தாவர அமைப்பு மற்றும் காலநிலை
கரும்பு - சக்காரம் அபிஸினாரம்
பலமொழிப் பெயர்கள்
ஆங்கிலம் : கல்டிவேட்டடு சுகர்கேன்,நோபல் ஹிந்தி : கன்னா, சகாரா, உக் தமிழ் : கரும்பு மலையாளம் : கரிம்பு, கரிம்ப்பு கன்னடம் : கப்பு
|
தோற்றம்
கி.பி.6000 ஆண்டுகளுக்கு முன்பே கரும்புப் பயிர் தற்போதைய புதிய கினியாவில் கண்டறியப்பட்டுள்ளது. பயிரிடப்படும் கரும்பில் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன. அவை
(அ) மெலிந்த, சற்று கடினமான வட இந்திய வகைகள் சக்காரம் பார்பரி மற்றும் சைனாவின் சக்காரம் சைனன்ஸீஸ்
ஆ) தடித்த, அதிக சாறு கொண்ட உயர்வகை சக்காரம் அஃபிஸினாரம். இது நன்கறியப்பட்ட கரும்பு வகையாகும். இது சைனா மற்றும் புதிய கினியா நாடுகளின் எல்லைப் பகுதியான, பல முக்கிய வேறுபாடுகள் கொண்ட இந்தோ-மியான்மார் பகுதியில் தோன்றியதாகத் தெரிகிறது. அதிக சாற்றுத் தன்மையுடன் சற்றுத் தடித்து, குறைவான நார் மற்றும் அதிகளவு சுக்ரோஸ் கொண்டு காணப்படுவதால், ச. அஃபிஸினாரம் ‘உயர்வகைக் கரும்பு’ எனப் போற்றப்படுகின்றது. ச.ரொபஸ்டம் இரகம் புதிய நியூ கினியாவில் தோன்றியது. அதேபோல் மிதவெப்ப இந்தியாவில் தோன்றிய இரகம் ச.ஸ்பான்டேனீயம் ஆகும். இவ்விரு காட்டு கரும்புகளின் வளரிடம் ஆற்றங்கரைகள், நீர் காணப்படும் இடங்கள் மற்றும் சதுப்பு நிலம் போன்றவை. வெப்பமண்டல கரும்பு என்பதும் (தடித்த வகை) புது கினியாவில் தோன்றியதாக இருக்கலாம். இந்தியாவிலிருந்து இவை சீனா, அரேபியா, எகிப்து மற்றும் சிலி போன்ற நாடுகளுக்குப் பரவியுள்ளது.
அறிமுகம்
கரும்பின் வகைப்பாடு (சக்காரம் அஃபிஸினாரம்)
குடும்பம் - கிராமினே (புல் வகையைச் சார்ந்தது)
வகுப்பு - ஒரு வித்திலைத் தாவரம்
வரிசை - குளுமேசியே
துணைக்குடும்பம் - பனி காய்டே
இனம் - ஆன்டிரிபோகனே
துணை இனம் - சச்சாரினினே
தாவரவியல் அமைப்பு
கரும்பு பல்லாண்டு வாழக்கூடிய, உயரமான புல் வகையைச் சார்ந்த ஒரு வெப்ப மண்டல பயிராகும். இது கிளைகளற்று, 5 செ.மீ சுற்றளவுடன 2-8 மீ உயரம் வரை வளரக் கூடியது. இது ‘மிகப்பெரிய புல்’ என அழைக்கப்படுகிறது.
தடித்த தண்டிலிருந்து எடுக்கப்படும் சர்க்கரைக்காக வளர்க்கப்படுகின்றது. கரும்பின் தாவரப்பகுதி வேர், இலைகள், தண்டு மற்றும் மஞ்சரி போன்றவற்றைக் கொண்டது.
-
வேர்
-
இலை
-
தண்டு
-
மஞ்சரி
வேர்
|
தண்டு
|
இலை
|
மஞ்சரி
|
காலநிலை
கரும்பு ஒரு வெப்பமண்டலப் பயிர். இது குறைந்த அல்லது அதிக வெப்பநிலைப் பகுதிகளிலும் வட இந்தியாவின் மிதவெப்பப் பகுதிகளிலும் வளரக் கூடியது. 35° வடக்கு மற்றும் 35° தெற்கு இடையே கடல் மட்டத்திலிருந்து 1000 மீ அல்லது அதற்குச் சற்று அதிகமாகவும் வளரக் கூடியது.
காலநிலைக்காரணிகள்
மழைப்பொழிவு
ஆண்டு மழைப்பொழிவு 1100 முதல் 1500 மி.மீ பரவலான மழை கரும்பிற்கு ஏற்றது. வளர்ச்சிப் பருவத்தில் சற்று அதிகமான நீரும் முதிர்ச்சிப் பருவத்திலும் வறட்சியும் தேவைப்படுகின்றது. 500 மி.மீ க்குக் குறைவான மழைப்பொழிவுள்ள இடங்களில் கூட கரும்பு பயிரிடலாம். ஆனால் 1500 மி.மீ அதிகமான மழைப்பொழிவினால் கரும்புகள் சாய்ந்து விடும்.
வெப்பநிலை
கரும்பு வளர்ச்சி வெப்பநிலையை அதிகம் சார்ந்துள்ளது. இது 38° செல்சியஸ் வரை வேறுபட்ட வெப்பநிலைகளில் வளரக் கூடியது. சராசரியாக 27° செ (முளைப் பருவத்தில்) முதல் 33° செ (80-90° ஃபாரன்ஹீட்) வரை வெப்பநிலை கரும்பிற்கு மிகவும் ஏற்றது. 27° செ. க்குக் குறைவான வெப்பநிலை கரும்பைப் பாதிப்பதோடு துார்விடுவதைக் குறைக்கும். அதேபோல் 38° செ.க்கு அதிகமான வெப்பநிலை வளர்ச்சி மற்றும் முளைத்திறனைப் பாதிக்கும்.
உகந்த வெப்பநிலை
கார்பன் தன்மயமாதல் - 30° செ.
சர்ச்கரை உருவாதல் -30° செ.
சர்க்கரை கடத்துதல் - 30-35° செ.
துார்விடுதல் -33.3 - 34.4° செ.
வேர் வளர்ச்சி -36° செ.
தண்டு வளர்ச்சி -33° செ.
ஒப்பு ஈரப்பதம்
வளர்ச்சிப் பருவத்தில் அதிக ஈரப்பதம் (80-85%) இருப்பது கரும்பு நீண்டு வளர உதவிப்புரியும். முதிர்ச்சிப் பருவத்தில் 45-65% சராசரி அளவு ஈரப்பதம் மற்றும் அளவான நீர்ப்பாசனம் நன்மை பயக்கும். சற்று சூடான வெப்பநிலையுடன் 40%ற்கு அதிகமான ஈரப்பதம் கரும்பின் உடல் வளர்ச்சிக்கு உறுதுணையாகும்.
சூரிய ஒளி
|
பனி
|
காற்று
மணிக்கு 60 கி.மீ வேகம் கொண்ட காற்று, வளரும் கரும்பினை சாய்ப்பதுடன் அதனை உடைத்து விடக்கூடும். கரும்பு சாகுபடி புள்ளி விவரங்கள்உலக அளவில் கரும்பின் பரப்பளவு, உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறன் இந்தியாவில் பரப்பளவு, உற்பத்தி, உற்பத்தித்திறன் மாநிலவாரியாக (2008-2009) தமிழகம், கேரளா, கர்நாடகாவில் கரும்பு பற்றிய புள்ளி விவரங்கள்(1999-2009) மாவட்ட அளவிலான கரும்பு பரப்பளவு, உற்பத்தி, உற்பத்தித்திறன் கரும்பின் பரப்பளவு, உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறன் (2007-08) கேரளா கரும்பு பரப்பளவு, உற்பத்தி, உற்பத்தித்திறன் (2006-07) கர்நாடகம் கரும்பு பரப்பளவு, உற்பத்தி, உற்பத்தித்திறன் (2006-07) |