நிறுவனங்கள் | திட்டங்கள் |
நோக்கங்கள்:
|
|
அணுக வேண்டிய முகவரி - பேராசிரியர் மற்றும் தலைவர், தானியங்கள் துறை, பயிர் பெருக்கம் மற்றும் மரபியல் மையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோயமுத்தூர் - 641 003 தமிழ்நாடு, இந்தியா மின் அஞ்சல்: millets @tnau.ac.in |
இந்நிலையம், 1973 இல் தருமபுரி மாவட்டத்தில் தொடங்கப்பட்டது. என்.எச்.7 (பெங்களூர்-சேலம்) நெடுஞ்சாலையில், பெங்களூரில் இருந்து 108 கி.மீ மற்றும் தருமபுரியில் இருந்து 29 கி.மீ துாரத்தில் உள்ளது. இதுவரை - பையூர் 1, பையூர் (ஆர்.ஏ) 2 இரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. நோக்கம்:
ஆராய்ச்சி செயல்பாடுகள்: பயிர் வளர்ச்சி: குலை நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட, அதிக மகசூல் தரக்கூடிய நீண்ட கால வயதுடைய இரகங்களை கண்டுபிடித்தல், நெல், பையூர்; சோளம், பையூர்-2, ராகி, பையூர் -1, சாமை, பையூர்-1, காராமணி, பையூர் 1, கொள்ளு, பையூர் 1, பையூர் 2; மற்றும் பேய்எள்ளு, பையூர் 1 ஆகியவற்றில் கரு விதைகள் மற்றும் வல்லுநர் விதைகளை உற்பத்தி செய்து, பராமரித்தல். முகவரி: மின் அஞ்சல்: arspaiyur@tnau.ac.in |
நோக்கம்:
|
|
அணுக வேண்டிய முகவரி மைராடா வேளாண்மை அறிவியல் நிலையம் 57, பாரதி வீதி, கோபி செட்டிபாளையம் ஈரோடு மாவட்டம், தமிழ்நாடு தொலைபேசி: 04285 – 226695 தொலைபிரதி: 044-24360234 மின்னஞ்சல்:myradakvk@eth.net myradakvk@dataone.in இணைய தளம்: http://www.myradakvk.co.in |
நோக்கம்:
|
|
அணுக வேண்டிய முகவரி - டாக்டர் பெருமாள் வேளாண்மை அறிவியல் நிலையம், எலுமிச்சங்கிரி கிராமம், மல்லினாயனப்பள்ளி (போஸ்ட்) கிருஷ்ணகிரி மாவட்டம், தமிழ்நாடு போன்: 04343 - 268613 மின் அஞ்சல்: drperumalkvk@hotmail.com |
நோக்கம்:
|
|
அணுக வேண்டிய முகவரி - அவினாசிலிங்கம் வேளாண்மை அறிவியல் நிலையம் விவேகானந்தபுரம் – 641 113 சீலியூர்(வழி), காரமடை வட்டம் கோயமுத்தூர் மாவட்டம், தமிழ்நாடு தொலைபேசி: 04252 -284223 தொலைபிரதி: 044 – 24360234 மின்னஞ்சல்: sakvkcbe@rediffmail.com இணையதளம்: http://avinashilingamkvk.org/ |
நோக்கம்:
|
|
அணுக வேண்டிய முகவரி - வேளாண்மை அறிவியல் நிலையம், விருஞ்சிபுரம் - 632 104. வேலுார் மாவட்டம், தமிழ்நாடு. போன்: 0416-2272221 மின் அஞ்சல்: kvkvrinjipuram@tnau.ac.in |
பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சி திட்டங்கள், விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும், மாநிலத்தின் ஒட்டு மொத்த வேளாண்மை உற்பத்தியை பெருக்கவும் இயங்கி வருகிறது. புதிதாக உருவாக்கப்பட்ட தொழிற்நுட்பங்களை, விவசாயிகளின் வயல்வெளியில், அணுசரணை ஆராய்ச்சியின் மூலம் மக்களை ஏற்றுக்கொள்ள வைக்கிறது. பல்கலைக்கழகம், விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு புதிய இரகங்கள்/ஒட்டு இரகங்களை, வயல் வெளிப் பயிர்கள் மற்றும் தோட்டக்கலைப் பயிர்களில் வெளியிட்டுள்ளது. நெல்லில், தானு, கே.எச்.ஆர்.எஸ்- 21, எம்.ஓ-4 இரகங்களும் கே.ஆர்.எச். 2, வீரிய ஒட்டு இரகமும்; கேழ்வரகில் ஜி.பி.யு -28, 26, மற்றும் 48; மக்காச்சோளத்தில் என்.ஏ.சி -6002, என்.ஏ.சி-6004, இரகங்கள் மற்றும் என்.ஏ.எச்.2049 வீரிய ஒட்டு இரகம்; கரும்பில் கோ 7804 மற்றும் கோ 86032 இரகங்கள், சூரிய காந்தியில் கே.பி.எஸ் எச்-1, 42 மற்றும் 44; வீரிய ஒட்டுகள்; முந்திரியில் உல்லால் 1-4; டி.எல்.பி தக்காளி இரகங்கள் ஆகிய திறன் வாய்ந்த இரகங்களும்/வீரிய ஒட்டுக்களும் வெளியிடப்பட்டுள்ளன. |
|
அணுக வேண்டிய முகவரி - வேளாண் அறிவியல் பல்கலைக்கழகம் காந்தி வேளாண்மை அறிவியல் நிலையம், பெங்களுர்– 560 065 தொலைபேசி: 2333 0206 / 2333 0153 Ext. 215 அலைபேசி: 94498 66903, தொலைப்பிரதி: 080-2333 0206 மின் அஞ்சல்: dr@uasbangalore.edu.in |
நோக்கம்:
|
|
அணுக வேண்டிய முகவரி - மைராடா, (Host Institution) 2-சர்விஸ் சாலை, டோம்லுர் லேபர், பெங்களுர் – 560 071 தொலைபேசி: (91) 08025352028, 25353166, தொலை நகல்: (91) 080 25350982 மின் அஞ்சல்: myrada@vsnl.com, இணைய தளம்: www.myrada.org |
பெங்களூர் வேளாண்மை அறிவியல் பல்கலைக்கழகம், 600 எக்டரில் பரப்பிலான ஆராய்ச்சி பண்ணையை மாண்டியாவில், மண்டல வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் நிறுவியுள்ளது. மாவட்டத்தின் அனைத்து முக்கியமான பயிர்களிலும் ஆராய்ச்சி நடத்தப்படுகிறது. நெல், ராகி, (இண்டாப்-1, இண்டாப்-2, இண்டாப்-3, இண்டாப்-5, இண்டாப்-7, இண்டாப்-8, இண்டாப்-9, இண்டாப்-11, இண்டாப்-15 மற்றும் எம்.ஆர் 1) கரும்பு, மக்காச்சோளம் ஆகிய பயிர்களில் ஆராய்ச்சி மேற்கொள்ளப் படுகிறது. இந்த ஆராய்ச்சி நிலையம் வெளியிட்டுள்ள அதிக மகசூல் தரக்கூடிய இரகங்களும், உற்பத்தி நுட்பங்களும் அந்த மாவட்டம் மட்டுமல்லாமல், மாநிலம் முழுவதும் பிரபலம் ஆகியுள்ளது. நோக்கம்:
|
|
அணுக வேண்டிய முகவரி - மண்டல வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், வேளாண்மை அறிவியல் நிலையம் (பெங்களுர்) நாகமங்களா - 571432, மாண்டியா, கர்நாடகா தொலைபேசி: (08234)-86060 |
மைசூர் மாவட்டம் நாகனஹெல்லியில் உள்ள வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் 1917 இல் துவங்கப்பட்டது. இதன் பரப்பளவு 25.20 எக்டர் ஆகும். நோக்கம்:
|
அணுக வேண்டிய முகவரி - வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் நாகனஹெல்லி, மைசூர் தொலைபேசி: 0821- 2591267 0821- 2591383 |
கேரள வேளாண்மைத் துறையில், நிலையான வேளாண்மை வளர்ச்சிக்கு, மனித வளம், தொழில் நுட்பம், மற்றும் திறமைகளை அளித்து வரும் முதன்மை நிறுவனம், கேரள வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஆகும். நிலம், நீர், பயிர் உற்பத்தி, கால்நடை பராமரிப்பு, வனவியல் மற்றும் மீன் வளர்ப்பு போன்றவற்றில் கல்வி, ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கம் செயல்படுத்தி பொருளாதார முன்னேற்றம் நோக்கி செல்வதாகும். நோக்கம்:
|
|
அணுக வேண்டிய முகவரி - கேரளா வேளாண்மை பல்கலைக்கழகம் வெல்லானிக்கரா, கே.வே.ப. அஞ்சல் 680 656, திரிச்சூர், கேரளா தொலை பேசி: 91 487 2370432 தொலைப்பிரதி: 91 487 2370019 |
கிசான்செயல் முறை மையம் தனது ஒருங்கிணைந்த பல்வழி வேளாண் தகவல் அமைப்பின் மூலம் கேரளாவில் உள்ள விவசாய சமூகத்தினருக்கு தேவைப்படும் பயனுள்ள தகவல்களையும், ஆலோசனை சேவைகளையும் வழங்குகிறது. கேரள அரசின் வேளாண்மைத் துறையின் மின்னாட்சி திட்டங்களில் மக்களுக்கு சேவை புரியும் முன்னோடியான திட்டம் ஆகும். |
|
அணுக வேண்டிய முகவரி - ஒருங்கிணைப்பாளர கிசான் – கேரள திட்டம கிசான் செயல் முறை மையம் தொழில்நுட்ப பூங்கா வளாகம் திருவனந்தபுரம்-695 581, கேரளா , இந்தியா தொலை பேசி: 91-471-2700965, 2700947, தொலைப்பிரதி: 91-471-2700947 மின் அஞ்சல்: info@kissankerala.net இணையத்தளம்: http://www.kissankerala.net/ |
வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், 1954 இல்,விஜயநகரம் டவுனுக்கு அருகில் உள்ள கசுலரேகா பஞ்சாயத்துக்கு சேர்ந்த நிலத்தில் துவங்கப்பட்டது. மண்டலத்தில் பயிர் செய்யப்படும் தானியங்களான ராகி மற்றும் கம்பு பயிர்களில், புதிய திறன் மிக்க இரகங்களை கண்டுபிடித்து வெளியிடுவதே இவ்வாராய்ச்சி நிலையத்தின் நோக்கம் ஆகும். மேலும், புதிய நவீன உற்பத்தி முறைகளை உருவாக்குவதும் இதன் குறிக்கோள் ஆகும்.
இதுவரை - சுராஜ் (1994) (வி.ஆர்-520), சம்பாவதி (1998) (வி.ஆர் -708) போன்ற இரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தியாவில் உள்ள அனைத்து பகுதிகளிலும் சாகுபடி செய்யலாம்.
நோக்கம்:
ராகி மற்றும் கம்பில் அதிக மகசூல் தரக்கூடிய இரகங்களை கண்டறிதல் மற்றும் சாகுபடி இடங்களுக்கு ஏற்றவாற, மானாவாரி நிலைக்கான உரமிடுதல் மற்றும் உழவியல் முறைகளை ஆராய்தல்.
பின் ராபி பருவத்திற்கு ஏற்ற, அதிக மகசூல் தரக் கூடிய ராகி இரகங்களைக் கண்டறிதல்.
மண்டலத்தின் பிற பயிர்களில் சோனை நடத்தி, மானாவாரி சூழலுக்கான இரகங்களை பரிந்துரை செய்தல்.
ராகி மற்றும் புளிச்ச கீரை இரகங்களில் வல்லுநர் விதைகள் மற்றும் ஆதார விதைகளை உற்பத்தி செய்தல்.
மண்டலத்தின் முக்கியமான புன்செய் பயிர்களின் ஆய்வில் உள்ள குறைகளை மண்டலப் பொதுக் கூட்டங்கள் மூலம் கண்டறிந்து புதிய ஆராய்ச்சி திட்டங்கள் ஏற்படுத்துதல்.
பல்வேறு பண்ணை முறைகளுக்கு ஏற்ற, குலை நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட அதிக மகசூல் தரக்கூடிய இரகங்களைக் கண்டறிவதற்கான பயிர் பெருக்கம் செய்தல்.
சிறுதானிய கருவூல வங்கிக்கு உருவாக்க சேகரித்து, மதிப்பீடு செய்து, பராமரித்தல்.
ராகி சார்ந்த பயிர் வகைகளுடன் கூடிய ஊடுபயிர் முறைகளை கண்டறிதல்.
சிறு தானிய நோய்களுக்காக கண்காணித்தல் மற்றும் ராகி குலைநோயை கட்டுப்படுத்த நிர்வாகித்தல்
அணுக வேண்டிய முகவரி
வேளாண்மை ஆராய்ச்சி நிலையம்
விஜயநகரம். போன்: 08922-225983
ஆந்திர அரசின் வேளாண்மைத் துறை, பேடபுரத்தில், 1994 இல், வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தை நிறுவியது. தானியங்கள் மற்றும் பயிர் வகைகளில், அதிக மகசூல் தரக்கூடிய இரகங்களை கண்டறிவதும், சாகுபடிக்கான புதிய தொழில்நுட்பங்களைக் கண்டறிவதும் இதன் நோக்கம் ஆகும்.
நோக்கம்:
ஆந்திர வட கடலோர பகுதிகளுக்கான, மத்திய கால மக்காச்சோள வீரிய ஒட்டு இரகங்களை கண்டறிதல்.
பயிர்கள், தானியங்கள், எண்ணெய் வித்துக்களில், சோதனை நடத்தி, சரிபார்த்தல் மற்றும் கேழ்வரகில் வல்லுநர் விதைகளை உற்பத்தி செய்தல்.
ராகி பயிரின் வல்லுநர் விதை நேர்த்தி செய்வதில் பேடபுரம், வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் முதன்மை வகிக்கிறது. மத்திய, மாநில மற்றும் விதை நிறுவன தேவைக்கான கோதாவரி மற்றும் ரத்னகிரி இரகங்களை உற்பத்தி செய்கிறது.
அணுக வேண்டிய முகவரி
வேளாண்மை ஆராய்ச்சி நிலையம்,
பேடபுரம் – 533437
கீழக்க கோதாவரி மாவட்டம்
போன்- 08858-241853
இந்நிறுவனம் உத்தர்காண்ட் மாநிலத்தில் உள்ள அல்மோராவில் உள்ளது. இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகத்தின் கீழ்வரும் இந்நிறுவன வடமேற்கு இமாலாய பகுதிகளுக்கான மலை வேளாண்மை ஆராய்ச்சியை மேற்கொள்கிறது. பல் பயிர் மற்றும் பல்துறை ஆராய்ச்சி நிறுவனம் ஆகும். இதுவரை, 25 பயிரில், 120 இரகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதுவரை வெளியிடப்பட்டுள்ள இரகங்கள்
வி.எல் மான்வொ 149 -உத்தர்காண்ட மலைகள் மற்றும் தானியங்கள் சாகுபடி செய்யக்கூடிய பிற பகுதிகள் (தமிழ்நாடு மற்றும் ஆந்திரா)
வி.எல்-மான்வொ 146 - உத்தர்காண்ட் மலைகள் மற்றும் கர்நாடகா
நோக்கம்:
வடமேற்கு இமாலயப் பகுதிகளுக்கான, நிலையான வேளாண்மை தொழில்நுட்ப ஆராய்ச்சி செய்தல், இதில் பயிர் மேம்பாடு மற்றும் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை முறைகளும் அடங்கும்.
மலைப் பயிர்களுக்கான அடிப்படை ஆராய்ச்சி மேற்கொள்ளுதல், மற்றும் தாயகம், சார்ந்த கருவுலங்களை பராமரித்தல்.
மலைகளின் தனிப்பண்புகளை, அதிக விலைமதிப்புள்ள ஆராய்ச்சிக்காக பயன்படுத்துதல்,
மலைகளில் உள்ள பயன்பாடில்லாத நிலங்களில், தீவன உற்பத்திக்கான ஆராய்ச்சி மேற்கொள்ளுதல்
வேளாண்மை அளவிலான தொழில்களில், பெண்களின் பங்கு பற்றிய சமூக பொருளதார ஆராய்ச்சி மேற்கொள்ளுதல்,
விவசாய சமூகத்தின் பாரம்பரிய ஞானத்தைக் கொண்டு புதிய பண்ணை மாதிரிகளை உருவாக்குதல்,
தொழில்நுட்ப பரிமாற்றுத் திட்டங்கள், விரிவாக்க முறைகள் பற்றிய ஆராய்ச்சி, மற்றும் சிறப்பான பயிற்சி திட்டங்களை ஏற்பாடு செய்தல்.
அணுக வேண்டிய முகவரி
விவேகானந்தா பார்வதிய கிரிஷி அனுசந்தன் சன்ஸ்தான் (VPKAS) உத்தர்காண்ட்
இந்திய வேளாண் ஆராய்ச்சி செயற்குழு
அல்மோரா, உத்தர்காண்ட்
போன்- 91-5962-230060
ஒரிசா வேளாண்மை மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், ஒரிசா தலைநகர் புவனேஷ்வரில், 20 15 வடக்கு அட்சரேகை, 85 52 கிழக்கு தீர்க்க ரேகையில், 25.9 மீ கடல் மட்ட உயரத்திற்கு மேல் அமைந்துள்ளது.
பயிர் மேம்பாடு/பயிர் உற்பத்தி/இயற்கை வளம் மேம்பாடு/பயிர் பாதுகாப்பு/பின் அறுவடை நுட்பங்கள் மற்றும் வேளாண்மை சார்ந்த தொழல்களை கால்நடை/மீன் வளம் மற்றும் வனவியல் அறிவியல் சார்ந்த துறைகளில் செயலாற்றி வருகிறது.
இதுவரை வெளியிடப்பட்டுள்ள இரகங்கள் - பி.எம் 9-1, சிலிக்கா (ஒ.ஈ.பி 10) - ஒரிசா மத்திய பிரதேசம், குஜராத், கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டிற்கு ஏற்றது.
அணுக வேண்டிய முகவரி
ஒரிசா வேளாண்மை மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக் கழகம் புவனேஷ்வர்
புவனேஷ்வர் -751003
ஓரிசா, இந்தியா,
மின் அஞ்சல்: ouatmain@hotmail.com
மத்திய உணவு தொழிற் நுட்ப ஆராய்ச்சி நிலையம், மைசூர் (அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கழகம், புதுடெல்லியின் ஆய்வுகூடப் பிரிவு) 1950 இல் துவங்கப்பட்டது.உணவியல் மற்றும் தொழில் நுட்பத் துறையில் ஆழமான ஆராய்ச்சி மேற்கொள்ள விருப்பமுடைய விஞ்ஞானிகளுடன் துவங்கப்பட்டது.
ராகியை வணீக ரீதியாக்குவதற்காக உள்ள தொழில்நுட்பங்கள்:
பிரெட்: உற்பத்தி செய்தல் ( காப்பி நிறம், இனிப்பு, முழு கோதுமை, பழங்கள், அதிக நார்ச்சத்துள்ளவை, ராகி, கம்பு)
ராகி ரஸ்க்
ராகி பிஸ்கெட்
ராகி சேமியா
தோல் உரித்த ராகி
ராகி முறுக்கு
ராகிப் பொறி
ராகி அப்பளங்கள்
நுாடுல்ஸ்-அரிசி-சோளம், ராகி, மக்காச்சோளம், கம்பு மற்றும் சாமை
அணுக வேண்டிய முகவரி
தலைவர்
தொழில்நுட்ப பறிமாற்றம் மற்றும் வியபாரா மேம்பாடு
மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிலையம்,
மைசூர் -570 020
போன் +91-821-2514534
தொலைப் பிரதி: +91-821-2515453
மின் அஞ்சல்:: ttbd@cftri.res.in
தேசிய பயிர் கருவூல வங்கி நிலையம் தனது தலைமையிடத்தை புதுடெல்லியில் கொண்டுள்ளது. 28° 35 வடக்கு அட்சரேகை 70° 18 கிழக்கு தீர்க்க ரேகையில், 226 மீ கடல்மட்ட உயரத்தில் உள்ளது. இந்நிறுவனம், இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகத்தின், பயிர் அறிவியல் துறையின் கீழ் நிர்வாகிக்கப்படுகிறது. மேலும் பயிர்துறை நிறுவன நிர்வாகக்குழு, ஆராய்ச்சி ஆலோசனைக் குழு, கருவூல ஆலோசனை ஆகியவற்றின் ஆலோசனையின் படி இயங்கி வருகிறது.
நோக்கம்:உணவு மற்றும் வேளாண்மையில் தாயகம் சார்ந்த தனித்தன்மை வாய்ந்த கருவூலங்கள் மற்றும் வெளிநாட்டு கருவூலங்களை சேகரித்து, பராமரித்து ஆராய்ச்சி செய்து, நிலையான வேளாண்மை வளர்ச்சியை அடைதல் மற்றும் மனித வளத்தை மேம்படுத்துதல்
நிறுவனத்தின் குறிக்கோள்கள்:
தாயகம் சார்ந்த மற்றும் வெளிநாட்டு கருவூலங்களை கண்டறிந்து, சேகரிக்க, திட்டமிட்டு ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுத்தல்.
கருவூலங்களை வெளிநாட்டில் இருந்து பெறுதல், பரிமாற்றிக் கொள்ளுதல் மற்றும் தொற்று நோய்த் தடுப்பை மேற்கொள்ளுதல்,
கருவூலங்களை, பண்பு படுத்தி, மதிப்பீட்டு, குறிப்பெடுத்து பாதுகாத்து, அவற்றை பயனுள்ள வகையில் மற்ற தேசிய ஆராய்ச்சி நிறுவனங்கள் உபயோகப்படுத்த ஊக்குவித்தல்.
பயிர் கருவூலம் பற்றிய தகவல் வலை தளத்தை உருவாக்குதல்,
பயிர் கருவூலங்கள் பற்றிய ஆராய்ச்சி, பாடம் மற்றும் பயிற்சி, பொது விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
அணுக வேண்டிய முகவரி
தேசிய பயிர் கருவூல வங்கி நிலையம், பூசா
பூசா வளாகம், புது டில்லி- 110 012
இந்நிறுவனம் சுயலாபத்தை தேடாத, அரசு சாராத ஆசியா மற்றும் துணை சகாரா பகுதிகளின் முன்னேற்றத்திற்காக உலகின் பல்வேறு பங்காளர்களுடன் இணைந்து வேளாண் ஆராய்ச்சி நடத்தி வருகிறது. மித வெப்ப மண்டலப் பகுதிகள் 55 நாடுகளில், 6.5 சதுர கிலோமீட்டர் அளவிற்கு காணப்படுகிறது. இதில் 2 பில்லியன் மக்கள் உள்ளனர். அவர்களில் 644 மில்லியன் ஏழை எளியவர்கள் உள்ளனர்.
நோக்கம்:
சர்வதேச அளவில் மக்களுக்கான பொருட்களை உருவாக்குவதே இதன் முதன்மை நோக்கம் ஆகும். அதாவது, நல்ல தரமான ஆராய்ச்சி கட்டுரைகளை பிரபலமான பத்திரிக்கைகளில் வெளியிடுவதாகும்.
இந்நிறுவனம் நான்கு பிரிவுகளில் தனது ஆராய்ச்சியை நடத்தி வருகிறது: வேளாண்- சுற்றுச்சூழல் மேம்பாடு, உயிர் தொழில் நுட்பவியல், பயிர் மேம்பாடு மற்றும் நிர்வாகம் மற்றும் நிறுவனங்கள், சந்தைகள், கொள்கைகள், மற்றும் விளைவுகள்
ஆராய்ச்சி பயிர்கள்: கொண்டை கடலை, துவரை நிலக்கடலை, கம்பு, சோளம் மற்றும் ராகி.
அணுக வேண்டிய முகவரி
பன்னாட்டு வெப்ப மண்டல பயிர் கள் ஆராய்ச்சி நிலையம்
பட்டன்சேரு, ஐதராபாத்
ஆந்திரா மாநிலம், இந்தியா
இது வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் வெப்ப மண்டலப் பகுதிகளின் பசிக்கான விஞ்ஞான தீர்வுகளில் ஆர்வம் செலுத்துகிறது.
சுற்றுச் சூழல் சார்ந்த வேளாண்மை, அதாவது, உணவு உற்பத்திக்காக நிலையான முறைகளை கையாளுவதன் மூலமே பசியைப் போக்கி, அம்மக்களின் வாழ்வை முன்னேற்ற முடியும்.
குறிக்கோள்: பசி மற்றும் ஏழ்மையைப் போக்குவது; சுற்றுச் சூழலுக்கு ஏற்ற வேளாண்மை மூலம் வெப்ப மண்டலப் பகுதி மக்களின் உடல் நலத்தை முன்னேற்றுவதே இந்நிறுவனத்தின் குறிக்கோள் ஆகும்.
செயல்பாடுகள்:
இந்நிறுவனம் அறிவியல் யுக்திகள் மூலம், வெப்ப மண்டலப் பகுதி மக்களின் வழ்வை முன்னேற்றுகிறது.
பல துறையினரின் கூட்டு முயற்சி மற்றும் ஆராய்ச்சியை, தேசிய திட்டங்கள், சங்க அமைப்புகள் மற்றும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து நடத்தி, சர்வதேச அளவிலான பொது பொருட்களை பயனாளிகளுக்காக உருவாக்குதல்.
இதில் செம்மைப்படுத்தப்பட்ட கருவூலங்கள், தொழில் நுட்பங்கள், செயல்முறைகள் மற்றும் அறிவு ஆகியன அடங்கும்.
அணுக வேண்டிய முகவரி
பன்னாட்டு வெப்ப மண்டல வேளாண்மை மையம்
கே.எம் 17, ரெக்டா காளி – பாமிரா
அபாரிடாடோ அரோயா 6713
காளி, கொலம்பியா
தொலைபேசி: +57 2 4450000 (direct) or +1 650 8336625 (via USA)
தொலைப்பிரதி: +57 2 4450073 (direct) or +1 650 8336626 (via USA)
மின்னஞ்சல்: : ciat@cgiar.org
இணைய தளம்: www.ciat.cgiar.org
நலத்திட்ட அம்சங்கள் மற்றும் பயன்கள்:
சான்று விதை உற்பத்திக்காக ரூ. 2/ கிலோ கூடுதலாக பிரிமியம் வழங்கப்படுகிறது.
பயன்களை பெறத் தேவையான தகுதிகள்: தேவையான ஆதாரவிதையை வேளாண்மைத் துறையின் வேளாண்மை விரிவாக்க மையங்களில், நிர்ணயம் செய்யப்பட்ட விலையை செலுத்தி விதைகளை பெறலாம்.
அணுகவேண்டிய அதிகாரி: மாவட்ட அளவிலான வேளாண் இணைஇயக்குநர்
1. தானிய ஆதாரவிதைகள்/சான்று விதைகள் வழங்குல்
நலத்திட்ட அம்சங்கள் மற்றும் அதன் பயன்கள்: விவசாயிகள் உற்பத்தி செய்யக்கூடிய தரமான விதைகளுக்கான 50% உற்பத்தி செலவு வழங்குதல்.
பயன்களை பெறத் தேவையான தகுதிகள்: தங்களது சொந்த தேவை மற்றும் பிற விவசாயிகளுக்கு அளிப்பதற்காக, தங்களது சொந்த நிலத்தில், தரமானவிதைகளை உற்பத்தி செய்ய ஆர்வமுள்ள மாநிலத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் தகுதி பெற்றவர்கள்.
அணுக வேண்டிய அதிகாரி:
கிராம அளவில் உதவி வேளாண்மை அலுவலர்,
வட்ட அளவில் துணை வேளாண்மை அலுவலர்/வேளாண்மை அலுவலர்
வட்ட அளவில் உதவி வேளாண்மை இயக்குநர்
மாவட்ட அளவில் வேளாண்மை இணை இயக்குநர்
2. விதை நேர்த்தி தொழில் நுட்பம் பற்றிய மூன்று நாள்பயிற்சி
நலத்திட்ட அம்சங்கள் மற்றும் பயன்கள்: வேளாண் துறையில் இருந்து தரமான விதை உற்பத்திக்கு 50% நிதி பெறும் விவசாயிகளுக்கு பயிரின் முக்கியமான மூன்று வளர்ச்சி தருணங்கள் பற்றியபயிற்சி அளிக்கப்படுகிறது. ஒரு பயிற்சிக்கு 50 விவசாயிகள் என ஒரு ஆண்டுக்கு 8000 பயிற்சி அளிக்கப்படுகிறது.
பயன்பெறத் தேவையான தகுதிகள்: தங்களது சொந்த தேவை மற்றும் பிறவிவசாயிகளுக்கு அளிப்பதற்காக, தங்களது சொந்த நிலத்தில், தரமான விதை உற்பத்தி செய்ய ஆர்வமுள்ள, மாநிலத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் தகுதி பெற்றவர்கள்.
அணுக வேண்டிய அதிகாரி:
கிராம அளவில் உதவி வேளாண்மை அலுவலர்,
வட்ட அளவில் துணை வேளாண்மை அலுவலர்/வேளாண்மை அலுவலர்
வட்ட அளவில் உதவி வேளாண்மை இயக்குநர்
மாவட்ட அளவில் வேளாண்மை இணைஇயக்குநர்
3. விவசாயிகளுக்கு சேமிப்பு கலன் வழங்குதல்
நலத்திட்ட அம்சங்கள் மற்றும் பயன்கள்
ரூ 3000-20 குவிண்டால் கூடைக்கு மற்றும் ரூ 1500-10 குவிண்டால் கூடைக்கு (அ) கூடையின் விலையில் 33% தாழ்த்தப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
பிற விவசாயிகளுக்கு, ரூ 2000-20 குவிண்டால் கூடைக்கும் ரூ 1000-10 குவிண்டால் கூடைக்கும் (அ) கூடையின் விலையில் 25% பயமும் வழங்கப்படுகிறது.
அணுக வேண்டிய அதிகாரி:
கிராம அளவில் உதவி வேளாண்மை அலுவலர்,
வட்ட அளவில் துணை வேளாண்மை அலுவலர்/வேளாண்மை அலுவலர்
வட்ட அளவில் உதவி வேளாண்மை இயக்குநர்
மாவட்ட அளவில் வேளாண்மை இணை இயக்குநர்
நலத்திட்ட அம்சங்கள் மற்றும் அதன் பயன்கள்: ராகி (1 எக்டர்) 100% மானியம் (அ) ரூ 2500
பயன் பெறத் தேவையான தகுதிகள்: நீர் பயன்படுத்துவோர் கூட்டமைப்பின் மூலம் அனைத்து விவசாயிகளும், மூன்று நிலைகளில் நிலை I (2007-08) நிலை II (2008-09), நிலை III (2009-10) இத்திட்டத்தின் மூலம் பயன் பெற்றுள்ளனர்.
அணுக வேண்டிய அதிகாரி
மாவட்ட வேளாண்மை இணைஇயக்குநர்
வட்ட வேளாண்மை உதவிஇயக்குநர்
வட்ட அளவில் வேளாண் அலுவலர்/துணை வேளாண்மை அலுவலர்
1. நூண்ணுாட்டக் கலவை வழங்குதல்:
நலத்திட்ட அம்சங்கள் மற்றும் பயன்கள்: தானியங்களுக்கு ரூ 38.00/கிலோ என்ற விலையில் நுண்ணுாட்டக் கலவை வழங்குதல்
பயன்பெறத் தேவையான தகுதிகள்: மாநிலத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் தகுதியானவர்கள்
அணுக வேண்டிய அதிகாரி
கிராம அளவில் உதவி வேளாண்மை அலுவலர்,
வட்ட அளவில் துணை வேளாண்மை அலுவலர்/வேளாண்மை அலுவலர்
வட்ட அளவில் உதவி வேளாண்மை இயக்குநர்
2. உயிர் உரங்கள் வழங்குதல்:
நலத்திட்ட அம்சங்கள் மற்றும் பயன்கள்:
உயிர் உரங்களை முழு விலையில் வழங்குதல்-அசோஸ்பைரில்லம், ரைசோபியம் மற்றும் பாஸ்போபாக்டீரியா ஆகியவற்றை 200 கிராம் பாக்கெட் ஒன்று ரூ. 6 என வழங்குதல்
பயன்பெறத் தேவையான தகுதிகள்:மாநிலத்தல் உள்ள அனைத்து விவசாயிகளும் தகுதியுள்ளவர்கள்
அணுக வேண்டிய அதிகாரி:
மாவட்ட அளவிலான வேளாண்மை இணைஇயக்குநர்
3. வேளாண் கழிவுகளை மண்புழு உரமாக்குதல் :
நலத்திட்ட அம்சங்கள் மற்றும் பயன்கள்:-
செயல் விளக்கம் மற்றும் பயிற்சி அளித்தல்: செயல்விளக்கம் அளிப்பதற்காக ரூ 12,000 வழங்கப்படும். ஒரு குழுவிற்கு 50 பேருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒவ்வொரு விவசாயிக்கும், பயிற்சியில் பங்கேற்க 50 ரூபாய் வழங்கப்படுகிறது.
பயன் பெற தேவையானதகுதிகள்: சென்னை மற்றும் நீலகிரி மாவட்டம் தவிர அனைத்து விவசாயிகளும் தகுதி பெற்றவர்கள்.
திட்டத்தின் பெயர்: பயிர் காப்பீட்டுத் திட்டம்
நிதியளிப்பவர்: மாநில அரசு
நிதி வழங்கப்படும் விதம்: 100% மாநில அரசு
விளக்கம்: மாநிலத்தில் உள்ள விவசாயிகள் வறட்சி, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களைச் சந்திக்கின்றனர். எனவே 1995இல் இருந்து மாநிலத்தில் சுமார் 25 பயிர்களுக்கு, விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீடு அளிக்கப்படுகிறது. இது தற்பொழுது குறுநில விவசாயிகளுக்கு அளிக்கப்படுகிறது.
இத்திட்டத்தின் மதிப்பு ரூ 100 லட்சம் ஆகும்.
பயனாளிகள்: விவசாயிகள், குடும்பம், சமூகம், மற்றும் பிறர்
தகுதி: எந்த விவசாயி வேண்டுமானாலும் பயன்பெறத் தகுதியுடையவர்
எவ்வாறு திட்ட பலன்களை பெறுவது: வேளாண் துறை (அ) உள்ளூரில் உள்ள அரசு நிறுவனம் மூலம் அறிந்து கொள்ளலாம்.
திட்டத்தின் பெயர் : பயிர் காப்பீட்டுத் திட்டம்
நிதியளிப்பவர் : மாநில அரசு
நிதி வகை : 100% மாநில அரசு
விளக்கம் : மாநிலத்தில் உள்ள விவசாயிகள் வறட்சி, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களைச் சந்திக்கின்றனர். எனவே, 1995 இல் இருந்து மாநிலத்தில், சுமார் 25 பயிர்களுக்கு விவசாயிகளுக்கு, பயிர் காப்பீடு அளிக்கப்படுகிறது. இது, தற்பொழுது குறுநில விவசாயிகளுக்கு அளிக்கப்படும். திட்ட மதிப்பு ரூ 100 லட்சம் ஆகும்.
பயனாளிகள்: விவசாயிகள், குடும்பம், சமூகம் மற்றும் பிறர்
தகுதி : எந்த விவசாயி வேண்டுமானாலும் தகுதியுடையவர்.
எவ்வாறு திட்டபலனைப் பெறுவது: வேளாண் துறை, உள்ளூரில் உள்ள அரசு நிறுவனம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
திட்டத்தின் பெயர் : ராஷ்டிரிய கிரிஷி பீமா யோஜனா (RKBY)
பயிர்கள் :
1. உணவுப் பயிர்கள் (தானியங்கள், சிறு தானியங்கள், பயிர்கள்)
2. எண்ணெய் வித்துக்கள்
3. கரும்பு, பருத்தி மற்றும் உருளைக்கிழங்கு (ஓராண்டு/ஓராண்டு தோட்டக்கலைப்பயிர்கள்)
மாநிலங்கள் மற்றும் பயன்பெரும் பகுதிகள் : அனைத்து மாநிலங்கள்மற்றும் யுனியன் பிரதேசங்கள்
தகுதி: குறிப்பிடப்பட்டுள்ள பயிர்களை சாகுபடி செய்யக்கூடிய பங்குதார விவசாயிகள், குத்தகை விவசாயிகள் ஆகியோர் தகுதியுடையவர்கள்.
எவ்வாறு விண்ணப்பிப்பது: வேளாண் அமைச்சகம் மற்றும் மாநில வேளாண் துறைகளை அணுகவும்.
தகவல் தளம்: http://agricoop.nic.in/Rkvy/Rkvyfinal-1.pdf
திட்டத்தின் பெயர் : ராஷ்டிரிய கிரி விகாஸ் யோஜனா (RKVY)
நிதி ஆதாரம் : மத்திய மற்றும் மாநில அரசு
விளக்கம்: பதினொராவது ஐந்தாண்டு திட்டத்தில், வேளாண்மைத் துறையில் ஆண்டுக்கு, 4% வளர்ச்சிடையதல்.
பயனாளிகள் : தனிநபர், குடும்பம், சமூகம், பெண்கள், குழந்தைகள்
தகுதி: அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியம் பிரதேசங்கள்
எவ்வாறு திட்ட பலனைப் பெறுவது: வேளாண் அமைச்சகம் (அ) சம்பந்தப்பட்ட மாநில வேளாண் துறையை அணுகவும்.
தகவல் தளம்: http://agricoop.nic.in/Rkvy/Rkvyfinal-1.pdf (138 KB)
நோக்கம்:
வேளாண் துறையில் விலையை நிலைப்படுத்தி, விவசாயிகளின் உற்பத்தி பொருளுக்கு ஏற்றவிலை அளிக்கும் நோக்கத்துடன் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டது.
வேளாண் உற்பத்தி பொருட்களின் விலை சரிவடையும் பொழுது, விவசாயிகளுக்கு ஆதாரவிலை அளித்து, அவர்களின் நலனைப் பேணுதல். மாநில வேளாண் துறையில், விலை மற்றும் விற்பனை மாற்றங்களை ஏற்படுத்த, கர்நாடக அரசு வேளாண்மை கொள்கையினை வலியுறுத்தி வருகிறது.
மாநிலம் முழுவதற்கும் குறிப்பிடப்பட்டுள்ள பயிர் செய்யப்பட்டுள்ள வேளாண்மை மற்றும் தோட்டக்கலை உற்பத்தி பொருள்களுக்கு இத்திட்டம் பொருந்தும்.
துவக்கத்தின்போது, இத்திட்டம் வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கிற்கு அமல்படுத்தப்பட்டது. இந்திய அரசின், குறைந்தபட்ச ஆதாரவிலை திட்டத்துடன் சேர்ந்த கூடுதல் திட்டமாக இயங்கி வருகிறது. இத்திட்டம் 24 நவம்பர் 1999 முதல் இயங்கி வருகிறது.
நிதியுதவி வழங்கப்படும் விதம்: 2000-01 ஆம் ஆண்டில் இத்திட்டத்திற்கு ரூ 75 கோடி ஒதுக்கப்பட்டது. இதில் ரூ 50 கோடி வேளாண் பொருட்கள்விற்பனை மையமும், ரூ 25 கோடி மாநில அரசின் நிதியுதவியாகவும் கவரப்பட்டது. கர்நாடகா மாநில வேளாண்மை விற்பனை வாரியம், இத்திட்டத்தின் நிதியை நிர்வகித்து வருகிறது.
திட்ட அம்சங்கள்:
இத்திட்டம், 1994-95 இல் இருந்து மாநிலத்தின் 132 சந்தைகளில் செயல் படுத்தப்பட்டு வருகிறது. விவசாயிகள் தங்களின் வேளாண் உற்பத்தி பொருளின் மதிப்பில் 60% (அ) ரூ 50,000.00 வரை, அடமானத் தொகையாக கடன் பெறலாம்.
முதல் 30 நாட்களுக்கு வட்டி இல்லை. அடுத்த இரண்டு மாதங்களுக்கு 8% மற்றும் 12.5% வட்டி செலுத்தப்பட வேண்டும். இத்திட்டம் குறுகியகாலமாக, 90 நாட்களுக்கு மட்டுமே ஆகும்.
கர்நாடகா வேளாண் பொருட்கள் விற்பனைச் சட்டம் 1968 இன்சட்டம் 60 (கி) இன்படி, விற்பனை மையம், உற்பத்தியாளருக்கு உற்பத்தி பொருளின் அடமானத்தின் பேரில் குறுகியகால முன் பணம் அளிக்கிறது. மாநில சேமிப்பு கிடங்கு கழகம் அல்லது மத்திய சேமிப்பு கிடங்கு கழகத்தின் வரவுச் சீட்டின் வைப்பின் பேரில் கடன் வழங்கப்படும்.
உற்பத்தி பொருளின் 60% மதிப்பு அல்லது அதிகபட்சம் ரூ 50,000 வரை 90 நாட்களுக்கு வழங்கப்படும்.
தகவல் தளம்: http://maratavahini.kar.nic.in/apmc_eng/e_schemes.htm
திட்டஅம்சங்கள்: கிராமப்புறங்களில் விவசாயிகளின் உற்பத்தி பொருட்கள், பதனிடப்பட்ட பொருட்கள் மற்றும் வேளாண் உள்ளீட்டு பொருட்கள் சேமிப்பதற்கான நவீன சேமிப்பு கிடங்குகள் உருவாக்குவது இதன் நோக்கம் ஆகும். வேளாண் உற்பத்தி பொருள்களில் தரம் பிரித்தல், தரக்கட்டுப்பாடு ஆகியன விற்பனைத் திறன் அதிகரிப்பதற்காக செயல்படுத்தப்படுகிறது. அறுவடைக்குபின் குறைவான விலையில் வேளாண் விளை பொருள்களை விற்பதைத் தடுக்க அடமான வசதியை இத்திட்டம் அளிக்கிறது.
எவ்வாறு விண்ணப்பிப்பது: திட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள வங்கி/நிதி நிறுவனங்களில் திட்ட சலுகைகளை பெறலாம்
தகவல் தளம்: http://agmarknet.nic.in/amrscheme/ruralhead.htm
நிதி ஆதாரம்: மாநில அரசு
நிதி வழங்கப்படும் விதம்: 100% மாநில அரசு
விளக்கம்: மாநிலத்தில் உள்ள விவசாயிகள், வறட்சி வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களை சந்திக்கின்றனர். எனவே 1995 இல் இருந்து மாநிலத்தில் சுமார் 25 பயிர்களுக்கு விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு அளிக்கப்படுகிறது. இது, தற்பொழுது குறுநில விவசாயிகளுக்கு அளிக்கப்படும். திட்ட மதிப்பு ரூ 100 லட்சம் ஆகும்.
பயனாளிகள்: விவசாயிகள், குடும்பம், சமூகம் மற்றும் பிறர்
தகுதி: எல்லா விவசாயிகளும் தகுதி பெற்றவர்கள்
எவ்வாறு திட்ட நலனைப் பெறுவது: வேளாண் துறை (அ) உள்ளூர் அரசு நிறுவனங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
நிதி ஆதாரம்: மத்திய மற்றும் மாநில அரசு
விளக்கம்: பதினோராவது ஐந்தாண்டு திட்டத்தில் வேளாண்மைத் துறையில் ஆண்டுக்கு 4% வளர்ச்சியடைதல்
பயனாளிகள்: தனிநபர், குடும்பம், சமூகம், பெண்கள், குழந்தைகள்
தகுதி: அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள்
எவ்வாறு திட்டப் பயனைப் பெறுவது: வேளாண் அமைச்சகம் (அ) சம்பந்தப்பட்ட மாநில வேளாண் துறையை அணுகவும்.
தகவல் தளம்: http://agricoop.nic.in/Rkvy/Rkvyfinal-1.pdf (138 KB)
திட்டத்தின் பெயர்: தேசிய வேளாண்மை காப்பீட்டுத் திட்டம்
வகை: மத்தியத் திட்டம்
துவங்கப்பட்ட ஆண்டு: 1999-2000 (ராபி பருவம்)
நோக்கம்:
குறிப்பிடப்பட்டுள்ள பயிர்களில், இயற்கை சீற்றங்கள், நோய் மற்றும் பூச்சித் தாக்கத்தால் இழப்பு ஏற்படும் போது, விவசாயிகளுக்கு காப்பீடு அளித்து, நிதியுதவி அளித்தல்.
நவீன வேளாண்மை செய்முறைகள், அதிக மதிப்புடைய உள்ளீட்டு பொருட்கள் மற்றும் புதிய தொழிற்நுட்பங்களை பின்பற்றுமாறு விவசாயிகளுக்கு ஊக்குவித்தல்.
பண்ணை வருமானத்தை நிலையாக்க உதவுதல் (குறிப்பாக பஞ்ச காலத்தில்)
நிதி வழங்கப்படும் விதம்:
நஷ்டஈடு, அவசர நிதி, பிரச்சாரம் செய்தல், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு சந்தா செலுத்துதல், ஆகியவற்றிற்கு மத்திய மற்றும் மாநில அரசு 50:50 என்ற விகிதத்தில் பங்கேற்றுக் கொள்கிறது.
தகுதி: நில அளவு பாகுபாடின்றி அனைத்து விவசாயிகளும் தகுதி பெற்றவர்கள்
அணுகவேண்டிய அதிகாரி
துணை செயலாளர்,
கடன் பிரிவு,
வேளாண்மை மற்றும் கூட்டுறவு துறை,
கிரிஷி பவன்,
புது தில்லி -110114.தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர்,
வேளாண் காப்பீட்டு நிறுவனம் இந்தியா லிமிடெட் (AIC),
13 வது தளம், அம்பாதீப்,
கஸ்தூர்பா காந்தி மார்க், புது தில்லி – 110001.
திட்டத்தின் பெயர்: வானிலை சார்ந்த பயிர் காப்பீட்டுத் திட்டம்
வகை: மத்திய அரசுத் திட்டம்
துவங்கப்பட்ட ஆண்டு: 2007-08
நோக்கம்:
மிக மோசமான வானிலை காரணிகளான குறைவான மற்றும் அளவுக்கு அதிகமான மழை, பனி (குறைவான வெப்பநிலை) வெப்பம், காற்றின் ஈரப்பதம் ஆகியவற்றால் பயிர் சாகுபடியின் போது பயிருக்கு இழப்பு ஏற்படும்போது, விவசாயிகளுக்கு காப்பீட்டு பாதுகாப்பு அளித்தல்.
சிறப்பு அம்சங்கள்:
இத்திட்டம் தானியங்கள், சிறு தானியங்கள், பயிர்கள், எண்ணெய் வித்துக்கள், மற்றும் வணிக/தோட்டக்கலைப்பயிர்களுக்கு பொருந்தும்.
கடன் பெற்றுள்ள விவசாயிகள் இத்திட்டத்தில் கண்டிப்பாக சேர வேண்டும். பிறகடன் பெறாத விவசாயிகள் விருப்பமிருந்தால் இத்திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
பங்குப் பயிர் செய்துள்ளோர் மற்றும் குத்தகை விவசாயிகள் என குறிப்பிட்ட பயிர்களை, குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் சாகுபடி செய்துள்ள அனைத்து விவசாயிகளுக்கும் இது பொருந்தும்.
நிதி அளிக்கப்படும் விதம்: சந்தா கட்டண மானியம் மட்டும், விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இதனை மத்திய அரசும் மாநில அரசும் சமமாகப் பங்கெடுத்துக் கொள்கின்றனர். மற்றபடி, இழப்பீட்டுத் தொகையை கொடுப்பதில், காப்பீட்டு நிறுவனமே பொறுப்பேற்க வேண்டும்.
தகுதி: நில அளவின் வேறுபாடின்றி அனைத்து விவசாயிகளும் தகுதியுடையவர்கள்.
அணுக வேண்டிய அதிகாரி
துணை செயலாளர், கடன் பிரிவு, வேளாண் மற்றும் கூட்டுறவு துறை, கிரிஷி பவன், புது தில்லி.
செயலாளர் (வேளாண் /கூட்டுறவு), குறிப்பிட்ட மாநில அரசு.
தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர், வேளாண் காப்பீட்டு நிறுவனம் இந்தியா லிமிடெட் (AIC), 13வது தளம், அம்பாதீப், கஸ்தூர்பா காந்தி மார்க், புது தில்லி – 110001.
நிர்வாக இயக்குநர் & முதன்மை செயல் அலுவலர், ஐசிஐசிஐ-லோம்பார்ட் பொது காப்பீட்டு நிறுவன லிமிடெட், ஜென்த் இல்லம், கேசவராவ் காதிய மார்க், ரேஸ் கோர்ஸ் எதிர்புறம், மகாலட்சுமி, மும்பை - 400034.
நிர்வாக இயக்குநர், இப்கோ- டோக்கியோ பொது காப்பீட்டு நிறுவன லிமிடெட், இப்கோ டவர், 5வது தளம், இட எண். 3, பிரிவு 29, குர்கான் -122001.
நிர்வாக இயக்குநர், சோலமண்டலம் எம்எஸ் பொது காப்பீட்டு நிறுவன லிமிடெட், டேர் இல்லம், 2வது தளம், எண். 2 என்.எஸ்.சி. போஸ் சாலை, சென்னை – 600 001.
வகை: மத்திய அரசுத் திட்டம்
துவங்கப்பட்ட ஆண்ட: 2007-08
சிறப்பு அம்சங்கள்:
தற்பொழுது உள்ள பின் அறுவடை தொழில்நுட்பங்கள் மேலாண்மை, பொருள்களுக்கு மதிப்பூட்டுதல், நவீன சேமிப்பு இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக்கழகம், அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கழகம் உருவாக்கியுள்ள பெட்டியிடும் தொழில் நுட்பங்கள், உற்பத்திக்காக உள்நாட்டிலும், அயல் நாட்டில் உள்ள தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை கொண்டு நிறுவனங்கள் அமைப்பதற்காக 40% நிதியுதவி அளிக்கப்படுகிறது. இதனை இருவழி ஒப்பந்த முறையில் இந்திய வேளாண்மை ஆராய்ச்சிகழகம் மற்றும் சுயஉதவிக் குழுக்கள்/விவசாய பயனாளிகள்/விவசாய கூட்டுறவு சங்கங்கள்/அரசு சாரா தொண்டு நிறுவனங்களும் சேர்ந்து அளிக்கிறது.
முதல் நிலைபதனிடுதல் மற்றும் பொருட்களுக்கு மதிப்புட்டுதலுக்கான கட்டமைப்புக்களை, தற்பொழுது உள்ள தொழல்நுட்பங்கள் கொண்டு ஏற்படுத்த நிதியுதவி வழங்கப்படுகிறது. விவசாயிகளின் வயல்களில் இதனைக் கட்டுவதற்கான ஆரம்ப முதலீடு ரூ 2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இதற்கு அரசு 40% மானிய நிதியுதவி வழங்குகிறது.
ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் 66 முன்னேற்ற நிறுவனங்களின் பின் அறுவடைத் தொழில்நுட்பங்கள் முறையாகவும், திறமையாகவும் பயன்படுத்தி வணிகரீதியாக பொருட்களை உற்பத்தி செய்யபயிற்சி அளித்தல்.
தகுதி: சுய உதவிக் குழுக்கள்/விவசாயபயனாளிகள்/விவசாயிகளின் கூட்டுறவு சங்கங்கள்/அரசுசாரா தொண்டு நிறுவனங்கள்
அணுக வேண்டிய அதிகாரி:
துணை இயக்குநர் (எம். & டி), வேளாண் அமைச்சகம், வேளாண்மை மற்றும் கூட்டுறவு துறை, கிரிஷி பவன், புது தில்லி - 110114
வேளாண்மைக் கடனுதவித் திட்டங்களின் மூலம் சிறு மற்றும் குறுநில விவசாயிகளுக்கு, சரியான நேரத்தில் போதுமான கடன் வசதி அளித்து, நவீன தொழில் நுட்பங்களையும் புதிய வேளாண் முறைகளை பின்பற்ற வைப்பதே இத்திட்டத்தின் நோக்கம் ஆகும்.
கூட்டுறவுகள், வணிகவங்கிகள் மற்றும் மண்டல கிராம வங்கிகள் மூலம் கடன் அளிக்கப்படுகிறது.
குறுகிய, மத்திய, நீண்ட காலகடன் வசதிகள் மூலம் வேளாண்மைக்கு நிறுவனக் கடன் வழங்கப்படுகிறது.
குறுகிய மற்றும் மத்திய கால கடன்கள்
திட்டத்தின் பெயர் |
தகுதி |
குறிக்கோள்/சலுகைகள் |
1.பயிர் கடன் |
எல்லா விவசாயிகளுக்கும் பொருந்தும் |
பல்வேறுபயிர்களின் சாகுபடி செலவுக்காக குறுகியகாலகடன். இக்கடன் நேரடியாக விவசாயிகளுக்கு வழங்கப்படும். திருப்பி செலுத்த வேண்டிய காலவரையறை 18 மாதங்கள் ஆகும். |
2.வேளாண் பொருட்கள் விற்பனைக்கடன் |
எல்லா விவசாயிகளுக்கும் பொருந்தும் |
விற்பனை விலை சரிவடைந்த காலங்களில், விவசாயிகள், உற்பத்தி பொருள்களை சேமித்து வைத்துக் கொள்வதற்காக வழங்கப்படுகிறது. |
3.கிசான் கிரெடிட் கார்ட் திட்டம் |
முந்தைய இரண்டு இடங்களுக்கு நல்ல சாகுபடி நிலைமையில் உள்ள விவசாயிகள் |
விவசாயிகள் தங்களின் இதர செலவுகளுக்கான கடனை, இந்த அட்டையை பயன்படுத்தி, உடனுக்குடன் தானே பெறலாம். |
நீண்டகாலகடன்
திட்டத்தின் பெயர் |
தகுதி |
குறிக்கோள்/சலுகைகள் |
வேளாண் கடன் |
அனைத்து விவசாயிகளுக்கும் பொருந்தும் (குறு மற்றும் சிறு நிலவிவசாயிகள், விவசாய கூலித் தொழிலாளிகள்) தேவைப்பட்டஇடத்தில் முன் அனுபவம் இருக்க வேண்டும் |
பயிர்உற்பத்தி/வருவாய் உருவாக்கத்திற்காக விவசாயிகளுக்கு, வங்கிகள் நீண்டகாலகடன் வழங்குகின்றன. |
அரசு குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயம் செய்கிறது. விவசாயிகளை வேளாண்மையில் அதிக முதலீடு செய்யவும், வேளாண் பொருள்களை உற்பத்தி செய்யவும் ஊக்குவிக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் முக்கியமான வேளாண்மை பொருட்களுக்கு குறைந்தவிலை அறிவிக்கப்படுகிறது. வேளாண்மைக்கான செலவு மறறும் விலை கமிஷன் செய்யும் பரிந்துரையின் பேரில் குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
குறைந்தபட்ச ஆதாரவிலை அறிவிக்கும் முன்னர் சாகுபடி செலவு, வேளாண்மை உள்ளீட்டுப் பொருட்களின் விலைமாற்றங்கள், தேவைமற்றும் உற்பத்தி, விற்பனைவிலை நிலவரம், வாழ்வதற்கான செலவு ஆகியவை கருத்தில் கொள்ளப்பட்டு ஆதாரவிலை நிர்ணயம் செய்யப்படுகிறது.
ஆதாரவிலையை அரசு பல்வேறு பொதுமற்றும் கூட்டுறவு நிறுவனங்களான, இந்திய உணவுக்கழகம் (வெளி வலைதளம்) இந்திய பருத்தி கழகம் (வெளி வலைதளம்), இந்தியசணல் கழகம் (வெளி வலைதளம்) தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனைக் கூட்டமைப்பு (NAFED) (வெளி வலைதளம்) புகையிலை வாரியம் (வெளி வலைதளம்) ஆகியவற்றின் வாயிலாக அளித்து வருகிறது.
ஆதாரவிலைத் திட்டத்தின் கீழ் வராத வேளாண்மை பொருட்களுக்கு, மாநில அரசின் கோரிக்கையின் பேரில் இருதரப்பினரும், ஏற்றுக்கொள்ளக் கூடியவிலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதனால் ஏதேனும் இழப்பு ஏற்பட்டால் அதனை மத்திய மற்றும் மாநில அரசுகள் 50:50 விகிதத்தில் பகிர்ந்து கொள்கின்றனர்.
திட்டத்தின் பெயர்: வேளாண் இயந்திரமாக்கல் திட்டம்
நிதியுதவி: 90:10 (மத்திய அரசு: மாநில அரசு) (வேளாண்மை பெரு நிர்வாகம்)
திட்டஇடம்: அனைத்து மாவட்டங்கள்
வேலைவிபரங்கள்: விவசாயிகளுக்கு, பண்ணை இயந்திரங்கள், மற்றும் கருவிகளான டிராக்டர், பவர் டில்லர், டிராக்டரால் இயங்கும் ரோடாவேட்டர் வாங்குவதற்கு மானியஉதவி அளிக்கப்படுகிறது.
பயன்கள் (மானியம்)
டிராக்டர் - விலையின் 25%, ரூ 45,000 வரை, 40 HP வரை
பவர் டில்லர் - விலையின் 40%, ரூ 45,000 வரை ( 8 HP மற்றும் அதற்கு மேலாக)
டிராக்டரால் இயங்கும் ரோடாவேட்டர் - விலையின் 25%, ரூ 20,000 வரை
தகுதி : எல்லா விவசாயிகளும் தகுதி பெற்றவர்கள் .
அணுக வேண்டிய அலுவலர்,
உதவி செயற்பொறியாளர், வேளாண் பொறியியல் துறை, (வருவாய்த் துறை)
செயற்பொறியாளர், மாவட்ட வேளாண் பொறியியல் துறை,
மேற்பார்வை பொறியாளர், மண்டல வேளாண் பொறியியல் துறை,
தலைமை பொறியாளர்,
வேளாண் பொறியியல் துறை,
நந்தனம், சென்னை - 35
போன்: 2435 2686, 2435 2622
திட்டத்தின் பெயர்: வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் செயல்விளக்கம்
நிதியுதவி: முழு நிதியுதவி (இந்திய அரசு -100%)
திட்டஇடம்: அனைத்து மாவட்டங்கள் (சென்னை தவிர)
வேலைவிபரங்கள்: விவசாயிகளின் வயலில், வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் கருவிகள் செயல்விளக்கம் நடத்தப்படுகிறது.
தகுதி: அனைத்து விவசாயிகளும் தகுதி பெற்றவர்கள்.
அணுக வேண்டிய அலுவலர்:
உதவி செயற்பொறியாளர், வேளாண் பொறியியல் துறை, (வருவாய்ப் பிரிவு)
செயற்பொறியாளர், மாவட்ட வேளாண் பொறியியல் துறை,
மேற்பார்வை பொறியாளர், மண்டல வேளாண் பொறியியல் துறை,
தலைமை பொறியாளர்,
வேளாண் பொறியியல் துறை,
நந்தனம், சென்னை - 35
போன் 2435 2686, 2435 2622
திட்டத்தின் பெயர்: மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர்வழிந்தோட்டம் மேலாண்மைத் திட்டம்
திட்டஇடம்: அனைத்து மாவட்டங்கள் (சென்னை மற்றும் நீலகிரி தவிர)
நிதியுதவி: மாநிலத் திட்டம்
வேலைவிபரங்கள்:
கசிவு நீர்க்குட்டைகள் (ரீசார்ஜ் பம்புகளுடன்)
பெரிய, மிதமான, சிறியதடுப்பணைகள்
பண்ணைக் குளங்கள்
பயன்படாத கிணறுகளை சீரமைத்தல்
கிராம ஏரிகள்/ஊரணிகள்
பயன்கள்: பயனாளிகள் பொது நிலத்தை பராமரிப்பதற்காக 10% பணம், (தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர், 5%) கொடுக்க வேண்டும். அப்பணம் கிராம மேம்பாட்டு கழகம்/நீர்பிடிப்பு கழகத்தின் பெயரில் வைப்பு வைக்கப்படும். அதன் வட்டி பராமரிப்பிற்காக செலவிடப்படும்.
பட்டா இடங்களில் 90% நிதியுதவிடன் பயனாளிகளிடம் 10% (தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் 5% ) நிதி/வேலை/பொருட்கள் பெற்று திட்டம் நிறைவேற்றப்படுகிறது.
தகுதி: அந்தந்த மாவட்டத்தில், தேர்வு செய்யப்பட்ட நீர்ப்பிடிப்புகளின் விவசாயிகள்.
அணுக வேண்டிய அதிகாரி:
உதவி செயற்பொறியாளர், வேளாண் பொறியியல் துறை, (வருவாய்ப் பிரிவு)
செயற்பொறியாளர், மாவட்ட வேளாண் பொறியியல் துறை,
மேற்பார்வை பொறியாளர், மண்டல வேளாண் பொறியியல் துறை,
செயற் பொறியாளர்,
வேளாண் பொறியியல் துறை,
நந்தனம், சென்னை - 35
போன் 2435 2686, 2435 2622
திட்டத்தின் பெயர்: பழைய பம்பு செட்டுகளை புதிய பம்பு செட்டுகள் கொண்டு மாற்றுதல்
நிதியுதவி: மாநிலத் திட்டம்
திட்டஇடம்: அனைத்து மாவட்டங்கள் (சென்னை தவிர)
வேலைவிபரங்கள்:
பழைய, திறனில்லாத மின்சார பம்பு செட்டுகளை மாற்றி, புதிய ISI பம்பு செட்டுகள் பொருத்துதல்
மின்சாதனங்களை புதுப்பித்தல்
பயன்கள் (மானியம்):
விபரம் |
தாழ்த்தப்பட்ட/பழங்குடியினர் விவசாயிகள் |
பிற விவசாயிகள் |
5 HP க்கு கீழான பம்பு செட்டுகள் |
ரூ 3500 மானியம் (அ) பம்பு செட்டு விலையில் 50%, எது குறைவோ அது வழங்கப்படும் |
ரூ 2500 (அ) பம்பு செட்டு விலையில் 25%, எது குறைவோ அது வழங்கப்படும் |
5 HP க்கு மற்றும் அதற்கு அதிகமான பம்பு செட்டுகள் |
ரூ 6000 மானியம் (அ) பம்பு செட்டு விலையில் 50%, எது குறைவோ அது வழங்கப்படும் |
|
மின் சாதனங்களை புதுப்பித்தல் |
ரூ 1500 மானியம் (அ) விலையில் 50% எது குறைவோ அது வழங்கப்படும் |
தகுதி: அனைத்து மாவட்டங்களிலும் உள்ள, 0.75 சக்தி அளவிற்கு மேல், திறனில்லாத மின் பம்பு செட்டுகள் மற்றும் பழைய பம்பு செட்டுகள் கொண்ட விவசாயத்திற்கு பயன்படுத்தும் கிணறுகள் கொண்ட விவசாயிகள் .
அணுக வேண்டிய அலுவலர்:
உதவி செயற்பொறியாளர், வேளாண் பொறியியல் துறை, (வருவாய்ப் பிரிவு)
செயற்பொறியாளர், மாவட்ட வேளாண் பொறியியல் துறை,
மேற்பார்வை பொறியாளர், மண்டல வேளாண் பொறியியல் துறை,
தலைமை பொறியாளர்,
வேளாண் பொறியியல் துறை,
நந்தனம், சென்னை - 35
போன் 2435 2686, 2435 2622
திட்டத்தின் பெயர்: தேசிய வேளாண்மை முன்னேற்ற திட்டம்
நிதியுதவி: மாநிலத் திட்டம்
வேலைவிபரங்கள்:
வ.எண் |
விபரம் |
வேலைவிபரம் |
1. |
வேளாண்மையை |
அ) புதிய வேளாண் இயந்திரங்கள்/கருவிகளை அறிமுகப்படுத்துதல் |
2. |
புன்செய் நிலங்கள் வளர்ச்சித் திட்டம் |
1.பிளாஸ்டிக் லைனிங் குட்டைகள் தெளிப்பு நீர் வசதியுடன் |
3. |
நிலவளங்கள் தகவல்கள் மற்றும் பொது தகவல் பணி, தளம் நிறுவுதல் |
திறன் மிக்கபயிர் சாகுபடி செய்யும் கிராம வரைபடங்களை டிஜிட்டல் ஆக்குதல் |
பயன்கள் (மானியம்):
தரப்படும் மானியம்: புதிதாக உருவாக்கப்பட்டுள்ள வேளாண்மை கருவிகளான, கூட்டு அறுவடை இயந்திரம், பல்பயிர் அறுவடை இயந்திரம், நெல் நாற்று நடும் கருவி வாங்க 50% மானியமும், பிற பாரம்பரிய இயந்திரங்கள் மற்றும் கருவிகள் போன்ற பவர் டில்லர், ரோட்டாவேட்டர், கொத்துக்கலப்பை, சட்டி பலுகு, சட்டிக்கலப்பை வாங்க 25% மானியம் வழங்கப்படும்.
தகுதி: அனைத்து விவசாயிகளும் தகுதியுடையவர்கள்.
அணுக வேண்டிய அதிகாரி
உதவி செயற்பொறியாளர், வேளாண் பொறியியல் துறை, (வருவாய்ப் பிரிவு)
செயற்பொறியாளர், மாவட்ட வேளாண் பொறியியல் துறை,
மேற்பார்வை பொறியாளர், மண்டல வேளாண் பொறியியல் துறை,
தலைமை பொறியாளர், வேளாண் பொறியியல் துறை, நந்தனம், சென்னை - 35
போன் 2435 2686, 2435 2622
திட்டத்தின் பெயர்: நில மேம்பாட்டுத் திட்டம்
நிதியுதவி: மாநில-திட்டமிடப்படாத திட்டம்
திட்டம் இடம்: அனைத்து மாநிலங்கள்
வேலைவிபரங்கள்:
நிலம் வடிவமைத்தல்
நிலம் சமம்படுத்துதல்
நிலம் சீரமைத்தல்
உழுதல், சேற்று உழவு
கூட்டு கதிர் அறுவடை இயந்திரம் கொண்டு நெல் அறுவடை செய்தல்
பயன்கள்:வேளாண் பொறியியல் துறை, அரசு பரிந்துரை செய்துள்ள வாடகையின் படி இயந்திரங்களை வாடகைக்கு விட்டு, மேற்கூறிய வேலைகளை செய்கிறது.
நில மேம்பாட்டு இயந்திரங்களின் வாடகை:
வ.எண் |
இயந்திரத்தின் பெயர் |
வாடகை செலவு |
1. |
டிராக்டர் |
265 |
2. |
புல்டோசர் |
670 |
3. |
டிராக்டரால் இயங்கும் கூட்டு அறுவடைஇயந்திரம் |
780 |
4. |
டைகர் கூட்டு அறுவடைஇயந்திரம் (ரப்பர் டிராக் டைப்) |
1130 |
தகுதி: அனைத்து விவசாயிகளும் தகுதி பெற்றவர்கள்
அணுக வேண்டிய அலுவலர்:
உதவி செயற் பொறியாளர், வேளாண் பொறியியல் துறை, (வருவாய்ப் பிரிவு)
செயற்பொறியாளர், மாவட்ட வேளாண் பொறியியல் துறை,
மேற்பார்வை பொறியாளர், மண்டல வேளாண் பொறியியல் துறை,
தலைமை பொறியாளர்,வேளாண் பொறியியல் துறை,
நந்தனம், சென்னை - 35
போன் 2435 2686, 2435 2622