இயற்கை உரம் மற்றும் வேதி உரத்தினை அடி உரமாக இடுதல்
தொழு உரம் ஹெக்டேருக்கு 12.5 டன் அல்லது மட்கு உரம் 25 டன் அல்லது சர்க்கரை ஆலைக்கழிவு 37.5 டன் வீதம் கடைசி உழவுக்கு முன் இடலாம்.
கரும்புத் தோகை மற்றும் ஆலைக்கழிவை1:1 விகிதத்தில் இடலாம்.கரும்புத் தோகை 15 செ.மீ தடிமன், சர்க்கரை ஆலை கழிவு 5 செ.மீ தடிமன், ராக் பாஸ்பேட், ஜிப்சம் யூரியா ஆகியவற்றை 2:2:1 விகிதத்திலும், சாண கரைசல் அல்லது தண்ணீரை ஈரப்பதத்திற்கு இதை 3 மாதத்திற்கு பிறகு பயன்படுத்தலாம்.
மண்ணை பரிசோதித்து, மண் பரிசோதனை மதிப்பீட்டிற்கு ஏற்றவாறு பாஸ்பேட் உரத்தை இடவேண்டும். இல்லையெனில் சூப்பர் பாஸ்பேட்
(ஹெக்டேருக்கு 37.5 கி.கி) பாத்திகளில் இட்டு, களைக் கொத்தினால் மண்ணுடன் கலந்து விட வேண்டும்.
ஜிங்க் மற்றும் இரும்பு குறைபாடு உள்ள மண்ணிற்கு ஹெக்டேருக்கு 37.5 கி.கி ஜிங் சல்பேட் மற்றும் 100 கி.கி பெர்ரஸ் சல்பேட் இடவேண்டும்.
வயலினை தயார் செய்தல் மற்றும் மாற்று நடவு
வழக்கம் போல் வயல் தயார் செய்யப்படுகிறது. அடிஉரத்தினை பாத்திகளில் இடலாம் அல்லது வேலை ஆட்கள் இருப்பின் மாற்று நடவு செய்யும் இடத்தில் குழி தோண்டி இடலாம். பாத்திகளுக்கு நீர் பாய்ச்சப்படுகிறது.
நாற்றங்கால் படுகை நன்றாக நனைந்திருப்பின், நாற்றுக்களை வேருக்கு அதிக சேதமின்றி எடுக்க இயலும்.
அவற்றை பாத்திகளில் 30-45 செ.மீ இடைவெளியில் நடலாம்.
ஒவ்வொரு 10 வரிசைக்கு பிறகும் ஒரு வரிசை கூடுதலாக நட்டால், அவற்றை இடைவெளியில் நிரப்ப பயன்படுத்தலாம்.
3 அல்லது 4 வது நாளில்நீர் பாய்ச்ச வேண்டும். 10-15 நாட்களுக்கு பிறகு 10 வது வரிசைக்கு பிறகு உள்ள நாற்றுகளை பயன்படுத்தி இடைவெளியில் நிரப்பலாம்.
இந்த முறை வறண்ட காலத்திற்கு பொருந்தாது. நாற்றுகள் வளரும் வரை சரியாக பாசனம் செய்வது இன்றியமையாததாகும்.
கரும்பின் பூக்கும் திறனை கட்டுப்படுத்துதல்/ஒழுங்கு செய்தல்
சோகை உரித்தல்
சோகை கட்டுதல்
நீர் குருத்தினை அகற்றுதல்
வயலில் பசுந்தாள் உரம் கொண்டு மூடுதல்
சோகையால் மூடுதல்:
நடவு செய்த ஒரு வாரத்திற்குள் பார்களை கரும்பு தோகை கொண்டு சீராக 10 செ.மீ உயரத்திற்கு மூட வேண்டும்.
இது வறட்சியை தாக்குபிடிக்கவும், தண்ணீரை ஈர்த்துக் கொள்ளவும், களைகளை கட்டுப்படுத்தவும் மற்றும் தண்டு துளைப்பான் தாக்குதலை குறைக்கவும் உதவும்.
கடின மண் மற்றும் நன்செய் நிலங்களில், நடவு செய்த 21 நாட்களுக்கு பிறகு சோகை கொண்டு வயலை மூட வேண்டும். கரையான் உள்ள பகுதிகளில் சோகை கொண்டு மூடுவதை தவிர்க்கவும்.
ஊடு பயிரிடுதல்:
தமிழ்நாடு
போதுமான பாசன வசதியுள்ள பகுதிகளில், ஒரு வரிசை சோயாபீன் அல்லது உளுந்து அல்லது பச்சைப்பயிறு ஆகியவற்றை பார்களுக்கு நடுவில் கரும்பு நடவு செய்த 3 ஆம் நாளில் விதைக்கலாம்.
பார்களில் டெய்ன்சா அல்லது சணப்பை ஊடுபயிரிடலாம். 45 வது நாள் அதாவது மண் அணைப்பு செய்யும் போது அதை மண்ணுடன் கலந்து விடுவது மண் வளத்தை அதிகரிப்பதுடன், கரும்பு மகசூலையும் அதிகரிக்கும்.
குறிப்பாக சோயாபின் கோ 1 ரகம் ஊடுபயிரிடும்போது ஹெக்டேருக்கு 800 கி.கி வரை மகசூலைத் தருகிறது. மேலும் கரும்பு மகசூலையும் பாதிப்பதில்லை.
கேரளா
குறுகிய கால பயறு வகைகளை ஊடுபயிரிடுதல்
கர்நாடகா
கரும்புடன் நிலக்கடலை மற்றும் பயிறு வகைகளில் ஊடு பயிரிடுகின்றனர்.
கரும்பு பொதுவாக பருத்தி, நெல், மக்காச்சோளம், டோரியா, உருளைக்கிழங்கு, கோதுமை ஆகியவற்றிற்கு பிறகு, வரிசைகளில் 2 முதல் 3 வருடங்களுக்கு சுழற்சி செய்து வளர்க்கப்படுகிறது.
இடைவெளியை நிரப்புதல்:
நடவு செய்த 30 நாட்களுக்குள் ஏதேனும் இடைவெளி இருப்பின் அதனை முளைத்த கரணையை கொண்டு நிரப்பவும்.
முளைத்த கரணைகளின் முறையான வளர்ச்சிக்கு 3 வாரங்களுக்கு ஈரப்பதத்தினை தக்க வைக்க வேண்டும்.
மண் அணைத்தல்:
மண் அணைத்தல் குன்று அணைத்தல் எனவும் அறியப்படுகிறது.
இது 2 அல்லது 3 நிலைகளில் செய்யப்படுகிறது. முதல் மண் அணைத்தல் பகுதி மண் அணைத்தல் எனவும், இரண்டு/மூன்றாவது மண் அணைத்தல் முழு மண் அணைத்தல் எனவும் அறியப்படுகிறது.
பகுதி மண் அணைத்தல் 45 நாட்களுக்கு பிறகு செய்யப்படுகிறது. இதில் பார்களின் இரு பகுதியில் இருந்து சிறிதளவு மண் எடுத்து தண்டின் அடிப்பகுதியில் போடப்படுகிறது.
முழு மண் அணைத்தல் நடவு செய்த 120 நாட்களுக்கு பிறகு செய்யப்படுகிறது. அதாவது நன்கு துார் விடும் பருவத்தின் போது செய்யப்படுகிறது. முழு மண் அணைப்பின் போது பார்களுக்கு இடையே உள்ள மண் அணைத்தல் நீக்கப்பட்டு கரும்பிற்கு இரு புறமும் போடப்படுகிறது.
அப்போது பார்கள் பாத்திகளாகவும், பாத்திகள் பார்களாகவும் மாற்றப்படுகிறது. இதை அமைக்கப்பட்டுள்ள இடைவெளியை பொறுத்து கையினால் அல்லது மாட்டின் மூலம் இழுக்கப்படும்/டிராக்டரினால் இயக்கப்படும் பார் தோண்டும் கருவி கொண்டு செய்யலாம்.
3 வது முறை உரமிட்டபின் (90 நாட்கள்), பார்களுக்கு நேராக விக்டரி கலப்பையை கொண்ட உழுவதும் சிக்கனமான, சிறந்த மண் அணைப்பிற்கு உதவும்.
நடவு செய்த 150 நாட்களுக்கு பிறகு, கொத்தினை கொண்டு மண் அணைக்கலாம்
சோகை உரிப்பது என்பது விரும்ப தகாத காய்ந்த இலைகள் மற்றும் பச்சை இலைகளை தொடர்ச்சியான இடைவெளியில் நீக்குவதாகும்.
சிறந்த மேலாண்மையுள்ள நிலையில் கரும்பு கணுக்களுக்கு சமமான அளவு இலைகளுடன் (30-35) காணப்படும்.
சோகை உரிப்பது நடவு செய்த 150 நாட்களுக்கு பிறகு, கரும்பு வளர்ந்தவுடன் செய்ய வேண்டும் . அதன் பிறகு இரு மாத இடைவெளியில் ஆட்கள் கிடைப்பதை பொறுத்து செய்ய வேண்டும்.
சோகை கட்டுதல்:
சோகை கட்டுதல் என்பது அடிப்புற காய்ந்த மற்றும் பச்சை இலைகளை ஒன்று சேர்த்து கட்டுவதாகும் .
இது முக்கியமாக கரும்பு சாய்வதை தடுக்க உதவுகிறது.
சோகை கட்டுவதை ஒரு வரிசைக்குள்ளாகவோ அல்லது இரு வரிசைகளை ஒன்று சேர்த்தோ கட்டலாம் .
நீர் குருத்துகள் தாமதமாக வளர்ந்த துார்கள் அல்லது பக்கவாட்டு சிம்புகள் ஆகும். அவை பெரிதாகவும், வேகமாகவும் வளர்கின்றன.
இது அதிகப்படியான தண்ணீர் பாய்ச்சுதல், அதிகப்படியான மற்றும் காலங்கடந்து உரமிடுதல், போதுமான மண் அணைக்காதபோது தோன்றுகிறது.
நீர்குருத்தில் அதிகப்படியான தண்ணீர், குறைந்த அளவு சுக்ரோஸ் மற்றும் அதிக அளவு ஒடுக்கப்பட்ட சர்க்கரை இருக்கும்.
நீர் குருத்து பக்கவாட்டு தண்டின் வளர்ச்சியை பாதிக்கிறது. ஆகையால் நீர்குருதினை தோன்றியவுடன் அகற்றுவது மிகமிக அவசியம் ஆகும்.
நீர்குருத்தினை மாட்டுதீவனமாக பயன்படுத்தலாம்.
வயலில் பசுந்தாள் உரம் கொண்டு மூடுதல்:
நடவு செய்த உடன், ஒன்று முதல் இரண்டு டன் அளவு பசுமையான அவுரிசெடிகளை ஒரு ஏக்கர் முழுவதும் பரப்புவது ஒரு முறை ஆகும். இவ்வாறு செய்யும் போது நடவு செய்த வயலில் இருந்து ஈரப்பதம் வெளியே செல்வது சிறிதளவு கட்டுப்படுத்தப்படுவதுடன், பாசன இடைவெளியையும் அதிகப்படுத்த இயலும். அதைத் தொடர்ந்து அந்த செடிகளை மண்ணில் சேர்ந்து விடலாம்.
குறைவான மழைப்பொழிவுள்ள பகுதிகள் இம்முறை நடவுக்கு பொருத்தமானவை . இது எளிதான முறையாகவும், செலவில்லாததும் ஆகும் .
தாழ்வான சால்கள் (8-10 செ.மீ ஆழம்) கலப்பை அல்லது இயந்திர கலப்பை கொண்டு 75-90 செ.மீ துாரத்தில் திறக்கப்படுகிறது.
நடவு செய்யும் போது போதுமான அளவு ஈரப்பதம் வயலில் இருக்க வேண்டும் மற்றும் இரண்டு களைக்கொத்தினை கொண்டு பூச்சி சேதப்படுத்திய கரணையை நீக்கலாம்.
ஒவ்வொரு 30 செ.மீ நீளமுள்ள சாலிலும் மூன்று பரு கரணை விழும் அளவிற்கு கரணைகள் முழு நீளத்திற்கும் முனை முதல் முனை நோக்கி நடப்படுகின்றன.
கரணைகள் முளைத்தவுடன், இரண்டு முதல் ஐந்து இடை வரிசை உழவு, தகுந்த இடைவெளியில் தருவது களைகளை கட்டுப்படுத்துவதுடன் துார்களின் வளர்ச்சியையும் அதிகப்படுத்துகிறது.
பொதுவாக மண் அணைப்பது செய்யப்படுவதில்லை. ஆனால் சிலநேரங்களில் தேவைப்பட்டால் ஒரு மண் அணைப்பு ஜூலை-ஆகஸ்ட் மாதத்தில் செய்வது கரும்பு விழாமல் தடுப்பதுடன் வயலின் வடிகால் வசதிக்கும் பயனாகிறது.
இந்த முறை பொதுவாக மிதமான மழையளவு மற்றும் வடிகால் பிரச்சினை உள்ள பகுதிகளில் பயன்படுத்தப்படுகிறது.
சால்கள், 80-100 செ.மீ துரத்தில் மற்றும் 20-25 செ.மீ ஆழத்தில் ‘v’ வடிவத்தில் வெட்டப்படுகின்றன.
பொதுவாக முனை முதல் முனை முறையில் கரணைகள்படுக்கைவசமாக வைக்கப்படுகின்றன , ஆனால் விதைக்கரணை சரியாக இல்லாது மற்றும் கணுப்பகுதி நீளமாக இருப்பின் பரு முதல் பரு நோக்கி கரணைகள் நடப்படுகின்றன.
ஓரங்களில் இடைவெளியில் ஏற்படும் பாதிப்புகளை குறைக்க, சால்களின் முடிவில் இரட்டை விதைக்கரணைகள் நடப்படுகின்றன.
கரும்பு வளர ஆரம்பிக்கும் போது, சால்கள் மண்ணினால் பகுதி அளவு வரை நிரப்பப்படுகிறது. வரிசைகளுக்கு இடையே உழவு செய்யப்படுகிறது. இம்மாதிரி தொடர்ந்து செய்யும் போது மே கடைசி அல்லது ஜூன் நடுவில் நிலம் சமப்படுத்தப்படுகிறது. இது முதல் மண் அணைத்தல் ஆகும்.
தொடர்ந்து இடைவரிசை உழவு செய்வது கரும்பை சுற்றி மண்ணைப் போட்டு சால்களை பார்களாக மாற்றுகிறது. மற்றும் இடைவரிசை இடைவெளி சால்களாகமாறுகிறது. அதன்மூலம் பாசன மற்றும் வடிகால் நீர் பாய்கிறது. இந்த முறையில் பார்கள் சால்களாக மாறுவது இரண்டாவது மண் அணைப்பு எனப்படுகிறது.
ைத்து குழிமுறை நடவு
குழிக்கு குழி இடைவெளி - 1.5 x1.5 மீ
ஹெக்டேருக்கு குழிகளின் எண்ணிக்கை - 4,444 குழிகள்
குழியின் விட்டம் - 0.9 -1.2 மீ
குழியின் ஆழம் - 0.38 - 0.45 மீ
ஒரு குழிக்கு பருக்களுள்ள கரணையின் எண்ணிக்கை - 32 (ஒரு பரு கரணை) அல்லது 16 (இரு பரு கரணை)
குழியில் 15 செ.மீ ஆழத்திற்கு மட்கும் உரம் மற்றும் மண்ணை நிரப்பி அதனை நன்கு கலக்கவும். குழி ஓரத்திலிருந்து 10 செ.மீ தள்ளி விதைக்கரணையை வட்ட வடிவில் நட வேண்டும். கரணைகளுக்கு இடையே சமமான இடைவெளி விட்டு கரணையை மண்ணினால் மூடவேண்டும். 50 முதல் 60 நாட்கள் கழித்து குழியை சுற்றியுள்ள மண்ணை எடுத்து பகுதி மண் அணைத்தல் செய்ய வேண்டும். மற்றும் முழு மண் அணைப்பு 90 முதல் 100 நாட்கள் கழித்து நில மட்டத்திலிருந்து 2.5 செ.மீ பள்ளம் தோன்றுமளவு செய்ய வேண்டும்.
உர அளவு ஹெக்டேருக்கு 275:62.5:112.5 கி தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து
மணிச்சத்து முழுவதையும் நடவு செய்யும் போது அடி உரமாக இட வேண்டும்.
தழைச்சத்தை யூரியா மூலமாகவும், சாம்பல்சத்தை மியூரேட் ஆப் பொட்டாஷ் (வெள்ளை பொட்டாஷ்) மூலமாகவும் நடவு செய்த 15 நாட்கள் முதல் 210 நாட்கள் வரை 14 சம பிரிவுகளாக பாசன நீர் மூலம் அளிக்க வேண்டும்.
சொட்டு நீர் முறை - பக்கவாட்டு குழாய்களுக்கு இடையே இடைவெளி 3.0 மீ (ஒன்று விட்ட வரிசைகள்).
8 மி. மீ நுண் குழாய்களை பக்கவாட்டு குழாயின் இருபுறங்களிலும் 1 மீ நீளத்திற்கு ஒரு 8 எல்.பிஹெச் உடன் சேர்த்து அமைக்க வேண்டும்.
கரும்பு பயிரிடுவதை இயந்திரமயமாக்கும் விதமாக 150 செ.மீ இடைவெளி விட்டு நடும் அகன்ற பார் நடவு பிரபலமடைந்து வருகிறது. மேலும் இம்முறையில் அதிக கரும்பு மகசூல் பெறுவதற்காக, ஒரு புதிய தொழில்நுட்பம், இரட்டை பார் முறை உருவாக்கப்பட்டது.
150 செ.மீ இடைவெளியில் அகன்ற பார்கள் அமைக்கப்பட்டுஅதன் நடுவில் 30 செ.மீ இடைவெளியில் இரு வரிசைகளில் விதைக் கரணைகள் நடப்படுகின்றன.
அகன்ற வரிசை நடவை இருமுறைகளை ஒப்பிடும்போது இரட்டை பார் முறையில் ஹெக்டேருக்கு 136.3 டன் மகசூல் கிடைக்கிறது. ஒற்றை பார் முறையில் 126.7 டன் கிடைக்கிறது.
இரட்டை பார் நடவு முறையில் கரும்பு ரகம் கோ 94005 அதிக மகசூல் தந்துள்ளது. இரட்டை பார் நடவு மற்றும் 90 செ.மீ இடைவெளி நடவு, இடைவெளி சமமாகவும், மற்ற இடைவெளிகளை விட சிறப்பாகவும் உள்ளது.
கட்டை கரும்பில் ரகம் கோ 94005 அகன்ற வரிசை நடவுக்கு உகந்தது. அதைத்தொடர்ந்து கோ 91010 சிறந்தது.
ஒரு பரு கரணை மூலம் இடைவெளிவிட்ட நடவு முறை
தற்போது இடைவெளிவிட்ட நடவு முறையில் ஒரு பரு கரணைகள் பயன்படுத்தப்படுகின்றன.
விதைக்கரணை அல்லது பாலித்தீன் நாற்றங்காலில் வளர்க்கப்பட்ட நாற்றுகள் வயலில் 50- 55 நாட்களில் நடவு செய்யப்படுகிறது.
இந்த இடைவெளிவிட்ட நடவுமுறை அல்லது ஒரு பரு கரணை முறைக்கு 750-1000 டன் விதைகள் ஏக்கருக்கு தேவைப்படுகிறது.
சால் மற்றும் சமப்படுகை நடவுக்கு 90 செ.மீ துாரத்தில் வரிசை அமைத்து நாற்றுகள் 5-90 செ.மீ இடைவெளியில் நட வேண்டும்.
ஏதேனும் நாற்றுகள் வளராவிடில், நாற்றங்காலில் பராமரிக்கப்படும் உபரி நாற்றுகள் பயன்படுத்தி நட வேண்டும்.
இம்முறையில் 60-70% விதைக்கரணைக்கான செலவு மிச்சப்படுத்தப்படுகிறது. இம்முறையில், இரண்டு விதைக்கரணைக்குள்ள துாரம் 30 செ.மீ ஆகும்.
இந்த முறை கிட்டதட்ட இடைவெளிவிட்ட நடவுமுறை போன்றதே ஆகும்.
இம்முறையில் நாற்றுகள் 10 x15 செ.மீ அளவுள்ள, துளையிடப்பட்ட பிளாஸ்டிக் பைகளில் தொழு உரம் அல்லது சர்க்கரை ஆலைக்கழிவு மண் மற்றும் மணல் 1:1:1 விகிதத்தில் நிரப்பப்பட்டு வளர்க்கப்படுகின்றன.
இம்முறையில் வேர்களுக்கு சேதம் இல்லாததால் நாற்றுகள் நன்கு (95-99%) வயலில் நிலைநிறுத்தப்படுகின்றன.
இம்முறையில், ஒரு சிறிய குழி 45 செ.மீ இடைவெளியில் தோண்டப்படுகிறது.
சிறிதளவு மணிச்சத்து உரம் இடப்பட்டு மண்ணினால் மூடப்படுகிறது. பிறகு நாற்றுகளின் பச்சை இலைகள் வெட்டப்பட்டு நடப்படுகிறது.
ஒருவிதைப்பரு சீவல் தொழில்நுட்பம்
இம்முறையில் சீவல்கள் வெட்டும் கருவி கொண்டு பருக்கள் சிறிதளவு கணுவோடு வேர்த்து வெட்டப்படுகிறது.
ஒரு பரு சீவல்களை பூஞ்சானக்கொல்லியோடு நேர்த்தி செய்து உயர்வான படுகை அல்லது தொழு உரம்/ஆலைக்கழிவு, மண் மற்றும் மணல் 1:1:1 விகிதத்தில் நிரப்பப்பட்ட பாலித்தீன் பைகளில் நடப்படுகிறது.
நாற்றுக்கள் இடைவெளிவிட்ட நடவுமுறை போன்றே நடவு செய்யப்படுகின்றன.
இம்முறை விதைக்கான அளவு (சீவல்கள்) குறைவு, சுமாராக 1 முதல் 1.5 டன் ஆகும் மற்றும் விதைப்பரு சீவல்கள் எடுத்தபின்பு கரும்பினை ஆலைகளுக்கு அனுப்பலாம்.
திசு வளர்ப்பு:
விதைக்கரணையை திசு வளர்ப்பு தொழில் நுட்பத்தின் மூலம் நுண்பெருக்கம் செய்வதால் அதிக அளவில் தாயை ஒத்த, நோயற்ற நாற்றுகளின் நுனி ஆக்கு திசு வளர்ப்பு முறை மூலம் பெற இயலும்.விரைவாக ரகங்களை பெருக்கம் செய்ய இயலும்.
நுனி ஆக்கு திசு (கரும்பின் வளரும் பகுதி வெட்டப்பட்டு), சத்து சரியான அளவு நிர்ணயிக்கப்பட்ட வளர் ஊடகத்தின் மீது, வைக்கப்படுகிறது.
நுனி ஆக்கு திசு, வெப்பம் மற்றும் ஒளி கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் 45 நாள் வைக்கப்பட்ட பின் துார்கள் விட ஆரம்பிக்கிறது.
ஒரு நுனி ஆக்குத்திசு, ஏழு முதல் எட்டு மாதத்தில் மில்லியன் நாற்றுகளை உருவாக்க இயலும்.
நன்கு நிலைநிறுத்தப்பட்ட நாற்றுகள் பாலித்தீன் பைகளில் கடினமாக்கப்பட்ட பின்பு வயலில் நடப்படுகின்றன.
ஹெக்டேருக்கு 16.5 கி.கி லிண்டேன் குருணையை மறு நடவு செய்து 15 நாட்களுக்கு பிறகு மண்ணில் போட்டு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். இது முன் பருவ தண்டுதுளைப்பான் தாக்குதலை தடுக்கிறது.
தேவைப்பட்டால் நடவு செய்த 35-40 நாட்களுக்கு பிறகு முதன்மை துாரினை அகற்றி விடலாம்.
மறு நடவு செய்து 90-100 நாட்களுக்கு பிறகு மண் அணைக்க வேண்டும்.
விதைப் பெருக்க விகிதம் 1:25 (25 ஹெக்டருக்கு தேவையான விதைக்கரணை 1 ஹெக்டர் நாற்றங்காலில் இருந்து பெறப்படுகிறது) என்ற அளவில் திசு வளர்ப்பு மூலம் வளர்க்கப்பட்ட நாற்றங்கால் இருந்து பெறப்படுகிறது.
நன்கு கடினப்படுத்தப்பட்ட நாற்றுக்களை பயன்படுத்தினால் 98-100 சதம் வயலில் நிலைத்து நிற்கின்றன
கரணைகள், வளமான மண்ணில் அகன்ற இடைவெளி, குறைந்த ஆழத்தில், அடிக்கடி பாசனம் செய்து, போதுமான உரமிட்டு வளர்க்கப்படுகிறது.வேர்கள் வளர்ந்தவுடன் தாய் செடியில் இருந்து கவனமாக நீக்கப்பட்டு வயலில் நடவு செய்யப்படுகிறதுதாய் செடி தொடர்ந்து துார்கள் விட்டுக் கொண்டிருக்கும் அவை வயலில் மேற்கூறியவாறே நடப்படுகின்றன
ராயுங்கன் முறை:
நடவுக்கு 4-6 வாரத்திற்கு முன் விதைநாற்றுக்கள் நுனி நீக்கம் செய்யப்படுகிறது அதன் விளைவாக பக்க வாட்டில் வளர்ந்து வால் போன்று ராயுங்கன் தோன்றும் அவை வெட்டப்பட்டு அதற்கென தயார் செய்யப்பட்டுள்ள குழிகளில் நடப்படுகின்றன உச்சியில் உள்ள ராயுங்கனை அகற்றும் போது அடியில் உள்ள பருக்கள் முளைக்கின்றன அவையும் அவ்வாறே பயன்படுத்தப்படுகின்றன
துார நடவு:
இம்முறையில் உச்சி கரணைகள் சேகரிக்கப்பட்டு நாற்றங்காலில் போடப்படுகிறதுஅவை முளைத்து வேர் வெளியே வந்தவுடன் வயலில் 90 x 50 செ.மீ இடைவெளியில் நடவு செய்யப்படுகிறது.
ஜெபிளாக் முறை:
ராயுங்கன் முறையின் மேம்படுத்தப்பட்ட முறை ஆகும் ஏனெனில் இம்முறையில் எல்லா பருக்களுக்கும், சத்துக்கள் சரிவர கிடைக்குமாறு கவனிக்கப்படுகிறது ஆனால் ராயுங்கன் முறையில் அடிமட்ட பருக்கள் மீது சத்துக்கள் சரிவர சேர்வதில்லை ஜெபிளாக் முறைகள் தண்டு பாதி அளவு வெட்டப்பட்டு மண்ணில் வேர் தோன்றுவதற்காக ஒரு கணு உள்ளே வைத்து செங்குத்தாக நடப்படுகிறது நடப்பட்ட செடிக்கும், தாய் செடிக்கும் போதுமான உரமிட்டு தண்ணீர் பாய்ச்சப்படுகிறது.
இந்தியாவில் கரும்புப் பயிரானது வசந்த காலம் (ஃபிப்ரவரி-மார்ச்), இலையுதிர்காலம் (செப்டம்பர்-அக்டோபர்) மற்றும் அட்சாலி (ஜூலை-ஆகஸ்ட்) போன்ற பருவங்களில் பயிரிடப்படுகின்றது. கரும்பு ஒரு நீண்டகால பயிராக இருப்பதால், களைகளினால் அதிகளவு பாதிக்கப்படுகிறது. இந்தியாவின் பல்வேறு கரும்பு பயிரிடும் இடங்களில் ஓராண்டு, பல்லாண்டு மற்றும் ஒட்டுண்ணி வகை என கிட்டத்தட்ட 150 களை இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. பயிரிடப்படும் வேளாண் தட்பவெப்பச் சூழ்நிலைகள் மற்றும் நிர்வாக முறைகளைப் பொறுத்து இக்களை இனங்கள், பகுதியிலிருந்து மற்றோர் பகுதிக்கு வேறுபடுகின்றன.
கரும்பு வயல்களில் காணப்படும் முக்கிய களை இனங்களானவை:
கோரை களைகள் - சைப்ரஸ் ரொட்டன்டஸ் புல்வகைகள் களைகள் -சைனோடான் டாக்டைலான், சொர்க்கம் ஹேலப்பன்ஸ் பேனிகம் ஸ்பீசிஸ்,டாக்டைலோடெரினியம் எகிப்தியம்,இம்பரேட்டாசிலின்டிரிகா அகண்ட இலை களைகள் சாரணை, பருப்புக்கீரை, குப்பைக்கீரை, அம்மான் பச்சரிசி, கரிசலாங்கண்ணி, மேலா நெல்லி, கீழாநெல்லி, புண்ணாக்கு, பூண்டு, மஞ்சக் கடுகு, காட்டு வெண்டை மற்றும் கீரை போன்ற களைகளும்.
களைகளினால் கரும்பு அதிகம் பாதிக்கப்படும் பருவம்:
களை அதிகம் வரும் பருவம் பயிரின் ஆரம்ப காலமாகும். இப்பருவத்தில் களைக்கட்டுப்பாடு செய்வது, நல்ல பலனை அளிக்கும்.
பொதுவாக கரும்பின் வளர்ச்சி மெதுவாகவே நடைபெறுவதால், களைகளின் பாதிப்பு அதிகளவு காணப்படுகிறது.
கரும்பு வளர்ச்சிப் பருவத்தின் ஆரம்பத்தில் 60 முதல் 120 நாட்கள் வரை சரியான களை நிர்வாகம் செய்வதே மகசூல் அளவை நிர்ணயிக்கின்றது.
மறுதாம்பு (கட்டைக்) கரும்பில் முதல் 30 லிருந்து 50 நாட்களுக்கு களையின் அளவு அதிகமாக இருக்கும்.
களைகளினால் ஏற்படும் பாதிப்புகளானவை:
களைகள் அதிகம் வளர்வதால் கரும்பின் மகசூல் நேரடியாக பாதிப்புக்குள்ளாகிறது.
மேலும் களைகளினால் கரும்பின் தரம் குறைகின்றது.
அறுவடை அடுத்த பயிருக்கு (நிலத்தின்) வயலினைத் தயார் செய்தல் போன்றவற்றிற்கு களைகளினால் செலவு கூடுகிறது.
பூச்சி மற்றும் நோய்த் தாக்குதலுக்கு வழிவகுக்கின்றது.
அதோடு களைகள் மண்ணிலிருக்கும் பெருமளவு ஊட்டச் சத்துக்களை எடுத்துக் கொள்கின்றன. வயலில் முளைத்துள்ள களை வகைகள், அவை பயிரைத் பாதிக்கும் காலம் போன்றவற்றைப் பொறுத்து 11 லிருந்து 74 சதம் வரை மகசூல் பாதிக்கப்படுகிறது.
கரும்பில் இடைவெளி அதிகமாக இருப்பதாலும், அதன் வேர் ஆழமின்றி இருப்பதாலும் வளரும் பருவத்தில் கைக் கொத்தினால் கொத்துகள் போன்ற மேலாண்மை முறைகளைப் பயன்படுத்தி களை நீக்கம் செய்யலாம்.
கரும்பு துார் விடும் பருவத்திலும் ஒவ்வொரு பாசனத்திற்குப் பிறகும் 1 முறை என்ற அளவில் 3 லிருந்து நான்கு முறை கைக்களை எடுப்பது அவசியம்.
இவ்வாறு இயந்திர கருவி முறையில் களை நீக்கம் செய்ய அதிக கூலி ஆட்கள் தேவைப்படுவதால் அதிக செலவாகும் அதோடு பயிரிடைவெளிகளுக்கிடையில் இருக்கும் களை நீக்கப்படுவதில்லை
மழை போன்ற சாதகமற்ற தட்பவெப்ப நிலையில் இக்கைக்களை செய்ய இயலாது.
உழவியல் முறைகள்
பயிர் சுழற்சி.சில களைகள் கரும்புப் பயிருடன் நேரடித் தொடர்பு கொண்டிருப்பதால், கரும்புடன் பசுந்தாள் உரப் பயிர்கள், சோளம் போன்ற தீவனப் பயிர்களைப் பயிரிடுவது களைகளைக் கட்டுப்படுத்துவதோடு பயிர் மாற்றுக்கும் உதவி புரிகின்றது.
ஊடுபயிர் சாகுபடி முறை.கரும்பு அகண்ட இடைவெளியுடன் பயிரிடப்படுகின்றது இதனால் களைகள் இவ்விடைவெளிப்பகுதிகளில் எளிதில் முளைத்து பயிரைப் பாதிக்க ஏதுவாகின்றது எளிதில் வளரக்கூடிய குறைந்த கால பயிர்களை ஊடு பயிராக பயிரிடுவதால் இக்களைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன உருளைக்கிழங்கு, கோதுமை, போன்ற பயிர்களை இலையுதிர் பருவத்திலும், உளுந்து, பச்சைப் பயிறு, பருப்பு போன்ற பயிர்களை வசந்த காலத்திலும் பயிரிடுவதால் களைகள் கட்டுப்படுத்தப்படுவதோடு, மகசூல் அதிகரிப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
சோகை பரப்புதல்.கரும்பில் சோகைகள் தோன்றியவுடன், உரித்த சோகைகளை பயிர் இடைவெளிகளில் 10-12 செ.மீ தடிமன் அளவு உயரத்தில் பரப்பி வைக்க வேண்டும் இச்சோகைகள் களைகளுக்குக் கிடைக்கும் சூரிய ஒளியைத் தடுப்பதால் அவற்றின் வளர்ச்சி பாதிக்கப்படுகின்றது அதோடு சோகைகள் மண்ணின் ஈரப்பதத்தைப் பாதுகாத்து அதன் அங்கத் தன்மையை அதிகரிக்கின்றது.
களைகள் பல இனங்களை சேர்ந்ததாக இருப்பதாலும் அவை பல்வேறு வளர்ச்சிப் பருவங்களில் இருப்பதாலும் ஒரே ஒரு களைக்கொல்லி பலன் தராது களைகள் முளைக்கும் முன் சைமஸின் அட்ரசின் 1.5-2.0 கி.கி/ஹெக்டர் (அ) மெட்ரிபுஸின் 1.0 கி.கி/ஹெ (அ) டையூரான் 2.5 கி.கி/ஹெ (அ) அமெட்ரின் 2.0 கி.கி/ஹெ போன்ற மருந்துகளில் ஏதேனும் ஒன்றை ஒரு முறை இடவேண்டும். பின் 2,4-டி 0.75-1.0 கி.கி/ஹெ மருந்தினை அகண்ட இலை களைகள் முளைத்தப்பின் அவைகளைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தலாம்.
கரும்பில் சுடுமல்லி(ஸ்டிரைகா) ஒட்டுண்ணி களைக் கட்டுப்பாடு
தமிழ்நாடு மட்டுமின்றி கரும்பு பயிரிடப்படும் பல இடங்களில் சுடு மல்லி களை அதிகளவில் காணப்படுகின்றது.
இது கரும்பிலிருந்து ஊட்டச்சத்து மற்றும் நீரினை உறிஞ்சிக் கொள்கின்றது. இதனால் கரும்பின் உற்பத்தித் திறன் மற்றும் தரம் பாதிக்கப்படுகின்றது.
பயிறு வகைகளான (பீன்ஸ்) சோயா மொச்சை, அவரை, நிலக்கடலை போன்றவற்றை ஊடுபயிராக பயிரிடுவதன் மூலம் சுடுமல்லியின் வளர்ச்சி தடுக்கப்படுகின்றது.
சுடுமல்லி பூக்கும் பருவம் தொடங்கிய 2-3 வாரங்களில் அதன் விதைகள் கீழே விழுந்து விடாதவாறு வயலிருந்து அகற்றி எரித்து விடவேண்டும்.
2,4-டி மருந்து கிடைக்கும் பட்சத்தில் அதனை 3-4 முறை கைக்களை எடுப்பதற்கு பதிலாக பயன்படுத்தலாம்.
கரணை விதைத்த 90 நாட்கள் கழித்து 5.0 டன்கள்/ஹெ என்ற அளவில் சோகை கொண்டு மூடுவதால் சுடுமல்லியின் அடர்த்தி மற்றும் உலர் எடை குறைக்கப்படுகிறது.
சுடுமல்லி ஒட்டுண்ணிக் களைகளைக்கட்டுப்படுத்த சிறந்த வழிமுறை கீழ்கண்டவாறு அளிக்கப்பட்டுள்ளது.
முதலில் அட்ரசின் (அட்டாப்) 1 கி.கி/ஹெ களைக்கொல்லியை களைகள் முளைக்கும் முன் மருந்து இடவேண்டும். கரணை விதைத்த 45 நாட்களுக்குப் பின் ஒரு கைகளை நீக்கமும் 90 நாட்கள் கழித்து ஒரு மண் அணைப்பும் அவசியம். பின்பு 2,4-டி எனும் களை முளைத்த பின் இடும் மருந்தினை 5 கி/1 (0.50%) + யூரியா 20 கி/1 (2%) கலவையை 90 நாட்கள் கழித்து அளிக்க வேண்டும்.
ஒருங்கிணைந்த களை நிர்வாகம்
கரும்பில் இடைவெளி (பயிர்) அதிகமாகவும், நீண்டகாலப் பயிராகவும் இருப்பதால் களைக்கட்டுப்பாட்டிற்கு உழவியல் முறையோ, இரசாயனம் அல்லது இயந்திர முறையோ அல்லது இவை அனைத்தையும் சேர்த்தோ பயன்படுத்தலாம்.
களை முளைத்த பின் களைக்கொல்லி இடுவதைத் தொடர்ந்து முதல் மற்றும் கட்டை (மறுதாம்புக்) கரும்பில் சோகை பரப்புதல் சிறந்த பலன் தருகின்றது.
களை முளைக்கும் முன் இடும் மருந்துகளுடன் (அட்ரசின் (அ) மெட்ரிபுஷின்) இடை உழவு செய்வது உகந்ததாகும்.
கரணை விதைத்து 40-45 நாட்கள் கழித்து ஒரு பாசனம், அதைத் தொடர்ந்து ஒரு கைக்களை பின் களை முளைக்கும் முன் இடும் அட்ரசின் 2 கி.கி/ஹெ (அ) மெட்ரிபுஷின் 1.0 கி.கி/ஹெ பின்பு 2,4-டி 0.50 கி.கி/ஹெ களையைக் கட்டுப்படுத்த பொருளாதார ரீதியில் சிறந்த முறையாகக் கருதப்படுகின்றது.
கரும்பு தனியாக பயிரிடும்போது களை மேலாண்மை:
அட்ரசின் 2 கி.கி (அ) ஆக்ஸிஃபுளோரோஃபென் 750 மி.லி/ஹெ அளவு மருந்தினை 500 லி தண்ணீருடன் கலந்து களைமுளைக்கு முன் கரணை விதைத்த 3 வது நாளில் கைத் தெளிப்பான் கொண்டு தெளிக்கலாம்.
களை முளைத்திருப்பின் கிராம்மோக்ஸோன் 1.5 லி + 2,4-டி சோடியம் உப்பு 2.5 கி.கி/ஹெ மருந்தினை 500 லி நீரில் கலந்து கரணை விதைத்த 21 வது நாளில் இடலாம்.
களை முளைத்திருப்பின் கிராம்மோக்ஸோன் 1.5 லி+ 2,4-டி சோடியம் உப்பு 2.4 கி.கி/ஹெ மருந்தினை 500 லி நீரில் கலந்து கரணை விதைத்த 21 வது நாளில் இடலாம். இதனால் சுடுமல்லி களையைக் கட்டுப்படுத்தலாம். வெண்டை, பருத்தி போன்ற பயிர்கள் அருகில் எங்கேனும் பயிரிடப்பட்டிருந்தால் 2,4-டி மருந்து தெளித்தல் கூடாது. நேரடியாகத் தெளிக்கும்போது மருந்துடன் 20% யூரியாவையும் சேர்த்து தெளிக்க வேண்டும்.
கரணை விதைத்த 21 வது நாளில் களைகள் முளைக்கும் முன்பு கிளைப்போஸேட் 2கி.கி/ஹெ மருந்தினை 2% அமோனியம் சல்ஃபேட் கலந்து தெளிக்க வேண்டும்.
களைக்கொல்லி இடப்படவில்லை எனில் ஜுனியர்ஹோ (சிறு கொத்து) கொண்டு விதைத்த25,55 மற்றும் 85 நாட்கள் கழித்து கைக்களை மூலம் மண்ணினைக் கிளறி விடலாம். பாத்தியில் இருக்கும் களைகளை கைத்கொத்து கொண்டு நீக்கலாம். பவர் டில்லர் (டைன்ஸ்) மூலம் இடை உழவு செய்யலாம்.
மறுதாம்பு (கட்டைக்) கரும்பில் களை நிர்வாகம்:
கட்டைக் கரும்பில் 30,60 மற்றும் 90 வது நாளில் (முதல் கரும்பு அறுவடை முடிந்து) கைக்களை நீக்கம் செய்வதன் மூலம் அல்லது அட்ரசின் 2.0 கி.கி/ஹெ களை முளைக்கும் முன்பும், களை முளைத்து விட்டால் அறுவடை முடிந்த 90 நாட்கள் கழித்து 2,4-டி 1.25 கி.கி/ஹெ மருந்தும், தொடர்ந்து கிளைப்போஸேட் 1 கி.கி/ஹெ 150 வது நாளிலும் தெளிப்பதால் நல்ல மகசூல் கிடைக்கும்.
கரும்பு ஊடுபயிர் சாகுபடி முறையில் களை நிர்வாகம்:
களை முளைக்கும் முன் தையோபென்கார்ப் 1.25 கி. a.i /ஹெ மருந்தினை இடுவதால் ஊடுபயிர் சாகுபடிக் கரும்பில் களை நன்கு கட்டுப்படுத்தப்படுகின்றது.
களை முளைப்பதற்கு முந்தைய களை நிர்வாகம் :
விதைத்த முதல் 90 நாட்களுக்கு வயலில் களை பாதிப்பின்றி கவனிக்க வேண்டியது அவசியம். விதைத்து 3 (அ) 4 வது நாளில் களை முளைக்கும் முன் அட்ரசின் மருந்தினை 2.5 கி.கி/ஹெ அளவில் களை முளைக்கும் இடங்களில் பரவலாகத் தெளிக்கவும். மருந்தினை 1000 லி நீரில் கலந்து கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்கவும். களைக்கொல்லி தெளிப்பதற்கென தனியாக ஓர் தெளிப்பானையும், நாசிலையும் உபயோகிக்க வேண்டும். களைக் கொல்லியால் கட்டுப்படுத்த முடியாத களைகளை, உரமிடுவதற்கு முன் ஆட்கள் கொண்டு கைக்களை எடுத்துவிடலாம்.
களை முளைத்த பின்பு களை நிர்வாகம் :
அகண்ட இலை களைகள் முளைத்த பின்பு 2,4-டி மருந்தினை 2.5 கி.கி/ஹெ அளவில்தெளிக்கவும். புல் வகைக் களைகளை கைக்களை மூலமே அகற்ற இயலும். ஈத்தாக்ஸி சல்ஃபியூரான் மருந்தினை 13 கி.கி/ஹெ நீரில் கலந்து தெளிப்பதால் சைப்ரஸ் இனக் களைகளைக் கட்டுப்படுத்த இயலும்.