இரகங்கள் :
துறையூர் உள்ளூர் வெங்காய குமிழ்கள் விதைப்புக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
மண்:
நல்ல வடிகால் வசதியுள்ள களிமண் நிலம் வெங்காய சாகுபடிக்கு ஏற்றது. முளைப்பு விகிதம் 90 சதவிகிதத்திற்கும் அதிகமாக உள்ளது.
பருவ நிலை மற்றும் விதைப்பு :
நடுத்தர அளவிலான வெங்காயக் குமிழ்களைக் கொண்டு வெங்காய விதைப்பு மார்ச் 16, 2015ல் செய்யப்பட்டது. வெங்காய விதைப்பு நேரத்தில் வயலில் போதுமான அளவு ஈரப்பதம் இருக்க வேண்டும். வயல் முழுவதையும் ஈரப்படுத்த நுண்துளி தெளிப்புக்கருவியை அரைமணி நேரத்திற்கு சுழல செய்து வயலை ஈரமாக்க வேண்டும். பின்னர் வெங்காயக் குமிழ்களை 10 செ.மீ. இடைவெளியில், கைமுறையாக நடவு செய்ய வேண்டும்.
விதையளவு:
இரண்டு ஏக்கர் நிலத்திற்கு சுமார் 1100 கிலோ விதைக்குமிழ்கள் தேவைப்படுகிறது.
|