வெற்றிக் கதைகள் :: தோட்டக்கலை |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வானிலை |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தோட்டக்கலை வாழை மரத்துக்கும் அரைக்கீரைக்கும் கல்யாணம் விடிவெள்ளி காக்கரட்டான் - பூ கொடுத்த புது வாழ்வு புல்லில் புதைந்து கிடக்கும் புதையல்.. வெட்டிவேர்.. வெற்றிவேர்! பாடு இல்லாமல் பணம் தரும் பாரம்பர்ய எலுமிச்சை
சென்னைப் போன்ற நகர்ப்புறங்களில் கீரைகளுக்கு இருக்கும் மரியாதையே தனி. இதையே தனது மூலதனமாக்கிக் கொண்டு, அரைக்கீரைச் சாகுபடியில் அசத்தி வருகிறார் கமலக்கண்ணன். அவரோட புண்ணயத்தால கடனாளி ஆகாம, என் பொழைப்பு சந்தோஷமா ஓடுது. ஏற்கெனவே வாழைத் தோட்டத்துக்கு நடுவுல கத்தரி, வெண்டி இதெல்லாம் போட்டிந்தேன். இப்ப ரெண்டு வருஷமா வாழைக்கு நடுவுல அரைக்கீரையையும் கோட ஆரம்பிச்சிட்டேன். கீரையை மட்டும் தனியா போடலாம் தான். ஆனா, கீரையில திடீர்ன்னு பூச்சி, புழு தாக்குதல் இருந்தா.. முதலுக்கே மோசமாயிரும். அதனால தான் நான் ஊடுபயிரா பண்றேன். இதுல கீரை மோசம் போனாலும் வாழை கைக்கொடுத்து தூக்கிவிட்டுடும் என்று சொன்னவர் தன்னுடைய சாகுபடி தொழில்நுட்பங்களை விவரித்தார். முதல் அறுவடை முடிந்த பிறகு, 15 நாட்களுக்கு ஒரு முறை யூரியா 10 கிலோ, டிஏபி 10 கிலோ, வேப்பம்புண்ணாக்கு 5 கிலோ ஆகியவற்றை கீரைப்பாத்திகளில் போடவேண்டும். கீரை நன்கு அடர்த்தியாக வளரும். (இயற்கை உரம் போட்டாலும் கூட போதும் என்று கமலக்கண்ணனிடம் சிலர் யோசனை சொல்கிறார்களாம். இன்னமும் அதை இவர் முயற்சிக்கவில்லை அடுத்த தடவை முயற்சித்துப் பார்க்கப் போகிறாராம்) பூச்சித் தாக்குதல் இருந்தால் மாதம் ஒரு முறை பவர்-ஸ்பிரேயர் மூலம் எண்ணெய் மருந்து (இதுவும் பூச்சிக்கொல்லிதான்) அடிக்கலாம். பூச்சிக்கொல்லி அடிக்கத் தேவையில்லை என்று நினைப்பவர்கள். இயற்கையான முறையிலும் புழு, பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம். ஒவ்வொரு பாத்திக்கும் நடுவில் புளிச்சக்கீரையை விதைக்கலாம். அதே போல வரப்பு ஓரத்தில் அகத்திக் கீரையை நடவு செய்யலாம். அரைக்கீரையைத் தாக்க வரும் பூச்சிகளும், புழுக்களும் புளிச்சக்கீரை மற்றும் அகத்திக்கீரை பக்கம் திரும்பிவிடும். குறிப்பாக படைப்புழுத்தாக்குதல் குறைந்து விடும். அதே சமயம், புளிச்சக்கீரை மற்றும் அகத்திக்கீரை மூலமாகவும் தனியாக ஒரு வருமானத்தைப் பார்க்க முடியும். வாழையைப் பொறுத்தவரை, ஆண்டுக்கு இரண்டு தடவை உரம் வைத்து பராமரிக்கவேண்டும். தை மாதம் நடவு செய்தபோது தொழு உரம் மட்டும் வைக்கவேண்டும். மீண்டும் ஆடி மாதத்தில் ஒரு டன் தொழுவுரத்தை வாழைக்கு வைக்கவேண்டும். கூடவே, டிஏபி பொட்டாஷ், காம்ப்ளக்ஸ் இவற்றை தலா 10 கிலோ வீதம் வாங்கி, ஒன்றாகக் கலந்து கன்றுகளுக்கு வைக்கவேண்டும். அடுத்தது, கீரைச் சாகுபடி முடிந்து, அவை முற்றாக அழிக்கப்பட்ட பிறகு, கையோடு ஒவ்வொரு வாழைக்கும் மண் அணைத்து, யூரியா, டிஏபி தலா 10 கிலோ, வேப்பம்புண்ணாக்கு 5 கிலோ ஆகியவற்றை கலந்து ஒவ்வொரு வாழைக்கும் கொஞ்சம் கொஞ்சம் வைத்துவிட வேண்டும். வாழைக்கு பராமரிப்புச் செலவு குறைவு தான். கீரைக்கு கொடுக்கும் ஊட்டத்திலேயே அதுவும் வளர்ந்துவிடும். வாழை மரம் நன்றாக வளர்ந்து, 10வது மாதம் பூத்துவிடும். (கமலக்கண்ணன், வாழைத் தார்களாக விற்பதில்லை. இலை, முழு மரம் என்றே விற்பனை செய்கிறார்) கல்யாணம், திருவிழா சமயங்கள் என்றால், பூவுடன் கூடிய ஒரு ஜோடி மரம் 200 ரூபாய்க்கும் போகும். காயுடன் இருந்தால் 400 ரூபாய்க்கும் விலை போகும். மக்களின் தேவையைப்பொறுத்து இந்த விலை இன்னும் கூடும். இலையிலும் தனியான லாபம் தான். பெரிய இலைகளாக கொண்ட ஒரு கட்டு (100 இலைகள்) 250 ரூபாயிலிருந்து 300 ரூபாய் வரை போகும். எப்படிப் பார்த்தாலும் ஒரு மரத்திலிருந்து 300 ரூபாய் வீதம் கிடைக்கும். 25 செண்ட் நிலத்தில் அரைக்கீரை சாகுபடி செலவு - வரவு தோட்டத்தில் பெரும்பாலும் உழைப்பது சொந்த ஆட்கள் என்றாலும் அதுவும் கணக்கில் சேர்
க்கப்பட்டுள்ளது. வாழையை, வியாபாரிகளே ஆள் வைத்து வெட்டிச் சென்று விடுவதால், அறுவடைக்கூலி கணக்கில் சேர்க்கப்படவில்லை.
மணக்கும் மல்லிகை விலையில் உச்சக்கட்ட உயரத்துக்கு எகிறிவிடும் நிலையில் அதை எட்டிப் பிடிப்பது என்பது பல சமயங்களில் குதிரைக் கொம்பு என்றாகிவிடும். இது போன்ற சந்தர்ப்பங்களில் மல்லிகைக்கு மாற்றாக பயன்படுத்தப்படும் பூ காக்கரட்டான் இதற்கு மெட்ராஸ் மல்லி என்றும் ஒரு பெயர் இருக்கிறது. இது கர்நாடகாவிலிருந்து தமிழகத்துக்கு வந்ததாக கூறப்படுகிறது. வடிவத்திலும் நிறத்திலும் மல்லிகைப் பூவைப்போலவே இருக்கும். இந்தப் பூக்கள் மல்லிகைக்கு இணையாக அழகுக்காகவும் மாலைக்கட்டவும் பூஜைக்கும் பெரிதும் பயன்படுகின்றன. திண்டுக்கல் அருகே தருமத்துப்பட்டி கோம்பைப் பகுதியில் முத்து (அலைபேசி : 99766 21550 பிபி) காக்கரட்டான் விவசாயியாக வடிவெடுத்த கதையை சொன்னார். ஆரம்பத்துல விவசாயக் கூலியாத்தான் இருந்தேன். சம்பாதிச்ச காசைக் கொஞ்சங் கொஞ்சமா சேத்து வெச்சி, கோம்பை அடிவாரத்துல அஞ்சி ஏக்கர் பூமி வாங்கினேன். கல்லும், காடுமா இருந்த நிலத்தை, கொஞ்சங்கொஞ்சமா சரிசெய்து ஒழுங்கு பண்ணிட்டு விவசாயத்தை ஆரம்பிச்சேன். பலவிதமான வெள்ளாமை செஞ்சேன். பக்கத்து ஊரு விவசாயி ஒருத்தர் காக்கரட்டான் பூவைப்பத்தி சொன்னார். உடனே, பத்து சென்ட் நிலத்துல அதை நட்டேன். நாலாவது மாசம் பூ வந்திச்சி. மொத அறுவடையில் அஞ்சி கிலோ பூ கிடைச்சிது. எடுத்துக்கிட்டு மார்க்கெட்டுக்கு போனேன். அன்னிக்குப் பார்த்து கிலோ 150 ரூபாய்ன்னு பூ வித்திச்சு. அஞ்சி கிலோவுக்கு 750 ரூபாய் கிடைச்சிது. அப்பவே, இனி நமக்கேத்த வெள்ளாமை, காக்கரட்டான் பூதான்னு முடிவு செஞ்சேன். இப்ப ரெண்டுள ஏக்கருல பூச்செடிக இருக்கு. ஐப்பசி, கார்த்திகை மாதத்தில் நடவு செய்வது நல்லது. இந்தச் சமயத்தில் நடவு போட்டால், அடுத்த மூன்றாவது மாதமே மகசூல் கிடைக்கும். அது தை மாதம் என்பதால் பூக்களுக்கான தேவை அதிகமாக இருக்கும். இதனால், நல்ல விலை கிடைக்கும். வேறு மாதங்களில் நடவு போட்டால், இவ்வளவு விரைவாக செடிகள் மகசூல் தராது. செடிகள் வளர்ந்து கொண்டே இருக்கும் மகசூலுக்கு பூப்பறிக்கிறார். காக்கரட்டான் பூ சாகுபடி செலவு வரவு கணக்கு
இந்த வருமானம் சராசரி மகசூல் மற்றும் சராசரி விலையின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது. விசேஷ நாட்களில் இந்தப் பூக்களின் விலை பன்மடங்கு அதிகரிக்கும் நிலையில் வருவாய் கூடுதலாக கிடைக்க வாய்ப்புள்ளது. உழவு, பதியன் நாற்று, பார் கட்டுதல், களைச் செலவுகள் முதல் வருடம் மட்டுமே இந்தத் தொகை, அடுத்தடுத்த வருடங்களில் லாபக் கணக்கில் சேர்ந்துவிடும். அதாவது, 6,600 ரூபாய் கூடுதல் லாபமாகக் கிடைக்கும்.
சின்னச்சாமி ஜெயபாரதி தம்பதியர் அவர்கள் கூறுகையில் திருப்பூர் மாவட்டத்தின் கடைக்கோடி கிராமங்களில் ஒன்று மூலனூரை அடுத்த நாரணாவலசு. பச்சைக் குடை விரித்து படர்ந்து நின்றன எலுமிச்சை மரங்கள். மஞ்சள் பொட்டுக்களாக தரை முழுவதும் உதிர்ந்து கிடந்தன எலுமிச்சம் பழங்கள். இது மொத்தமும் நாட்டு ரக எலுமிச்சைதான்.
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
திருந்திய நெல் சாகுபடி |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அரசு திட்டங்கள் & சேவைகள் |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
குறைந்த பட்ச ஆதார விலை |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
சுற்றுச்சூழல் மாசுப்பாடு |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வல்லுனரை கேளுங்கள் |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| கேள்வி பதில் | தொடர்புக்கு © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008-10 |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||