தோட்டக்கலை :: நறுமணப் பயிர்கள் :: சிட்ரோனல்லா |
|||||
தேசிய தோட்டக்கலை இயக்கம் |
|||||
இரகங்கள் ஜாவா 2, ஜெர்லேப் 2, ஜாவா சிட்ரோனல்லா, ஜாவா 11, சிலோன் சிட்ரோனல்லா, பையே - 13, மன்டாகினி மற்றும் மஞ்சுஷா. மண் மற்றும் தட்பவெப்பநிலை பருவம் ஜுன் - ஜுலை விதை மற்றும் விதைப்பு வேர்க்கட்டை மூலம் பயிாப்பெருக்கம் செய்யலாம். ஒரு எக்டர் நடவு செய்ய 28,000 வேர்க்கட்டைகள் தேவைப்படுகின்றது. இடைவெளி : 60 x 45 செ.மீ நிலத்தை நன்கு உழுது, ஒரு எக்டருக்கு 30 டன் மக்கிய தொழு உரம் இட்டு நன்கு பண்படுத்தவேண்டும். தேவைக்கேற்றவாறு பார் சால் (அ) பாத்தி அமைத்து நடவு செய்யலாம். ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை அடியுரம் : ஒரு எக்டருக்கு 25:40:40 கிலோ தழை, மணி, சாம்பல் சத்து. நீர் நிர்வாகம் நடவு செய்தவுடன் நீர்ப்பாசனம் செய்யவேண்டும். மேலும் உயிர் நீர் நடவு செய்த மூன்றாவது நாளும் அதன் பின்னர் 7-15 நாட்கள் இடைவெளியில் நீர்ப்பாசனம் செய்யவேண்டும். பின்நேர்த்தி ஓரிரு முறைத்தேவைக்கேற்ப களை எடுக்கவேண்டும். அறவடையின் பின்னர் மண் அணைத்து நீர்ப்பாய்ச்சவேண்டும். ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு இலைத்தீயல் நோயினைக் கட்டுப்படுத்த 0.2 சதவிகிதம் மேங்கோசிப் (அ) ஜினப் மருந்தை 15-20 நாள் இடைவெளியில் தெளிக்கவேண்டும். அறுவடை முதல் அறுவடையானது நடவு செய்த 6வது மாதத்தில் செய்யலாம். இரண்டாவது மற்றும் அதகைத் தொடர்ந்து அறுவடையினை ஒவ்வொரு இரண்டரை மாத இடைவெளியிலும் செய்யலாம். மகசூல் ஒரு வருடத்திற்கு புல் = 20-30 டன் / எக்டர் எண்ணை எடுக்க காய்ச்சி எடுக்கும் முறையினை பயன்படுத்தவேண்டும். எண்ணை முதல் வருடம் = 50-100 கிலோ / எக்டர்
|
|||||
மேலோட்டம் |
|||||
அரசு தோட்டக்கலைத் துறை புத்தகங்கள் மற்றும்
|
|||||