இந்தியாவில் பஞ்சாப், அரியானா, அஸ்ஸாம், அருணாச்சல பிரதேசம், மிசோரம், மணிப்பூர், மேகாலயா, திரிபுரா, டாமன் & டையூ பகுதிகளை தவிர ராகி பயிரிடப்படுகிறது. காரீப் பருவத்தில் பெரும் பகுதிகளிலும்(96.2%), ராபி பருவத்தில் 3.3% அளவும், கோடை பருவத்தில் 0.5% அளவும் பயிரிடப்படுகிறது.
2005 -06 வருடத்தில் தானியங்களில் ராகி உற்பத்தியில் ஆறாவது இடத்திலும், உற்பத்தி திறனில் 5-வது இடத்திலும் இருக்கிறது.
கர்நாடகா (59.6%), அதை தொடர்ந்து உத்தரகண்ட் (9.3%), மகாராஷ்டிரா (8.6%), தமிழ்நாடு (6.3%), ஆந்திர பிரதேசம் 4.2%), ஒரிசா (4.1%), குஜராத் (1.5%), ஜார்கண்ட் (1.3%) மற்றும் பீகார்(1.1%) ஆகிய மாநிலங்களில் ராகி பயிரிடப்படுகிறது.
ராகி உற்பத்தி திறன் கர்நாடகாவில் அதிகபட்சமாக 1858 கிலோவும், புதுச்சேரியில் 1804 கிலோவும், உத்திர பிரதேசத்தில் 1387 கிலோவும், தமிழ்நாட்டில் 1325 கிலோவும், ஆந்திர பிரதேசத்தில் 1225 கிலோவும், உத்தரகண்ட்டில் 1241 கிலோவும் உள்ளது.
ஆதாரம்: பொருளாதாரம் & புள்ளிவிபர இயக்ககம், கர்நாடகா- http://dacnet.nic.in/apy/ac_pc.aspx