாசிவம். நான் நடுவலூர் கிராமத்தில் வசித்து விவசாயம் செய்து வருகிறேன். நான் சிறுவயதிலிருந்தே விவசாயம் செய்து வருகிறேன். என் தோட்டத்தில் பழம் மற்றும் காய்கறிகளை பயிர் செய்து வருகிறேன். குறிப்பாக சப்போட்டா, கொள்ளாவை பயிர் செய்து வருகிறேன். நான் மேலும் கத்தரிக்காயும் பயிர் செய்கிறேன். கத்திரியில் பவானி மற்றும் பச்சை நீள கத்தரிக்காயும் பயிர் செய்கிறேன். இதை எல்லாம் தலைவாசல் தினசரி காய்கறி சந்தையில் விற்று வருகிறேன். எனக்கு ஏற்கனவே தமிழ்நாடு வேளாண் துறையை பற்றி நன்கு தெரியும். நீங்கள் அறிவித்த முக்கிய சந்தைகள் பற்றி எனக்கு முன்பு ஆறு சந்தைகள் என தெரியும். இப்போது நீங்கள் அறிவித்த புதிய ஏழு சந்தைகள் மொத்தம் பதிமூன்று (13) முக்கிய சந்தைகள் உள்ளது என நீங்கள் நியமித்த பாலாஜி அவர்களிடம் தெரிந்து கொண்டேன். இணையதளம் மற்றும் கைப்பேசி மூலம் நீங்கள் அறிவிக்கும் முன்அறிவிப்பு மிகவும் பயனுள்ளதாக விவசாயிகளுக்கும் எனக்கும் அவசியமாக உள்ளது என கருதுகிறேன். இது எனக்கும் விவசாயிகளுக்கும் இலாபம் தரும் அறிய வாய்ப்பாக அமைகிறது.

இதனால் நான் மட்டும் அல்லாது வியாபாரிகள் indg பற்றிய தகவல்கள் அனைத்தும் அவசியமாக விவசாயிகளுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும் என்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். தலைவாசல் சந்தையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தமது காய்கறிகளை விற்பனை செய்கின்றனர். நீங்கள் தெரிவிக்கும் குறுந்தகவல் சற்று முன்பாக அனுப்பினால் உபயோகமாக இருக்கும்.
நான் தற்போது 1.00 ஏக்கரில் கொய்யா கனிகளை பயிர் செய்து வருகிறேன். எனக்கு முன்பு மிளகாய் பற்றி குறுந்தகவல் வந்து கொண்டு இருந்தது. தற்போது நான் கொய்யா நிலவரம் மாற்றிக்கொண்டு நிலவரத்தினை தெரிந்து வருகிறேன். நான் இத்தகவலை வைத்துக்கொண்டு மேலும் 3(மூன்று) ஏக்கர் பயிர் செய்யலாம் என முடிவெடுத்து இருக்கிறேன். எனக்கு மொத்தம் ஒன்பது (9) ஏக்கர் பரப்பளவு உள்ளது. நான் இதில் தென்னை, பாக்கு மற்றும் சப்போட்டா ஆகிய அனைத்தையும் பயிரிட போகிறேன்.
எனது சந்தேகத்தினை வேளாண் பல்கலைக்கழகத்தில் நிவர்த்தி செய்து வருகிறீர்கள். இது எனக்கு மிகவும் திருப்திகரமாக உள்ளது. இதை மக்கள் அறிந்து விவசாய பல்கலைக்கழகத்தின் நன்மைகளை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

நான் KVK அறிவிக்கும் கூட்டத்திற்கும் சென்று வருகிறேன். இதில் எல்லா சந்தேகங்களையும் நிவர்த்தி செய்கிறார்கள். விவசாயிகளுக்கு தினசரி நிலவரம் கைப்பேசிக்கு வருகிறது. இந்த நிலவரத்தினை ஆங்கிலத்தில் தெரிவிக்கிறீர்கள். இதை நான் மற்றும் சிலர் தெரிந்து கொள்கிறார்கள். ஆனால் படிப்பறிவில்லா விவசாயிகளால் அதன் ரகம் மார்க்கெட்டின் பெயர்கள் சரியாக தெரிவதில்லை. ஆகையினால் இதை தமிழில் தெரிவித்தால் பலர் தமிழில் தெரிந்து பயனடைவார்கள்.

நான் தற்போது விளைந்து வரும் கொய்யா இரண்டு முதல் மூன்று கூடைகளில் தலைவாசல் மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகிறேன். நான் மேலும் எனது தோட்டத்தில் விரிவுபடுத்தி ஏற்றுமதி செய்யலாம் என யோசித்து வருகிறேன். இதன் பயன் இன்றியமையாத பயனாக உணர்கிறேன்.
இதுபோன்று நான் மட்டும் அல்லாது எல்லா விவசாய பெருமக்கள் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பயன்பெற்று முன்னேற்றம் அடைவோம் என்று கூறி இந்த வாய்ப்பினை கொடுத்த எல்லா அதிகாரிகளுக்கும் எனது அன்பார்ந்த நன்றியினை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திற்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

K.சதாசிவம்
த/பெ கத்தாலை கவுண்டர்
வடக்கு காடு, நடுவலூர் (Po)
ஆத்தூர் (Tk), சேலம் (Dt) - 636112
செல்: 9443022026


தினசரி சந்தை நிலவரத்தால் மாறிய மாற்றம்

 

மதுரை மாவட்டம் கருமாத்தூர் பகுதியில் வசித்து வரும் V.பரமசிவம் ஆகிய நான் கடந்த பல வருடங்களாக எனது நிலத்தில் கத்திரிக்காய், வெண்டை, சம்பங்கி, புடலங்காய், சுரைக்காய், கொத்தவரை மற்றும் தக்காளி ஆகிய பயிர்களை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறேன். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தினசரி சந்தை நிலவரம் (www.indg.in) ஏற்படுத்திய மாற்றம் மற்றும் எனது அனுபவங்களை மீண்டும் ஒருமுறை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.
மதுரை மாவட்டத்தில் காய்கனிகளுக்கான தேவைப்பாடும் அதனைத் தொடர்ந்து தட்டுப்பாடும் அதிகரித்து வருகிறது. இதனால் காய்கனிகளின் விலை உள்ளூர் சந்தையிலும் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சென்ற 2009-ம் ஆண்டு அக்டோபர் - நவம்பர் மாதத்தில் சராசரியாக 1 முதல் 3 டன் வரை சம்பங்கி கத்தரிக்காய், வெண்டைக்காய், தக்காளி ஆகிய காய்கனிகளை எனது நிலத்தில் விளைவித்து உள்ளூர் சந்தைக்கும் கணிசமாக பிற சந்தைக்கும் ஏற்றுமதி செய்தேன். மற்ற சந்தைகளில் காய்கனிகளை விற்பனை செய்வதற்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் தெரிவித்த தினசரி சந்தை நிலவர (DMI) விலைப்பட்டியல் எனக்கு மிகப் பெரிய உதவியாக அமைந்தது.
நடப்பு ஆண்டில் மதுரை மாவட்டத்தில் ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான நான்கு மாத காலத்தில் சீதோஷ்ண மற்றும் தை முதல் சித்திரை மாத விழா நிலவரங்களும் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 2009-ம் ஆண்டு டிசம்பர் வரையில் தமிழ்நாட்டின் முக்கியமான காய்கனி சந்தைகளான கோயம்புத்தூர், ஒட்டன்சத்திரம், மதுரை ஆகிய சந்தைகளில் வெண்டைக்காய், கத்தரிக்காய், தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு போன்ற காய்கனிகளின் தேவைப்பாடும் விலையும் மிகவும் அதிகரித்திருந்தது. இந்த நிலையில் உள்ளூர் சந்தைகளிலும் காய்கனிகளின் விலை கடுமையாக உயர்ந்தது.
உள்ளூர் சந்தைகளில் கத்தரிக்காய், வெண்டைக்காய், வெங்காயம், பச்சை மிளகாய், முருங்கைக்காய், போன்ற காய்கனிகளின் வரத்து குறைவினால் சென்ற மாதங்களில் ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ.50, உருளைக்கிழங்கு ரூ.30, பச்சை மிளகாய் ரூ.20, தக்காளி ரூ.40, பீன்ஸ் ரூ.40, காரட் ரூ.40 க்கு விலை போனது. நடப்புச் சந்தையில் மட்டுமின்றி முன்பேர வர்த்தக சந்தைகளில் சமையல் பொருட்கள் மற்றும் காய்கனிகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த டிசம்பர் மாதத்தில் தக்காளி ஒரு மூட்டைக்கான (40 கிலோ வரை) விலை ரூ.1600 முதல் 2000 வரை இருந்தது. இது இன்றைய தேதியில் ரூ.1800 முதல் 2300 வரை இருக்கிறது. மேலும் நான் பயிரிட்டுள்ள பகுதிகளில் சம்பங்கி, கத்தரிக்காய், வெண்டைக்காய், தக்காளி ஆகிய காய்கனிகளின் அறுவடை நிறைவடைந்துள்ளது. இந்த நிலையில் விலை நல்ல அளவில் உயர்ந்துள்ளதால் நானும் என்னை போன்ற விவசாயிகளும் நாங்கள் விளைவித்த காய்கனிகளை உள்ளூர் சந்தைக்கும் பிற மாவட்டங்களின் சந்தைகளுக்கும் விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறோம். பிற மாவட்டங்களின் சந்தைகளில் காய்கனிகளை விற்பனை செய்வதற்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் தினசரி சந்தை நிலவரம் (DMI) எங்களது வியாபாரத்திற்கு மிகவும் இன்றியமையாததாக இருக்கிறது. எங்களது விவசாய உழைப்புக்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் உயிர் கொடுத்துள்ளது.
வரும் காலங்களில் தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உள்ள விவசாய சந்தைகளின் தினசரி சந்தை நிலவரத்தினை அறிமுகப்படுத்தினால் நானும் என்னை போன்ற பல விவசாய மக்களும் இன்னும் முனைப்போடு விவசாயம் செய்வதோடு அல்லாமல் எங்கள் வாழ்வில் மேலும் பல முன்னேற்றங்கள் அடைவோம் என்று கூறி வேளான் விஞ்ஞானிகளுக்கு மீண்டும் ஒரு முறை என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

V.பரமசிவம்
த/பெ A.வீரத்தேவர்
4/26, மொட்டையநாயக்கன்பட்டி
கருமாத்தூர் (Po)
உசிலம்பட்டி (Tk)
மதுரை  (Dt)
9943338147


தினசரி சந்தை நிலவரம் - ஓர் நம்பிக்கை தரும் தகவல் மையம்

 

என் பெயர் மகேந்திரன் நான் 12ம் வகுப்பு வரை படித்துள்ளேன். அண்மை காலமாகத்தான் நான் இதில் ஈடுபட்டு வருகிறேன். நான் அப்பாவை பின்பற்றி இந்த தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். நான் அனைத்து விதமான பணிகளையும் அப்பாவிடம் இருந்து கற்றுக்கொண்டேன். எங்களுக்கு நான்கு ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. 1 ஏக்கரில் குன்னம் வாழையும், 3 ஏக்கரில் கறிவேப்பிலையும் பயிர் செய்துள்ளோம். ஊடுபயிர் காலத்திற்கு ஏற்றார் போல் பயிர் செய்வோம்.

எப்பொழுது போல் ஒரு மாதத்திற்கு முன் நான் அருகில் உள்ள சந்தைக்கு எனது விளைபொருள்களை விற்பனை செய்ய சென்றபொழுது ஒரு வியாபாரியின் மூலம் மேட்டுப்பாளையம் சந்தை ஆய்வாளரை சந்தித்தேன். அப்பொழுது உன்னத கணிப்பியம் வளர்ச்சி மையம் மற்றும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் தினசரி சந்தை நிலவர திட்டத்தினையும் www.indg.in/india/market-information என்ற இணைய தளத்தை பற்றியும் அறிந்து கொண்டேன். என் வாழ்நாளில் முதன் முறையாக விவசாயிகளுக்காக இத்தகைய இணையதளம் இயங்கி வருவதைப் பற்றி கேள்விப்படுகிறேன். சந்தை ஆய்வாளரின் உதவியால் எனது அலைபேசி எண்னை குறுந்தகவல் பெறுவதற்காக பதிவு செய்து கொண்டேன். அதன் பின்பு தினசரி 3.00 மணிக்கு சரியாக தகவல்கள் BA-DMI என்ற பெயரில் வந்து விடுகிறது. இப்பொழுது நான் இரண்டு அலைபேசி எண்கள் மூலம் வாழை - குன்னம் மற்றும் கறிவேப்பிலை பற்றிய தகவல்களை பெற்று வருகிறேன்.

தரகர் மூலமாகவோ அல்லது நானோ பொருள்களை சந்தைக்கு எடுத்து சென்றால் அங்கே சரியான விலை கிடைக்க எந்த ஒரு நம்பகதன்மையும் இல்லை. ஆனால் இப்பொழுது அப்படி இல்லை அதனால் நான் சந்தைக்கு விளைபொருள்களை எடுத்துச் செல்கிறேன்.

எனது வெற்றி

பெரும் பாலான சமயங்களில் நான் அதிக லாபம் பெறுவதற்காக வெளியில் உள்ள சந்தைகளுக்கே செல்வேன். ஆனால் என் அப்பா என்னை நம்புவது இல்லை. ஆனால் இப்பொழுது தினசரி சந்தை நிலவர திட்டததின் குறுந்தகவல் மூலமாக அப்பா என்னை நம்புகிறார். விலையைப் பொறுத்து இருவரும் மேட்டுப்பாளையம் வாழைப்பழ சந்தையை தேர்ந்தெடுத்தோம். சந்தை வாரத்தில் இரண்டு நாள்கள் (புதன் மற்றும் ஞாயிறு) மட்டுமே செயல்படும். நாங்கள் 80 வாழைத்தார்களை ஞாயிற்றுகிழமை சந்தைக்கு எடுத்து சென்றோம். ஏலம் காலை 10 மணிக்கு தொடங்கியது. அரைமணி நேரத்திலேயே அனைத்து வாழைகளும் விற்றுவிட்டது. பெரும் பாலான வாழை பழங்கள் முதல் மற்றும் 2ம் தரத்தில் விற்பனை செய்யப்பட்டது.

  • வாழைப்பழத்திற்கு கிடைத்த அதிகபட்ச விலை ரூ.22.00 / கிலோ
  • ஒரு தாரின் எடை: ரூ.12.00 / கிலோ
  • மொத்த தொகை: 18823

தினசரி சந்தை நிலவர திட்டத்திற்காக பணிபுரியும் அனைத்து அலுவலர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

பெயர்: மகேந்திரன்
தொழில்: விவசாயி
முகவரி: நால்ரோடு,
அன்னூர் மெயின் ரோடு,
மேட்டுப்பாளையம்
அலைபேசி: 09787677225


தினசரி சந்தை நிலவரம்: அதிக வருமானம் பெற உதவும் வழிகாட்டி

 

முன்னுரை

என் பெயர் திரு.விருபக்ஷி, த/பெ எண்.சந்திரசேகரப்பா, வயது 42 கோலூர் கிராமம், ஆந்திராகள்ளி அஞ்சல், தொத்த பாலாப்பூர் தாலுக்கா. இது தலைநகர் பெங்களுரில் இருந்து 50 கி.மீட்டர் தொலைவில் தொடர்பாலூர் தாலூக்காவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது. நான் 8ம் வகுப்புவரை படித்துவிட்டு பின்பு விவசாயத்தில் ஈடுபட ஆரம்பித்தேன். நான் இதில் 28 வருடங்களாக விவசாயம் மேற்கொண்ட போதிலும் கடந்த 10 வருடங்களாக சிறப்பாக செயல்பட்டு வருகிறேன்.

உற்பத்தி செய்யும் பயிர்கள்

எங்களுக்கு 10 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அந்த 10 ஏக்கர் முழுவதும் நான் ஆழ்துளை கிணறு மூலமாக திரிபாசனம் செய்து வருகிறேன். எனது நிலம் இரண்டு வகையான மண் வகையைக் கொண்டது ஒன்று செம்மண்பூமி- 6 ஏக்கர், மற்றொன்று மணல் பாங்கான பூமி அது 4 ஏக்கர். இதில் முக்கியமாக பயிர் செய்வது வாழை, தீவனப்பயிர்கள் மற்றும் கிட்ரியோடோரா. எனது 10 ஏக்கர் நிலத்தில் 4 ஏக்கர் வாழை, 3 ஏக்கர் தீவனப்பயிர்கள் மற்றும் 3 ஏக்கர் சிட்ரியோடோரா உள்ளது. வாழை முக்கியமான பொருளாதார பயிர் ஆகையால் அதிக முக்கியத்துவம் கொடுத்து மணல் பாங்கான பூமியில் பயிர் செய்து வருகிறேன். ஜி - 9 ரக வாழையை தேர்வு செய்து தேவன் ஹல்லியில் உள்ள காய்களி பயோடெக் நிறுவனத்திடமிருந்து ஒரு நாற்று 12 ரூபாய் உன்ற விகிதத்தில் வாங்கி பிப்ரவரி - மார்ச் மாதங்களில் நடவினை மேற்கொண்டேன். நடவிற்கு முன்னால் சட்டி கலப்பை கொண்டு நிலத்தை உழுது 2 x 2 என்ற அளவில் குழி எடுத்து 6 x 7 என்ற இடைவெளிகளில் ஒரு ஏக்கரில் 1000 கன்றுகளை நடவு செய்தேன்.

பண்ணை கழிவு குப்பையினை 1 ஏக்கருக்கு 10 வண்டி என்ற அளவில் செடி நடவு செய்த 4,5 நாளில் வயலில் ஈட்டேன். பின்பு வேப்பம் புண்ணாக்கு செடிக்கு 1/2 கிலோ என்ற விகிதத்தில் 45ம் நாளில் கொடுக்கப்பட்டது. பயிர் வளரும் பருவத்தில் பொட்டாஷ் மற்றும் டி.ஏ.பி 50 கிராம் / பயிருக்கு என்ற அளவில் கொடுக்கப்பட்டது. 17:17:17 - 1/2 கிலோ பயிருக்கு என்ற அளவில் பழங்கள் வரும் சமயங்களில் கொடுக்கப்பட்டது. 2-3 தடவை பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டது. எம்.45 பவுடர் மற்றும் டோஷ் போன்ற மருந்துகளை தெளித்தேன். பெறும் பாலான நேரங்களில் எனது குடும்ப உறுப்பினர்களே விவசாய பணிகளை மேற்கொண்டனர். தேவைப்பட்ட நேரங்களில் நாங்கள் வெளியில் இருந்து தொழிலாளர்களை அமர்த்தினோம். 11-12 மாதங்களுக்கு பிறகு பழங்கள் அறுவடைக்கு வந்தன.

விற்பனை

நான் எனது பொருள்களை டெட்டாபலப்பூர் வாழை மண்டியில் விற்றுவந்தேன் மண்டியின் உரிமையாளர்கள் எனது பொருள்களுக்கு விலையை நிர்ணயிப்பதால் விற்பனை முழுவதும் அவர்களின் கையில் இருந்தது. விளைபொருட்களின் வரத்து அதிகமாக இருக்கும் சமயங்களில் அவர்கள் விலையை குறைத்து விடுவார்கள். தேவை அதிகரிக்கும் சமயங்களில் கூட அதிக விலையைப்பெற முடியாது.

விவசாயம் தினசரி சந்தை நிலவரத்தின் மூலமாக லாபகரமானது

இந்த தலைப்பிற்கு நான் தினசரி சந்தை நிலவரத்தினை மேற்கொள் காட்ட விரும்புகிறேன். நான் டோட்டபாலூர் மாநில தோட்டக்கலை துறை அலுவலகத்திற்கு அடிக்கடி சென்று வருவேன். ஒரு நாள் நான் கே.ஆர் சந்தை ஆய்வாளர் ‚காந்த்துடன் தோட்டக்கலை அலுவலர் சிவ ஆனந்து அவர்களையும் சந்தித்தேன். அவர் எனக்கு தினசரி சந்தை தகவல் முறையான அறிமுகப் படுத்தினர். இது விவசாயிகளுக்கு மிகவும் உபயோகமானது. மேலும் அவர் தினசரி சந்தைதகவல்களை இணையதளம் வழியாக எப்படி பெறுவது என்பது பற்றியும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் இ.விரிவாக்கம் பற்றியும் அது விவசாயிகளின் நலனுக்காக எப்படி செயல்பட்டு கொண்டு இருக்கிறது என்பது பற்றியும் கூறினார். அவர் எனது அலைபேசி வழியாக குறுந்தகவல்களை பெறுவது பற்றியும் கூறினார். இப்பொழுது நாான் வாழையில் மொத்த மற்றும் சில்லறை விலையினை பெற்று வருகிறேன். இதுமட்டும் இல்லாமல் மேலும் சில உபயோகமான தகவல்களை நான் அறிந்து கொண்டேன். கே.ஆர். சந்தையின் தினசரி நடவடிக்கைகளான சந்தையின் வகை ஏலவகை ஏலநேரம் மற்றும் பணம் வழங்கும் முறை போன்றவற்றையும் அறிந்துகொண்டேன். அதுமுதல் நான் உள்ளூர் சந்தை மற்றும் கே.ஆர் சந்தையின் விலையை ஒப்பிட தொடங்கிவிட்டேன். இரண்டு சந்தையின் விலைகளுக்கும் வேறுபாடு இருந்தது.

பின்னர் நான் கே.ஆர்.பெங்களூர் சந்தையின் விலை அதிகமாக இருக்கும் பொழுது எனது பொருள்களை அந்த சந்தைக்கு அனுப்ப தொடங்கினேன். இதன் விளைவு நான் முன்பை காட்டிலும் அதிக லாபம் பெற முடிந்தது. பின்பு நான் விவசாயமானது பொருள்களை அதிகவிலை கிடைக்கின்ற சந்தையில் விற்பனை செய்யும் பொழுது லாபகரமானது என்’பதை அறிந்து கொண்டேன். இது தினசரி சந்தை நிலவர இணைய தளத்தினால் உபயோகமானது மேலும் நான் தினசரி குறுந்தகவல்களை பெற்று வருகிறேன். இந்த தினசரி சந்தை நிலவரம் அதிக வருமானம் பெற உதவுகிறது.

இணையதளம் மூலமாக பெறும் இத்தகைய தகவல்கள் எங்களுக்கு மிகவும் உபயோகமானதாக உள்ளது. இதில் மொத்த மற்றும் சில்லறை விலையும் உள்ளது. நாங்கள் நல்ல விலை கிடைக்கும் சமயங்களில் அறுவடையினை மேற்கொள்கிறோம். இதனால் விவசாயம் முன்பை விட லாபகரமானதாக உள்ளது. எனது வாழ்க்கை தரம் உயர்ந்துள்ளது. எதிர்காலத்தில் நான் தினசரி சந்தை நிலவரத்தையும் அதன் சேவைகளையும் நன்கு பயன்படுத்திக் கொள்வேன். நான் எனது கிராமத்தில் உள்ள எல்லா விவசாயிகளுக்கும் இதனை பரிந்துரை செய்தேன். நான் கோவை வேளாண் பல்கலைக்கழகத்திற்கும் தினசரி சந்தை நிலவரத்திற்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

கி.விருபக்ஷி
த/பெ எண்.சந்திரசேகரப்பா
கேலூர்
ஆந்திராகள்ளி அஞ்சல்
தொத்த பாலாப்பூர் தாலுக்கா
பெங்களூர் மாவட்டம்
கர்நாடகா
அலைபேசி: 09008802811


தினசரி சந்தை நிலவரம் ஏற்படுத்திய மாற்றம் மற்றும் எனது அனுபவம்

 

என் பெயர் ஆர்.கே.விஜய்அருண் நான் பொன்னொலி நகர் கிராமத்தில் வசித்து விவசாயம் செய்து வருகிறேன். இதற்கு முன்னால் 14 வருடம் தொடர்ந்து 1991 இல் இருந்து 2007 வரை விதை பருத்தி 5 ஏக்கர் பரப்பளவில் பயிர் செய்து வந்தேன். இப்போது தோட்டத்தில் சில வருடங்களாக “கத்தரி” பயிர்செய்து வருகிறேன். சற்று முன்னால் “வரி கத்தரிக்காய்” மகசூல் செய்தேன். அதை என் கிராமத்திற்கு அருகே உள்ள “தலைவாசல் தினசரி காய்கறி சநதையில் விற்று வந்தேன். அதை வெளிமார்கெட்டின் வினா நிலவரம் தெரியாமலும் மற்றும் கத்திரியில் வேறு ரகம் பற்றிய தகவல் எதையும் தெரியாமல் இருந்ததனாலயும் இங்கு அதிகம் விற்கும் வரிக்காய் மட்டும் பயிர் செய்து இலாபம் பெற முடியாமல் தலைவாசல் சந்தையில் விற்று வந்தேன்.

நான் காய்களை விற்கும் போது “வேளாண் மற்றும் தோட்டக்கலை விளை பொருட்களின் தினசரி சந்தை நிலவரத்தை பற்றி கேள்விபட்டேன். இந்த தொடர்பை எப்படி பெறுவது என்று விசாரித்த போது திரு.பாலாஜி அவர்களை சந்தித்தேன். என்னுடைய சந்தேகத்தினை அவரிடம் நிவர்த்தி செய்து கொண்டேன். பிறகு இணையதளம் மற்றும் குறுந்தகவல் மூலம் எல்லா வசதிகளும் உள்ளது. ஆகவே நீங்கள் இவற்றின் மூலமாக பல்வேறு சந்தை நிலவரத்தினை தெரிந்து கொள்ளலாம் என அறிமுக படுத்தினார். இது எனக்கு மிகவும் பயனுள்ளதாக தெரிந்தது. நான் இணையதளம் மூலமாக காணமுடியாததால் குறுந்தகவல் முறை எனக்கு அவசியமாக காணப்பட்டது.

இதனால் நான் மற்ற சந்தை நிலவரத்தினையும் அறிய எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை பயன்படுத்த இந்த ஆண்டு நான் “பவானி” என்ற கத்தரி வகையை நான் முதன் முதலில் இங்கு பயிர் செய்தேன் ஆனால் இங்கு என் கிராமத்தில் வேறுயாரும் இக்கத்தரி வகையை பயிர் செய்வதில்லை மற்றவர்களும் இந்த வகை “பவானி” கத்திரியை பயிர் செய்தால் தலைவாசல் மார்கெட்டில் விற்க முடியாது என்று சிலர் என்னிடம் சொன்னார்கள். நான் இதற்கு முன்பே எங்கு விற்க முடியும் என்று அறிந்ததினால் என்னுடைய தோட்டத்தில் 4.5 ஏக்கர் “பவானி” கத்தரிக்காயை பயிர் செய்தேன். இக்குறுந்தகவளை வைத்துக் கொண்டு (சிதம்பரம், விழுப்புரம் விருத்தாசலம் மற்றும் திருச்சி) ஆகிய முக்கிய ஊர்களில் அதிகமாக விற்பனை ஆகிறது என மற்ற வியாபாரிகளின் மூலமாக அறிந்து கொண்டேன்.

இதற்கிடையில் ஒட்டன்சத்திரம், திருச்சி, கும்பகோணம், பண்ருட்டி ஆகிய சந்தை நிலவரம் நீங்கள் அறிமுகப்படுத்தியது. எனக்கு மிகவும் பொருத்தமாக அமைந்துவிட்டது. இது மட்டும் அல்லாமல் நான் மற்றும் என்னுடைய நண்பர்களின் தோட்டத்தில் குறிப்பாக (ஜெயவேல், மணி, ஜெகதீஸ் மற்றும் சில விவசாயிகள் அவர் அவர்களும் சுமார் 1.5 ஏக்கர் பரப்பளவில் “பவானி” குண்டுகாயை பயிர் செய்து உள்ளோம். நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த குறுந்தகவளை பயன்படுத்தி மொத்த விலைக்கு ஒன்று சேர்ந்து செல்ல வசதியாக இருக்கிறது. அதனால் தினம் தினம் தலைவாசல் தினசரி சந்தைக்கு வருவதை குறைத்துக் கொண்டு மொத்தமாக (பண்ருட்டி, சிதம்பரம், மற்றும் திருச்சி) சந்தைக்கு விலை நிலவரத்திற்கு ஏற்றவாரு அனுப்பியதால் எனக்கும் மற்றும் என்னுடைய நண்பர்களுக்கும் செலவு குறைவாகவும் அதிக இலாபம் பெற வாய்பாக உள்ளது.
நான் 4.5 ஏக்கரில் பயிர் செய்ததில் கிடைத்த வருமானம் மற்றும் செலவினை கிலோ கணக்கில் கீழ்கண்டவற்றில் கூறுகிறேன்.
உற்பத்தி செலவு - 1கிலோ - 2.60 ரூபாய்
தின பரிப்பு செலவு - 1கிலோ - 1.00 ரூபாய்
கொண்டு செல்லும் சந்தை செலவு - 1 - 65 பைசா
மொத்தம் = 4.25
நான் தினந்தோரும் சுமார் 850 கிலோவில் இருந்து 1050 கிலோ வரை ஏற்றுமதி செய்தேன் எனக்கு 1 ஏக்கரில் மட்டும் இதுவரை 40,000 இலாபம் கிடைத்துள்ளது. தற்போதும் விளைந்து வருகிறது மற்றும் எனக்கும் என்னை போன்ற விவசாயிகளுக்கும் இந்த குறுந்தகவல் தொடர்ந்து கிடைக்க “தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத்திடம் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலை்க்கழத்திற்கு ஓர் முக்கிய வேண்டுகோள்

அதாவது எனக்கும் மற்ற விவசாயிகளுக்கும் குறுந்தகவலில் ஓர் காய்கறி நிலவரத்தினை மட்டும் தெரிவிக்கிரீர்கள் தயவு கூர்ந்து விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப மற்ற குறிப்பிட்ட காய்கறி நிலவரத்தினையும் ஒரே கைப்பேசிக்கு அனுப்பினால் நானும் மற்றும் அனைத்து விவசாயிகளும் அதிக பயனடைய வாய்ப்பு உள்ளது. எனவே எனது வேண்டு கோளை நிவர்த்தி செய்து கொடுக்குமாறு மிகவும் பணிவன்புடன் கேட்டுக்கொண்டு என்னுடைய மகிழ்ச்சியினையும் பகிர்ந்து கொண்டு வாய்பளித்த “தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலை்க்கழகத்திற்கு என் மணமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

R.K.N விஜய் அருண்
K K. தோட்டம்
பொன்னொலி நகர்
வரகூர் அஞ்சல்
ஆத்தூர் (TK), சேலம் (DT)
செல்: 9488542352/ 9486791182


தினசரி சந்தை நிலவரம் ஏற்படுத்திய வியத்தகு மாற்றம்

 

நான் தஞ்சாவூர் மாவட்டம் பட்டீஸ்வரம் கிராமத்தில் வசிக்கும் சிறு விவசாயி. எனக்கு ஒரு ஏக்கர் நஞ்சை நிலம், 50 செண்ட் வாழைத்தோட்டம் மற்றும் ஒரு ஏக்கர் காய்கறித் தோட்டமும் உள்ளது. நஞ்சையில் இருபோக நெல் சாகுபடியும், கோடை நெல் தரிசில் உளுந்து பயிரும், வாழைத்தோட்டத்தில் பூவன், மொந்தன், மற்றும் கற்பூரவல்லி வாழை இரகங்களும் தோட்டக்காலில் கத்தரி, வெண்டை, புடல் ஆகிய காய்கறிகள் ஒவ்வொன்றும் 30 செண்ட் அளவிலும் கீரை 10 செண்டிலும் சாகுபடி செய்து வருகின்றேன்.

பொதுவாக நானும் என்னைப்போன்ற சிறு மற்றும் குறு விவசாயிகள் தங்கள் நிலங்களில் சாகுபடி செய்யப்படும் காய்கறிகளையும், மலர்கள், வாழைக்காய் மற்றும் வாழை இலைகள், தேங்காய்கள் ஆகியவற்றை தினந்தோறும் அதிகாலை கும்பகோணம் நேரு மொத்த விலை அங்காடிக்கு எடுத்து சென்று, மொத்த வியாபாரிகள் அன்றாடம் நிர்ணயம் செய்யும் விலைக்கு விற்று வருகின்றோம். விற்ற காய்கறிக்குரிய தொகையை காய்கறிகள் விற்ற பிறகு அன்று மாலையோ அல்லது அடுத்த நாள் காய்கறிகள் அங்காடிக்கு கொண்டு செல்லும் பொழுதோ, மொத்த வியாபாரிகளிடமிருந்து பெற்று வருகின்றோம். இது தற்பொழுது இங்கு நடைமுறையிலுள்ள பழக்கம்.

சென்ற மாதம் கும்பகோணத்தில் பணியாற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலை்க்கழக காய், கனி, சந்தைகளின் விலை மதிப்பீட்டாளர் முனைவர்.க.நடராஜன் அவர்கள் எங்கள் கிராமத்திலுள்ள காய்கறி, மற்றும் மலர்கள் பயிரிடும் விவசாயிகளை அணுகி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலை்க்கழகத்தில் செயல்பட்டு வரும் மேற்கூறிய திட்டத்தைப்பற்றி தெரிவித்து அன்றைய தினமலரில் வெளிவந்த பல்கலைக்கழக செய்தியினையும் தெரிவித்தார். எங்கள் ஊரில் கணினி வைத்திருப்பவர்களிடமிருந்து பல்கலைக்கழக காய்கறிகளின் விலைப்பட்டியல் வெளியிடப்படும் இணையத்தளத்தின் மூலம் அன்றாட விலைப்பட்டியலை தெரிந்து கொள்ளும்படியும் தெரிவித்தார். மேலும் அவரே எங்கள் கைப்பேசியின் எண்களை பெற்றுசென்று, அன்றாடம் அவர் எங்கள் காய்கறிகளின் விலையை தெரிந்து கொள்வதுடன் திருச்சி சந்தையின் விலைகளையும் தெரிவிப்பார்கள்.

மேலும் எங்கள் கைப்பேசி எண்களை பதிவு செய்து கொண்டு தினந்தோறும் ஒரு காய்கறியின் இரண்டு சந்தைகளின் விலையை சிறு தகவலாக அனுப்ப ஏற்பாடுகள் செய்துள்ளார். இந்த நல்ல திட்டத்தின் பலனை அறிந்து கொண்டுள்ள என் போன்ற சிறு மற்றும் குறு விவசாயிகள் தற்பொழுது புதிதாக கைபேசிகள் வாங்கி அவற்றின் எண்களை முனைவர் நடராஜன் அவர்களிடம் பதிவு செய்துள்ளார்கள். தற்பொழுது ஒரு சிலருக்கு காய்கறிகளின் விலைப்பட்டியல் சிறுதகவலாக வரத்தொடங்கியுள்ளது.
தற்பொழுது எங்கள் கிராமத்தை சுற்றியுள்ள மற்ற கிராமங்களிலும் விவசாயிகள் இந்த பலனை அடைய முயற்சித்துள்ளார்கள். இந்த நல்ல திட்டம் தொடர்ந்து செயல்பட வேண்டும். மேலும் இது ஒருங்கிணைந்த காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தி காய்கறி பயிரிடும் அனைத்து விவசாயிகளும் பலனடைய செய்ய வேண்டும்.

இந்த திட்டத்தில் தற்பொழுது, ஒரு காய்கறியின் இரண்டு சந்தைகளின் விலைத்தகவல் கொடுக்கப்பட்டு வருகின்றது. ஆனால் என் போன்ற விவசாயிகள் ஒரே சமயத்தில் சிறிய அளவில் இரண்டு மூன்று காய்கறிகள் சாகுபடி செய்து வருகின்றோம். ஆகவே இரண்டு மலர்கள் மற்றும் காய்கறிகளின் திருச்சி சந்தையின் விலைப்பட்டியல் தகவல் அனுப்ப ஏற்பாடு செய்தால் நலம். அதற்கான ஏற்பாடுகள் செய்யும்படி கேட்டுக்கொள்கின்றோம்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலை்க்கழகம் செயலாக்கி வரும் இத்திட்டம் தொடர்ந்து செயல்பட வேண்டும். அவ்வாறு செயல்பட்டால் காய்கறி சந்தையின் இடைத்தரகர்களின் இடர்பாடுகள் குறைந்து நாங்கள் பயிரிடும் மலர்கள் மற்றும் காய்கறிகள் பயிருக்கு தக்க விலையும் எங்களுக்கு தொடர்ந்து நல்ல வருமானமும் கிடைக்க வழிகிடைக்கும். ஆகவே தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலை்க்கழகம் இந்த திட்டத்தை தொடர ஆவண செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

கி.கேசவன்
த/பெ. கோ.கிருஷ்ணமூர்த்தி
1/205, காளியம்மன் கோயில் தெரு
பட்டீச்சுரம் (அஞ்சல்)
தஞ்சாவூர் மாவட்டம்
அ.எண.612703
கைபேசி எண்: 9965477854.


ஒரு வியத்தகு மாற்றம் வெற்றிக்கதை - சென்னை

 

என் பெயர் ஜி. திருநாகர் சென்னையில் வசித்து வருகிறோம். நாங்கள் 1995 ஆம் ஆண்டு முதல் சில்லறை பழமுதிர் நிலையம் தொடங்கி வியாபாரம் செய்து வருகிறோம். நாங்கள் இதுவரை யுகத்தின் அடிப்படையிலேயே பேரம் பேசி வியாபாரம் செய்து வருகிறோம்.

தினசரி சந்தை நிலவரத்தின் உபயோகம்

நான் தினசரி சந்தை நிலவரத்தை பற்றி உங்களின் சந்தை ஆய்வாளர் சொப்பணசுந்தரி - சென்னை அவர்களின் மூலம் தெரிந்து கொண்டேன். இது எனக்கு சந்தையில் மொத்த வியாபாரிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய உதவியது. (இதுவரை பகுதி மொத்த வியாபாரியிடம் இருந்து பெற்று வந்தோம்). இதன் மூலம் என்னுடைய கொள்முதலில் விலை வித்தியாசத்தை தெளிவாக அறிந்து கொள்ள முடிந்தது. நாங்கள் தற்பொழுது உங்களின் அலைபேசி சேவையின் மூலமாக ஒரு குறிப்பிட்ட பொருளின் விலையை தெரிந்து கொள்ள முடிகிறது. முன்பு நாங்கள் ஒரு சந்தையை மட்டுமே கவனத்தில் கொண்டு கொள்முதல் செய்தோம். ஆனால் இப்பொழுது அலைபேசி சேவையின் மூலமாக 13 சந்தைகளின் விலை நிலவரங்களை தெரிந்து கொள்ள முடிவதினால் சந்தையில் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய உதவுகிறது.

உதாரணம்:

பப்பாளி: மொத்த வியாபாரியிடம் உண்மையானவிலை ரூ.10.00 / கிலோ. நான் அதே பொருளை பகுதி மொத்த வியாபாரியிடம் வாங்கும்பொழுது ரூ.13.00 / கிலோ. இந்த விலை வித்தியாசம் அதிகம். தினசரி சந்தையின் விலை நிலவரத்தின் மூலமாக சரியான விலை தெரிவதினால் சந்தையில் சிறப்பாக கொள்முதல் செய்ய முடிகிறது.

தினசரி சந்தை நிலவரத்தின் மூலமாக எனது அனுபவம்:

இது என்னைப்போன்ற வியாபாரிகளுக்கு கொள்முதல் தொடர்பாக முடிவுகளை எடுக்க மிகவும் உதவியாக உள்ளது. ஒரே இடத்தில் பல்வேறு சந்தைகளின் விலை நிலவரங்களை தெரிந்து கொள்ள முடிவதினால் ஒரே பொருளை பல்வேறு இடங்களில் கண்டறிய முடிகிறது. இந்நேரங்களில் இந்த தகவல்களின் அடிப்படையில் வேறு சந்தைகளில் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய முடிவதினால் மேலும் அது செலவுகளை குறைக்கவும் உதவுகிறது. உங்களின் இத்தகைய பணி சிறக்க எங்களின் வாழ்த்துக்கள்.

ஜி. திருநாகர்
கார்னேஷ்வரர் பழமுதிர் நிலையம்
47 கோன்ஸ் ரோடு
சைதாப்பேட்டை
சென்னை - 15
தொலைபேசி: 9566082100


தினசரி சந்தை நிலவரம்: வாழ்க்கையில் ஏற்படுத்திய மாயாஜாலம்

 

என் பெயர் திரு.சுல்தான் பாய். நான் ஒசூர் சந்தையில் வாழை பழ கடை வைத்துள்ளேன். ஒசூர் சுற்று வட்டாரங்களில் வாழை பழ உற்பத்தி மிகவும் குறைவு. அதனால் நான் திருச்சி மற்றும் மேட்டுப்பாளையம் சந்தையில் இருந்து பழங்களை வரவழைக்கிறேன். தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் மூலமாக தினசரி சந்தை நிலவர திட்டத்தினைப் பற்றி தெரிந்து கொண்டேன். பின்பு அதில் எனது அலைபேசி எண்னை பதிவு செய்து கொண்டேன். இப்பொழுது நான் தினசரி விலை நிலவரங்களை குறுந்தகவல்கள் மூலமாக பெற்று வருகிறேன். இப்பொழுது எனது வியாபாரத்தை சிறந்த முறையில் நடத்தி வருகிறேன்.
அதனால் தரமான பழங்களை சரியான விலையில் பெறமுடிகிறது. தினசரி சந்தை நிலவர திட்டத்திற்கு எனது நன்றி.

விற்பனை

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்திய தினசரி சந்தை நிலவர திட்டத்தின் மூலமாக எனது ஆண்டு லாபம் சில ஆயிரங்களில் இருந்து 1 முதல் 2 லட்சங்களாக அதிகரித்துள்ளது.

எதிர் காலங்களில்

  1. ஒப்பந்த முறை விவசாய கூட்டமைப்பு
  2. தினசரி போக்குவரத்து வசதி
  3. நுகர்வோரின் தேவைக்கு ஏற்ப பயிர் செய்தல்

தினசரி சந்தை நிலவர திட்டம் மற்றும் துல்லிய பண்ணைய விவசாயத்தை அறிமுகப்படுத்திய தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகளுக்கு எனது நன்றி.

திரு.சுல்தான் பாய்
எஸ்.பி.எஸ். மரவகை பழங்கள் கமிஷன் மண்டி
ஜமிய மஜிர் வளாகம்
ஒசூர் - 635109
தொலைபேசி: 08122009255


வாழ்க்கைத் தரம் உயர்ந்ததன் அனுபவக்கதை

 

நான் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்திலிருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பட்டீச்சுரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி. எனக்கு நான்கு ஏக்கர் நஞ்சை நிலமும், இரண்டு ஏக்கர் தென்னந்தோப்பும், இரண்டு ஏக்கர் தோட்டமும் இருக்கின்றது. மேலும் எனக்கு ஒரு நெல் தரிசில் உளுந்து, பயிறும் சாகுபடி செய்வேன். தோட்டத்தில் ஒரு ஏக்கர் வாழையும் ஒரு ஏக்கர் கத்திரியும் சாகுபடி செய்து வருகின்றேன். கடந்த மூன்று மாதங்களுக்கு முன் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலை்க்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர் திரு.கே.நடராஜன் அவர்களின் ஆலோசனையின் படி என் வீட்டிலுள்ள கணினியில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலை்க்கழகத்திலிருந்து காய், கனி மற்றும் பூக்களின் விலைப்பட்டியல் வெளியிடப்படும் இணையதளத்தை பயன்படுத்தி அன்றாட சந்தையில் காய்கறிகளின் விலையை குறிப்பாக திருச்சி மற்றும் பன்ருட்டி சந்தைகளின் விற்பனை விலைப்பட்டியலை தெரிந்துகொள்வேன்.

அதன்படி நான் தினந்தோறும் சந்தைக்கு எடுத்து செல்லும் கத்தரி, வாழை மற்றும் தேங்காய்களின் விலைகளை தெரிந்து கொண்டு, கும்பகோணம் நேரு மொத்த வருகின்றேன். என் கணினி மூலம் தெரிந்து கொள்ளும் மற்ற காய்கறி பயிர்களின் அன்றாட விலைப்பட்டியலை எங்கள் கிராமத்தில் காய்கறி பயிர் செய்துள்ள சிறு விவசாயிகளுக்கு தெரிவிக்கின்றேன்.

அதன்மூலம் அவர்களும் நல்ல பலனை அடைந்து வருகின்றனர். தற்போது திரு.நடராஜன் அவர்கள், என் கைபேசியில் தினந்தோறும் காய்கறி சந்தையின் திருச்சி மற்றும் பண்ருட்டி விலைகளை தெரிவித்து வருகின்றார்கள். மேலும் ஒருவிளை பொருளின் இரண்டு சந்தைகளின் விலைப்பட்டியலை நேரிடையாகபெறுவதற்கு ஏற்பாடு செய்துள்ளார்கள். இத்தகைய முறை சிறப்பாக இருப்பதால் என் கிராமத்திலுள்ள மற்ற விவசாயிகளும் தங்கள் கைபேசியின் எண்களை திரு.நடராஜன் அவர்களிடமும் கொடுத்து காய்கறிகளின் திருச்சி மற்றும் பண்ருட்டி சந்தைகளின் அன்றாட விலைகளை பெற்று வருகின்றனர்.

           
மேலும் எங்கள் கிராமத்தைச் சுற்றியுள்ள சோழன்மாளிகை, ஆவூர், சுந்தரப்பெருமாள் கோயில், நடுப்படுகை மற்றும் நல்லூர் ஆகிய கிராமங்களில் விவசாயிகள் காய்கறிகள் வாழை, வெற்றிலை, தென்னை மற்றும் மலர்பயிர்கள் சாகுபடி செய்து வருகின்றார்கள். அவர்களுக்கு இந்த திட்டத்தில் சேர்ந்து பயன்பெற முயற்சித்துள்ளார்கள் என்று கேள்விப்பட்டேன். ஆகவே தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலை்க்கழகம் துவங்கியுள்ள இந்த பயனுள்ள திட்டம் தொடர்ந்து செயலாற்றி எங்களைப்போன்ற சிறு மற்றும் குறு விவசாயிகள் நல்ல பலனடையச் செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

ஜே.பி.மோகனவடிவேலு
திருசக்தி முற்றம் கீழவீதி
பட்டீச்சுரம் (அஞ்சல்)
அ.எண்.612703
தஞ்சாவூர் மாவட்டம்.


விழிப்புணர்வு ஏற்படுத்திய தினசரி சந்தை நிலவரம்

 

வணக்கத்திற்குரியவர்களுக்கு
என்னுடைய பெயர் கொளஞ்சி நான் சிறுவங்கூர் எனும் கிராமத்தில் விவசாயத்தினை மேற்கொண்டு வருகிறேன். எங்களுக்கு சொந்தமாக உள்ள இரண்டு ஏக்கரில் சிறிதளவு பகுதியில் வாழை தோட்டத்தினை வைத்துள்ளோம். இதிலிருந்து எனக்கு கனிசமான அளவு வருமானம் இருந்து வந்தது. ஆனால் இதில் என்னால் நல்ல முன்னேற்றததினை காண முடியவில்லை. பயிரிடுவதற்கும்  அதனை பராமரிப்பதற்குமே அதில் வருகின்ற வருமானம் சரியாகி விடுகின்றது. இந்த தருணத்தில் தான் நான் தங்களது விவசாய பல்கலைக்கழகத்தின் சந்தை நிலவரம் பற்றிய தகவலை அறிந்தேன்.

உங்களது இந்த டி.எம்.ஐ. யின் தினசரி சந்தை நிலவரம் பற்றி அறிந்து கொண்டேன். இதனை பற்றி முழு விவரங்களை விவசாய பல்கலைக்கழகத்தின் திட்ட அலுவலர் மூலம் முழுமையாக தெரிந்து கொண்டேன். இந்த அலைபேசி சேவை எங்களை போன்ற சிறிய விவசாயிகளுக்கு உறுதிணையாக இருக்கிறது. இதற்கு முன் நான் தினசரி சந்தை நிலவரத்தினை நண்பர்கள் மூலமாகவும் நாளிதழ்கள் மூலமாகவும் தொலைக்காட்சியின் மூலமாகவும் மட்டுமே தெரிந்து கொண்டேன். ஆனால் இப்பொழுதோ எங்களின் அலைபேசியின் வழியாகவே தெரிந்து கொள்ள இயலுகிறது.

இதுபோன்ற அலை சேவை வேளாண் விலை பொருட்களின் குறிப்பாக காய்கறிகள் மற்றும் பழ வகைகளின் விலையினை தெரிந்து கொள்ள உதவுகிறது. உங்களின் இந்த சேவையின் மூலம் தான் 152 வகையான காய்கறி மற்றும் பழங்கள் மற்றும் பூ வகைகள் இருப்பதையே அறிந்து கொண்டேன். இந்த சேவை கிடைத்த பிறகு எனது பொருளை சிறிதளவு விலை உயர்த்தி விற்க முயன்றது. இதன் மூலமாக நான் தற்பொழுது கனிசமான லாபத்தினையும் பெற்றுள்ளேன். இதற்காக நான் தங்களது இந்த DMI மற்றும் விவசாய பல்கலைக்கழகத்தின் இயக்குனர் மற்றும் ஆய்வாளர் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். உங்களது இந்த சேவை மென்மேலும் வளர எனது வாழ்த்துக்கள்.

எஸ்.கொளஞ்சி
S/o செல்லமுத்து
சிறுவங்கூர்
கட்டுக்கோட்டை
கல்லக்குருச்சி
செல்:09790281760


விளைபொருட்கள் விற்பனையில் தன்னம்பிக்கை ஏற்படுத்திய தினசரி சந்தை நிலவரம்

 

என் பெயர் கே.சரவணன் கடந்த 3 வருடங்களாக துல்லிய பண்ணைய விவசாய முறையில் இரண்டு ஏக்கரில் கத்திரி பயிரிட்டு வருகிறேன். நான் எனது விளைபொருட்களை கும்பகோணம், குளித்தலை, திருச்சி மற்றும் அருகில் உள்ள சந்தைகளில் விற்று வருகிறேன். என்னுடைய விற்பனை அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

தினசரி சந்தை நிலவரம்

தினசரி சந்தை நிலவரம் என்பது தமிழ்நாடு வேளாண் பல்கலை கழகத்தின் வேளாண் விரிவாக்க துறை இயக்கத்தால் உருவாக்கப்பட்ட ஒரு மிகச் சிறந்த திட்டம். திருச்சி சந்தை ஆய்வாளர் மூலமாக நாங்கள் இத்திட்டத்தினைப் பற்றி அறிந்து கொண்டோம். இதன் மூலம் விற்பனையில் தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது.

விற்பனை:

நாங்கள் இதுவரை விலை நிலவரத்தை கேள்விப்பட்டது எல்லாம் ஒரு யூகத்தின் அடிப்படையிலேயே இருந்தது. எனக்கு விவசாய விளைபொருள்களை விற்பதில் எனக்கு அனுபவம் குறைவாக இருந்தது. இடைத்தரகர்களின் குறுக்கீடுகளால் என்னால் சந்தை பற்றிய விவரங்களை பெற முடியாமல் இருந்தது. இதனால் நான் மிகவும் பாதிக்கப்பட்டேன். மேலும் விளைபொருள்களை சந்தையில் குறைந்த விலைக்கு விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எனக்கு எங்கு விற்பனை செய்ய வேண்டும், ஏன் விற்பனை செய்ய வேண்டும், எப்படி விற்பனை செய்வது தரத்திற்கு ஏற்ற சரியான விலை என்ன என்பது போன்ற சந்தை தகவல்கள் கிடைக்கப் பெறாமலேயே இருந்து வந்தது. மணப்பாறை ரக கத்தரி ஒரு கிலோ ரூ.6.00 - 10.00 என்ற அளவிலும் டிஸ்கோ ரக கத்தரி ரூ.2.00 - 4.00 என்ற அளவிலேயே இதுவரை நான் விற்பனை செய்து வந்தேன். ஆனால் தினசரி சந்தை நிலவரத்தின் மூலமாக விற்பனை செய்வதைப்பற்றி சிறந்த அறிவு கிடைத்துள்ளது. இப்பொழுது அதே விளைப்பொருள்களை ரூ.15.00 - 18.00 மற்றும் ரூ.6.00 - 10.00 என்ற முறையிலும் விற்று வருகிறேன். இது அனைத்தும் தமிழ்நாடு வேளாண் பல்கலை கழகம் மற்றும் உன்னத கணிப்பியம் வளர்ச்சி மையத்தின் மூலமாக சாத்தியமானது.

எதிர் காலங்களில்: ஒப்பந்த முறை விவசாய சங்கங்கள்.
நான் தமிழ்நாடு வேளாண் பல்கலை கழகம் தமிழகத்தின் அதிக சந்தைகளின் விவரங்களையும் விலை விவரங்களை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். எங்களைப் போன்ற விவசாயிகளுக்கு கூடுதலான சந்தைகளின் விளை நிலவரங்களையும் அனுப்பினால் பயனுள்ளதாக இருக்கும். சந்தை ஆய்வாளர்களின் சிறப்பான பணியினை பாராட்டுகிறேன்.
தினசரி சந்தை நிலவர திட்டத்தினை அறிமுகப்படுத்திய உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம் மற்றும் தமிழ்நாடு வேளாண் பல்கலை கழகத்திற்கும் எங்களின் இதயம் கனிந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

கே.சரவணன்
163/2 மலைமன் வீதி
கோட்டம் பாளையம் மெயின் ரோடு
திருச்சி
அலைபேசி: 9500389595


வெற்றிக்கு வித்திட்ட தினசரி சந்தை நிலவரத்தின் அனுபவக்கதை


வணக்கத்திற்குறியவர்களுக்கு நான் மாமனந்தல் எனும் கிராமத்தில் வசித்து வருகிறேன். எனது குடும்பம் ஒரு விவசாய குடும்பம்; 5 ஏக்கரில் நெல் மற்றும் மஞ்சள் மற்றும் தக்காளி ஆகியவற்றை பயிர்செய்து வருகிறோம். நாங்கள் தக்காளியை முழுவதுமாக இதுவரை பயிர்செய்ததில்லை. எங்கள் தோட்டத்தின் வரப்பினை ஒட்டியும் எங்களது வீட்டினை ஒட்டியும் மட்டுமே வளர்த்து வருகிறோம். உங்களது டி.எம்.ஐ யின் தினசரி சந்தை நிலவரம் பற்றி எங்களுடைய நண்பர் மூலம் அறிந்து கொண்டேன். இதனை பற்றி முழு தகவலை பெற உங்களது. விவசாய பல்கலைக்கழகத்தின் திட்ட ஆய்வாளரை சந்தித்து விவரங்களை தெரிந்து கொண்டேன்.

இந்த அலைபேசி சேவை எங்களை போன்ற குறு விவசாய நண்பர்களுக்கு உறுதுணையாக இருக்கிறது. இதற்கு முன் நாங்கள் தினசரி சந்தை நிலவரத்தினை நாளிதழ் மூலமாகவும் தொலைக்காட்சியின் மூலமாகவும் மட்டுமே தெரிந்து கொண்டோம். ஆனால் இப்பொழுதோ அதை எங்களின் அலைபேசியின் வழியாகவே பெற முடிகிறது.
இது போன்ற அலைபேசி சேவை வேளாண் விளை பொருட்களின் குறிப்பாக காய்கறிகள் மற்றும் பழ வகைகளின் விலையினை தெரிந்து கொள்ள உதவுகிறது. எங்களுக்கு அருகில் உங்களால் அறிவிக்கப்பட்டிருந்த 13 தென்னிந்திய பெரிய தினசரி சந்தையில் எங்களுக்கு அருகில் பண்ரூட்டி சந்தை தலைவாசல் சந்தை ஆகிய இரண்டும் உள்ளது.
எங்கள் பகுதியினை பொருத்த வரை பண்ரூட்டி சந்தை மற்றும் தலைவாசல் சந்தையில் இருந்து தான் அனைத்து பொருட்களும் சுற்று வட்டார காய்கறிகள் மற்றும் பழ வகைகளின் விலையினை தெரிந்து கொள்ள இயலுகிறது. இதன் மூலமாக எங்களால் அதாவது விவசாயிகளால் இலாபத்தினை ஈட்ட இயலும் என்பதனை தெரிந்து கொண்டேன்.

நானும் தற்பொழுது தோட்டக்கலை துறையில் கால்பதிக்க முயலுகிறேன். விவசாயியாக மட்டுமல்லாமல் ஒரு வியாபாரியாகவும் எனது தரத்தினை உயர்த்தி கொள்ள எண்ணியுள்ளேன். இதனை எங்களது குடும்ப உறுப்பினர்களிடம் பரிசீலித்து முடிவு எடுக்கவுள்ளேன். அதன்படி எங்களது நிலத்தில் நாங்கள் கத்திரிக்காய், வெண்டைக்காய், போன்றவற்றை பயிரிட முடிவு செய்துள்ளோம்.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் டி.எம்.ஐ. இயக்கம் தென்னிந்தியாவில் உள்ள முக்கியமான 13 தினசரி சந்தை நிலவரத்தினை மையமாக கொண்டு விவசாய நண்பர்களுக்கும் என்னை போன்று புதியதாக தொழில் துவங்கும் எண்ணம் எழ செய்ததையும் எண்ணி பெருமை அடைகிறோம். இது போன்ற சந்தை நிலவரம் வெளியிடுவதன் மூலமாக நுகர்வோருக்கும் உதவிகரமாக இருக்கும். இது போன்ற தகவல்களை நாங்கள் தங்களது திட்ட ஆய்வாளர் உதவியுடன் தெரிந்துகொள்ள முடிகிறது. மேலும் இந்த அலைபேசி சேவை வளர எனது வாழ்த்துக்கள்.

எம். கதிரவன்
S/o முருகேசன்
மாமானந்தல்,
கட்டுக்கோட்டை                                                  
கள்ளக்குருச்சி
09842542425 


தினசரி சந்தை நிலவரம் - கோவை மாவட்டம் ரொட்டிக் கவுண்டனூர் - ஆறுச்சாமி

 

ஆறுச்சாமி என்ற நான் கோவை மாவட்டம் ரொட்டிக் கவுண்டனூர் என்ற ஊரைச் சேர்ந்த விவசாயி ஆவேன். நான் என்னுடைய விளை பொருட்களை கோயம்புத்தூர் எம்.ஜி.ஆர் சந்தையில் விற்று வருகின்றேன். முன்பு, என்னுடைய விளைபொருளை வியாபாரிகளிடம் கொடுக்கும் போது அவர்கள் என்ன விலை கூறுகிறார்களோ அந்த விலையின் அடிப்படையிலேயே அளித்து வந்தேன். அதில் எனக்கு சில சமயம் லாபமாகவும் பல நேரங்களில் நஷ்டம் ஏற்பட்டதும் கூட உண்டு. உழைப்பதிற்கேற்ப பலன் இல்லை என்று பல நாட்கள் வருந்தி இருக்கின்றேன்.
ஆனால் இரண்டு மாதங்களுக்கு முன்பு கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இருந்து சந்தை ஆய்வாளர் R.செல்லப்பாண்டியனை சந்திக்க வாய்ப்பு ஏற்பட்டது. அவர் என்னிடம் கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகம் வழங்கும் தினசரி சந்தை நிலவரத்தைப் பற்றிய விபரங்களை என்னிடம் கூறினார். மேலும் indg என்ற இணையதளம் மூலம் கொச்சின், பெங்களூரு உட்பட 13 சந்தைகளின் அனைத்து வியாபாரிகளின் பெயர் விலாசம் தொலைபேசி எண்ணை அறிந்து கொள்ள முடியும் என்று கூறினார். மேலும் ஒரு இனிய செய்தியாக கைபேசி வழியாக காய்கறிகளின் விலை நிலவரங்களை தினமும் குறுந்தகவல்கள் மூலம் இலவசமாக அனுப்பப்படுகிறது என்றும் விளக்கினார். முதலில் நான் நம்ப மறுத்தால் அவர் ஏற்கனவே ஒரு விவசாயிக்குச் சொல்லும் குறுந்தகவலை என்னிடம் காண்பித்தார்.

அதன் பிறகு நானும் என்னுடைய கைபேசி எண்ணை அவரிடம் அளித்தேன். நான் அவரிடம் தக்காளி விலை நிலவரத்தின் கோவை மற்றும் மேட்டுப்பாளையம் சந்தைகளின் விலை நிலவரத்தை அனுப்புமாறு கூறினேன். நான் என்னுடைய எண்ணை அளித்த மறு நாளில் இருந்து எனக்குத் தகவல்கள் வர ஆரம்பித்தன.
அதில் இருந்து என்னுடைய விளை பொருட்களின் உண்மை நிலவரத்தினை அறிய முடிந்தது. அதன் பிறகு நான் வியாபாரிகள் கூறும் விலையை ஏற்காததோடு நானே விலையை முடிவு செய்து விற்பனை செய்து லாபமடைந்து வருகிறேன். இதனால் என்னுடைய குடும்பத்தார் அனைவரிடம் கூட மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
மேலும் இந்தத் திட்டத்தின் பயன்களை என்னுடன் இருக்கும் பல விவசாயிகளிடம் எடுத்துக் கூறி அவர்களும் பயன் அடைந்து வருகிறார்கள். இப்பொழுது இதன் மூலம் ஒரு காய்கறியின் விலைகளை மட்டுமே நாங்கள் அறிந்து கொள்ள முடிகிறது. இதே திட்டத்தின் அடிப்படையில் பல காய்கறிகளின் நிலவரங்களை எங்களுக்கு அளிக்க முடிந்தால் அது எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதற்கு வேளாண்மைப் பல்கலைக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன். இந்தத் திட்டத்தினை அறிமுகப்படுத்திய தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திற்கும் அதனைச் சார்ந்த அதிகாரிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இத்திட்டம் மென்மேலும் வளர வாழ்த்துகிறேன். நன்றி.

ஆறுச்சாமி
ரொட்டிக் கவுண்டனூர்
கோவை மாவட்டம்
செல்: 9715812197


தினசரி சந்தை நிலவரம் - கோவை மாவட்டம் ரொட்டிக் கவுண்டனூர் -ரங்கசாமி

 

எனது பெயர் ரங்கசாமி. நான் கோவை மாவட்டம் ரொட்டிக் கவுண்டனூர் என்ற ஊரில் ஒரு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறேன். நான் என்னுடைய நிலத்தில் இப்பொழுது தக்காளி பயிரிட்டு வருகின்றேன். அதை கோயம்புத்தூர் M.G.R. காய்கறிகள் சந்தையில் விற்று வருகிறேன். அதனுடைய லாபம் போதுமானதாக இல்லை என்றாலும் வேறு வழியில்லை என்ற நிலையில் விற்பனை செய்து வந்தேன். நான் தக்காளி தவிர கத்தரிக்காய், வெண்டை போன்ற காய்கறிகளையும் சூழ்நிலைக்கேற்றவாறு பயிரிடுவேன். எல்லாவற்றிலுமே எனக்குக் குறைந்த லாபமே கிடைத்து வந்தது.
அப்பொழுதுதான் என்னை  கோவை M.G.R. காய்கறிகள் சந்தையில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக கோயம்புத்தூர் சந்தை ஆய்வாளர் R. செல்லப்பாண்டியனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் என்னை சந்தித்து வேளாண்மைப் பல்கலைக்கழகம் வழற்கும் தினசரி சந்தை நிலவரத்தினைப் பற்றி எடுத்துக் கூறினார். மேலும் கைபேசியில் தினசரி விலை நிலவரங்களை குறுந்தகவல்கள் மூலம் இலவசமாக அனுப்புவதாகவும் கூறினார். மேலும் அதனுடைய பயன்களையும் அதனால் ஏற்கனவே நிறைய விவசாயிக் பயனடைந்து வருவதாகவும் எனக்கு எடுத்துக் கூறினார்.
அதனால் நான் என்னுடைய கைபேசி எண்ணை அவரிடம் அளித்து அப்பொழுது தக்காளி பயிரிட்டு வந்த காரணத்தால் தக்காளியின் கோயம்புத்தூர் மற்றும் மேட்டுப்பாளையம் சந்தைகளின் விலை நிலவரத்தினை அனுப்புமாறு கூறினேன். அவரும் என்னுடைய எண்ணைப் பதிவு செய்து கொண்டார். அதன் அடுத்த நாளில் இருந்து எனக்குத் தகவல்கள் வர ஆரம்பித்தன.
முதல் விவசாயத்தின் மீதே சிறிது சிறிதாக வெறுப்படைந்து வந்த நான் அதன் பிறகு பல்கலைக்கழகம் அனுப்பும் குறுந்தகவல்கள் மூலம் என்னுடைய விளை பொருட்களின் உண்மை விலைகளின் நிலவரத்தினை அறிந்து கொண்டு வியாபாரிகளிடம் அவர்களின் விலைக்குக் கட்டுப்படாமல் சுதந்திரமாக விலையை முடிவு செய்து விற்று லாபமடைந்து வருகிறேன். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
நான் அதிகம் படிக்காத காரணத்தால் என்னால் தாங்கள் அனுப்பும் தகவல்களை நானே படித்து அறிந்து கொள்ள முடியவில்லை. பிறரிடம் கொடுத்து படிக்கச் சொல்லி நிலவரத்தினை அறிந்து பயன் அடைந்து வருகின்றேன். ஆகையால் தாங்கள் அனுப்பும் தகவல்கள் என்னைப் போன்ற விவசாயிகளும் தாங்களே படித்து அறிந்து கொள்ள வசதியாக தமிழில் அனுப்பினால் நாங்கள் இன்னும் பயனடைவோம் என்பதையும் வேண்டி தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் தாங்கள் அனுப்பும் தகவல்களினால் ஒரு காய்கறியின் விலை நிலவரத்தை மட்டுமே அறிந்து கொள்ள முடிகிறது. நாங்கள் நான்கைந்து காய்கறிகள் பயிரிடுவதால் காய்கறிகளின் எண்ணை அதிகரித்து தகவல்களை அனுப்பினால் நாங்கள் மேலும் பயனடைவோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கைபேசி மூலம் தகவல்களை அனுப்பி விவசாயத்தில் வெறுப்படைந்திருந்த என்னைப் போன்ற பல விவசாயிகளின் வாழ்க்கையில் ஒளி ஏற்றித் தந்த தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கும் அதனுடைய அதிகாரிகளுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் நான் கூறிய வேண்டுகோளையும் பரிசீலிக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

ரங்கசாமி
ரொட்டிக் கவுண்டனூர்
கோவை மாவட்டம்
செல்: 9629705335





 

 
   

செம்மை நெல் சாகுபடி
துல்லிய பண்ணையம்
நன்னெறி வேளாண்
முறைகள்

நன்னெறி ஆய்வக
முறைகள்

நன்னெறி மேலாண்மை
முறைகள்

   
 
 
   

அரசு திட்டங்கள் & சேவைகள்
நீர்வள,நிலவள திட்டம்
வட்டார வளர்ச்சி
வங்கி சேவை & கடனுதவி
பயிர் காப்பீடு
வேளாண் அறிவியல் நிலையம்
விவசாய தொழில்நுட்ப
மேலாண்மை முகாம்

கிசான் அழைப்பு மையம்(1551)
பல்லாண்டு மேம்பாட்டு
குறிக்கோள்

தன்னார்வ தொண்டு
நிறுவனங்கள் &
சுய உதவிக் குழுக்கள்

   
 
 

குறைந்த பட்ச ஆதார விலை
இடுபொருள் நிலவரம்
ஏற்றுமதி & இறக்குமதி
காப்புரிமை

 
 

சுற்றுச்சூழல் மாசுப்பாடு
இயற்கை சீற்ற மேலாண்மை
தகவல் & தொலைத்தொடர்பு
தொழில்நுட்பம்

முக்கிய வலைதளங்கள்

   

வல்லுனரை கேளுங்கள்

 
     
 

|| | | ||||

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2008