நாற்றங்கால் மேலாண்மை

 

நாற்றங்கால் மேலாண்மை


 

 

நாற்றங்கால் பயிரிட உகந்த இடம்


  • கரும்பின் கரணை (விதைக் கரும்பு) மண்ணில் ஊன்றப்படும்போது, இரு தண்டுப்பாகங்களில் சேர்க்கைப் பகுதியில் உள்ள கணுவிலிருந்து வேர்கள் உருவாகின்றன.  இந்தக் கணு வேர்கள் தற்காலிகமானவை.

  • போதுமான பாசன வசதி இருக்க வேண்டும்.

  • விதைப் பண்ணை வெவ்வேறு பகுதிகளாக பிரிக்கப்பட்டும், எளிதில் விநியோகிக்கக்கூடிய வகையிலும் இருக்க வேண்டும்.

  • விரைவான போக்குவரத்திற்காக சிறந்த சாலை வசதி இருக்க வேண்டும்.

  • விவசாயிகள் முன்னோடிகளாக இருக்க வேண்டும்.

  • முதல்நிலை நாற்றங்கால், தொழிற்பண்ணை, ஆராய்ச்சி நிலையம், அரசு விதைப் பண்ணை ஆகிய இடங்களில் இருக்க வேண்டும்.

மேலே செல்க

மண்ணினை தயார் செய்தல்


சிறந்த விதைப் படுக்கை தயார் படுத்த உழுவது மிக அவசியம் ஆகும். நன்கு வீரியமான நாற்று கிடைப்பதற்கு அதிக அளவு இயற்கை உரம் இடுவது நல்லது. ஆகையால் 25 முதல் 30 டன் தொழு உரம் அல்லது உயர்த்தப்பட்ட சர்க்கரை ஆலைக்கழிவை நடவிற்கு 15 நாள் முன்பு இடலாம்.

இடைவெளி


  • அதிக அளவு விதைக்கரணை பெற சிறிது குறுகலான இடைவெளி சிறந்தது

  • பார் மற்றும் பாத்திகள் - வரிசைகளுக்கு இடையில் 75-80 செ.மீ இடைவெளி

  • இரட்டை பார் முறை - இரண்டு அகன்ற பாத்திகளுக்கிடையில் 150 செ.மீ இடைவெளி

  • இடைவெளி (பாத்திகளுக்கு நடுவில் விதைக் கரணையை இரு வரிசைகளில் 30 செ.மீ இடைவெளியில் நட வேண்டும்)

  • குழி முறை நடவு - குழிக்கு குழி இடைவெளி 150 செ.மீ 150 செ.மீ

மேலே செல்க

விதைக்கரணை நேர்த்தி


அ. கரணையை நடவுக்கு தயார் செய்தல்:

  1. விதைக்கரணையை பூச்சி மற்றும் நோய் தாக்குதல் இல்லாத 6 முதல் 7 மாதங்கள் வயதுடைய குறுகிய கால பயிரிலிருந்தது எடுக்க வேண்டும்.

  2. நடவுக்கு ஒரு நாள் முன்பு விதைக்கரணையை அறுவடை செய்வதன் மூலம் சீரான, அதிக அளவு முளைப்புத்திறன் உள்ள விதை கரணையை பெறலாம்.

  3. விதைக் கரணையை தயார் செய்யும் முன்பு கையினால் தோகையை உரிக்க வேண்டும்.

  4. விதை கரணையை வெட்டும்போது பருக்களுக்கு சேதம் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும்.

  5. நடவுக்கான கரணை அல்லது விதைக் கரும்பு மேற்புற வேர்கள் மற்றும் பிளவுகள் அன்றி இருக்க வேண்டும்.

  6. இரண்டு அல்லது மூன்று தடவைக்கு பிறகு விதைக் கரணையை மாற்ற வேண்டும். ஒருவேளை முதிர்ந்த விதைக் கரும்பு கிடைக்க இயலாத சமயத்தில் உச்சியிலிருந்து மூன்றில் ஒரு பகுதியை பயன்படுத்தலாம்.

ஆ. அசோஸ்பைரில்லம் விதைக்கரணை நேர்த்தி:

  1. 10 பாக்கெட் (ஹெக்டேருக்கு 2000 கி வீதம்)  அசோஸ்பைரில்லத்துடன் போதுமான அளவு தண்ணீர் சேர்த்து கலவையை தயார் செய்து, கரணையை அதில் நடவுக்கு 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

இ. பூஞ்சைக்கொல்லி உடன் விதைக்கரணை நேர்த்தி :

கார்பன்டசிம், 1 கிராமை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து, அதனுள் கரணையை ஊற வைக்க வேண்டும்.

ஈ. நீராவி உடன் நேர்த்தி:

50 செல்சியஸில் காற்றேட்டப்பட்ட நீராவியில் விதைக்கரணையை ஒரு மணி நேரத்திற்கு வைப்பது புல் நோயின் முதல் நிலை தொற்றை கட்டுப்படுத்துகிறது.

மேலே செல்க

விதைக்கரணையை நடுவதற்கு முன்பு


1. குறுகிய கால பயிரை (6-8 மாதங்கள் வயதுள்ள) விதைக்காக பயன்படுத்த வேண்டும்.

2. பூச்சி, நோய் தாக்கப்பட்ட மற்றும் சேதமடைந்த பருக்கள் அல்லது கரும்பினை அகற்றவும்.

3. கை உரிப்பது மற்றும் அதைக் கொண்டு கட்டுதல் கூடாது.

4. ஹெக்டேருக்கு 125 கி.கி யூரியா உடன் 125 கி.கி மியூரேட் ஆஃப் பொட்டாஷ் ஆகியவற்றை அறுவடைக்கு 1 மாதம் முன்பு இட வேண்டும்

5. அறுவடைக்கு முன்பு நன்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டும்

6. கரணையை தயார் செய்யும் போது கையினால் தோகையை உரிக்க வேண்டும்

7. வயலில் நடுவதற்கு ஏற்றவாறு நாற்றங்கால் பயிரை உரிய மாதத்தில் தயார் செய்ய வேண்டும்.

நாற்றங்கால் பயிரை வயலில் நடுவதற்கு முன்பு எந்த மாதங்களில் பயிரை வளர்க்க வேண்டும்:


நாற்றங்கால் பயிரை வளர்த்தல்

வயலில் நடுதல்

ஜூன்

டிசம்பர்-ஜனவரி (முன்பட்டம்)

ஜூலை

பிப்ரவரி-மார்ச் (நடுபட்டம்)

ஆகஸ்ட்

ஏப்ரல்-மே (பின்பட்டம்)

டிசம்பர்-ஏப்ரல்

ஜூன்-செப்டம்பர் (சிறப்புப் பட்டம்)

 

மேலே செல்க

பாலித்தீன்பை நாற்றங்கால்


     

  • பொதுவாக கரும்பானது விதைக்கரணையை நேரடியாக வயலில் நட்டு பயிரிடப்படுகிறது. ஆனால் சில நேரங்களில், தண்ணீர் தட்டுப்பாடு அல்லது வயலில் வேறு ஏதேனும் பயிர்கள் இருப்பின், பருக்கள் அல்லது விதைக்கரணையை பாலித்தீன் பையில் நட்டு நாற்றங்கால் பயிர் வளர்க்கப்படுகிறது.

  • 10 x 15 செ.மீ அளவுள்ள பாலித்தீன் பைகளில் மண் மற்றும் இலை மட்கை (1:1 விகிதத்தில்) நிரப்பி, அதை தண்ணீர் ஆதாரத்திற்கு அருகில் திறந்த வெளியில் நெருக்கமாக அடுக்க வேண்டும்.

  • செதுக்கப்பட்ட பருக்களை 1-2 செ.மீ ஆழத்தில் நடலாம்.

  • கரும்பினை ஒரு பருவுடன் கூடிய கரணையாக வெட்டி நாற்றங்காலில் வளர்க்க பயன்படுத்தலாம்.

  • இந்த துண்டுகளை மண்ணினுள் வைத்து, பையில் கணு அளவிற்கு நிரப்ப வேண்டும். பருக்கள் லேசாக மண்ணை தொடுமாறு வைக்கலாம்.

  • இந்தப் பையிற்கு வாரத்திற்கு இருமுறை தண்ணீர் ஊற்ற வேண்டும். கன்றுகள் 60 நாட்களில் நடவிற்கு தயாராகிவிடும்.

மேலே செல்க

அனைத்து உரிமைகளும் © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்