பாசன மேலாண்மை

பாசன மேலாண்மை பற்றிய விபரங்கள்


நீர்த் தேவை


  • கரும்பின் நீர்த்தேவை வேளாண் தட்பவெப்பநிலை, மண் வகை, நடவு செய்யும் முறை, பயன்படுத்தப்படும் உரம் மற்றும் கரும்பு மகசூலைப் பொறுத்து வேறுபடும். வெப்பமண்டலத் தட்பவெப்பநிலை, வறண்டகாற்று, வறட்சி போன்றவை பயிரின் நீர்த் தேவையை அதிகரிக்கின்றன.

  • குழி நடவு முறையில் நீர்த்தேவை குறைவாக இருந்தாலும், அதிகளவு உரங்கள் இடும்போது தேவைப்படின் நீரின் அளவும் அதிகரிக்கும். 1 டன் கரும்பு உற்பத்தி செய்ய, சராசரியாக 60-70 டன் நீர் தேவைப்படுகிறது. தடினமான இரகங்களுக்கு 200 செ.மீ –ம், சற்று மெலிந்த இரகக் கரும்பிற்கு 150 செ.மீ நீரும், அட்சாலி கரும்பிற்கு 200 செ.மீ நீரும், இதை தவிர 75 செ.மீ மழைப்பொழிவும் தேவைப்படுகின்றது. இருப்பு நீர், 50 சதவீத அளவு இருக்கும் போது பாசனம் செய்ய வேண்டும்.

  • கரணை நடவு செய்யும்போது போதுமான அளவு ஈரப்பதம் மண்ணில் இருக்க வேண்டும். முதல் பாசனம் 20-25% பயிர்கள் முளைத்திருக்கும்போது அல்லது நடவு செய்து 20 நாட்களுக்குப் பிறகு அளிக்கப்பட வேண்டும். கோடை காலங்களில் 10-15 நாட்களுக்கு ஒருமுறை நீர் பாய்ச்சப்பட வேண்டும். குளிர்காலங்களில் 25-30 நாட்களுக்கு ஒருமுறையும், வறட்சி ஏற்பட்டிருப்பின் மழைக்காலங்களிலும் கூட அவ்வப்போது நீர் பாய்ச்ச வேண்டும். கரும்பின் வளர்ச்சிப் பருவத்திலும், நன்கு துார்விடும் பருவத்திலும் அதிக அளவு நீர் தேவைப்படுகின்றது.

  • கரும்பிற்கு நீர் அதிக அளவில் தேவைப்பட்டாலும் சில சமயங்களில் தொடர்ந்து வயலில் நீர் தேங்கிநிற்பதால் வேர்கள் சரியாக சுவாசிக்க இயலாமை, ஊட்டச்சத்துக்கள் நீரில் அடித்துச் செல்லப்படுதல், வழக்கமான நன்மை செய்யும் நுண்ணுயிரிகளின் செயல்பாடுகள் பாதிக்கப்படுதல், அதிக கிளைப்புகளால் கரும்புகள் சாய்தல் போன்ற விளைவுகள் ஏற்படும். இதனால் மகசூல் மிகவும் பாதிக்கப்படுவதோடு கரும்பின் தரமும் குறைகின்றது. எனேவ வயலில் முறையானவடிகால் வசதி இருப்பது அவசியம்.

கரும்பின் சராசரி நீர்த்தேவை


  • கரும்புப் பயிருக்கு சுமார் 1800 முதல் 2000 மி.மீ நீர் தேவைப்படுகிறது.

வ.எண்

பயிர்

பயிர்க்காலம்

நீர்த்தேவை
(மி.மீ)

நீர் பாய்ச்சல் எண்ணிக்கை

1

கரும்பு

365

2000

24

12 மாதங்களில் கரும்பின் ஒவ்வோர் வளர்ச்சிப் பருவத்திற்குமான நீர்த்தேவை

நீர்ப்பாசனஇடைவெளி முறை

பயிர் பருவங்கள்
(வளர்ச்சி நிலை)

நீர் பாய்ச்சல் நாட்கள்

நீர்த்தேவை

முளைக்கும் பருவம்

0-45 நாட்கள்

300 மி.மீ

தூர்விடும் பருவம்

45-120 நாட்கள்

550 மி.மீ

வளர்ச்சிப் பருவம்

120-270 நாட்கள்

1000 மி.மீ

முதிர்ச்சிப் பருவம்

270-360 நாட்கள்

650 மி.மீ

மண் வகைமற்றும் பல்வேறு பருவங்களுக்கேற்ற நீர்ப்பாசன இடைவெளி


பயிர் பருவங்கள்

நீர் பாய்ச்சல் இடைவெளி (நாட்களில்)

செம்மண்

வண்டல்மண

கரிசல்மண

முளைக்கும் பருவம்

(0-45 நாட்கள்)

5-6

6-7

8-10

தூர்விடும் பருவம்

(45-120 நாட்கள்)

6-7

7-10

12-15

உச்சகட்டவளர்ச்சிப் பருவம்

(120-127 நாட்கள்)

7

10

12-15

முதிர்ச்சிப் பருவம்

(270-360 நாட்கள்)

 

10

12-15

15-20


மேலே செல்க

பல்வேறு நீர் பாய்ச்சல் (பாசன) முறைகளில் நீர் பயன்பாட்டுத் திறன்


நீர் பாய்ச்சல் முறை

பாய்ச்சப்பட்ட நீர் (ஹெ-செ.மீ)

கரும்பு மகசூல் (மி.டன்/ஹெ)

நீர் பயன்பாட்டு திறன்

சர்க்கரை மகசூல்
(மி.டன்/ஹெ)

மழைத்துப்பாக்கித் தெளிப்பான்

175.26

126.56

0.72

17.87

சொட்டு நீர்ப்பாசனம்

132.14

128.64

0.97

18.29

(வாய்க்கால்) பாத்திப் பாசனம்

258.45

104.42

0.4

14.71


சரியான அளவு நீர் பாய்ச்சப்படாவிடில் (நீர்ப்பற்றாக்குறையின் விளைவுகள்)


  • கணு இடைவெளிப்பகுதி (கரணையின்) நீளம் குறைகின்றது.

  • சாறின் அளவு குறைந்து, நார்த்தன்மை அதிமாகின்றது.

  • முளைப்புத் திறன் குறைகிறது.

  • சர்க்கரை மகசூல் குறைகிறது.


அதிகளவு நீர் பாய்ச்சலால்

  • கணுக் (பருக்)கள் செத்துப் போதல்

  • வேர் பாதிக்கப்படுதல்

  • சர்க்கரை மகசூல் குறைதல்

  • கரும்பு மகசூல் குறைதல்

  • பயிர் மண்ணிலிருக்கும் ஊட்டச்சத்துக்களை எடுக்க இயலாமல் மஞ்சள்நிறமாக மாறிவிடுதல் போன்ற விளைவுகள் ஏற்படும்.


மேலே செல்க

நீர்பாய்ச்சல் முறைகள்


வெள்ளநீர் பாய்ச்சல்:

  • இம்முறையில் நீரானது வயலின் எல்லாப் பகுதிகளுக்கும் பாயுமாறு திறந்து தடையின்றி விடப்படுகின்றது.

  • பார்-சால் அமைக்காமல் சமநிலப்பகுதிகளில் நடப்பட்ட கரும்பிற்கு இவ்வாறு நீர் பாய்ச்சலாம்.  எனினும் இம்முறையில் நீர் இழப்பு மிக அதிகளவு இருக்கும்.


பாத்திப் பாய்ச்சல்:

  • அதிகளவில் பின்பற்றப்படும் இம்முறை, முன்பட்ட நடவு கரும்பிற்கு ஏற்றது.

  • வளர்ச்சிப் பருவத்தின் பின் நாட்களிலும், மறுதாம்புப் பயிரிலும் பார்சால்கள் உடைந்து விடுவதால் நீர் பாய்ச்சுவது சற்றுகடினமே.

  • பாத்தியின் நீளத்தைக் குறைவாக அமைப்பது பிந்தைய நீர்ப்பாய்ச்சலுக்கு உதவியாக இருக்கும்.


ஒன்றுவிட்ட பாத்திப் பாய்ச்சல்:

  • இம்முறையானது சமமான படுகைகளில் கரணை நடவு செய்யப்பட்டு பின்பு முளைத்த பின் 45 செ.மீ அகலமும் 15 செ.மீ ஆழமும் கொண்ட பாத்திகள் ஒன்றுவிட்ட கரும்பு இடைவெளிகளில் உருவாக்கப்படும் முறையில் பின்பற்றப்படுகின்றது.

  • இதன்மூலம் ஓரளவு நீரினைச் சேமிக்க முடியும்.

  • இலையுதிர் காலங்களில் 7 நீர்ப்பாய்ச்சல்கள் (5 மழைக்கு முன்பும், 2 மழைப் பொழிவிற்குப் பின்பும்) அளிக்கப்படுகின்றன.

  • வசந்தகாலத்தில் 6 நீர்ப்பாய்ச்சல்கள் (அதாவது 4 மழைக்கு முன்பும், 2 மழைப் பொழிவிற்குப் பின்பும்) துார்விடும் சமயத்தில் கண்டிப்பாக நீர்பாய்ச்சல் அளிக்கப்படுகின்றன.


தெளிப்பு நீர்ப்பாசனம்:

  • தெளிப்பு நீர் பாசனத்திற்கென மேம்படுத்தப்பட்ட தெளிப்பான்கள், கையினால் மற்றும் தானாகவே செயல்படக்கூடியவை, பழைய அதிக எடை கொண்ட, ஆட்கள் கொண்டு கையினால் தெளிக்கக்கூடிய சத்தமிடக்கூடிய தெளிப்பான்களில் தற்போது பல புதிய வகைகள் எளிதில் கையாளும் வண்ணத்தில் உருவாக்கப்பட்டு சந்தைகளில் கிடைக்கின்றன.  எனினும் வினாடிக்கு 4 அல்லது 5 மீட்டர் வேகத்தில் காற்று வீசும்போது இத்தெளிப்பான்களின் பயன்பாடு பாதிக்கப்படுகின்றது.

 


சொட்டு நீர்ப்பாசனம்:

  • சொட்டு நீர்ப்பாசனம் என்பது பக்கக் குழாய்களில் நீர் சொட்டிகளை அமைத்து, பயிரின் வேர்ப்பகுதிக்குத் தேவையான நீரைச் சமச்சீராகக் கொடுப்பதே ஆகும். இம்முறையில் நீரானது மண்ணின் மேற்பகுதியில் சிறிதளவு அழுத்தம் (20-200 கிலோ பாஸ்கல்) மூலம் நீர் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறுமாறு (0.6-20 எல்.பி.ஹெச்) செய்து மண்ணினைப் பகுதியளவு நனையச் செய்வதாகும்.


மேலே செல்க

சொட்டு நீர்ப்பாசனம்


  • சொட்டு நீர்ப்பாசனம் என்பது பக்கக் குழாய்களில் நீர் சொட்டிகளை அமைத்து, பயிரின் வேர்ப்பகுதிக்குத் தேவையான நீரைச் சமச்சீராகக் கொடுப்பதே ஆகும். இம்முறையில் நீரானது மண்ணின் மேற்பகுதியில் சிறிதளவு அழுத்தம் (20-200 கிலோ பாஸ்கல்) மூலம் நீர் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறுமாறு (0.6-20 எல்.பி.ஹெச்) செய்து மண்ணினைப் பகுதியளவு நனையச் செய்வதாகும்.

  • கரும்பில் சொட்டு நீர்ப்பாசனம் என்பது ஒரு புதிய ஆக்கப்பூர்வமான தொழில் நுட்பம். இதன் மூலம் நீர் மற்றும் ஆற்றலை மிச்சப்படுத்துவதோடு நல்ல இலாபம் ஈட்ட முடியும்.

  • இதன் மூலம் கரும்பின் மூன்று முக்கியப் பிரச்சினைகளான நீர்ப்பற்றாக்குறை, நீர்  இறைக்கத் தேவைப்படும் ஆற்றல் செலவு மற்றும் குறைந்த இலாபம் போன்றவற்றிற்குத்  தீர்வுகாணலாம்.

  • உழவியல் முறைகள், தொழில் நுட்ப முறை மற்றும் பொருளாதாரக் காரணிகளைப் பொறுத்தே சொட்டு நீர் பாசனத்தின் இலாபம் அமையும்.

  • 240 செ.மீ இடைவெளி கொண்ட பாரின் நடுவே 12 மி.மீ அளவுள்ள பக்கவாட்டுக் குழாய்களை வைக்க வேண்டும். இப்பக்கவாட்டுக் குழாய்களில் 8 எல்.பி.ஹெச் அடைப்புகளற்ற சொட்டுவான்களை 75 செ.மீ இடைவெளியில் பொருத்த வேண்டும். இக்குழாயின் நீளம் 30-40 மீட்டருக்குள் இருக்க வேண்டும்.

  • பயிரின் நீர் ஆவியாகும் போது தேவையைப் பொறுத்து சுமார் 3 நாட்களுக்கு ஒருமுறை நீர் பாய்ச்சலாம்.

 


மேற்பரப்பு சொட்டுநீர்:

    • பயிருக்குத் தேவையான நீரை சொட்டு  சொட்டாக அல்லது சிறிய ஓடை அமைப்பு மூலம் குறிப்பிட்ட இடைவெளியில் பக்கக் குழாய்களில் பொறுத்தப்பட்டுள்ள சொட்டிகள் மூலம் அளிப்பதே மேற்பரப்பு சொட்டு நீர் பாசனம் ஆகும்.

    • பயிர் வரிசை முறை அல்லது ஒருங்கிணைக்கப்பட்ட மேற்புற மண் சொட்டு நீர் பாசனம் என இருவகை உண்டு.  இதில் ஒருங்கிணைந்த முறை கரும்பு  பயிருக்குப்  பரிந்துரைக்கப்படுகின்றது.


கீழ்மட்ட சொட்டு நீர்ப்பாசனம்:

    • நன்கு மோல்ட் செய்யப்பட்ட சொட்டிகளை பக்கக் குழாயினுள் அமைத்து அதனை மண்ணில் சற்று புதைந்தவாறு வைத்து நீர் பாய்ச்சுவதே ஆகும்.  இக்குழாயின் சொட்டிகள் ஒருங்கிணைந்த முறை சொட்டிகளைப் போலவே (1.0-3.0எல்.பி.ஹெச்) நீர்சொட்டக் கூடியவை.

    • பயிர்த்தேவை மற்றும்  மண் வகையைப் பொறுத்து ஒருங்கிணைந்த முறையில் (மெல்லிய (அ) தடித்த சுவர்கொண்ட) குழாய்களை குறிப்பிட்ட ஆழத்தில் புதைத்து வைக்கப்படுகின்றது.

    • கீழ்மட்ட சொட்டு நீர்ப்பாசனத்தில் ‘ஒற்றைப்பயிர்’ மற்றும் ‘பலபயிர்’ முறைக்கேற்றவாறு இரண்டு முறைகள் உள்ளன.

    • கீழ்மட்ட நீர்ப்பாசனத்தில் மேற்பரப்பு நீர் ஆவியாதல் தடுக்கப்படுவதால் நீர் மிச்சப்படுத்தப்படுகின்றது.  மேலும் பூச்சி மற்றும் நோய்த் தாக்குதலைக் குறைத்து மகசூல் அதிகரிக்க செய்கின்றது.

மேலே செல்க

பயன்கள்


  • 25-50% நீர் சேமிக்கப்படுகின்றது.

  • நீர்த் தேவை மிகவும்  குறைவு.

  • நீர் ஆவியாகி வீணாவது பெருமளவு தடுக்கப்படுகின்றது.

  • களைப்பிரச்சினை குறைவு.

  • நீர் பாய்ச்சப்படும் நேரம் குறைவு.

  • பயிர் வளர்ச்சி ஒரே சீராக இருக்கிறது.

  • குறைந்த நீர்ப்பாசனத்தில் அதிகமகசூல்.

  • பூச்சி, நோய் மற்றும் களைத் தொல்லை குறைக்கப்படுகிறது.

  • நீர் சேமிக்கப்படுவதால் அதைக்கொண்டு அதிகபரப்பில் சாகுபடி செய்யலாம்.

  • நீரில் மனிதர்கள் அதிக நேரம் நிற்பதால் நீர் மூலம் பரவும் (பில்ஹாரியா (அ) சிஸ்டோசோமியாசிஸ்) நோய்களின் பாதிப்பு குறைவு.

  • கால்வாய்கள் மாசு படுத்தப்படுவது குறைகிறது.  இம்முறையின் மூலம் குறிப்பிடத்தக்க அளவு நீர்  சேமிக்கப்படுகின்றது. 

 

கரும்பிற்கு சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க வழிமுறைகள்


 

 


சொட்டு நீர்ப்பாசனத்தின் முக்கிய பயன்பாடுகள் 


நீர்

  • 40 முதல் 70 சதம் பாசன நீர் சேமிக்கப்படுகின்றது.

  • நீர் பாய்ச்சலுக்கான ஆட்செலவு குறைவு.

  • நீர் பயன்பாட்டுத்திறன் அதிகம்.

  • நீர் பரவுதல் ஒரே சீராக இருக்கும் (90%)

  • தரம் குறைந்த பாசன நீர்ப்பகுதிகளுக்கும் ஏற்றது.

  • காரத் (உவர்ப்புத்) தன்மை கொண்ட தண்ணீரிலும் பயன்படுத்தலாம்.


மண்

  • அனைத்து மண் வகைகளுக்கும் உகந்தது.

  • களர், உவர் நிலங்களுக்கும், சமச்சீராக இல்லாத நிலங்களுக்கும் ஏற்ற நீர்ப்பாசன முறை.

  • குறைந்தளவு உழவே போதுமானது.

உரப்பாசனம்


உரப்பாசனம்

  • கரும்பு நீண்ட காலப்பயிராக, அதிக எடை கொண்டதாக இருப்பதால் இதன் வளர்ச்சிக்கு அதிகளவிலான சத்துகள் தேவைப்படுகின்றன.

  • இதற்கு உரப்பண்ணை, வென்சுரி அமைப்பு, உட்செலுத்தும் பம்ப், மின்சாரமற்ற விகித நீர்மக் கரைப்பான் (என்.இ.பி.எல்.டி) மற்றும் தானியங்கி முறைபோன்ற அமைப்புகள் அவசியம்.

  • உரப்பாசன முறையில் கரும்பிற்குத் தேவையான சத்துகள் பயிரின் வேர் அருகிலேயே தேவையான அளவில் மண்ணின் வகையைப் பொறுத்து அளிக்கப்படுகின்றன. இதனால் அதிக மகசூலும், சர்க்கரை மகசூலும் கிடைக்கின்றது.

உரப்பாசன அடிப்படை நுணுக்கங்கள்

  • உரப்பாசனம் என்பது பயிருக்கு தேவையான உரங்களை பாசனநீரில் கலந்து அளிப்பதாகும்.

  • இவ்வுறப் பாசனம் உரப்பண்ணை, வென்சுரி அமைப்பு, உட்செலுத்தும் (பம்ப்) குழாய், மின்சாரமற்ற விகித நீர்மக்கரைப்பான் (என்.இ.பி.எல்.டி) மற்றும் தானியங்கி அமைப்பு  முறை போன்றவற்றின் மூலம் செயல்படுத்தப்படுகின்றது.

  • நைட்ரஜன் மற்றும் பொட்டாஷ் உரங்கள் முறையே 275 மற்றும் 112.5 கி.கி/ஹெக்டர் என்ற அளவில் நடவு செய்து 15 நாட்களுக்குப் பிறகு 15 நாட்கள் இடைவெளியில்  உரத்தினை 14 சரிபகுதிகளாகப் பிரித்து அளிக்க வேண்டும்.

  • ஒவ்வொரு பகுதி உரத்திலும் 25 கி.கி நைட்ரஜன், 8 கி.கி பொட்டாஷ் என்ற அளவில் ஒரு ஹெக்டருக்கு அளித்தல் வேண்டும்.

  • மேற்கண்ட சத்துக்களுக்கு யூரியா மற்றும் மியூரேட் ஆஃப் பொட்டாஷ் (வெள்ளை நிற பொட்டாஷ்) உரங்களைப் பயன்படுத்தலாம்.

  • நடவு செய்த பின் 210 வது நாள்வரை கூட உரப்பாசனம் அளிக்கலாம்.


கரும்பிற்கான நீரில் கரையும் உரங்களின் வகை மற்றும் தேவை

  • பரிந்துரைக்கப்பட்ட அளவு: 275:62.5:112.5 கி.கி என்.பி.கே/ஹெ (தழை-மணிசாம்பல் சத்துக்கள்/ஹெ).

  • உரப்பாசனத்திற்குப் பரிந்தரைக்கப்பட்ட அளவு 275:15:112.5 தழை-மணி-சாம்பல் (என்.பி.கே/ஹெ).

உரப்பாசன அட்டவணை

பயிர் நிலைகள்

பருவ காலம் நாட்களில்

அளிக்க வேண்டிய

உரம்

எண்ணிக்கை

அளவு
(கி.கி/நேரம்)

முதல் நிலை

நடவு செய்தது முதல் 70 வது நாள்வரை (5,10,70 வது நாள்)

12-61-00

14

0.9

13-00-45

14

1.8

யூரியா

14

12.1

இரண்டாம் நிலை

71 நாட்கள் முதல் 120 நாட்கள்

12-61-00

10

1.2

13-00-45

10

5.0

யூரியா

10

20.9

மூன்றாம் நிலை

121 நாட்கள் முதல் 160 நாட்கள்

12-61-00

8

3.1

13-00-45

8

5.6

யூரியா

8

14.1

நான்காம் நிலை

161 நாட்கள் முதல் 210 நாட்கள்

12-61-00

10

2.5

13-00-45

10

6.8

யூரியா

10

8.3


மேலே செல்க

12 மாத பருவ கால/மறுதாம்பு கரும்பிற்கான உரப்பாசன அட்டவணை

நடவு செய்த பின்பு

ஊட்டச் சத்துகள் (கி.கி/ஹெ/ நாளொன்றுக்கு)

தழை (நை)

மணி (பாஸ்)

சாம்பல் (பொட்)

1-30 நாட்கள்

1.20

0.10

0.20

31-80 நாட்கள்

1.50

0.40

0.20

81-110 நாட்கள்

2.00

1.00

0.40

111-150 நாட்கள்

0.75

0.30

0.75

151-190 நாட்கள்

-

-

1.50


 

முன்பட்ட (14-16 மாதகால) கரும்பிற்கான உரப்பாசன அட்டவணை

நடவு செய்த பின

ஊட்டச் சத்துக்கள் (கி.கி/ஹெ/ நாளொன்றுக்கு)

தழைசத்து

மணிசத்து

சாம்பல்சத்து

1-30 நாட்கள்

1.5

0.15

0.25

31-80 நாட்கள்>

2.0

0.60

0.30

81-110 நாட்கள்

2.5

1.50

0.50

111-150 நாட்கள்

0.75

0.50

1.0

151-190 நாட்கள்

-

-

1.80


உரப்பாசனத்தின் பயன்கள்

  • முறையான (தினசரி) நீர்ப்பாசனத்தின் வழியே உரத்தினை அளிப்பதால் நல்ல வளர்ச்சியுடன், அதிக மகசூலும் பெற முடிகின்றது.

  • பயிரின் தேவை அறிந்து அதற்கேற்ப சரியான நேரத்தில் உரமளிக்க இயலும்.

  • இம்முறையில் பயிரின் வேர்கள் கருகி பாதிக்கப்படாமல், பாதுகாப்பாக உரமளிக்க முடியும்.

  • நேரடியாக மண்ணில் இடும் முறையை விட உரப்பாசன முறை எளியதாகவும், நேரம்,  ஆட்செலவு, கருவிகள் மற்றும் ஆற்றல் போன்றவற்றை சேமிப்பதாகவும் உள்ளது.

  • உரப் பயன்பாட்டுத் திறனை அதிகரிக்கின்றது.

  • நேரடி உரமிடுவதால் மண் இறுகி, பயிர் பாதிக்கப் படுவதிலிருந்து பாதுகாக்கின்றது.

  • எளிய முறையில் கலவை உரங்களைப் பயன்படுத்துவதோடு, நுண்ணுாட்டச் சத்துக்களையும் கலந்து பயிருக்கு  அளிக்கமுடிகின்றது.

  • குளோரைடு,  சோடியம் போன்றவற்றைத் தவிர்க்க இயலும்.

  • பயிரின் வேர் மண்டலத்தில் உப்புகள் அதிகம் படிவதைத் தடுக்கின்றது.

  • உரப்பாசன முறையில் அளிக்கப்படும் உரங்களில் பெரும்பாலும் நுண்ணுாட்டச்சத்துக் கலந்ததாகவே இருக்கின்றது.


மேலே செல்க

வறட்சி மேலாண்மை


வறட்சி

வறட்சி என்பது மழையில்லாத குறிப்பிட்ட காலத்தினைக் குறிக்கும் வானிலையியல் சொல் ஆகும்.  இதனைச் சரியாகக் குறிப்பிட்ட வேண்டுமெனில் மண்ணின் ஈரப்பதம் அதாவது வேரின் நீர்க்கொள் அளவை விடமற்றும் மண் நீராவிப் போக்கின் அளவு அதிகரிக்கும்போது நீர்ப்பற்றாக்குறை ஏற்படுகின்றது. இதுவே வறட்சி எனப்படுகின்றது.


கரும்பு நீண்ட காலப்பயிராக இருப்பதால் இதற்கு அதிகளவு நீர் தேவைப்படுகின்றது.  முளைக்கும் பருவம் மற்றும் வளர்ச்சிப் பருவங்கள் நன்கு நீர் பாய்ச்ச வேண்டிய முக்கியமான பருவங்களாகும். இந்தியாவில் இப்பருவங்கள் நீர் குறைவாக உள்ள கோடை காலங்களில் வருகின்றன. எனவே நீரின் அளவு போதாமல், பயிருக்குரிய நீர் கிடைக்காமல் பயிர் காய்ந்து மகசூல் இழப்பு ஏற்படுகின்றது.


வறட்சி நிர்வாகம்:

  1. கரும்பினை முன் பட்டத்திலேயே 30 செ.மீ ஆழம் கொண்ட பாத்தியில் நடவேண்டும்.

  2. வறட்சியால் பாதிக்கப்படும் பகுதிகளில் 90 செ.மீக்குப் பதிலாக 60-75 செ.மீ இடைவெளியில் நடவேண்டும்.

  3. விதைக்கரணைகளை சுண்ணாம்புக் கரைசலில் (80 கி.கி கிளிஞ்சல் சுண்ணாம்பு 400 லி நீரில் கரைத்தது) 1 மணி நேரம் ஊற வைத்து நடவேண்டும்.

  4. 5 வது மாதத்தில் சோகை உரித்து அதனை வயலிலேயே விட்டு விடவும்.  இதனால் 2° செ வரை வெப்பநிலை குறைக்கப் படுகின்றது.

  5. நீர் குறைவாக உள்ள சமயங்களில் பொட்டாஷ்-யூரியா உரங்களை 25 கி முறையே எடுத்து 1 லி நீரில் கலந்து, 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும்.

  6. கயோலின் மருந்தினை (60 கி 1 லி நீரில் கலந்து) தெளிப்பதன் மூலமும் நீர்ப்பற்றாக் குறையைப் போக்கலாம்.

  7. நீர் இருப்பு குறைவாக உள்ள சமயங்களில் ஒன்று விட்டு ஒன்று பாத்திப் பாய்ச்சல் மற்றும் விட்டு விட்டுப் பாய்ச்சும் பாசன முறைகளைக் கையாளலாம்.

  8. பரிந்துரைக்கப்பட்ட உர அளவோடு 125 கி.கி மியூரேட் ஆஃப் பொட்டாஷ் உரத்தினை கூடுதலாக,  நடவு செய்த 120 வது நாளில் வயலில் இடலாம்.

  9. கடைசி உழவின்போது ஹெக்டருக்கு 25 டன்கள் தென்னை நார்க்கழிவினை அடிஉரமாக இட்டு உழவு செய்யலாம்.

  10. வறட்சியை எதிர்த்து தாங்கி வளரும் இரங்களான கோ 86032, கோ 99004, கோ 94008 மற்றும் கோ 86249 இரகங்களைப் பயிரிடலாம்.

மேலே செல்க

 

அனைத்து உரிமைகளும் © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்