வேளாண் இயந்திரங்கள்

  1. உழவுக் கருவிகள்

  2. விதைக்கும் கருவிகள்

  3. அறுவடை பின்சார் கருவிகள்

1.உழவுக் கருவிகள்



a. சட்டிக் கலப்பை

diskplough

சிறப்பு அம்சங்கள்: சட்டிக் கலப்பையானது  ஆரம்ப உழவிற்கு பயன்படுத்தப்படுகிறது.  கடினமான, வறண்ட, சருகுகள் உடைய, கல்லான, முந்தைய பயிர்களை அகற்றுவதற்கும், கடினமான மண் வகைகளுக்கும் சட்டிக் கலப்பை மிகவும் ஏற்றதாகும்.

குறிப்புகள்:

சால் எண்ணிக்கை: 2-4
சட்டி அளவ: 600-800 மி.மீ
இயங்கும் ஆழம்: 300 மி.மீ வரை
தேவைப்படும் சக்தி: 25-50 hp,டிராக்டர்
எடை: 236-376 கிலோ

மேலே செல்க

b. கொத்துக் கலப்பை

சிறப்பு அம்சங்கள்: மானாவாரி மற்றும் நன்செய் நிலங்களில் விதை பாத்தி அமைக்க பயன்படுகிறது.  மேலும் இடையுழவு மற்றும் சேறு கலக்கப் பயன்படுகிறது.

குறிப்புகள்:

வகை: டிராக்டரில் ஏற்றப்படும் கருவி
சக்தி ஆதாரம்: 35 hp,  டிராக்டர்
இயங்கும் ஆழம்: 140-170 மி.மீ
திறன்: 0.35 - 0.5 எக்டர்
கொழு வகை: எதிர் வழி  வகை
எடை: 120-130 கிலோ

மேலே செல்க

c. சுழல் கலப்பை

சிறப்பு அம்சங்கள்: வறண்ட மற்றும் நன்செய் சாகுபடி நிலங்களுக்கு ஏற்றது.

கட்டுமான அளவுகள்:

வகை: டிராக்டரால் இயக்கப்படும் கருவி
சக்தி ஆதாரம்: 35 மற்றும் அதற்கு மேலான எச்.பி. டிராக்டர்
கத்தி வடிவம்: L - வடிவம்
சுழலும் தண்டின் சுழற்சி: 210-237 சுற்று/நிமிடம்
எடை: 280- 415 கிலோ

மேலே செல்க

d. வளைப் பலகை கலப்பை

சிறப்பு அம்சங்கள்:

  • வாய்க்கால் பாசனம் மற்றும் அதிக மழையுடைய மற்றும் அளவுக்கு அதிகமான களைகள் வளரக் கூடிய பகுதிகளுக்கு ஆரம்ப முதல் உழவிற்கு வளைப் பலகை கலப்பையை பயன்படுத்தலாம்.

  • மண்ணை திருப்பிவிட்டு மண்ணை பொடியாக்கி, களைகளை வேருடன் பிடுங்கி, சருகுகள் மற்றும் பயிர்க் கழிவுகளை மண்ணில் புதைத்துவிடுகிறது.

குறிப்புகள்:

மாடல் MT: 02 (M)
அதிக ஆழம்: 22 செ.மீ
இயங்கும் அகலம: 85 செ.மீ
எடை: 225 கிலோ
டிராக்டர் உடன் கூடிய சக்தி: 35-55 HP

மேலே செல்க

விதைக்கும் கருவிகள்:

a. மேம்படுத்தப்பட்ட அகலப்பாத்தி அமைத்து விதைக்கும் கருவி

சிறப்பு அம்சங்கள்:

    • மேட்டுப் பாத்திகளில் நிலக்கடலை, கொண்டைக்கடலை, மக்காச்சோளம், சிறு தானியங்கள் மற்றும் பயிர்கள் விதைக்க ஏற்றது.

    • இயங்கும் அளவு   :  3-2 எக்டர்/நாள்

    • செலவு சேமிப்பு : 57%

    • ஆட்கள் மற்றும் நேரம் சேமிப்பு : 95%

கருவியின் விபரம்:

மொத்த அளவு: 2020 x 2050 x 1100 மி.மீ
எடை: 370 கிலோ
சால் எண்ணிக்கை: 2
வரிசை மற்றும் குத்து இடைவெளி: மாற்றக் கூடியது
விலை: ரூ.27,000

குறிப்புகள்: இக்கருவியானது விதைப்பெட்டி விதைகள் உடையாமல் ஒவ்வொன்றாக எடுத்து சாலில் போடுவதற்கேற்ற குவளை அமைப்பு கொண்ட சாதனம். இவற்றை இயக்கும் சக்கர அமைப்பு சால்களில் வேண்டிய ஆழத்தில் விதை விழுந்தவுடன் அதை மண்ணால் மூடுவதற்கேற்ற அமைப்பு ஆகியவைகளை தன்னகத்தே கொண்டுள்ளது. உலோக மிதவைக்கு மேல் விதைப்பதற்கான இயந்திரம் பொருத்தப்பட்டிருக்கும்.  பாத்தி மேற்பரப்பைப் பொறுத்து சாலின் ஆழத்தை மாற்றிக் கொள்ளலாம்.

மேலே செல்க

b. தூவும் கருவி

சிறப்பு அம்சங்கள்:

  • சிறிய விதைகளான எள்ளு, சோளம், ராகி போன்றவற்றையும், உரங்கள் மற்றும் குருணையான பூச்சிக் கொல்லிகளையும் பரப்ப பயன்படுகிறது.

  • குறுகிய காலத்தில் அதிக பரப்பளவில் விதைக்கலாம்.

  • விதைகள் சீராக விதைக்கப்படும்.

கருவியின் விபரம்:

வகை:  கையால் இயக்கக்கூடியது
சக்தி தேவை: 1 ஆள்
மொத்த அளவு: 360 x 510 x 420 மி.மீ
எடை: 3.6 கிலோ
திறன்: 4 எக்டர்/நாள்
விலை: ரூ 3000


குறிப்புகள்: இயந்திரத்தை இயக்கும் ஆள் முன் இருக்கும் மையவிலக்கு பகுதியின் மூலம் விதை மற்றும் குருணை உரங்கள் தெளிக்கப்படுகிறது.  கைப்பிடியை சுற்றிக் கொண்டே பரப்பப்படுகிறது.  விதை அல்லது உரத்தை 3-5 கிலோ எடுத்து கொண்டு, இயக்குபவர் நடக்கும் போது கைப்பிடியை சுற்றிக் கொண்டே நடக்கவேண்டும்.  தூவும் பொருட்கள் 3.5- 10 மீ அகலம் வரை பரவக்கூடும்.

மேலே செல்க



c.
டிராக்டரால் இயங்கும் காற்றழுத்த விதைப்புக் கருவி

சிறப்பு அம்சங்கள்:
எள்ளு, ராகி, மக்காச்சோளம் போன்ற சிறிய விதைகளை விதைக்கலாம்.
இயக்க ஆகும் செலவு: ரூ.150/எக்டர்
சேமிக்கப்படும் செலவு: 55%
நேரம் சேமிப்பு: 92%


கருவியின் விபரம்:
வகை     : டிராக்டரில் ஏற்றக்கூடிய கருவி
தேவைப்படும் சக்தி:  35-45 hp, டிராக்டர்
திறன்     :  5 எக்டர்/நாள்
விலை   :  ரூ.35,000


பொதுவான குறிப்புகள்: இக்கருவி கொத்துக் கலப்பையின் மேல் இணைக்கப்பட்டு காற்று ஊதி, விதைக் கலன், விதையை சீராக பிரித்து சாலுக்கு அனுப்பும் பிரிப்பான், சால் திறந்து மூடும் அமைப்புக்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இக்கருவியில் காற்று ஊதியில் இருந்து வரும் காற்றைக்கொண்டு உறிஞ்சும் அழுத்தத்தை ஏற்படுத்தி அதன் மூலம் விதைகளை காற்று விசைக்குள் இழுத்து பிரிப்பானுக்கு கொண்டு செல்லும் அமைப்பு மாட்டப்பட்டுள்ளது. பிரிப்பான் இந்த விதைகளை எல்லா சால்களுக்கும் சீராக அனுப்புகிறது. விழுந்த விதைகளை சங்கிலி அமைப்பு கொண்ட சால் மூடுவான் மூடுகிறது. 9 சால்களிலும் விதை சீராக விழுகிறது.  சிறிய விதைகள் சீராக ஒரே மாதிரி விதைக்கப்படுகிறது.

மேலே செல்க



d. பிர்சா காளை மாடுகளால் இழுக்கப்படும் விதைக்கும் கருவி

சிறப்பு அம்சங்கள்:

  • நெல், கேழ்வரகு, கோதுமை, ஆளிவித்து, பயிர்கள், குசும்பா மற்றும் சிறிய விதைகள் விதைக்க ஏற்றது.

  • 56% வேலையாட்கள் மற்றும் வேலை நேரத்தை குறைக்கிறது. 25% வேலைச் செலவு குறைகிறது.

  • மகசூல், 14-27% அதிகரிக்கிறது.

கட்டுமான அளவுகள்:
வகை: காளை மாடுகளால் இழுக்கப்படும்
அளவு: 850 x 440 x 170 மி.மீ
இயந்திர விலை: ரூ.650
திறன்: 0.03 எக்டர்/நாள்
சக்தி ஆதாரம்: 1 ஜோடி காளை மாடுகள்
தயாரிப்பு: பி.ஏ.யு, ராஞ்சி, (1979-82)


பொதுவான குறிப்பு: இக்கருவியில் உள்ள ரப்பர் கலக்குவான் மூலம் விதை விதைக்கப்படுகிறது.  கருவியில் உள்ள புனலின் மூலம் உரம் செலுத்தப்படுகிறது.  நிலச்சக்கரம் விதை கலக்குவானை இயக்குகிறது.  சிறிய பார் மற்றும் சால் அமைக்கும் பாகம் காளை மாடுகளுக்கான இழுவை பலுவை குறைக்கிறது.

 

மேலே செல்க



e. டிராக்டரில் பொருத்தக் கூடிய விதைக்கும் கருவி

சிறப்பு அம்சங்கள்:

  • கடுகு, ராகி மற்றும் தானியம் போன்ற சிறிய விதைகளை விதைப்பதற்கு ஏற்றது.

  • மகசூல் 20-25% வரை அதிகரிக்கிறது.

கருவியின் விபரம்:
வகை: டிராக்டரால் இழுக்கப்படும்
வேலைத்திறன்: 0.18 எக்டர்
திறன்: 62%
தேவைப்படும் வேலையாட்கள்: 3 ஆட்கள்/எக்டர்
விலை: ரூ.10,000
வாடகை: ரூ.200/எக்டர்
தயாரிப்பு: ஜி.பி.பி.ப.ஏ டி, பந்த்நகர் (1988-92)

 

மேலே செல்க



f. காளை மாடுகளால் இழுக்கப்படும் பலுகு கருவி

சிறப்பு அம்சங்கள்:

  • இடையுழவிற்கு பயன்படுகிறது. வயலில் உள்ள பயிர்களில் களையை அகற்ற பயன்படுகிறது.

  • இடையுழவின் போது பயிரை சேதப்படுத்துவதில்லை.

  • அமர்பவரின் அருகில் மண்ணின் ஆழத்தை மாற்றிக் கொள்ளும் வகையில் இரண்டு டிரைவ் உள்ளது.

கருவியின் விபரம்:
வகை: காளை மாடுகளால் இழுக்கப்படும்
வேலைத் திறன்: 7.7 மணி நேரம்
பலுகு விலை:  ரூ.1500


பொதுவான குறிப்புகள்: சிறிய பலுகுகளை காளை மாடுகளைக் கொண்டு இயக்கலாம்.  இந்த கருவியைப் பயன்படுத்தி இடைவரிசைகளில் உள்ள களையை அகற்றலாம். இழுக்கும்போது கத்திப் பலுகு மண்ணில் உள்ள களைகளை எளிதாக பிடுங்கி விடுகிறது. மத்திய கோடு கொண்ட சுவீப் கருவியில் இறக்கைகள் இருபுறமாக இருக்கும்.  பக்கவாட்டில் கோடு உடைய சுவீப் இடப்புறமாகவும், வலப்புறமாகவும் இறக்கைகளை கொண்டிருக்கும்.

 

மேலே செல்க



அறுவடை பின்சார் கருவிகள்



a. மேம்படுத்தப்பட்ட கதிரருவாள்

சிறப்பு அம்சங்கள்: காய்கறிகள், தானியங்கள் மற்றும் குறு தானியங்கள் ஆகியவற்றை அறுவடை செய்யவும், புற்கள் மற்றும் தழை, செடிகளை வெட்டவும் கதிரருவாள் பயன்படுகிறது.

கருவியின் விபரம்:
வகை: கையால் இயக்கப்படும்
கத்தி தடிமன்: 1.5-4, முனை நோக்கி சிறுத்து இருத்தல்
எடை: 150-400 கிராம்

பொதுவான குறிப்பு:இக்கருவியில் வளைந்த கத்தியும், அதனுடன் கூடிய கைப்பிடியும் உள்ளது.  கத்தி அமைப்பு சாதாரணமாகவோ, ரம்பம் போன்றோ இருக்கும். சாதாரண கத்திக்கும் ரம்பம் போன்ற கத்திக்கும் வளைவு வேறுபடும்.  கத்தி மத்திமான கார்பன் ஸ்டீல் மற்றும் அதிக பார்பன் ஸ்டீலால் செய்யப்படுகிறது.  கத்தியின் அறுக்கும் பகுதியின் தடிமன் முனை நோக்கி குறைந்து கொண்டே போகிறது.  மரக்கைப்பிடிக்குள் கத்தி சொறுகப்படுகிறது.  கைப்பிடி முனை வளைந்தோ, நேராகவோ இருக்கும்.

மேலே செல்க



b. பல பயிர் கதிர் அடிக்கும் கருவி (தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் கோயமுத்துார்)

பண்புகள்:

  • நெல், ராகி, சோளம், மக்காச்சோளம், சூரிய காந்தி, கோதுமை போன்ற பல பயிர்களின் கதிர்களை அடிக்கலாம்.

  • பெரிய கட்டமைப்புகள் உடையது.

  • மற்ற கதிரடிக்கும் கருவிகளைவிட 50% அதிகமான உற்பத்தி அளவு கிடைக்கிறது.

  • தரமான ஸ்டீல், பியரிங்குகள், கப்பி மற்றும் V - பெல்ட்கள் உள்ளன.

  • நல்ல வேலைத் திறனுடன் கூடிய குறைவான எரிபொருள் உட்கொள்ளும் இயந்திரம் ஆகும்.

கருவியின் விபரம்:
மொத்த அளவு: 3420 x   2430 x   2330
தேவைப்படும் சக்தி: 35, டிராக்டர் (அ) 20 மின் மோட்டார்
திறன்  (கிலோ/மணி): 600-1000


பொதுவான குறிப்பு: கதிரடிக்கும் இயந்திரம், கதிரடிக்கும் உருளை, ஊசலாடும் பெட்டி, வைக்கோல் வெளியேற்றும் பகுதி, துாற்றுவான் மற்றும் சுத்திகரிப்பு பகுதி ஆகிய பகுதிகளைக் கொண்டுள்ளது.  உருளையில் இரும்பு வளையங்கள், உலோக அட்டை, பற்களுடைய ரேக்குகள் ஆகியன கடினமான பெடல் பியரிங் மேல் உள்ள தண்டின் மேல் பொருத்தப்பட்டுள்ளது.  துாற்றுவான் மற்றும் விசிறி இணைப்பிற்கு சக்தி செலுத்துவதற்கு தண்டின் மேல் பல அளவுள்ள கப்பிகள் பொருத்தப்பட்டுள்ளது.  உருளைகள், காற்றின் விசை போன்றவற்றை பல்வேறு பயிர்களுக்கு ஏற்றவாறு மாற்றி வைத்துக் கொள்ளலாம்.

மேலே செல்க



c. எஸ்.பி.ஐ. கதிர் அடிக்கும் கருவி

சிறப்பு அம்சங்கள்:

  • நெல், கோதுமை, மக்காச்சோளம், சூரிய காந்தி, சோளம், இராகி மற்றும் தானியங்களின் கதிர்களை அடிப்பதற்கு ஏற்றது.

  • கதிர் அடிக்கும் கருவியில் சுழலும்  உருளையுடைய கதிர் மணிகள் பிரிக்கப்படும் பகுதி, துாற்றுவான் மற்றும் வைக்கோல் வெளிவரும் பகுதி ஆகியன உள்ளது.

  • இக்கருவி காற்றழுத்த முறையில் இயங்கும் டயர்களை உடைய இரண்டு சக்கர டிரெய்லரில் பொருத்தப்பட்டுள்ளது.

  • இக்கருவியை காளை மாடுகள் கொண்டு இழுத்து செல்லும் மோலி உள்ளது.  டிராக்டர் கொண்டும் இழுக்கலாம்.

  • மின் மோட்டார் (அ) சிறிய இயந்திரம்  இக்கருவிக்கு சக்தி கொடுப்பதற்கு தேவை.

மேலே செல்க



d. தானியம் துாற்றும் கருவி

சிறப்பு அம்சங்கள்

  • கதிர் அடித்தவுடன் தானியங்களைத் துாற்றி, சுத்தமான மணிகளை பெறுதல்.

  • இது தொடர்ச்சியாக இயங்கக் கூடியது.

  • மற்ற தானியங்களைத் துாற்றுவதற்கும் இது பொருந்தும்.

  • இயந்திர திறன் - 97%

கருவியின் விபரம்:
அளவு: 2130 x 600 x 1320
திறன்: 500-750 கிலோ/மணி
தேவைப்படும்   சக்தி: 1 hp மின் மோட்டார்
விலை: ரூ. 30,000
இயக்க ஆகும் செலவு: ரூ.25/மணி


பொதுவான  குறிப்பு:இக்கருவி நெல் மற்றும் பிற தானியங்களை கதிர் அடித்தவுடன் துாற்றி சுத்தம் செய்கிறது.  உள்ளே தானியங்களை போடும் ஹாப்பர், சுத்தம் செய்வதற்காக தானியங்களை நிறுத்தி வைத்துக் கொள்கிறது.  பின் ஸ்கேல்பர் மேல் போட்டு பெரிய துாசுகளை அகற்றுகிறது.  கீழே உள்ள துாற்றுவான் மேல் இருந்து விழும் தானியங்களுக்கு காற்றை செலுத்தி வைக்கோல், பதர் மற்றும் பிற துாசுகளை பிரிக்கிறது.  துாசு, பதர் மற்றும் வைக்கோல் ஆகியவற்றை தனியாக பெறலாம்.  சுத்தம் செய்யப்பட்ட தானியம் இயந்திரத்தின் கீழ் உள்ள குழாய் வழியாக தனியாக வந்துவிடும்.

மேலே செல்க

f. விதை தரம் பிரிப்பான் - சல்லடையுடன் கூடிய இண்டென்டட் சிலிண்டர்

சிறப்பு அம்சங்கள்: எல்லா பயிர்களின் விதைகளையும் சுத்தம் செய்து தரம்பிரிக்க பயன்படுகிறது.

கருவியின் விபரம்:
திறன்: 1.5 -2 டன்/எக்டர்
மொத்த அளவு: 3060 x 2500 x 2470
மின் மோட்டார்: 5.6 KW
விலை: ரூ.12,500

பொதுவான குறிப்பு: விதை தரம் பிரிப்பான், துாசு சேகரிப்பான், காற்று கட்டுபாட்டு அமைப்புகள், விதை உட்செலுத்தும் அளவுக் கட்டுப்பாடு, மாற்றக்கூடிய சல்லடைகள், இரட்டை காற்று செலுத்தும் இயக்கும், காற்றழுத்தம் மூலம் உட்செலுத்தும் அமைப்பு, காற்று வீசும் விசிறிகள், காற்று அறை, சல்லடை டெக் அமைப்பு போன்றவற்றை பெற்றிருக்கும்.

திடமான இயந்திர பிரேமின் மேல் அனைத்து பகுதிகளும் பொருத்தப்பட்டிருக்கும்.  சல்லடை மேல் விழுவதற்கு  முன்பே, தானியங்கள் மேல் காற்று வீசப்பட்டு பதர், வைக்கோல், துாசு, நோய்ப்பட்ட தானியங்கள் ஆகியன அகற்றப்படுகிறது.

அகலம் மற்றும் தடிமனைப் பொறுத்து இரு அடுக்கு சல்லடை மேல் விதைகள்  செலுத்தப்படும்.  சல்லடையில் இருந்து சுத்தம் செய்யப்பட்டு, தரம் பிரிக்கப்பட்ட விதைகள் மறுபடியும், துாற்றப்பட்டு மீதமுள்ள துாசுகளும் வெளியேற்றப்படும்.

மேலே செல்க



g. சிறிய தானிய அரவை

சிறப்பு அம்சங்கள்: எல்லாப் பயிர்களின் விதைகளையும் சுத்தம் செய்து தரம் பிரிக்க பயன்படுகிறது.

கருவியின் விபரம்:
மொத்த அளவு: 3160 x 1460 x 2560
திறன் (டன்/எக்டர்): 2
மின் மோட்டர் (ரிகீ ): 7.1

பொதுவான குறிப்பு: இதில் விதை உட்செலுத்தும் பகுதி, விதை கட்டுப்பாட்டு கதவு, சல்லடைகள், அஸ்பிரேட்டர் விசிறி, காற்று கட்டுபாட்டு அறை, ஸ்பெளட் மற்றும் இண்டென்டட் சிலிண்டர், தரம் பிரிப்பான் ஆகிய பகுதிகள் உள்ளன.  இவை அனைத்தும் ஸ்டீல் பிரேமில் பொருத்தப்பட்டிருக்கும்.

விதை (அ) தானியங்களை உட்செலுத்தும் போது உருளைகளை அவற்றை சீரான முறையில் மேல் சல்லடை மேல் விழச்செய்கிறது.  மேல் சல்லடை மேல் விழுவதற்கு முன் முதல்நிலையாக துாற்றப்பட்டு பதர், வைகோல் துாசு, மற்றும் நோய்த்தாக்கப்பட்ட விதைகள் அகற்றப்படுகிறது.

அகலம் மற்றும் தடிமனைப் பொறுத்து இரு அடுக்கு சல்லடைமேல் விதைகள் செலுத்தப்படும். சல்லடையில் இருந்து சுத்தம் செய்யப்பட்டு, தரம் பிரிக்கப்பட்ட விதைகள் மறுபடியும் துாற்றப்பட்டு, மீதமுள்ள துாசுகளும் வெளியேற்றப்படும்.

அளவை வைத்து தரம்பிரிக்கப்பட்ட விதைகள், இண்டென்டட் சிலிண்டர் தரம் பிரிப்பானில் செலுத்தப்பட்டு, நீளத்தை வைத்து பிற விதைகள் மற்றும் மாசுகள் பிரிக்கப்படுகிறது.  துாய்மையான விதைகளும், மாசுகளும் தனித்தனியாக சேகரிக்கப்படுகிறது.

மேலே செல்க



g.Mini Millet Mill

சிறப்பியல்புகள்:

  • சோயாபீன்ஸ், துவரை, உளுந்து, பச்சைப்பயிறு, மற்றும் தானியங்களான நெல், சோளம், ராகி, கோதுமை போன்றவைக்கு ஏற்றது.

  • சிறு தானிய மில் இயந்திரத்தில் உட்செலுத்தும் பகுதியான பீட் ஹாப்பர் மேல் பகுதியில் உட்செலுத்தும் பொருளின் கட்டுப்பாடு இயக்கத்துடன் இருக்கும்.

  • “சிறிய தானிய மில்” தண்ணீர் கலப்பான், ஒரு பிளேட் அரைப்பான் மற்றும் பல ஷிப்டர் இணைப்புகள் உள்ளது.

  • இக்கருவி ஒரே நேரத்தில் தவிடு நீக்கி, தானியத்தை மாவு ஆக்கிவிடுகிறது.

கருவியின் விபரம்:
திறன்: 30-40 கிலோ/எக்டர்

தேவைப்படும் சக்தி (hp): தானிய அரவை: 0.5 hp & மாவு அரவை: 1.5 hp

மேலே செல்க



h.Food extruder

சிறப்பு அம்சங்கள்:

  • தானியங்களில் இருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்களை உருவாக்குதல்

  • ராகி பயிருக்கான வர்த்தக மதிப்பை ஏற்படுத்துதல்

  • பிற தானியங்களையும் மதிப்பூட்டப்பட்ட பொருட்களாக ஆக்கிக் கொள்ளலாம்

  • ராகி மாவை சமைத்து முறுக்கி பிழிவதற்கு பயன்படுகிறது

  • முறுக்கி பிழிவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன், 22% ஈரப்பதத்திற்கு மாவை தயார் செய்ய வேண்டும்.  அப்பொழுது, 20% மரவள்ளி மாவை கலந்து, மொரமொரப்பாக்கி கொள்ளலாம்.

  • பேரல் வெப்பம் 115ºC மற்றும் திருகு வேகம் 225 rpm இருக்கும் போது பிழியலாம்

கருவியின் விபரம்:
மொத்த அளவு: 960 x 750 x 600 மி.மீ
திறன்: 10-20 கிலோ/மணி
தேவைப்படும் சக்தி: 7.5 hp மின் மோட்டார்
விலை: ரூ.75,000
இயக்க ஆகும் செலவ: ரூ.15/கிலோ

மேலே செல்க

காட்சியகம்