|
|
|
மீன் அறுவடை தொழில்நுட்பங்கள்
மீன் அறவடை தொழில்நுட்பம் மூலம் ஏராளமான மக்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரம் உயர்கிறது. இதன் மூலம் மீன்பிடிக்க நிறைய வழிமுறைகள் உள்ளது. மீன் வள வகைகள் மற்றும் மீன்பிடிக்கும் சாதனங்களை பொருத்தே மீன் அறுவடை முறைகள் அமையும். பிடிப்பு மீன் வளத்தில் சிறு மீன்வகை முதல் சூறை மீன் வரை பிடிக்கலாம்.
பிடிப்பு மீன் வளத்தில் அனைத்து மீன்களையும் பிடிப்பார்கள். இதற்கு தகுந்த மீன் பிடிப்பு வலைகள் மற்றும் முறையான அறுவடை நுட்பங்கள் தெரிந்திருக்க வேண்டும். மீன் அறுவடை தொழில்நுட்பத்தில் மூன்று வகை உண்டு.
- வலை மூலமாக பிடிகப்படும் தனி மீன் (அல்லது) கூட்டமான மீன்கள்
- பொறி வைத்து பிடிக்கப்படும் மீன்கள் (மீன் பொறி)
- தூண்டில் இரை, பொறி அல்லது ஒலி வைத்து ஈர்க்கப்படும் மீன்கள்
மீனவர்கள் பல வகையான மீன் பிடிப்பு கலன்களை வைத்து மீன்களை பிடிப்பதனால் இந்த உலகில் உள்ள மக்களுக்கு கடல் உணவு கிடைக்கிறது. தற்போது பழைய வகையான மீன்பிடிப்பு வலைகளை வைத்து மீன் பிடிக்கின்றனர். இன்னும் புதிய தொழில்நுட்பத்தினால் மீன் பிடிக்கம் சாதனங்கள் இருந்தால் மீன் வளம் அதிகரிக்கும். முக்கியமான மீன் அறவடை முறைகள் விசை மீன்பிடிப்பு, சூழ்வலை, தூண்டில், செவுள் வலை மற்றும் பொறி ஆகும். |
மீன் அறுவடை தொழில்நுட்பத்திலுள்ள புதிய முன்னேற்றங்கள்
- மீன் பிடிப்பு தொழில்நுட்பம் மற்றும் மீன் பிடிப்பு இயந்திரத்தில் முன்னேற்றம்
- புதிய செயற்கை மீன் பிடிப்பு வலைகள்
- செயற்கைகோள் மூலம் தொலை உணர்வுத மீன்பிடிப்பு தகவல்கள்
- மின்சாரம் மூலம் கப்பலோட்டத்தில் முன்னேற்றம்
- மீன்வளம், மீன் இனப்பெருக்கம் மற்றும் கடல் சுற்றுப்புற தூய்மை பற்றிய விழிப்புணர்வு.
|
மீன் அறுவடை முறைகள்
மீன் பிடிப்பு உறுப்புகள், கலன்கள் மற்றும் மீன் பிடிப்பு வலைகள் இவை அனைத்தும் மீன் அறுவடை முறைகளாகும். மீன்பிடிப்பு கலன்கள் என்றால் மிதக்கும் பொருட்களை வைத்து மீன்களை பிடித்து, எடுத்துச்சென்று, பதப்படுத்தி மற்றும் பாதுகாத்து வைத்தல். மீன்பிடிப்பு கலனில் மிகவும் அடிப்படையாக உள்ளது மீன்பிடிப்பு வலைகள். பெரும்பாலும் மீன்களை பிடிக்க வலைகளை தான் பயன்படுத்துகிறார்கள். |
தொண்று தொட்ட முறைகள்
வளையச் சுருக்கு வலை, கட்டு வலை, சீன கூள் வலை, வீச்சு வலை, மா பாச்சு வலை, சிறு வலை, செவுள் வலை, தூண்டில் கொக்கி, மற்றும் பானைப் பொறி, இவை அனைத்தும் தொன்றுதொட்ட மீன் அறுவடை முறைகளாகும். |
நவீன முறைகள்
பொறி, சுருக்கு வலை, செவுள் வலை, இயந்திர தூண்டில், போலி இரை, மற்றும் ஓடு கயிறு இவைகள் அனைத்தும் நவீன முறையான மீன் அறுவடை முறைகள்.
|
(ஆதாரம்: மீன் மற்றும் கடல் வள கையேடு – 2006)
|
|