முதல் பக்கம் தொடர்புக்கு  

தண்டழுகல் நோய்
(ஸ்கிலிரோஸியம் ஒரைசே)

தாக்குதலின் அறிகுறிகள்:  
  • நீர் மட்டத்திற்கு அருகில் உள்ள வெளிப்புற இலையுறையின் மேல் ஒழுங்கற்ற கருப்பு நிற புள்ளிகளுடன் காணப்படும்.
  • நோயின் தாக்கம் அதிகரிக்கும்போது புள்ளிகள் பெருகுகின்றன.
  • நோய்த் தாக்கப்பட்ட தண்டுகள் அழுகி காணப்படும். நோய் தாக்கப்பட்ட தண்டுகளில் பல சிறிய வெள்ளை மற்றும் கருப்பு நிற இழைமுடிச்சுகள் மற்றும் பூசண இழைகளைக் கொண்டிருக்கும்.
  • நோய் தாக்கப்பட்ட தண்டுகள் சாய்ந்தும், நிரம்பாத கதிர்களுடன் வெளிரிய தானியங்களுடனும் காணப்படும்.
  • தீவிர நோய்த் தாக்குதலால், துார்கள் மடிந்துவிடுகின்றன.
  • இந்நோயால் பயிர்கள் சாய்ந்துவிடும்
தண்டு அழுகல் தண்டு அழுகல்

மேலே செல்க

  நோய்க் காரணி:
Sclerotium oryzae Sclerotium oryzae 1
  • பூசண வித்துக்கள் சற்று கருமையாகவும், உருளை வடிவத்திலும் உறையின் வெளித்திசுக்களின் உள்ளே இருக்கும்.
  • அஸ்கி குறுகலான வடிவமும், காண முடியாத சுவர்களும் இருக்கும்.
  • மேலும் பூசண வித்துக்கள் முதிர்ச்சியடையும்போது நீர்த்தல் ஏற்படுகிறது.
  • இழை முடிச்சுக்கள் கருப்பு நிறத்திலும், உருளையாகவும், அல்லது சற்று உருளை வடிவம் போலவும், மென்மையாகவும் காணப்படும்.
  • பூசண இழைச்சிதில்கள் கருப்பாகவும், நிமிர்ந்தும் குறுக்கு சுவருடனும் இருக்கும்.
  • பூசண இழைகள் கதிர் வடிவமாகவும் மூன்று குறுக்குச் சுவர்களுடனும், வளைந்தும் குறித்த பூசண வித்துக் காம்புகளின் மேல் வித்துக்கள் உருவாகும்.
நோய்க்காரணி-ஸ்க்ளிரோசியம் ஒரைசே நோய்க்காரணி-ஸ்க்ளிரோசியம் ஒரைசே

மேலே செல்க

கட்டுப்பாடு முறைகள்:  
  • பயிர் அறுவடைக்குப்பின், வைக்கோல் மற்றும் பயிர்த் துார்கள் அல்லது மற்ற செடித்துார்களை எரித்தல் அல்லது வைக்கோலை வயலிலேயே மக்கவிடுதல். வயலில் நீரை வடிகட்டுவதால் வயலிலிருக்கும் பூசண இழை முடிச்சுக்களைக் குறைக்க முடிகிறது.
  • சரிவிகித அளவு உரங்களைப் பயன்படுத்துதல் அல்லது உரங்களைப் பிரித்து இடுதல், இதில் அதிக சாம்பல் சத்து மற்றும் சுண்ணாம்புச் சத்து இருக்குமாறு அளிக்க வேண்டும்.
  • துார்வைக்கும் நடுமை பருவத்தில் ஃபென்டின்-ஹைடுராக்ஸைடு மற்றும் நோய் தாக்கப்பட்ட ஆரம்பநிலைகளில் திஅயாஃபனேட்-மிதைல் ஆகியவற்றைத் தெளிக்கவேண்டும்.
  • ஃபெரிம்ஜோன் மற்றும் வேலிடாமைசின் (எ) போன்ற பூசணக் கொல்லிகளைத் தெளிக்கவேண்டும்.

fentin hydroxide lime fertilizer
ஃபென்டின் ஹைட்ராக்சைடு சுண்ணாம்பு கலந்த உரம்
மேலே செல்க