அறுவடை
அறுவடை
-
அறுவடை செயல்முறை
-
அறுவடை செய்யும் முறைகள்
-
கரும்பு முதிர்ச்சியடைந்ததன் அறிகுறிகளும் அறுவடைக் காலமும்
-
கரும்பு பதப்படுத்துதல்
-
உப பொருட்கள்
அறுவடை செயல்முறை
அறுவடை செய்யும் காலம்
அறுவடை செயல்முறை
அறுவடை செய்யும் முறைகள்
கரும்பு முதிர்ச்சியடைந்ததன் அறிகுறிகளும் அறுவடைக் காலமும்
கரும்பு பதப்படுத்துதல்
உப பொருட்கள்
கரும்பு பயிரை சரியான நேரத்தில் அதாவது நன்கு முதிர்ச்சி அடைந்தவுடன் அறுவடை செய்வது அவசியம். அப்போதுதான் மில்லிற்குக் கிடைக்கும் சர்க்கரையில் அதிக இழப்பு ஏற்படாமல் நல்ல சர்க்கரை மகசூல் பெற இயலும். சரியாக முதிர்ச்சியடைவதற்கு முன்போ, பின்போ ஒழுங்கற்ற முறையில் அறுவடை செய்தால் கரும்பு மகசூல் குறைதல், சர்க்கரை அளவு குறைதல், தரம், குறைந்த சாறு மற்றும் மில்லில் இயந்திர முறையில் பிரித்தெடுப்பதில் பிரச்சனை போன்ற விளைவுகள் எற்படும். |
எனவே முறையான அறுவடை என்பது :
அறுவடை செய்தல்:கரும்பு பயிரானது வடஇந்தியாவில் 10-12 மாதங்களிலும் தென்னிந்தியாவில் 18-20 மாதங்களிலும் முதிர்ச்சி அடைகின்றது. டிசம்பர் மற்றும் ஜனவரியில் 20 டிகிரி செல்சியசுக்குக் குறைவாகவும் உள்ள வெப்பநிலையில் பிரிக்ஸ் மதிப்பு 16-18 இருந்தால் கரும்பு முதிர்ச்சி அடைந்து விட்டதாகக் கொள்ளலாம். இலைகள் மஞ்சள் நிறமடைதல், வளர்ச்சி நின்று போதல், மஞ்சரி தோன்றுதல், கரும்பினைத் தட்டும்போது சத்தம் வருதல், கணுக்கள் பெருகி முளைவிடத் தொடங்குதல் போன்றவை பிற அறிகுறிகள் ஆகும். |
அறுவடை அட்டவனை
இந்தியாவில் கரும்பின் முதிர்ச்சியையும், நடவு செய்த சமயத்தையும் பொறுத்து 10-18 மாதங்களில் அறுவடை செய்யப்படுகின்றது. |
அறுவடை செய்யும் முறைகள்
கைகளால் (வெட்டுதல்) அறுவடை செய்தல் |
இயந்திரம் மூலம் அறுவடை செய்தல்
கரும்பு அறுவடை செய்யும் இயந்திரமானது , கரும்பு பயிர்களின் வழியே சென்று மேல் சோகைப் பகுதியை நீக்கி விட்டுத் தண்டுக் கரும்பினை “பில்லெட்ஸ்” எனும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொடுக்கின்றது. இந்த “பில்லெட்ஸ்கள்” இயந்திரத்தின் ஒருபக்கத்திலுள்ள தொட்டி நிரம்பியதும் ஆலைகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. அளவைப் பொறுத்து இவ்வியந்திரம் 2.5 லிருத்து 4 ஹெக்டர் வரை நாளொன்றுக்கு (8 மணி நேரம்) அறுவடை செய்யக் கூடியது. |
கரும்பு முதிர்ச்சியடைந்ததன் அறிகுறிகளும் அறுவடைக் காலமும்
அறுவடைக்கு முந்தைய செயல் முறைகள்
ஆ) கரும்பின் முதிர்ச்சியை அறிதல்
|
அறுவடை செய்யப்பட்ட கரும்பில் ஈரப்பத இழப்பைத்தடுத்தல்:
வெட்டப்பட்ட கரும்பினை சோகை கொண்டு மூடுதல், தண்ணீர் தெளித்தல் போன்றவற்றின் மூலம் சூரிய ஒளியிலோ அல்லது நிழலிலோ வைக்கப்பட்டிருக்கும் கரும்பின் ஈரப்பத இழப்பைக் குறைக்க இயலும். பல்வேறு இரகங்களில் செய்யப்பட்ட ஆராய்ச்சிப் படி கோ86249 இரகத்தில் அதிகளவும் (5.9%), குறைந்த அளவாக (4.7%) கோ 94008 மற்றும் கோ 85019 ஈரப்பத இழப்பு ஏற்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. |
சுத்தத் தன்மை சதவிகிதம் = (சுக்ரோஸ் % /ஹச். ஆர் பிரிக்ஸ்) 100
கரும்பானது 16% சுக்ரோஸ்-ம் , 85% சுத்தத் தன்மையும் கொண்டிருந்தால், அது அறுவடைக்கு உகந்ததாகக் கருதப்படுகின்றது.
|
சர்க்கரை சத்து (டன் / ஹெ) = [மகசூல் (டன் / ஹெ) x சர்க்கரை கட்டுமானம் (%)] /100
சர்க்கரை மகசூல் (%) = [சு- 0.4 (பி-சு)] × 0.73 |
கரும்பு மகசூல்
கரும்பு மகசூல்= கரும்புத் தண்டுகளின் எண்ணிக்கை × ஒரு கரும்புத்தண்டின் எடை.
கரும்புத் தண்டு எடை
|
பொதுவான தகவல்கள்
அறுவடையின் போது அதிக மகசூல் பெற கீழ்க்கண்ட ஒருங்கிணைந்த சாகுபடி முறைகளைப் பின்பற்றுவது அவசியம்.
|
மறுதாம்பு கரும்புப் பயிருக்கு
|
கரும்பு பதப்படுத்துதல்
அறுவடை செய்யப்பட்ட கரும்பினை சேகரித்தல்:
முதிர்ச்சியடைந்த கரும்பினை கையினால் அல்லது இயந்திரம் கொண்டு வெட்ட வேண்டும். தரைப்பகுதி அளவுக்குக் கரும்பினை நறுக்கி, சோகைகளை நீக்கிவிட்டு, தலைப்பகுதியில் கடைசியாக முதிர்ச்சியடைந்த இணைப்புப் பகுதிவரை வெட்டி விடவேண்டும். பின்பு லாரி போன்ற கனரக வாகனங்களில் ஏற்றப்பட்டு, கயிறு கொண்டு கட்டி சர்க்கரை ஆலைகளுக்கு எடுத்து செல்லப்படுகின்றது. |
வெட்டப்பட்ட கரும்பில் ஈரப்பத இழப்பினைத் தடுத்தல்:
வெட்டப்பட்ட கரும்பினை சோகை கொண்டு மூடுதல், தண்ணீர் தெளித்தல் போன்றவற்றின் மூலம் சூரிய ஒளியிலோ அல்லது நிழலில் வைக்கப்பட்டிருக்கும் கரும்பின் ஈரப்பத இழப்பைச் சரிசெய்ய இயலும். பல்வேறு இரகங்களில் செய்யப்பட்ட ஆராய்ச்சியின் படி கோ 86249 இரகத்தில் அதிகளவும் (5.9%), குறைந்த அளவாக (4.7%) கோ 94008 மற்றும் கோ 85019 ஈரப்பத இழப்பு ஏற்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. |
சுத்தப்படுத்துதல் மற்றும் அரைத்தல்
ஆலைகளைச் சென்றடைந்த கரும்புகள் நன்கு கழுவப்பட்டு பின்பு நறுக்கப்படுகின்றன. சுத்தப் படுத்தப்பட்ட கரும்பு சுழலும் கத்தி உள்ள இயந்திரம் வழியே அனுப்பப்படும்போது சிறு சிறு துண்டுகளாக நறுக்கப்படுகின்றது. இதுவே ‘அரைத்தல்’ எனப்படுகிறது. அரைத்தலின் போது கட்டிகளாக உள்ள சர்க்கரையினை(கரும்பினைக்) கரைக்க சுடுநீர் ஊற்றப்படுகிறது. இச்சிறு துண்டுகள் பின்பு பரவிச் செல்லும் பட்டை(பெல்ட்) வழியே அடுத்த பகுதிக்கு எடுத்துச் செல்லப்படுகின்றது. |
சாறு பிழிதல்
இவ்வாறு எடுத்துச் செல்லும் பட்டையின் மூலம் வரும் கரும்பு கனரக உருளைகள் வழியே அனுப்பப்பட்டு, சாறு பிழியப்படுகின்றது. வெளி வரும் சக்கைகள் உலர்த்தப்பட்டு, எரி பொருளாக பயன்படுத்தப் படுகின்றது. பிழியப்பட்ட சாறு மேலும் கசடுகள் நீக்கப்படுவதற்காக தெளிவாக்கியினுள் செலுத்தப்படுகின்றது. |
தெளியவைத்தல்
இச்செயல்முறை ஆரம்பித்த உடன் கார்பன்-டை-ஆக்ஸைடு மற்றும் சுண்ணாம்புப் பால் கலந்த சர்க்கரைப் பாகு கொதிநிலை வரை சூடு செய்யப்படுகின்றது. |
ஆவியாக்கல்
தெளிய வைத்துப் பெறப்பட்ட சாறு ஒரு வெற்றிடத்தில் வைக்கப்படுகின்றது. அங்கே குறைந்த வெப்பநிலையில், சாறு ஆவியாக்கப் படுகின்றது. இச்சாறு நன்கு கெட்டியான பழுப்பு நிற பாகாக மாறும் வரை ஆவியாக்கப்படுகின்றது. |
படிகமாக்குதல்
ஆவியாக வெளியேற்றப்பட்டது போக சிறிதளவு நீர் எஞ்சி இருக்கும்போது படிகமாக்கல் செய்யப்படுகின்றது. சுத்தம் செய்யப்பட்ட வெற்றிடத் தொட்டியினுள் நீர்மம் அனைத்தும் ஆவியாக்கப்பட்டபின், கெட்டியான சர்க்கரை சிறு படிகங்களாக செலுத்தப்படுகின்றது. மீதமுள்ள பெரும் படிகங்கள் ஒரு கெட்டிப்படுத்தப்பட்ட கட்டியாக இருக்கும், இதனை சுழலும் தட்டில் வைத்து சிறியதாக்கி உலர்த்தப்படுகின்றது. இதுவே மூலப்பொருள் ஆகும். எனினும் இதனை இவ்வாறே பயன்படுத்த இயலாது. |
சுத்தப்படுத்துதல்
மூலச் சர்க்கரையுடன் கலந்துள்ள சக்கைகள் தாதுக்கள் மற்றும் சர்க்கரை அல்லாத பிற பொருட்கள் போன்றவற்றை நீக்க கரும்புச் சர்க்கரை சுத்தப்படுத்துவானுக்குள் அனுப்பப்படுகின்றது. இதுவே ‘சுத்தப்படுத்துதல்’ ஆகும். மூலச்சர்க்கரை ஒரு வகை சர்க்கரைக் கரைசல் மற்றும் நீருடன் கலந்து “மேக்மா” எனப்படும் கரைசல் உருவாக்கப்படுகின்றது. இக்கரைசலில் சர்க்கரைப் படிகங்களை விட்டு கழிவுகள் தனியே மிதக்கின்றது. பின்பு இக்கரைசல் பெரும் இயந்திரத்தில்) சுழலச் செய்யப் படுவதால் படிகங்களிலிருந்து சக்கைகள் தனியே பிரிக்கப் படுகின்றது. மீண்டும் இப்படிகங்களை நீரில் கழுவி, கரைத்துப் பின் வடிகட்டும்போது, பிற கலப்படப் பொருள்கள் நீக்கப்படுகின்றன. தங்க நிறத்திலுள்ள பாகு வடிகட்டிகள் வழியே அனுப்பப்பட்டு அதிலுள்ள நீர் மற்றும் நிறம் நீக்கப்படுகின்றது. மீதமுள்ள செறிவூட்டப்பட்ட, சுத்தமான பாகு மீண்டும் வெற்றிடத் தட்டில் வைத்து ஆவியாக்கப்படுகின்றது. |
பிரித்தெடுத்தல் மற்றும் பைகளில் அடைத்தல்
கடைசியாக அவியாக்கல் மற்றும் உலர்த்துதல் செய்யப்பட்ட பிறகு, பல்வேறு அளவுகளில் சர்க்கரைப் படிகங்கள் பிரிக்கப்படுகின்றன. இவை பெரிய மற்றும் சிறிய படிகங்களாகத் தனித்தனிப் பைகளில் நிரப்பி, தைக்கப்பட்டு, ‘சுத்தம் செய்யப்பட்ட வெள்ளைச் சர்க்கரை’ என குறிக்கப்படுகின்றன. சர்க்கரை பற்றிய தகவல்கள் |
ஊட்டச் சத்துப் பொருட்கள்
படிகச் சர்க்கரை ஊட்டச்சத்து மதிப்பு 100 கிராமிற்கு ( 3.5 oz ) |
பழுப்பு சர்க்கரை ஊட்டச்சத்து மதிப்பு 100 கிராமிற்கு ( 3.5 oz ) |
ஆற்றல் - 1,619 கி .ஜூல் ( 387 கி .கலோரி) |
ஆற்றல் - 1,576 கி .ஜூல் ( 377 கி .கலோரி) |
உப பொருட்கள்
மூலச் சர்க்கரை
|
கரும்புச் சாறு
கரும்புச் சாறு தயாரிக்கும் செய்முறை
|
வெல்லம்
சுத்தகரிக்கப்படாத, சுழற்று முறைக்குச் செலுத்துவதற்கு முன் கரும்பிலிருந்து பிழியப்பட்ட சர்க்கரைச் சாறு வெல்லம் ஆகும் . வெல்லம் தயாரிக்கும்முறை கி .மு 3000 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் நன்கு அறியப்பட்ட ஒன்றாகும் . வெல்லமே ‘வெல்லம்’, ‘வெல்லக்கட்டி’, ‘ஏழைகளின் சர்க்கரை’ என்றெல்லாம் அழைப்படுன்கிறது . வெல்லம் தயாரிக்கும் முறை :
|
கழிவுப்பாகு
கரும்பிலிருந்து வெளிவரும் பிசுபிசுப்பான உபபொருட்கள் கழிவுப்பாகு ஆகும் . கரும்பினை நசுக்கியோ, வெட்டியோ, சாற்றினைப் பிழிந்தது போக எஞ்சியுள்ள கசக்கப்பட்ட ஒட்டக்கூடிய பாகு போன்றது குழம்புக் கழிவு எனப்படும் . சர்க்கரைச் சாற்றிலிருந்து படிகங்கள் தயாரிக்க அது கொதிக்க வைக்கப்படுகின்றது . சாற்றிலிருந்து படிகங்கள் எடுக்கப்பட்ட பிறகு எஞ்சியுள்ள கழிவுகள் முதல் நிலைக்குழம்புபாகு ஆகும் . இதில் சர்க்கரையும் கலந்துள்ளது . அடுத்து இரண்டாம் முறை கொதிக்க வைக்கும்போது சர்க்கரை பிரித்தெடுத்தது போக மீதமுள்ள குழம்பில் சிறிது கசப்புத் தன்மையை எஞ்சியுள்ளது . மூன்றாம் முறை சர்க்கரை பிரித்தெடுக்கப்படும்போது அவை கரும்பட்டைகுழம்புகளாக வெளிவருகின்றன . பெரும்பாலான சர்க்கரை முழுவதும் படிகமாக்கப்பட்டாலும் இக்கழிவுப்பாகு கலோரிகளில் சுக்ரோஸ் கலந்துள்ளது . எனினும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையைவிட இதில் குறிப்பிடத்தக்க அளவு கால்சியம், மெக்னீசியம், பொட்டாஷியம், இரும்பு போன்ற தாதுக்களும் விட்டமின்களும் அடங்கியுள்ளன . ஒரு டேபிள் ஸ்பூன் கழிப்பாகு நாளொன்றுக்குத் தேவையான 20% அளவு சத்துக்கள் அடங்கியுள்ளது . கரும்பட்டையானது ஊட்டச்சத்து உணவாகவும், கால்நடைத் தீவனமாகவும், பிற தொழிற்சாலைப் பயன்பாடுகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றது . |
சக்கைகள்
சர்க்கரைச் சாறு பிழிந்த பின் மீதமுள்ள (நசுக்கப்பட்ட) கரும்பு நார்ப்பகுதிகள் சக்கைகள் ஆகும். இவை எரித்து நீராவி உருவாக்கபட்டு , ஆற்றல் உற்பத்திக்கு பயன்படுத்தபடுகின்றன . அதிகளவு வெளிவரும் சக்கைகள் உலர வைத்து ஆற்றல் தேவைக்கு எரி பொருளாகவும், காகிதம் தயாரிக்கவும் , கட்டடப்பொருட்கள் தயாரிக்கவும் சில சமயங்களில் கால்நடைத் தீவனமாகவும் பயன்படுகின்றன . |
எத்தனால்/ எரிசாராயம்
தானியங்கி எரிபொருளாகவும், கேஸியோலினில் சேர்ப்புப் பொருளாகவும் பயன்படும் கரும்பிலிருந்து பெறப்படும் ஒரு நீர்மப்பொருளே எத்தனால் எனப்படும் . கரும்பில் அதிகளவு உயிர்ப்பொருட்கள் நிறைந்துள்ளதால் குடிபொருளாகவும், தயார் நிலை எரிபொருளாகவும் பயன்படுகின்றது . கரும்பின் எத்தனாலை எரிபொருளாகப் பயன்படுத்துவதில் பிரேசில் நாடு முதலிடம் வகிக்கின்றது . பிரேசில் நாட்டின் போக்குவரத்துத் தேவை 40% கரும்புச் சாறு எத்தனால் மூலமே பூர்த்திச்செய்யப்படுகின்றது . |
கரும்புப்பாகு
கரும்பிலிருந்து பிழியப்பட்ட சாற்றிலிருந்து நீரை ஆவியாக்கிய பிறகு பெறப்பட்ட சற்று கெட்டியான திரவமே ‘பாகு’ எனப்படும் . இவ்வாறு பெறப்படும் பாகு பெரும்பாலும் சாறினை அதிக நேரத்திற்குக் கொதிக்கவைத்து, மேற்பரப்பில் உள்ள நீரினை நீர்த்துப்போகச் செய்து தயாரிக்கப்படுகின்றது . முறையாகத் தயார்செய்யும்போது இது அதிக இனிப்புத்தன்மை கொண்ட, கெட்டியான வீடு மற்றும் பிற வியாபார உணவுப் பொருட்கள் தயாரிக்கும்போது சேர்க்கைப் பொருளாக பயன்படுத்தக் கூடியது . |
கற்கண்டு
இது அதிக இனிப்புத்தன்மை கொண்ட, பெரிய சர்க்கரைப் படிகங்களால் ஆன தாதுப்பொருளாகும் . இந்த கற்கண்டு சர்க்கரைத் கரைசலைப் படிய விட்டு மேலே மிதக்கும் இனிப்பு நீரினைச் சேகரித்து, அதனுடன் நீர்சேர்த்துப் பின்பு அதனைப் படிகமாக்கிப் பெறப்படுகின்றது . இதற்கென இவை படிகமாக்கும் நடுநிலையான ஒரு மேற்பகுதியில் வைத்துப்பெறப்படுகின்றன . சர்க்கரையைச் சேர்க்கும்முன்பு நீரினைச் சூடாக்கும்போது அதில் உள்ள சர்க்கரை கரைந்து பெரும்படிகங்களை உருவாக்குகின்றன . இப்படிகங்கள் உற்பத்தியாக 6-7 நாட்கள் ஆகின்றன . தேவைப்படும் நிறங்களைக் கலந்து பல்வேறு நிற கற்கண்டுகள் தயாரிக்கப்படுகின்றன . |
ரம்மதுபானம்
கரும்பின் உபபொருட்களான சாறு போன்றவற்றை நொதிக்க வைத்து, சூடாக்கி சுத்தப்படுத்துவதன் மூலம் இவை தயார் செய்யப்படுகின்றன . தெளிவான திரவம் பல நாட்களுக்குப் புட்டிகளில் அடைத்து வைக்கப்பட்டுப் பின்பு பானமாகப் பயன்படுத்தப்படுகின்றது . |
புண்ணாக்கு
கரும்புச்சாறு பிழியப்பட்டபின் எஞ்சிய கழிவுகளிலிருந்து இவை தயார் செய்யப்படுகின்றன . ஒட்டிக்கொள்ளக்கூடிய பிசுபிசுப்பான இந்தப் புண்ணாக்குகளில் 5-15% புரதம், 5-15% கால்சியம் மற்றும் பாஸ்பரஸ், சர்க்கரை 10-30% நார்ப்பொருள் 10-20% சிறிதளவு சாம்பல்சத்தும், பிறநுண்ணூட்டச் சத்துக்களும் உள்ளன . இதில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் இயற்கை உரமாகப் பயிர்களுக்கும், கால்நடைத் தீவனமாகவும், கரும்பு மெழுகு, மீத்தேன் போன்ற எரிபொருள் தயாரிப்பில் மூலப்பொருளாகவும் பயன்படுத்தப் படுகின்றன . |
ஈஸ்ட்
புரதம் நிறைந்த, பல்செல் உயிரினமான இது, ஆராய்ச்சி நிலையங்களில் பிரித்தெடுக்கப்பட்டு பேக்கர்ஸ் ஈஸ்ட் சாச்சரோமைசிஸ் செரிவிசியே ஆக பயன்படுத்தப்படுகின்றது . இவை பெரும்பாலும் கழிவுப்பாகி (சர்க்கரை) லிருந்து உற்பத்தி செய்யப்படுகின்றது . 1கி .கி உலர் பேக்கர்ஸ் ஈஸ்ட் தயாரிக்க 4 கி .கி சர்க்கரை கழிவுப்பாகு தேவைப்படுகின்றது . பன் ரொட்டி தயாரிப்பில் மாவின் எடையில் 1% ஈஸ்ட் கலக்கப்படுகின்றது . இதன் உலர் எடையில் 44% புரதமாகும் . |
மிட்டாய் வகைகள்
இனிப்புத் தன்னை கொண்ட பல்வேறு வகை உணவுகள் பொதுவாக ‘இனிப்பு வகைகள்’ என அழைக்கப்படுகின்றது . இவற்றில் கொதிக்க வைத்துத் தயாரிக்கப்பட்ட இனிப்புகள் டோஃபீஸ், சதுப்பு மிட்டாய்கள், பான்டன்ட் போன்றவை சில வகைகளாகும் . |
கரும்புத் சோகைகள்
கரும்பு அறுவடைக்குப் பின்பு வயலில் வீணாக விடப்பட்ட சோகைகள் கால்நடைகளுக்கு முக்கியத் தீவனமாகும் . கரும்பு ஆலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களின் மாடுகளுக்கோ அல்லது ஆலைகளில் வண்டி இழுப்பதற்கென வளர்க்கப்படும் காளைகளுக்கோ அவை தீனியாக அளிக்கப்படுகின்றது . பெரும்பாலும் இக்கரும்புச் சோகைகளை அசைபோடும் எருமை மாடு போன்ற கால்நடைகளே விரும்பி உண்கின்றன . ஆடு போன்றவை இவற்றை உண்பதில்லை . |