முன்னுரை

இந்தியாவில் ‘ராகி’ என்று பொதுவாக அழைக்கப்படும் இந்த தானியம் தென் இந்திய கிராமப்புற மக்களின் உணவாகப் பயன்படுகிறது. கர்நாடகாவும்,  தமிழ்நாடும் ராகி சாகுபடி செய்யும் முதன்மை மாநிலங்களாகும்.  இது தவிர ஆந்திரப்பிரதேசம், உத்திரப்பிரதேசம் மற்றும் பீஹார் மாநிலங்களிலும் ராகி  சாகுபடி செய்யப்படுகிறது.  கேழ்வரகுப் பயிரில், இரண்டு சிற்றினங்கள் உள்ளன.  ஒன்று காட்டு வகையான எல்லுாசின் இண்டிகா மற்றொன்று பயிர் செய்யக் கூடிய எல்லுாசின் கோரகானா ஆகும்.  தானியங்களை அரைத்து,  கூழ், புட்டு, கேக் மற்றும் பான்கேக் வகை உணவுகள் தயார்செய்யப்படுகிறது.  கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநிலங்களின்  மக்கள் பொதுவான உணவுப் பொருளான “மட்டி (அ) ராகி சங்கதி” உண்கின்றனர்.  தென் மாநிலங்களில், ராகி தோசை. ரொட்டி, உருண்டை, பிஸ்கட், பிரெட் மற்றும் மொரமொரப்பான உணவுப் பொருள்கள் தயார் செய்யப்படுகின்றன.  தானியத்தை ஊற வைத்து, புளித்த உணவு வகைகள் தயார் செய்யலாம்.  முளை மாவுப் பானங்கள் தென் இந்தியாவில் பிரபலமாக உள்ளது.   “கட்டி என்ற ஒரு தனி வகைப் பாதார்த்தம் கேரள மாநில இடுக்கி மற்றும் பிற மாவட்ட மக்களால், ராகி மாவில் இருந்து தயார் செய்யப்படுகிறது.  தலையணை மற்றும் மெத்தைகள் செய்யும் போது கேழ்வரகு உமி அடித்தளமாக பயன்படும்.  கேழ்வரகு  வைக்கோல் நல்ல மாட்டுத் தீவனம் ஆகும்.  மேலும் விலங்குகளுக்கு படுக்கை உண்டாக்க இது பயன்படுகிறது.

 

தோற்றம்

இந்தியாவில் பழமை வாய்ந்த சமஸ்கிருத எழுத்தாளர்கள் ராகியை ராஜிகா என்று அழைக்கின்றனர். இந்தியாவின் பழங்கால மனிதர்கள் காட்டு வகையான எல்லூசின் இண்டிகாவில் இருந்து,  பயிர் செய்யக் கூடிய எல்லூசின் கோரகானா வகையை தோன்ற வைத்துள்ளனர். ஆரியர்கள் இந்தியாவிற்கு வரும் முன்னரே, ராகி கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. ராகி முதலில் இந்தியாவில் தோன்றி, பின்னர் அரேபியாவிற்கும், ஆப்பிரிக்காவிற்கும் சென்றடைந்துவிட்டதாகவும்  டிகண்டோல்(1886) கூறுகிறார். தென்னிந்தியாவில் இது அதிகம் பயிர் செய்யப்படுவதால், இவ்விடம் முதல் நிலைத் தோற்ற இடமாக இருக்கக் கூடும் என்கிறார். எனினும், ராகி ஆபிசீனியாவில் (எத்தியோப்பியா) தோன்றியிருக்கும் என்கிறார் வாவிலோ(1951). கேழ்வரகு முதலில் ஆப்பிரிக்காவில் தோன்றி பின்னர் சோபியன் வழியாக  இந்தியாவை சென்றடைந்திருக்கும் என்று மெஹ்ரா(1963), கூறுகிறார். எல்லூசின் கோரகானாவின் முந்தைய தலைமுறை எல்லூசின் இண்டிகா என்று கருதப்படுகிறது.

ராகி வெப்ப மண்டலம் மற்றும் மித வெப்ப மண்டல பகுதிகளில் பயிர் செய்யப்படுகிறது. இந்தியாவில் அதிகமாக பயிர் செய்யப்படுவதோடு ஆப்பிரிக்கா, மடகாஸ்கர், இலங்கை, மலேசியா, சீனா மற்றும் ஜப்பானில் பயிர் செய்யப்படுகிறது. இந்தியாவில் கர்நாடகா,  தமிழ்நாடு, ஆந்திரா, ஒரிசா, குஜராத், மஹாராஷ்டிரா மற்றும் உத்திரபிரதேசம் மற்றும் ஹிமாச்சலபிரதேசம் மலை பகுதிகளில் சாகுபடி செய்யப்படுகிறது.            

 

காட்சியகம்